காதல் செய்யாதே இராவணா -21

உள்ள வா…

சார்… எனத் தயங்கியவாறே உள்ளே சென்றாள்.

இந்தா..! இதுல கொஞ்சம் காசு இருக்கு.. இத வச்சி ஒரு ‘நல்ல’ தொழில் செஞ்சு பிழைச்சிக்கோ..! என்றவன் காலில் மீண்டும் விழுந்தாள்…

என்ன மன்னிச்சிடுங்க சார்..! நீங்களும் சராசரி ஆம்பளைங்க மாதிரி என்ன கூப்பிட்டீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன்..! என கண்ணீர் உகுத்தாள் அரிவை.

அவசரப்படாத, இந்த உதவிக்கு பதில் உபகாரம் நீ பண்ண வேண்டியதிருக்கும்…?

புரியல சார்…?

அதாவது போதை மருந்து கடத்துற அந்த கும்பலை பிடிக்க நீ எனக்கு உதவி பண்ணனும்னா.. உன் மேல இருக்குற கேஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சித் தர வேண்டியது என் பொறுப்பு… முடிவு உன் கையில…

எப்படி சொல்றதுன்னு தெரில சார்… என்கிட்ட இருந்து சுகத்தை மட்டும் அனுபவிச்சிட்டு நாய் மாதிரி விரட்டி விடறவங்கள தான் சார் இதுவரைக்கும் பார்த்து இருக்கேன்…!

முதல் முறையா என் மேலயும் நம்பிக்கை வச்சி ஒரு வேலைய குடுக்குறீங்க எனக்காக இல்லாம என் குழந்தைக்காக கண்டிப்பா இந்த வேலைய செய்றேன் சார்…!

ம்ம்ம்.. குட்.. ஆனா குழந்தை இருக்குன்னு சொல்ற…இதுல நிறையவே ரிஸ்க் இருக்கும்..உன்னால முடியலனா கூட பரவாயில்ல.. அந்த பணத்த வச்சி பிழைச்சிக்கோ.. ஆனா உன்ன திரும்ப அந்த மாதிரி இடத்துல பார்த்தா என் கையால கொன்றுவேன்…! என மிரட்டியவனை..

என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் குடுத்து இருக்கீங்க சார்.. உங்களுக்காக உயிரை கூட கொடுப்பேன் சார்…கண்டிப்பா உங்களுக்காக இந்த வேலைய நானே பண்றேன் சார்..

நிச்சயம் உன் உயிருக்கு ஆபத்து வரும்…ஆனா நீ பயப்பட வேணாம் உன்ன காப்பாத்த வேண்டியது என் கடமை.. உனக்கு ஒன்னும் ஆகாம நல்லா வச்சிக்கிறேன்..!”என வாக்களித்தவனுக்கு எங்கனம் தெரியும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும் என்று…

அதன் பின் வாசுகியை அழைத்து சென்று அவள் வசிக்கும் பகுதியில் இறக்கி விட்டு தன் இரவு நேர ரோந்து பணிக்கு சென்றான்…

“ஒட்டு கேட்பவர்கள் நல்லதை கேட்பதில்லை ” என்பது போல் அவர்கள் உரையாடலில் கடைசி வரியில் “வச்சிக்குவேன்” என்பதை மட்டும் கேட்டு விட்டு ராவணனை வெறுக்க ஆரம்பித்தாள்.

பிரபலமான அந்தக் கல்லூரியின் பின் ஆள் அரவமற்ற அந்தப் பொது வெளியில்…

“ப்ளீஸ் சார்,.. எங்களுக்கு போதை வேணும்.. அதுக்குத் தான நீங்க கேட்ட பணத்தைக் கொண்டு வந்து இருக்கோம்.. குடுங்க அது இல்லாம எங்களால இருக்க முடியல.. கை கால் எல்லாம் நடுங்குது..!!’என சில மாணவ மாணவியர் தடியார்களிடம் கெஞ்சிய வண்ணம் இருந்தனர்..

“நான் என்ன பண்றது சரக்கு வரலையே..!”

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நீங்க அப்படி சொல்லாதீங்க.. எங்களுக்கு கண்டிப்பா வேணும்..!” என போதைக்கு பழகிய அவர்களின் உடல் அவர்களை கெஞ்ச வைத்தது..

“இவ்ளோ கெஞ்சறத பார்த்தா பாவமா தான் இருக்கு.. ம்ம்ம்.. உங்களில் சில பேருக்கு மட்டும் நான் சொல்ற இடத்துக்கு வந்தா.. நிறையவே மருந்து கிடைக்கும்..!!” என நயவஞ்சகமாக தூண்டிலை போட்டான்.. வேட்டைக்காரன்..

முதலில் தயங்கியவர்கள்.. பின் அவர்களுக்கு அம்மருந்து தேவையே எனக் கருதி… தானாகவே சென்று அவன் வலையில் விழ சம்மதித்தனர் இளம் மான்கள்…

அக்கா… அது நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கிற ஆள் தான..!” என கல்லூரி வாயிலில்.. தன் சகோதரியுடன் ‘சாட்களை’ கொரித்துக்கொண்டு இருந்த மாதுரி.. வண்டியில் வாசுகியுடன் செல்லும் ராவணனை காண்பிக்க..

