விடியா இரவு விலகி சூரியன் தன் பொன்நிற கதிர்களை பரப்பிக்கொண்டு உதயமானான்.
மெல்ல மெல்ல தன் கண்களை மலர்த்தினாள் மகிழினி. ஆயிரம் யானைகள் சேர்ந்து மிதித்தது போல் உடல் நோவு எடுக்க, கற்பாறைக்கு அடியில் சிக்கி தவிக்கும் தேரையாக அந்த அஜானுபாகு இவளை புசு புசு கரடி பொம்மையாக கட்டிக்கொண்டு உறங்க…
நேற்றைய கூடல் நினைவு அவளை தாக்க, “என் மனது இவனுக்கு பெரிதில்லையா..? என் உடல் மட்டுமே இவனுக்கு போதுமா..? நான் ஒன்றும் ஜட பொருள் அல்லவே..!! இவன் கை பாவையாக மாற்றி அவன் விளையாட…??” என சுயபச்சாதாபம் கொண்டவள் மனம் வலியில் துடிக்க…
தன் மீது இருந்தவனை தள்ள பார்த்தாள்.
“ம்ம்ஹும்ம்ம்ம்…” ஒரு இம்மி அளவு கூட அவனை நகர்த்த முடியவில்லை என்றதும் அவனிடம் இருந்து தன் உடலை அசைத்து மெல்ல நழுவி கீழே விழ போனவளை ஒரு கரத்தால் எட்டி பிடித்துக் கொண்டான்.
“ஹா.. பூதம் எந்திரிச்சிடுச்சா..?” என மிரண்டவள் அவன் முகத்தை காண, மூடிய கண்களை திறக்காமலே
அவளை அருகே இழுத்து தன்னோடு அணைத்து கொண்டு அவள் கழுத்து வளைவில் தலையை வைத்து, விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்…
அவனை ஒன்றும் செய்ய இயலாத கோபம் அவளுக்கு கண்ணீராக வர, அவள் விசும்பல் சத்தத்தில் புரண்டவன் அவள் நெஞ்சத்தை மஞ்சம் என நினைத்து முகத்தை வைத்து புரட்ட, அங்கே ஏற்கனவே அவன் தந்த காயத்தில் அவன் மீசை உரசிட…
“ஸ்ஸ்.ஹா..ம்மா…” என தன் பெண் மயில் கொடுத்த ஓசையில் கண்களை சுருக்கி அவளை பார்த்தவன், மெல்ல இது கனவல்ல என்பதை உணர நேற்று அவள் தன் ஆளுகைக்கு அடங்கி இருந்தது நினைவுக்கு வர மீண்டும் அவனுள் மோகங்களை தத்தெடுத்தான்…
அவள் இதழ் நோக்கி முன்னேறியவனை கண்டு மருண்ட விழித்தவளின் கண்களில் முத்தமிட்டவன்.
அவன் உடைகளை அணிந்து கொண்டவன் அவள் ஆடையை எடுத்து கொடுத்தான்.
“கிளம்பு சிட்டு…!”
“எங்கே..?”
“அப்படியே அறைஞ்சிடுவேன்…” என கை ஓங்கியவனை கண்டு பயந்து பின்னால் எட்டு வைத்தாள்.
“என்னை கோவப்படுத்தாம வா போகலாம்…!!”
….
“இங்க பாரு உன்கூட கபடி விளையாட எனக்கு கொஞ்சம்கூட நேரம் இல்ல. உன்ன கூட்டிட்டு வரேன்னு அய்யா கிட்ட சொல்லிட்டேன். போய் அவர் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு ஊருக்கு போகனும் சொன்னா கேளு ஒழுங்கா கிளம்பு…”
“ம்ம்ஹும்ம்ம்.. மாட்டேன்…” என சுவரோடு ஒண்டி நின்றவளை…
இவள…!!என பல்லை கடித்தவன்..
அவள் அருகில் சென்று முகம் மறைத்த முடியை விலக்கியவாறே…
“சரி நீ அங்க வரவேணாம்…. ஆனா எனக்கு ஊட்டி ஒரு முக்கியமான வேலை இருக்கு..வரியா… ஹனிமூனுக்கு இல்லைமா..?” என்றதும் திகில் பிடித்தது மைனாவுக்கு..
“அங்க என்ன வேலை கேளேன் சிட்டு..”
“…”
“சரி நானே சொல்றேன் அங்க..*** போர்டிங் ஸ்கூல் இருக்கு அங்க நம்ம அபிக்கு சீட்டு வாங்கலாம்னு இருக்கேன்.. என்றவனால் அவள் இதயம் வெளியே எகிற குதித்தது..(அடேய் அது பால்வாடி போற புள்ள டா..)”
