என்ன சார் சொல்றீங்க.. விளையாட்டுக்கு சொல்றீங்களா..!”என தான் கேட்டதை தெளிவுபடுத்த எண்ணி கேட்டுவிட
உண்மையாதான் கேக்குறேன்… உங்க பொண்ணு பிடிச்சிருக்கு…!! கல்யாணம் பண்ண விரும்புறேன்..!”என நிறுத்தி நிதானமாகவே கேட்டான்.
சார்..???!! அது..????
இருங்க… நான் என்ன பத்தி எல்லாத்தையும் சொல்லிடுறேன்..!” என அவனின் பிறப்பு முதல் அவன் ஊரைவிட்டு வந்தது, பின்னர் போலீஸ் ஆனது வரை சொன்னவனை குழப்பமாக பார்த்தார்.
நான் என்ன பத்தி எந்த ஒளிவும் மறைவும் இல்லாம சொல்லிட்டேன்.. அவ படிப்பு முடியுற வரை காத்திருக்கேன்… நீங்களே யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க..!”என்றவன் அடுத்தடுத்து வந்த வேலைகளில் மூழ்கிவிட…
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த தயாநிதியை அவரின் மனைவியின் குரல் கலைத்தது.
என்னங்க என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க..?
இல்லை பருவதம்.. ராவணன் தம்பி கேட்டத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்..!
என்னங்க அந்த தம்பி பத்தி ஒரு மாதிரி பேசிக்கிறாங்க.. அது மட்டுமில்லாம.. அவரே பஞ்சாயத்து பத்தி சொல்லும் போது.. இது சரியா வருமா..?” என தயக்கத்துடனே கேட்டார்.
ஊர் ஆயிரம் சொல்லும், மா கூட இருக்கிற எனக்கு தெரியாதா…?? நல்லவன் எப்பவும் தன்னை நல்லவனாக வெளிப்படுத்திக்க விரும்ப மாட்டான்…போற போக்குல நல்லதை பண்ணிட்டு போயிட்டே இருப்பான்.. (ஹிஹி.. அப்படியே எங்கள மாதிரி..) அது போல தான் ராவணன் தம்பி, அவர் பண்ற நல்லது வெளிய தெரிய மாட்டேங்குது… பஞ்சாயத்தை பத்தி சொன்னியே… எந்த ஒரு மனுஷனா இருந்தாலும் தொடர்ந்து தோல்விய சந்திச்சா.. அடுத்து அடி எடுத்து வைக்க யோசிக்க கூட மாட்டான்… ஆனா ராவணன் தம்பி வர தடைகளை எல்லாம் வெற்றி மாலையா மாத்திக்கிற திறமை இருக்கு.. இது ஒன்னே போதாதா மா…?
அவரை நம்ம மாப்பிள்ளையைப் பார்க்க தான் எனக்கும் ஆசை. ஆனா மகிழ் படிப்பு முடியட்டும். இதைப் பத்தி பேசிக்கலாம். இப்ப படிக்கிற புள்ள கிட்ட சொல்லி படிப்பைக் கெடுக்க கூடாது…!” என இவர்களின் சம்பாஷணையை தண்ணீர் அருந்த வந்த மகிழின் செவிக்கு எட்டி விட..
என்ன மாதிரியான உணர்விது என புரியாமல் சிக்கித் தவித்தாள் மகிழ்… அன்று…
இன்றும் அதே மாதிரியான உணர்வைத் தவிர்க்கும் பொருட்டு அஞ்சுவிடன் பேசியபடி வந்தவளுக்கு ஏனோ அஞ்சுவின் அலைப்புறுத்தலும், பதட்டமும் மனதை நெருட “என்னவென்று கேட்க..?
“எதுவும் இல்லை..” என்றவள் கால் இடறி விழப் போக அவளை இருபக்கமும் பிடித்துக் கொண்டனர் மற்ற இருவரும். அவள் இல்லம் வந்ததும் அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் உள்ளே சென்று விட…
அக்கா இன்னைக்கு அஞ்சு அக்கா சரியே இல்ல எப்பவும் என்கூட வம்பு இழுத்துட்டே வருவாங்க… இப்போ எனக்கு ஒரு பாய் கூட சொல்லாம போறாங்க..இங்க பாரு அவங்க மொபைல் கூட என்கிட்டே இருக்கு அத கூட வாங்காம போறாங்க..!!!
