காதல் செய்யாதே இராவணா-14

மகிழை தன் மனைவி என கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தான்.

“என்னப்பா சொல்ற..!!”

“வாயில எதாவது வந்துட போகுது அதான் என் பொண்டாட்டி சொல்றேன்..! அப்புறம் தாலியையும் காமிச்சிட்டேன்..! இதுக்கு மேலயும் என்ன சொல்ற.!! நொன்ன சொல்ற.. கேட்டா..??”

“உன் பொண்டாட்டினா இந்த புள்ள எதுக்கு பவளத்து கூட அனாதையான பொண்ணுன்னு சொல்லி தங்குச்சு..”

“அதான்..! தலைவரே, சரியா கேட்டீங்க.. சொல்லுப்பா உன் பொண்டாட்டி எதுக்கு பொய் சொல்லி இந்த ஊருக்குள்ள வரணும்..”

“ம்ம்ம்ம்..நானும் அவளும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டோம்….! அவளுக்கு யாருமில்லை எங்க அப்பா அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும்னு சொன்னா”

அவங்க ஒண்ணா இல்லைனு சொன்னேன் அதான் மாமனாரையும் மாமியரையும் சேர்த்து வைக்கிறேன்னு கிளம்பி வந்துட்டா..!!

(அடப்பாவி..!!!!! இது என் ஸ்கிரிப்ட்ல இல்லையே..!)

“என்னது இவங்க அப்பா அம்மா பிரிஞ்சு இருக்காங்களா..?? என்பதை.. “என்னது சிவாஜி செத்துட்றாரா.?” ரேஞ்சில் நினைத்து கொண்டு இருந்தாள் மகிழினி..

“அது சரி தம்பி…”

“யோவ்..!! இதுக்கு மேலயும்.. அது சரின்னு சொல்லிட்டு கேள்வி கேட்டீங்க…!! உங்க எல்லார் மேலேயும் இருக்குற கேஸை தூசி தட்டி எடுத்து லடாங் கட்டிடுவேன்..” என ராவணன் சீறியதும்..

“யோவ்…!! இவன்கூட பொல்லாப்பு நமக்கு எதுக்குயா சும்மா இருந்தாலே அந்த காட்டு காட்டுவான்..!! இப்போ போலீஸ் வேற நமக்கு எதுக்கு வம்பு.. அப்படியே பொத்துனாப்ல போயிடுவோம்..!!” என அந்த நாலும், நாலையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்..

“ஹிஹி.. கோவப்படாதீங்க ராவணன் தம்பி இப்படி திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டீங்க.. அது ஊருக்கு தெரியாது..?? அதுவும் இல்லாம நம்மள நம்பி வந்த பொண்ணு பாருங்க.. அது பாதுகாப்பு முக்கியம் ஆச்சே தம்பி..!!” என சொன்னதுக்கு சைடு செட்டப் மட்டும் நாலு..

“அந்த காப்பு.. கோப்பு.. எல்லாம் எங்களுக்கு தெரியும், அதான் என் தங்கச்சி வீட்டுக்கு பக்கத்துல குடி வச்சேன்..!!” என்றதும் கூட்டதுக்குள் சலசலப்பு..

“எல்லாம் அமைதியா இருங்கயா.. அதான் தம்பி அந்த புள்ளைய சம்சாரம்னு சொல்லிடுச்சி இல்ல இனி என்ன பா .. கிளம்புங்க.. ஏப்பா..! ராஜதுரை..? பொண்ணு கல்யாணத்தை தான் சிக்கனமா முடிச்சிபுட்டன்னு பார்த்தா.. மகன் கல்யாணத்த செலவே இல்லாம பண்ணிபுட்டானே.யா..கடைசி வர கறிசோத்த கண்ணுல காட்ட மாட்ட போலே..”

“அட ஏன்ய்யா..!”..”வெதும்புற உனக்கு என்ன கறிசோறு தான விடு, என் மகனுக்கும் மருமகளுக்கும் ஊர கூட்டி கறிவிருந்து வச்சிடுத்தேன்.. போதுமா..!!”

ஒருவாறாக பஞ்சாயத்தை முடித்து அனைவரும் கிளம்பி விட.. மகிழை அழைத்து கொண்டு ராஜதுரையிடம் சென்றவன்..

“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க.” என அவர் காலில் பணிந்து ஆசி வாங்கியவன்..

