வெய்யோனின் இளஞ்சுடான வெப்பம் சாளரம் வழியே படுக்கையில் உறங்கி கொண்டு இருந்த ராவணன் மீது பட்டு தெரிந்தது…
மெல்ல தன் தூக்கம் கலைந்தவன் முகம் முந்தைய இரவின் இனிமை அவனுக்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது.. மந்தகாச புன்னகையுடன் கை கால்களை நீட்டி முறுக்கி சோம்பல் முறித்தவன்.. கண்களை மூடியவனே கைகளால் காதல் மனைவியை தேட… அவள் அங்கு இல்லை….
எழுந்து அபியிடம் சென்றவன்.. குழந்தை தன் சொப்பு வாயை திறந்தபடி உறங்கிக்கொண்டு இருந்தது. தன் காலை கடன்களை முடித்து கொண்டு கீழே சென்றவனுக்கு அங்கே கண்ட காட்சியில் உறைந்து நின்றான்..
பின்னே அங்கு யூடுபை பார்த்து சமைத்து கொண்டு இருந்தது மகிழை பார்த்தவனுக்கு மட்டும் அல்ல, இதைப் படிக்குற உங்களுக்குமே அதிர்ச்சி தான மக்களே…
சமையலறைக்கு விரைந்தவன்.. காலையில் குளித்து விட்டு இர முடியை துணி கொண்டு கட்டி கொண்டையிட்டு.. புதுமாதிரியாக ஜோலித்தவள் பின்னால் போய் நின்றான்…
அவள் மீது எழுந்த சுகந்தமான நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தவன் கண்கள் கிறக்கத்தை தழுவின…
“என்ன பண்ற..?” என அவள் கழுத்து வளைவில் எட்டி பார்க்க.. அங்கே தமிழ் நாட்டின் மாநில உணவை தயாரித்து கொண்டு இருந்தாள்.. மாநில உணவா அப்படின்னா..?? ஹிஹி அதான் ‘உப்புமா’..
அதைப் பார்த்ததும் இராவணனுக்கு வந்த காதல் கிறக்கம் இடம் தெரியாமல் சென்றுவிட… உயிர் பயம் வந்துவிட்டது.
“ஹே.. என்ன பண்ற…???” என அந்த உப்புமாவின் நிறத்தைக் கண்டு கத்தியே விட்டான்.
“உப்புமா பண்றேன்..!”
“அது தெரியுது…! நீ ஏன் இதெல்லாம் பண்ற..!!! அதான் சமைக்க ஆள் வருவாங்கன்னு சொன்னேன்ல..!!” எனத் திகிலாகச் சொன்னவனைப் பார்த்து முறைத்தாள்.
“ப்ச் அவங்க எப்போ வர்றது நாம எப்போ சாப்பிடறது… அதான் நானே யூடியூப் பார்த்து செஞ்சிட்டேன்… சாப்பிட்டு பார்க்குறீங்களா..?” என வேகமாகச் சொன்னவள் அவள் செய்ததை தட்டில் இட்டுத் தர…
ஒரு தரம் அவளையும் தட்டையும் பார்த்தவன்.. எதுவும் பேசாமல் அவள் செய்த அனைத்தையும் எடுத்துச் சென்று வெளியே கொட்டியவன்.
“இங்க பாரு மகிழ் எனக்கு சாப்பாட வீணாக்குனா பிடிக்காது.. நான் ஒன்னும் வளவன் இல்ல நீ எவ்ளோ கொடுமையா சமைச்சாலும் சாப்பிட… உனக்கு சமைக்க தெரியலைனா கூட பரவாயில்லை.. இந்த மாதிரி மறுபடியும் பண்ணாத.. இந்த சாப்பாடு கூட கிடைக்காம எவ்ளோ பேர் கஷ்டப்படுறாங்க தெரியுமா.. சமைக்க வரவங்க கிட்ட கேட்டு கத்துக்கோ இப்போ நான் சமைக்கிறேன்.. இந்த வெங்காயத்தை கழுவிட்டு நறுக்கி தா..!!” என அவள் கையில் திணித்தவன்..
பின் தானே உணவு தயாரிக்கும் பணியைச் செய்யத் துவங்க, முதலில் அவன் மென்கோவத்தில் மிரண்டாலும், அவன் கூற்றில் இருந்த உண்மையை ஏற்றுக்கொண்டவள் அமைதியாகக் காய்களை நறுக்கிக் கொடுத்தாள். ஆண்கள் ஒரு கலாரசிகர்கள், அவர்கள் செய்யும் எந்த வேலையையும் ரசனையுடன் செய்வார்களாம். அது உண்மையோ என்பது போல் துப்பாக்கி விளையாடிய ராவணன் கையில் சமையல் கரண்டி புகுந்து விளையாட, அவன் சமைக்கும் அழகை கண்கொட்டாமல் பார்த்தாள் மகிழினி.