ஏதோ டென்ஷன்ல மறந்து இருப்பா குட்டி.. போன் கொண்டு போய் அவகிட்டே கொடுத்துட்டு வா குட்டி…
முடியாது… போ அக்கா… இன்னைக்கு என்ன ‘ஏஞ்சல்னு’ கூப்பிட கூட இல்ல.. அப்புறம் தினமும் கொடுக்கிற கிஸ்ஸும் கொடுக்கல..அதுக்கெல்லாம் என்கிட்ட சாரி கேட்டா தான் கொடுப்பேன்..!”என அடம் பிடித்தாள்.
இது அவர்களுக்குள் வாடிக்கை என்பதால் மகிழினியும் அதற்கு மேல் வற்புறுத்தாமல் விட்டுவிட.. இருவரும் வீடு திரும்பினர்..
அந்த நள்ளிரவு நேரத்திலும் விடாமல் அழைத்தது ராவணன் கைபேசி… அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்…
ம்ம்ம்.. சொல்லு… என்ன…?!!
“எங்க இருக்க நீ இப்போ.. அங்கேயே இரு உனக்கு ஒன்னும் ஆகாது… ஆக விடமாட்டேன் இதோ வந்துடுறேன்..!” என்றவன் துரிதமாக செயல்பட்டவன்.. கமிஷனரிடம் தகவல் தெரிவித்து…. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரையும் முன்னே சூழ்நிலை கைமீறி போய் விட்டது..
அங்கே அந்த வனப் பகுதியில் மறைந்து இருந்த பங்களாவின் உள்ளே வாசுகி கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்க அருகில் மருண்ட முகத்துடன் சில பெண்கள் நிற்க அவ்விடம் விரைந்தான்…
“வாசுகி… நான் வரதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்… ஏன் இப்படி பண்ண..!”. என கடிந்தவனின் கையை பிடித்துக் கொண்டவள்…
“சார்.. நான் சாவ பத்தி கவலைப்படல… சாகறதுக்கு முன்னாடி இந்த பொண்ணுங்க வாழ்க்கையை காப்பாத்திட்ட நிம்மதி போதும் சார்…எனக்காக கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் செய்யுங்க சார்… ஹா….அ..!”
“கண்டிப்பா செய்வேன் என்ன சொல்லுமா..!”
சார், என் பொண்ணை ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுப் பார்த்துக்கோங்க சார்….ஹா… அவளைப் படிக்க வச்சு உங்கள மாதிரி ஒரு நல்ல போலீஸ் ஆக்கணும். இது என் கடைசி ஆசை சார்..ஹா..க்..!!” என்றவள் உயிர் உடலை விட்டுப் பிரிந்திருந்தது…
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் எதிர்பாராத விதமாக அஞ்சு மற்றும் வாசுகி சடலமாக மீட்கப்பட்டனர்…
மேலதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தவன், வாசுகியின் உடலுக்கு இறுதி காரியங்களைத் தானே செய்தவன்… அவளின் மூன்றரை வயது ‘அபிராமி’யுடன் வசிக்கத் தொடங்கியது… பலருக்குப் பலவிதமான எண்ணங்களை உருவாக்கியது…
“யார் தன்னை பற்றி என்ன நினைத்தாலும் அதைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது, தன் வேலைகளில் கவனமாக இருந்தவனை தொந்தரவு செய்வதற்கென்றே வந்தார் எம்.எல்.ஏ அழகு சுந்தரம்.”
“சார், நீங்க சொன்னதால தான் இந்த கேஸை அண்டர் கவர் ஆப்ரேஷனா நடத்துறோம். ஆனா இதுல எம்.எல்.ஏ-வோட இடையூறு அதிகமா இருக்குறத பார்த்தா அவருக்கும் இந்த கடத்தல் கும்பலோட சம்பந்தம் இருக்குமோன்னு சந்தேகம் இருக்கு சார்..?”
அப்படி எடுத்த உடனே ஒரு பெரிய மனிதர் மேல சந்தேகப்பட முடியாது. ராவணன்… அதுக்கு நமக்கு ஸ்டராங்கான எவிடென்ஸ் வேணும். இல்லனா நாளைக்கு நமக்கு எதிராகவே அமையலாம்… டேக் யுவர் டைம்..!! அடுத்த தடவை எவிடென்ஸோட வாங்க..!! “அர்ரெஸ்ட் வாரண்ட் ஓட போங்க” என ரைமிங்காக சொல்லி அனுப்பி வைத்தார்…சிட்டி கமிஷனர்.
தன்னிடம் கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள் மூலம் அழகுசுந்தரத்தை குற்றவாளி என நிரூபித்து வெற்றி வாகை சூடுவானா ராவணன்…