அவள் முக பாவங்களை பார்த்தவாறே “உனக்கு அங்க யாரையாவது தெரியுமா உனக்கு..”
“ப்ளீஸ்.. எதும் பண்ணிடாதீங்க.. நீங்க சொல்ற மாதிரியே கேக்குறேன்..!!ப்ளீஸ்..”என இரு கரம் கூப்பி மன்றாடும் குரலில் கேட்க..
கண்களை மூடி திறந்தவன்.. “நானும் ஹீரோவா தான்டி இருக்க பாக்குறேன் விட்டாதன..?” (யாருனுலாம் கேக்க படாது..)
சரி வா என இருவரும் கிளம்பி தயாராகி வெளியே செல்ல கதவு திறந்தால் தானே.. கதவை வெளிபுறமாக பூட்டி இருந்தார்களே..
“ம்ஹும்.. இத நேத்தே எதிர்பார்த்தேன்..!! என்றவனை புரியாது மகிழ் ஏறிட்டு பார்க்க..
“என்ன..?? உனக்கு புரியலையா..”
“ம்ம்ம்..!”
“இப்போ கொஞ்ச நேரத்துல ஊரே கூடி பஞ்சாயத்து வைப்பாங்க அப்போ தெரிஞ்சுக்குவ..! ஆமா நீ இதுவரை பஞ்சாயத்தை பார்த்து இருக்க..
“இ..இல்ல..”
“இன்னைக்கு நடக்கும் பாரு..!! செம என்டேர்டைன்மெண்ட் இருக்கு என கைகளை நெட்டி முறித்தவன்..!!”தோரணையில் பூவையர்கள் சொக்கி தான் போவார்கள்..
அவன் கூறிய சிறிது நேரத்தில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர் சிலர்..
“பாத்திங்களா..! பாத்திங்களா..! நான் சொன்னேன்ல..!”
“ஐயோ..!! ஐயோ.!!.பாருங்க ஒரு வயசு பொண்ணு தனியா இருக்குற வீட்ல புகுந்து என்ன பண்ணி வச்சி இருக்கான் பாருங்க தலைவரே .!!” என எகிரியது கூட்டத்தில் குள்ள நரி..
ராவணன் அவனை முறைத்து பார்க்கவும் கூட்டத்தில் மறைந்து கொண்டது..
“என்ன.. தம்பி இது..?? ஊர காக்குற பதவியில் இருந்துட்டு நீங்க இப்படி பண்ணலாமா..?? என்றார் ஊர் தலைவர்..”என்ன தலைவரே அதான் கையும் களவுமா பிடிச்சாச்சு இல்ல என்ன பேசிகிட்டு இருக்கீங்க..?? கூட்டுங்க பஞ்சாயத்தை..” என்றனர். அவருக்கும் வேறுவழி இல்லாததால்..!!
இனிதே தொடங்கியது பஞ்சாயத்து.. இந்த முறை ஆலமரத்தை கண்டு பிடிச்சாச்சு மக்களே வாங்க போய் என்ன நடக்குதுன்னு நாமும் கூட்டத்தோட கூட்டமா நின்னு பார்ப்போம்..
அங்கே ஆல மரத்துக்கு அடியில்.. ஊர் தலைவர், ராஜ துரை மற்றும் பிராது கொடுத்த அல்லகைகள் அமர்ந்து இருக்க…
“இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல்..!! கூட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான் ராவணன்…!! அருகில் கலங்கிய படி மகிழ்..
“இப்படியே மூஞ்ச பார்த்துட்டு இருந்தா எப்படி நம்ம ஊர நம்பி வந்த புள்ளய காப்பாத்த வேண்டியது நம்ம கடமை.. இந்தா நிக்குறாரே.. பெரியவர் மகன்.. ராவணன்..
“நட்ட நடு ராத்திரில இந்த புள்ள வீட்டுக்குள்ள நுழைஞ்சி அத்து மீறி இருக்காருயா..” என்றதும் “ஓஒ” என மகிழ் அழ தொடங்க..
“இவ வேற ஒருத்தி கண்ணுக்குள்ள டேம்.. இல்ல கடலே வச்சி இருப்பா போல..!!
“என்னப்பா இது.?” என்பது போல் ராஜதுரை அவனை பார்க்க..
“பார்த்துக்கலாம்..!!” என்பது போல் நின்றான்..
“எனக்கு அப்போவே தெரியும் இவன்…இவருரு…!” என ராவணனின் தீ பார்வையில் மாறியது..
இந்த மாதிரி பஞ்சாயத்துக்குனே ஊருக்குள்ள நாலுபேரு இருப்பாங்களே அதுகளில் ஒன்று..