நாங்க கிளம்புறோங்க ஐயா..!!

என்னப்பா அதுக்குள்ள கிளம்பிட்ட..?? மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வா பா..

இல்ல ஐயா, உங்ககிட்ட சொன்ன மாதிரி எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்போ நாங்க கண்டிப்பா வரோம்..!! என அவரிடம் சொல்லிக்கொண்டு..

வடிவிடம் வந்தவன் எதுவும் கூறாமல் அவர் கால்களில் பணிந்து வணங்க..

அவர்களை வாழ்த்தியவர் மகிழை அனைத்து.. “அம்மாடி நீ எந்த காரணத்துக்கு இங்க வந்து தங்குனியோ எனக்கு தெரியாது.. ஆனா நானும் உன் மாமனாரும் சேரனும்னு நீ வந்ததா இவன் சொன்ன பொய்யை மட்டும் நான் நம்ப மாட்டேன்..!!”

“அ..து..!”.

“விடு மா..!”. “பெத்த எனக்கு தெரியாதா அவனை பத்தி..!!”. “அதனால உனக்கு ஒன்னு சொல்றேன், அவனுக்கு பிடிச்சதை அடைஞ்சே ஆகனும், ஒத்த கால்ல நின்னாவது சாதிச்சுடுவாங்க. ஆனா அதை பொக்கிஷமா பாத்துக்குறவனும் இவன் தான்.” “இவனால உனக்கு எந்த ஆபத்தும் இருக்காது.. இவனை புரிஞ்சிக்கிறது கஷ்டம் தான், ஆனா புரிஞ்சிகிட்டா இவனை ஈஸியா அடக்கி ஆளலாம்..!!” என்ற வடிவை..

“ம்கும்..!” “இதுவே இவளுக்கு புரிஞ்சதா தெரியல.. இவங்க வேற ஆளறது..! வாழுறதுனு..! பாடம் நடத்திகிட்டு… அவன் நினைத்தது சரியே என்பது போலவே அவளும் சிந்தித்தாள்.

“இப்போ இவங்க என்ன சொல்ல வராங்க..???” என புரியாது விழித்தவளை தன்னோடு அணைத்து கொண்டு..

“அவளையும், என்னையும் நான் பார்த்துக்குறேன்.. நீங்க உங்க கடமையை சரியா பாருங்க..!!” என தன் தந்தையை சுட்டி காட்டி சொல்ல.. அவரும் ராஜதுரையை பார்க்க..

அவரும் வடிவை காதல் சொல்லும் பார்வையை பார்த்தவர்… ஏக்க பெருமூச்சு எறிந்தார்..

சாம்பவி அருகில் வந்தவன்.. அவன் கூற வரும் முன்..

“எங்க அண்ணன் ஒரு விஷயம் செய்துனா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்னு எனக்கு தெரியும்..! அதனால நீ மகிழ.. ஸ்ஸ்.. அண்ணிய ஏன் இங்க விட்டன்னு கேக்க மாட்டேன்… அதே மாதிரி இனி இப்படி விட மாட்டேன்னும்”

தெரியும்..! எனக்கு நீ சந்தோசமாக இருந்தால் அதுவே போதும் அண்ணே..!” என்றவளின் தலையை ஆதூரமாக தடவியவன்.. வளவனை பார்க்க.. அவன் இவனை பார்க்காமல் எங்கோ பார்க்க..

“விடும் அண்ணே அவரைப் பற்றி தெரியும் தான..!!”

“ம்ம்ம்.. எத்தனை நாளைக்குனு நானும் பார்க்குறேன்..??”

“ம்க்கும். இங்க பாரு மகிழு, உன்னை பேர் அளவுக்கு மட்டும் தங்கச்சின்னு கூப்பிடல..!! ஒன்னு மட்டும் நியாபகம் வச்சுக்கோ மா.. உனக்கு ஒன்னுனா இந்த அண்ணன் எல்லார்க்கும் முன்னாடி இருப்பேன்… என கடைசி வரியை ராவணனை முறைத்து கொண்டே மகிழிடம் கூறினான்..

“என்ன மிரட்டிடானமா..??” போட போட நீயா என்கிட்ட வருவ அப்போ பார்த்துக்குறேன்..!!” என்றவன் மகிழையும் அபியையும் அழைத்து கொண்டு அவன் ஜீப்பில் புறப்பட்டு விட்டான்..