அவனையும் அவன் அருகில் இருக்கும் வாசுகியையும் ஒன்றாகக் கண்டதும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க..

“மது..அமைதியா சாப்பிடுடி. ரோட்ல போற வரவங்கள பத்தி நமக்கு எதுக்கு..?” என எரிச்சல் குரலில் கூறியவள்…

“ச்ச.. எல்லாம் இந்த அஞ்சு நாயால வந்தது. எங்களை இங்க நிக்க சொல்லிட்டு எங்க போய் தொலைஞ்சாளோ.. இவளால கண்ட கண்டதையெல்லாம் பார்க்க வேண்டி கிடக்கு..!” என எரிச்சல் மிகுதியில் தனக்குள்ளாகவே முனங்கிக் கொண்டாள்.

அஞ்சு மகிழினியின் சிறு வயது தோழி. அஞ்சுவின் பெற்றோர் செல்வாக்கான பதவியில் இருப்பவர்கள். கணவன் மனைவி இருவருமே வேலை வேலை என சென்றுவிட பணியாளர் பராமரிப்பில் வளர்ந்தவள். தனிமையைப் போக்க தவறான வழிகாட்டுதலில் போதைக்கு அடிமையானாள். அது மகிழினிக்கு தெரியாமல் போனது துரதிஷ்டமே…

‘ரியர் மிரர்’ மூலமாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தவன், “அட நம்ம ரீல்ஸ் பைத்தியம், இங்கதான் படிக்கிறாளா… பாரு பாரு எப்படி சாப்பிடுறான்னு. இவளுக்கு வாங்கிக் கொடுத்தே என் சொத்து அழிஞ்சிடும் போலயே…” என எண்ணியவாறே டேஷ் போர்டில் எதையோ தேடி எடுத்தான்.

அது ஒரு ‘புது மொபைல் போன்’.. ஆம்! அன்று மகிழ் விட்டுச் சென்ற கைபேசியை எடுத்து சரி பார்த்தவன், அதை இனி பயன்படுத்த முடியாது என்பதை அறிந்து, அதில் இருந்த மெமரி கார்டை எடுத்து தனது செல்லில் பத்திரப்படுத்தினான்!

ஓய்வு நேரத்தில் அதில் இருந்த ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்தவன், முதலில் அவளைப் பைத்தியம் என முடிவு கட்டினான். பின் அவளின் முக பாவனைகளில் தன்னை மறந்து ரசிக்க ஆரம்பித்து அவளின் ரசிகன் ஆகிப் போனான்…. அவளின் குறும்புத்தனமும், செல்ல முறைப்புகளும் அவனுக்கு அவள் மீதான ஆர்வத்தைத் தூண்டியது…. மெல்ல மெல்ல அவள் மேல் காதல் மலரத் துவங்கியதை உணர்ந்தவன் அவளுக்காகவே இந்த புதிய கைபேசியை வாங்கினான்… ஆனால் கொடுக்கும் சந்தர்ப்பம் தான் அமையவில்லை, இல்லை இல்லை அவள் அமைய விடவில்லை…

இன்று தான் அவனிடம் மாட்டினாள் இந்த சிட்டுக்குருவி…. அவளை நோக்கி தன் நீண்ட கால்களை எட்டிப் போட்டு சென்றவன், அவள் பின்னால் நிற்க, சாப்பிடுவது ஒன்றே குறி என தன் தட்டில் கவனமாக இருந்தவளின் காதில்…(பின்ன பசிக்கும்ல..)

“பாத்து தட்டுக்குள்ள போயிட போற..சிட்டு!” என ராவணன் வார்த்தைகளில் துள்ளிக் குதித்து திரும்பியவள், அவனை அவ்வளவு அருகில் எதிர்பார்க்கவில்லை என்பதை தன் விரிந்த கண்களால் அவனுக்கு உணர்த்தினாள்.

“.

“என்ன சௌக்கியமா… இப்போலாம் வீடியோ போடறதில்லையோ….ஏன்?” என்றான் நக்கல் தொய்ந்த குரலில்.

“அது அக்கா போன் தொலைஞ்சு போச்சு அதான். அக்காவால வீடியோ போட முடியல!” என முந்திக்கொண்டு கூறினாள் மாதுரி.

ஐயோ…பாவம்..!

அதான் ஊர்ல நல்லா மழை பெய்யுது போல..

என மகிழுக்கு மட்டும் கேட்கும்படியாக சொல்லி அவளின் முறைப்பை பரிசாக பெற்றான்.

சரி இந்தா..!

என அவன் கைகளில் இருந்த புது மொபைலை அவளிடம் கொடுக்க.

எதுக்கு… நீங்க கொடுக்குறீங்க..?

என மறுபடியும் சின்னவள் சந்தேகமாக வினவ…

நான் உங்க அக்காக்கு தீவிர ‘விசிறி’..! அவங்க வீடியோ பாக்காம எனக்கு தூக்கமே வராது..!