“எனக்கு அப்போவே தெரியும் இவரு ஊருக்குள்ள வரும்போதே எதாவது பஞ்சாயத்து இழுத்துட்டு வருவாருனு..”
“யோவ் பதினொன்பது வயசுலே பெண்ணு சங்கதில பஞ்சாயத்துக்கு வந்தவர்யா.. இப்போ மட்டும் மாறி இருக்கவா போறாரு..!!” என ஒருவர் கூற.. அப்போது தான் விடயம் கேள்வி பட்டு பஞ்சாயத்திற்கு வந்த வடிவு அவனை தீ பார்வையில் பொசுக்க..
“இதெல்லாம் சப்ப மேட்டர்..” என்பது போல் பார்த்து அவரின் கோவத்தை அதிகரித்தான்…
“என்னப்பா ராவணா எதுவும் சொல்லாம இருந்தா எப்படி..” என தலைவர் கேள்விக்கு பதில் அளிக்காமல் காதை குடைந்து கொண்டு இருந்தவனை கண்டு பெருசுகளுக்கு ஏகத்துக்கும் எகிறியது பிரஷர்..
“பார்த்தீங்களா திமிர..”
“யோவ் சும்மா இருயா அவனை பத்தி தெரியும்ல. “என அவர் நெற்றியை சுட்டிக்காட்டி கூற
தன் தழும்பை தொட்டு பார்த்தவருக்கு அதை ஏற்படுத்தியவனை நினைத்து மிடாறு விழுங்கியபடியே வாயை மூடி அமர்ந்து கொண்டார்..
“எப்ப ராவணா கேக்குறோம்ல பதில் சொல்லுப்பா..!!”
“என்ன சொல்லனும்..??” “அந்த பொண்ணு வீட்டுக்குள்ள நான் போனதை யார் பார்த்தா..??”
“என்னப்பா சொல்ற..!! அதான் நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்ததை ஊரே பார்த்துச்சே..??”
“ஆமா வெளியே வரப்போ பார்த்துச்சு.. ஆனா உள்ள போனத யார் பார்த்தா..?”
என்னய்யா சொல்றான்..?? போனேன் சொல்றானா..?? இல்லன்னு சொல்றானா.?? அதான் எனக்கும் ஒன்னும் புரியல..” என தலையை அனைவரும் பிய்த்துக்கொள்ள வைத்தான். மகனின் விளையாட்டைப் புரிந்துகொண்ட ராஜதுரை அவனை மெச்சிக் கொண்டார்.
அது எப்படி தம்பி, அதான் நீங்க வெளிய வருவதை ஊரே பார்த்துச்சே, அப்போ நீங்க உள்ள போனீங்கன்னு தான அர்த்தம்..??
ப்ச், அதெல்லாம் தேவையில்லைங்க..! நான் உள்ள போனதை பார்த்ததுக்கு சாட்சி இருக்கா..?? இல்லையா…??
இருக்கு…!! அவங்க உள்ள போனதை பார்த்த சாட்சி இருக்கு..!! என கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது..
எவன் அவன்..??
என ராவணனும்..
யாரும்மா அது..?? எதுவா இருந்தாலும் முன்னாடி வந்து சொல்லுங்க மா..
என்றார் தலைவர்..
கூட்டத்தை விலக்கி கொண்டு வந்தவளை பார்த்து..
யாருமா நீ.??
உன் பேரு என்ன..??
…
அ.. ஐயா..!!
என் பேரு ‘யது நந்தினிங்க..’!!…
உன்னை இதுக்கு முன்னாடி இந்த ஊர்ல பார்த்தது இல்லையே..??
என்றான் ராவணன்..
ஆ.. ஆமா நான் ஊருக்கு புதுசு தா..ங்கயா.!!
என தலைவரிடம் சொல்லிய பின்..
எப்படி..! எப்படி..! உங்களுக்கும் என்ன யாருன்னே தெரியாதா.
என்றேன் ராவணனை பார்த்து…(ரைட்டர் ஜோகம்..! )
தெரியல சொன்னா என்ன பண்ணுவ..?? என கைகளை மடக்கி அவன் கேட்ட விதம் இருக்கே..
சரி..சரிவிடுங்க இப்போ.. தெரிலனா என்ன.. இனிமே தெரிஞ்சிக்கோங்க நான் தான் காதல் செய்யாதே ராவணான்னு ஒரு கதை எழுதுறேன்..டைம் இருந்தா படிங்க.. ஹிஹி.. சரியா..
ஏன்மா அங்க என்ன குசுகுசுன்னு பேசற.. இங்க நீ என்ன பார்த்த..?? எப்போ பார்த்த..?? நீயாவது தெளிவா சொல்லுமா..??