சமைத்து முடித்தவன் மனைவி தன்னை ரசிப்பதை ஓரக்கண்ணால் பார்த்தவனின் இதழ்களுக்கிடையில் ரகசிய புன்னகை அரும்பியது.
அதே முறுவலுடன் அவள் அருகே வந்தவன், அவள் இடையில் சொருகி இருந்த முந்தானையை அழுத்தமாக பற்றி மெல்ல மெல்ல அவன் மொத்த விரல்களாலும் இடையை உரசி எடுத்தவன், தன் வியர்வையை அவள் கண்களை பார்த்துக்கொண்டே துடைக்க, அவன் பார்வையை எதிர்கொள்ளும் திராணியற்று கண்களைத் திருப்பிக்கொண்டாள்.
கண்களை திருப்பியவளின் கன்னம் பற்றி தன்னை பார்க்க செய்ய, அவன் தீட்சண்யத்தை தாங்க முடியாமல் கண்களை மூடினாள். அவளின் மோன நிலையை ரசித்தவாறே அவளை நெருங்கி நின்றவன், மூடிய கண்களுக்குள் அலைபாயும் கருமணிகளுக்கு முத்தமிட்டு அலைப்புறதலை நிறுத்தியவன், தொடர்ந்து விடைக்கும் நாசி, செவ்வேறிய கன்னங்கள் என விடாது முத்தங்கள் வைத்தான்.
நிமிர்ந்து அவள் முகம் பார்க்க இரண்டடி பின்னால் நகர்ந்தவனுக்கு, அவன் முத்த தாக்குதலில் கால்கள் துவள சமையல் மேடையை இறுகப் பற்றிக்கொண்டு கண்களை மூடியபடியே முத்தத்தில் லயித்து இருந்தவள் நெற்றியில் அரும்பிய வேர்வைத் துளிகள் ஒன்றன் பின் ஒன்றாக அவள் கன்னக் கதுப்பு வழியாக இறங்கி சங்குக் கழுத்தில் சறுக்கிக் கொண்டே சிந்து பள்ளத்தாக்கில் சென்று அடைவதைக் கண்டவனுக்கு, அந்த வேர்வைத் துளிகளாக மாறி விடக்கூடாதென்று எண்ணிய மாத்திரத்தில் அவளை இடையையும் பின்புற மேடையையும் சேர்த்துப் பற்றி திண்டில் அமர்த்தினான். அவன் செயலில் அதிர்ந்து பார்த்தவளின் தாடையை இறுகப் பற்றியவன் அவனின் உஷ்ணமான காற்று முகத்தில் பட்டுத் தெறிக்கும் அளவு நெருங்கியவன், அவள் கால்களை எடுத்து தன்னைச் சுற்றிப் போட்டவன், வழியும் அவள் வியர்வையாடும் வழித்தடத்தில் தன் உதடுகளை வழிநடத்திச் சென்றவன், பள்ளதாக்கு முகட்டில் மீசையை வைத்து உறைந்தவன்.
ஹ்.. ஹ்ம்… ம்ம்ம் அத்தான்.. என தன்னையும் மீறி சுக வேதனையில் புலம்பியவளால், மேலும் மோகம் தலைக்கு ஏறி மீசை தீண்டிய பனிமலையை நாவால் கோலமிட அவன் தரும் உணர்ச்சிகள் தாங்காமல் அவன் பிடரி முடிகளை அழுத்தி பிடித்தவள்…
ஹா… ஸ்ஸ். அத்துஉஉஉஉ…! என உதடு கடிக்க..
நாவடிய கொத்து சதையை பற்கள் கொண்டு கவ்விப் பிடிக்க…
ம்ம்ம்ம்.. ஆஆஆஆ… கடிக்காதீங்க.. ம்ம். என கழுத்தை பின்னால் சாய்த்து அவனுக்கு எக்கி கொடுக்க, விடுவானா நாயகன்.. இருவருக்குள்ளும் பற்றி எரியும் தீயை அவளுள் சென்று அணைக்க துடித்தவன், அவள் ஆடைகளுக்கு தளர்வு கொடுக்க..