போகும் வழியில் மகிழ் ராவணன் முகத்தை பார்ப்பதும் பின்பு பார்வையை விலக்குவதுமாக இருக்க..

அவளை பார்க்காமலே.. “உனக்கு என்ன கேக்கனுமோ கேளு..!!??”

“அது.. ஏன் பஞ்சாயத்துல அ.. அப்படி சொன்னிங்க..”

“பின்ன எப்படி சொல்ல சொல்ற..?? என் பொண்டாட்டி என்ன விட்டு ஓடி போய்ட்டானு எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிக்க சொல்றியா..?? அப்படி சொன்னா நீ என்னடா போலீஸ்னு காரி உமிழ்வான் ??” என மித மிஞ்சிய கோவத்தில் முகம் கருக்க சொல்ல..

அவன் கோவத்தில் வாயடைத்து போய் இருக்கையோடு ஒட்டி அமர்ந்து கொண்டவள் போய் சேரும் வரை அவன் புரம் திரும்பவில்லை..

விடு வந்து இறங்கியதும் உடமைகளை எடுத்து கொண்டு உள்ளே வைத்தவன்.. அவளையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றவன்..

இங்க மேல ரெண்டு ரூம் இருக்கு. ஒன்னு பெருசு, அததான் நான் யூஸ் பண்றேன். சின்னது கெஸ்ட் வந்தா தங்க இருக்கும். இங்க கீழ சின்னதா சாமி ரூம் இருக்கும், நான் யூஸ் பண்ணது இல்ல, உனக்கு வேணும்னா சாமி போட்டோ வச்சி கும்பிட்டுக்கோ. பின்னாடி சின்னதா கார்டன் வச்சி இருக்கேன். அப்புறம் இடது பக்கம் ஒரு சமையல் அறை இருக்கு, ஆனா அது உனக்கு சம்பந்தம் இல்லாத ஒண்ணு ஆச்சே என அவளை வம்பிழுக்க…

அவனை முறைத்துப் பார்த்தாள்…”என்ன முறைப்பு உண்மையைத் தான் சொல்றேன் உன் சமையல் பத்தி கதையைப் படிக்கிறவங்களுக்கு நல்லாவே தெரியுமே..!! அதனால நாளைல இருந்து சமைக்க ஆள் வருவாங்க.” என்றவன்.

“ம்ம்.. போதும் முறைச்சது போடி உன் பொருளைக் கொண்டு போய் என் ரூம்ல வச்சிட்டு.. ஃபிரிட்ஜ்ல பால் இருக்கும் எடுத்து காய்ச்சி எனக்கும் அபிக்கும் டம்ளர்ல மேல கொண்டுவா..” என்றவனை “திருதிரு”வென்று பார்த்து வைக்க..

“என்ன..? “

“அது நான் தனியா வேற ரூம்ல..” என்றவளை இடையிட்டு ..

“உனக்கு அவ்ளோ தான்டி லிமிட்டு.. வீணா என்ன கோவப்படுத்தி உடம்ப புண்ணாக்கிக்காத ஒழுங்கா சொன்னதை செய்..” என்றதும் பெட்டியை தூக்கிக் கொண்டு மேல வைத்தவள் சமையலறைக்குள் செல்ல.

“ஆன்..! உனக்கு பால் காய்ச்சத் தெரியுமா..??”

ஏற்கனவே வழியில் உணவை முடித்துக்கொண்டு வந்ததால் அவளை பாலை மட்டும் கொடுக்க சொன்னான். ஏற்கனவே அவள் சமையல் ஞானம் அறிந்தவன் என்பதாலே அந்தக் கேள்வியை கேட்டான்.. அது அவள் தன்மானத்தை சீண்டி விட..

ம்ஹும்..என்ன இம்சை பண்ணவே பொறந்து இருக்கு பூதம்.!! பிசாசு..!! என அவனை நிந்தித்தபடியே பாலை காய்ச்சி எடுத்து இரு டம்ளரில் ஊற்றி ஒன்றில் மட்டும் வேண்டும் என்றே உப்பை அள்ளிப் போட்டு எடுத்துச் சென்றாள்.

துடுக்காக உப்பை போட்டு விட்டாள்..ஆனால் அதை எப்படி அவனிடம் கொடுப்பது என காலந் தவறி பயம் கொண்டாள் பாவை.. கையில் பாலை வைத்து கொண்டு அவள் முழிக்கும் தோரணையில் அவனுக்கு தெரிந்து விட்டது அவள் “ஏதோ செய்து இருக்கிறாள்” என்று..