(பார்த்தாலும் வராதுடா.. என்ன என்ன சொல்றான் பாருங்க மக்களே..)

என மகிழை ரசனையாக பார்த்துக்கொண்டே பதிலை சின்னவளுக்கு அளிக்க.

ஓ.. நீங்க இவளோட விசிறியா..!

என சமாதானம் ஆனவள் அடுத்து கேள்வி கேட்கும் முன்..

இந்தா குட்டி உனக்கும்.. கிஃப்ட் என அவளிடம் பெரிய சாக்கோபர் ஒன்றை நீட்ட..

தேங்க்ஸ் அங்கிள்..

என வாங்கிக்கொள்ள..

அக்கா…! உனக்கெல்லாம் இப்படி ஒரு விசிறி இருப்பாங்கன்னு நினைச்சு கூட பார்க்கல… பாரு உனக்கு போன் எல்லாம் கிஃப்ட் பண்றாங்க… இதெல்லாம் பார்த்தா நீ சீக்கிரம் ஹீரோயின் ஆகிடுவ போலயே..!!

என தமக்கையின் காதில் கிசுகிசுக்க..

சும்மா இருடி..!

என்றவள் ராவணனிடம் திரும்பி முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி..

தேங்க்ஸ் அங்கிள்

என மொபைலை பெற்று கொள்ள கைகளை நீட்ட… கூர்மையாக அவளை பார்த்துக்கொண்டே தந்தவன்..

மாதுரி கை கழுவ சென்ற தருணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியவன்.. மகிழினி வெகு அருகில் வந்து அவள் இடையை அணைத்து தன்னோடு சேர்த்து நிற்க வைத்து.. அவள் காதருகில் சென்று…

யே..!! முட்ட போண்டா சைஸ்ல இருந்து கிட்டு.. என்னைய அங்கிள் கூப்பிடுற உன்ன…?

என்றவனை…

ஒழுங்கா என் மேல இருந்து கைய எடுங்க.. இல்ல கத்தியை ஊரக் கூட்டிட்டுவேன்..!

அவள் கோவமுற்ற விழிகளில் தன்னை தொலைத்துக் கொண்டே.. “முடியாது” என்றவன் தன் கைகளின் அழுத்தத்தை கூட்டி…

“ஸ்ஸ்ஸ்.. ஹா. அதான் உங்க தேவைக்கு ஒருத்தியைக்கூட வச்சிக்கிட்டே சுத்துறீங்கல்ல… அப்புறம் எதுக்கு என்கிட்ட பொறுக்கித்தனம் பண்றீங்க..?” மரியாதையா கைய எடுங்க..” என ஆக்ரோஷமாக கூறியவளை..

புருவ மத்தியில் முடிச்சுடன் அவளை பார்த்தவன்.. அவள், வண்டியில் இருக்கும் வாசுகியையும் ராவணனையும் மாறி மாறி முறைத்துப் பார்த்தவளிடம்..

எதையோ கூற வாயெடுத்தவன், மாதுரி வருவதைப் பார்த்து அமைதியாகிப் போனான். அதற்குள் வாசுகி அவனை அழைக்க அங்கு விரைந்தவன் சிலரை விரட்டிக்கொண்டு செல்ல…

அஞ்சுவும் வந்துவிட, மகிழும் மாதுரியும் அவளுடன் புறப்பட…

பாதி வழியில் இவர்களைப் பிடித்த ராவணன் அஞ்சுவிடம் தனியாக விசாரிக்க, அவள் அவனுக்குச் சரியாகப் பதில் அளிக்காமல் அவனிடம் வாக்குவாதம் நடத்த…

“உங்ககிட்ட எந்த எவிடென்ஸும் இல்லாம என்கிட்ட வந்து எப்படி கேட்கலாம்… இங்க பாருங்க, இனிமே என்ன தொந்தரவு பண்ணீங்க, என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டதா உங்க ஹையர் ஆபீஸர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்!” என படபடப்பாக மொழிந்தவள் விட்டால் போதுமென மகிழை அழைத்துக்கொண்டு சென்றுவிட…

“என்ன?” என்று விசாரித்த மகிழிடம், “அவன் சரியான பொம்பள பொறுக்கி போல என்ன டார்ச்சர் பண்றான்!” என ராவணன் மீது பழி சுமத்தி அவள் தப்பித்துக்கொள்ள…

“ச்ச… என்ன மனுஷன் இந்த ஆளு…? இவனையா அப்பா நமக்கு மாப்பிள்ளையா பார்க்கணும்… சுத்த பொறுக்கியா இருக்கான்…” எனக் கூட நாலு கெட்ட வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ள மனம் ஆறாமல் தவித்தாள்…

கொஞ்ச நாள் முன்பு..

கமிஷனருடன் தனியாகப் பேசிவிட்டு வந்த ராவணன், தயாநிதியை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

அவருடன் சில தகவல்களைப் பகிர்ந்தவன்… “எனக்கு மகிழை பிடிச்சிருக்கு, கட்டி கொடுப்பீங்களா..?” என்று கேட்டுவிட…

அவனின் இந்த திடீர் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரின் அதிர்ந்த முகமே காண்பித்தது..

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top