கண்கள் சொருகிய நிலையில் கழுத்து சரியக் கிடந்தவளின் கன்னம் பற்றி தன் இதழ் கொண்டு அவளுக்கு சக்தி கொடுக்க கைகள் அதன் வேலையைத் தடையின்றி செய்ய…
இருவரின் மோன நிலையைக் கலைக்க வென்று கரடியாய் அழைப்பு மணி அடிக்க…
முதலில் சுதாரித்த ராவணன் கை முஷ்டியை இறுக மூடி கண்களை மூடி தன்னை நடப்பிற்கு கொண்டு வரப் பாடாத பாடு பட்டவன்… கண்களைத் திறக்க… எதிரில் சற்றுமுன் அவன் ஆடிய கலியாட்டத்தில் கலைந்த பொன்னோவியமாக அமர்ந்து இருந்தவளுக்குச் சரிந்த புடவையை எடுத்து விட்டவன்….நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன்…
“சிட்டு..!! அபிக்குட்டி எழுந்திருக்கப் போறா. சீக்கிரம் பால் கலக்கிக் கொண்டு போ… நான் யாருன்னு பார்க்கிறேன்..!!” என்றான் கரகரத்த குரலில்…
பின்னி இருந்த மாயவலை அறுபட திடுக்கிட்டு உடல் துள்ளி எழுந்தவள்.. தன் நிலையை கண்டு வெட்கி அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்தவாறே ஆடைகளை சரி செய்தாள். பாலை அடுப்பில் வைத்து அதுக்குள்ளேயே சென்று விடுபவள் போல் தலை குனிந்து நிற்க… (அது ஒன்னுமில்ல வெக்கமாம்மா..)
அவள் செய்கையை விசித்திரமாக பார்த்தவன்.. பின் குறும்பாக நகைக்கத் துவங்க.. அதன் எதிரொலி அந்த அறையை நிரப்ப… தீக்கோழி போல் மேலும் தலை கவிழ்த்து கொண்டாள்.
அவன் வெளியே சென்ற பின்பே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்…
“சீ.. மகிழ் உனக்கு கொஞ்சம் கூட சூடு, சுரணை, வெக்கம்ன்னு எதுவுமே இல்லையா.. வில்லனைப் போய் இப்படி சைட் அடிக்கிற… தூ..!” என தன் ஆள்காட்டி விரலை கொண்டு அவளை அவளே நிந்தித்துக் கொள்ள.. மறுபுறம் “என் புருஷனை என் உரிமை நான் சைட் அடிப்பேன்..” என அவள் மனம் அவளுக்கு எதிராக முழங்க..
தனக்குள்ளாகவே போராட்டம் நடத்தினாள் மங்கை. வெளியே கேட்ட மாதுரியின் குரலில் தன்னை மீட்டவள் தங்கையைக் காண விரைந்தாள்.
“அத்தான்..” என ஓடிவந்து ராவணன் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
“ஸ்கூல் எப்படிடா குட்டிமா போகுது…?”
“ம்ம்ம்.. நல்லா போகுது அத்தான்.. நீங்க சொன்ன மாதிரியே எனக்கு நிறைய புது ஃப்ரண்ட்ஸ் கிடைச்சு இருக்காங்க அத்தான்..!” என்றாள் மழலை மனம் மாறாமல்.
“எது அத்தானா…?” என மகிழ் இல்லாத அறிவை கொண்டு யோசிக்க..(அது இருந்தா எப்போவோ ராவணனை புரிஞ்சி இருப்பாளே அப்படி தான நீங்களும் நினைக்குறீங்க…)
“நீங்க சொன்ன மாதிரியே பத்திரமா யாருக்கும் தெரியாம மது பாப்பாவை கூட்டிட்டு வந்துட்டேன் தம்பி…!” என மது பின்னால் இருந்து உள்ளே வந்தார் பவள பாட்டி…
“ரொம்ப நன்றி…!! பாட்டி இவ்ளோ நாள் மகிழை பார்த்துகிட்டதுக்கும்.. இப்போ மாதுரிய பத்திரமா அழைச்சிட்டு வந்ததுக்கும்…”
“அட என்னப்பா தம்பி நீ எங்க அண்ணா ராஜதுரைக்காக இத கூட செய்ய மாட்டேனா..சீக்கரம் எல்லா பிரச்சனையும் சரியாகி உங்க அப்பா அம்மாகூட சேர்ந்து வாழறத என் கண்ணால பார்க்கனும்..!” என உள்ளார்ந்து சொன்னார்..
“கண்ணு இருந்தா தான பார்ப்ப.. ஏய் கிழவி கூட இருந்தே இப்படி துரோகம் பண்ணிட்டியே..!”என அவர் முன் காளியாக குதித்து நின்றாள்.. மகிழ்..
போச்சா பவள பாட்டிக்கு மகிழ் கையால தான் சாங்கோ…உஉஉஉ