“என்ன அங்க நின்னுட்டே..தூங்கலாம்னு இருக்கியா.?? உள்ள வா, அபிக்கு தூக்கம் வந்துடுச்சு போல பாரு விரலை சப்புறா பாலை குடு அவளுக்கு முதல்ல!!” என்றவன்.. அவள் கையில் இருந்த பீடிங் பாட்டிலை வாங்கி குழந்தைக்கு கொடுத்து அவளை தூங்க வைத்தான் தாயுமானவன்..

அதுவரை அவன் குழந்தையை லாவகமாக தூங்க வைத்ததை பிரமிப்பாக பார்த்து இருந்தவள் முன் சுடக்கிட்டு பாலை கேட்க, அவள் தர தயங்க, அவள் கையில் இருந்து பிடுங்காத குறையாக வாங்கி ஒரு மிடறு விழுங்கியவன் அவளை ஏறிட்டு பார்க்க, குற்ற உணர்வில் தலையை குனிந்து கொண்டவளை பார்த்தபடி பால் மொத்தத்தையும் குடித்தவன் தயங்கி நின்றவளின் தலையை இழுத்து அவன் விழுங்காமல் வைத்திருந்த பாலை “திணற திணற” அவளுக்கு புகட்டி அவளிடம் இருந்து தானும் குடித்தான்.

உப்பின் சுவையை தாண்டி அவள் எச்சில் ருசியை அறிய துவங்கியவனுள் அவள் மீதான காதல் தூண்டப்பட்டு மோகம் ஊற்றெடுக்க, கைகளால் வன்மையாக அவளை அணைத்தவன்.

“ஹா… ம்ம்ம்..” அவனை எதிர்க்க முடியாமல் தவித்தவளின் முகம் எங்கும்

“இச்..இச்..இச்..” என இடைவிடாது முத்தத்தால் அர்ச்சித்தவனின் கைகள் வன்மைக்கும் வலிமை சேர்த்து அவளுடலில் தடம் பதிக்க, தடையாக இருந்த ஆடையை பிரித்து எரிந்து தண்டிக்கப்பட, அவன் வலிய கைகளின் பிடியில் சிக்கி தவித்த கொடி இடையோடு கட்டிக்கொண்டு தானும் சேர்ந்து “ஹா.. ம்மா.. ஆஆஆஆ..” படுக்கையில் விழுந்தான்.

ம்ம்ம்ம்.!!ஹா..!! பச்…ச்ச்ச்.. ப்ச்..! இங்க இனிக்குதுடி சிட்டு… என அவளில் அறுசுவை தேடினான்.

ஹா.. ம் .. ப்ளீஸ்… மூஹும்ம்ம் ஹா..க்.ஹா.. எனத் துடித்து அடங்கினாள் மாது.

ஷ்.. ஹா… இன்னும் வேணும் வேணும் எனக் கேக்குதுடி சி…ட்டு.. ஆஆஆஆ வ்வ்வ். ஹா.. ஹு.. ஹு. என அவளை விடியும் வரை கொத்தித் தின்றவன் அவளை அணைத்தவாறு உறங்கிப் போனான்…

யோவ்…!! அங்க என்னய்யா..***கிறீங்க..??

அவன் ஆணி வேரைத் தேடி திருநெல்வேலிக்கே வந்துட்டான்.. அவனை முடிக்காம இன்னும் என்னய்யா பண்றிங்க அங்க..!!

….

அவன் நம்மளை நெருங்கி வரதுக்குள்ள, அந்த ராவணனையும்.. அந்த பொண்ணையும்.. சேர்த்துப் போட்டுத் தள்ளிடுங்க இல்லன்னா அவனுக்கு முன்னாடி நீங்க போய் சேர்ந்துடுவீங்க..!!

….

வேலையை முடிச்சிட்டு சொல்லுங்க.. என்றவன் முகத்தில் அத்தனை வன்மம்.

யார் இவன்..?? இவனுக்கும்,

அங்கே தனக்கு எதிராக பின்னப்படும் சதி வலையைப் பற்றி துளியும் அறியாமல் பாவை அவளின் மார்பு சூட்டில் ஒய்யாரமாக தூங்குபவனுக்கும் என்ன சம்பந்தம்..??..

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top