ஐயா..!!! ஆமாங்க நான் பார்த்தேன்..!! இ.. இந்த அண்ணா.. அ..அந்த அக்காவ.. வீட்டுக்குள்ள போனத என் ரெண்டு கண்ணால பார்த்தேன்..!
என சொல்லிய என்னை நம்பாமல் பார்க்க..(இப்படி சொன்னாவது நாட்டாமை பட எபெக்ட் வருமா பார்த்தேன் வரல… நோ வொலேன்ஸ்..)
நம்புங்க..!! நான் மட்டும் இல்லை.. இந்த கதைய படிக்குற ரீடர்ஸ் அத்தனை பேரும் சாட்சி, வேணும்னா கேட்டு பாருங்க…”(சொல்லுங்கப்பா..!!”)
ஓ..!! ரீடர்ஸே சாட்சி சொல்றாங்களா, அப்போ நம்புறோம்..!!
அது சரி, நீ எப்பவும் கடைசியா தான வருவ, இப்போ என்ன கதைக்கு இடையில வந்த..?
அதுஉஉஉ.. அது.. வந்துஉஉஉஉ..
அதான், ஏன் இப்போ வந்த..??
அதான் வந்துட்டேன்ல, விடுங்க.. நீங்க பஞ்சாயத்தை பாருங்க.. நான் கிளம்புறேன்.. ச்சே ச்சே.. ஒரு கெஸ்ட் ரோல் பண்ண வந்தா எத்தனை கேள்வி கேக்குறாங்க..??
அதான் ராவணன் அந்த பொண்ணு வீட்டுக்குள்ள போனது வெட்ட வெளிச்சம் ஆகிப்போச்சே.. மேற்கொண்டு என்னனு விசாரிச்சு சட்டு புட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க பா..
ஏன்மா பொண்ணு, நீ என்னமா சொல்ற..?? என மகிழை கேட்க..
இவர்களிடம் உண்மையை சொல்லி விடலாமா என யோசித்தவள் நிமிர்ந்து ராவணனை பார்க்க.. அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கீழ் உதடை கடித்து கண் அடிக்க, மறுநிமிடமே அந்த யோசனையை கைவிட்டவள் அமைதியாக இருக்க..
இப்படி அமைதியா இருந்தா எப்படிமா..?? ஏதாவது சொன்னாதான நாங்க ஒரு முடிவு எடுக்க முடியும்..
அட ஏன்ய்யா, ஊசி இடம் கொடுக்காம நூல் போகுமா, அந்த பொண்ணே இடம் குடுக்காம உள்ள போய் இருப்பாரா..” என அந்த நாலுபேரில் ஒருவன் அவளை பற்றி கூறியதும்,
ஏய்..” என அவரின் கழுத்தை பற்ற..
ஐயோ தம்பி..??
என்ன பண்றிங்க, விடுங்க தம்பி..!!
அண்ணே..!!! என்ன பண்ற, விடு… விடுடுடு..!!” என கெஞ்சிய யார் குரலுக்கும் செவி மடுக்காமல் அவரை பிடித்தபடியே நின்றான்..
“ப்ளீஸ்.. விட்ருங்க..!!” என மகிழ் அவன் கைகளைப் பற்றியதும் அவரைத் தரையில் தொப்பென்று தள்ளி விட்டான்..
“ஹக் ஹக்..பார்த்தீங்களா.. ஐயா, உண்மைய சொன்னா என்ன கொல்ல பார்க்குறான்.. இவனை சும்மா விடக் கூடாது. பஞ்சாயத்துல வச்சி சரியான தண்டனை கொடுக்கனும்…” என்றவனுக்கு..
“ஆமா ஆமா தண்டனை கொடுக்கனும்..” அத்தனை அல்லக்கைகளும் “சீங்க் சக்” போட..
“அடிங்க..!! எவன்டா அது என் பொண்டாட்டி கூட நான் இருந்ததுக்கு பஞ்சாயத்தைக் கூட்டி வச்சிக்கிட்டு ரவுஸ் பண்றது…!!!”
என்னது..?? என்றன பல குரல்கள் பலவிதமாக..
“என்னப்பா சொல்ற அந்த புள்ள கழுத்துல எங்க தாலி இல்லையே..?” ஒரு அறிவுஜீவி கேட்க..
மகிழை முறைத்துக்கொண்டே அவள் அருகில் சென்றவன் அவள் ஆடைக்குள் மறைத்து இருந்த தாலியை எடுத்து வெளியே போட்டான் அதன் உரிமையாளன்..
ஆம் அவள் திருமதி.. மகிழினி ராவணன்…



