Teaser

🔥 அசுரனின் அழல் பாவை 🔥

“இந்த அழகு எனக்கு சாபம்…”

பெற்றோர் துரோகம் செய்தனர்…

உற்றோர் நம்ப மறுத்தனர்…

காதலித்தவன் ஏமாற்றி விட்டான்…

கட்டிய கணவன் கைவிட்டு விட்டான்…

உயிர் பிரியும் கடைசி நொடியிலும் காதலை வெறுத்தவள்…

“இனி எந்த ஜென்மத்திலும் காதல் என்னை நெருங்கக்கூடாது…”

என்று சாபத்தை வரமாக பெற்று சென்றாள் ஒரு யுவராணி.

பல நூற்றாண்டுகளுக்கு பிறகு…

பெங்களூரில் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு பெண்

ஆனால் அவள் வாழ்க்கையில் மட்டும் எதுவும் சாதாரணமில்லை.

நின்று போகும் நிச்சயதார்த்தங்கள்…

தொடரும் துரதிர்ஷ்டங்கள்…

அவள் அருகில் வர முயற்சிக்கும் ஒவ்வொருவரையும் விதி வேரோடு பிடுங்கி எறிகிறது… ஏன் என்று புரியாத கேள்வி

ஆனால்…

யுகம் யுகமாக அவளை தேடி அலையும் ஒருவன் மட்டும்…

விதியையும்…

சாபத்தையும்…

மரணத்தையும் கூட எதிர்த்து மீண்டும் அவள் முன் வந்து நிற்கிறான்…

“யுகம் யுகமாய் தேடி திரிந்து உன்னை கண்டுவிட்டேன் யுவராணி…”

“இந்த முறை உன்னால் என்னிடம் இருந்து தப்ப முடியாது…”

ஒருவனை அவள் காதலித்தாள் 

ஒருவன் அவளை காதலித்தான்… 💔

ஒருவன் அவளுக்காக இறந்தான்… 🖤

ஒருவன் அவளை கொன்றன் – ❤️‍🔥

ஆனால்…

அவளை உண்மையில் கொன்றது யார்?

காதலனா…?

கணவனா…?

இல்லை…

காதலா…?

சாபத்தால் பிரிந்த இரு உயிர்கள்…

இந்த ஜென்மத்தில் ஒன்றாகுமா?

அல்லது…

மீண்டும் வரலாறு இரத்தத்தில் எழுதப்படுமா?

🖤 அசுரனின் அழல் பாவை 🖤

“அவன் அசுரன்…

ஆனால் அவள் மீது வைத்த காதல் மட்டும் தெய்வீகம்…” 🔥💔

— யது நந்தினி ✨

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top