தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரனே…14

பஞ்சு மேகத் திரையினை நீக்கிய பால் நிலா, கள்ளமாய் கன்னிப் பெண்ணின் அறையை எட்டிப் பார்த்தது… அங்கு பால் வெளிச்சத்தில் பளபளவென்று ஜொலித்தாள் வெள்ளிப் பதுமை…

இதுநாள் வரை…

மனதை அரித்த குழப்பமும்…

நெஞ்சை அழுத்திய பாரமும்…

விலகிய நிம்மதி முகத்தில் தெரியாமல்…

ஒரு சின்னக் குழந்தை போல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள் தேன்மொழி…

ஸ்ஸ் ஆ… நல்ல உறக்கத்தில் யாரோ அவளைக் கிள்ளுவது போல் வலி எடுத்தது…

சு, கொசு என்று புரண்டு படுத்தாள்… ஒன்று, இரண்டு, மூன்று என இறுதியாக நருக்கேன்று கடித்து வைத்துவிட…

அம்மாஆ என வலியில் துடித்து எழுந்தவள், கண்களைக் கசக்கிக் கொண்டு பார்க்க, கொசுவுக்குப் பதில் ஒரு ஆள் உயர மூட்டைப் பூச்சி அவள் மெத்தையை ஆக்கிரமித்து இருந்தது…

“ஏய்!” என தேன்மொழி பதறி கட்டிலை விட்டு இறங்கியவள்… பின்னே அந்த மூட்டைப் பூச்சி தீரனாக இருந்தால் பதறத் தான் வேண்டும்…

“இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க, எப்படி வந்தீங்க?” என்றவள் திறந்து கிடந்த தன் ஜன்னலை இயலாமையுடன் பார்த்துவிட்டு…

“மரியாதையா என் ரூம் விட்டு வெளிய போங்க!” எனப் படபடத்தவளுக்கு, இரவின் தனிமையில் அவனோடு நிற்பதற்கு அவளுடைய பெண்மை எச்சரித்தது…

அதை எல்லாம் கவலைப்படும் ரகமா அவன் இல்லையே…

என்னவோ மறுவீட்டுக்கு வந்த மாப்பிள்ளை போல் ஜம்மென்று அவள் படுக்கையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, கையால் தலையைத் தாங்கியபடி ஸ்டைலாகப் படுத்திருந்தவன், அவளைப் பார்த்து கண்ணடித்தான்…

அவன் செயலில் எரிச்சல் உற்றவள்… யார் சொன்னாலும் கேட்காத பிறவி குணம் உடையவன் என்பது தாமதமாகவே நினைவுக்கு வந்தது.

“இங்க பாருங்க, உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க… இப்படி அர்த்த ராத்திரியில ஒரு பொண்ணோட ரூம்குள்ள அனுமதி இல்லாம வர உங்களுக்கு தப்பா தெரியலையா..? ஒழுங்கா நீங்களா எப்படி வந்திங்களோ அப்படியே போய்டுங்க! இல்லை… நான் ஒரு குரல் குடுத்தா போதும், எங்க அப்பாவும் அண்ணனும் உங்களை சும்மா விட மாட்டாங்க. போங்க வெளிய… !” என ஜன்னலை காட்டி எச்சரித்தாள் தேன்மொழி…

அவளை ஆழமாகப் பார்த்தபடி படுக்கையில் இருந்து எழுந்த தீரன், தேன்மொழியை நோக்கி ஒவ்வொரு அடியாக முன்னேற…

அவளின் தளர்ந்த கால்கள் தன்னால் பின்வாங்கின… தீரனின் தீர்க்கமான பார்வையைத் தாங்க முடியாமல் தடுமாறினாள் பாவை…

சுவரோடு சுவராக ஒட்டி நின்றவளின் முதுகில் சுவரின் குளுமை தாக்கியது

அவளின் இருபுறமும் தன் கைகளை ஊன்றி, தேனைச் சுவரோடு சிறைபிடித்தது போல் அவளை ஒட்டி நின்றவனின் மூச்சுக் காற்று அவள் முகத்தில் மோதியது… மித மிஞ்சிய அவன் நெருக்கத்தில் அறிமுகமான ஆணின் வாசனை தேன்மொழியைச் செயலிழக்கச் செய்தன…

உதட்டை குவித்து அவள் முகத்தில் ஊதியவன் செயலில் கண்மூடி கிறங்கி நின்றவளின் செவி அருகே குனிந்தவன்…

என்னவோ பெருசா வசனம் பேசின, இப்ப பேசுடி… என் மூச்சுக்காற்று பட்டதுக்கே இப்படி உறைஞ்சு போய் நிக்கிற… என்னமோ சொன்னியே, என்னது ஹான்? உன் பின்னாடி வந்தா விளைவுகளைச் சந்திக்கணுமா? சந்திக்க நான் தாயார்டி இப்ப கூப்பிடுடி, உங்க அப்பனையும் உங்க அண்ணனையும் வரட்டும், ரெண்டுல ஒன்னுப் பார்த்துடுறேன்… என பிடிவாதமாக கூறியவன் விடாது…

நீயே கூப்பிடுறியா இல்லை நான் கூப்பிடவாடி… என கேட்டான். அதில் பயந்த தேன்மொழியின் முகம் வெளிறிப் போவதைப் பார்த்து திருப்தியடைந்த அவன், மேலும் அவளைக் கலவரப்படுத்த நினைத்தான்…

யோவ் பெரிய மனுஷா, டேய் ரூத்ரா, எங்கயா போனீங்க? எல்லாரும் உள்ள வீட்டையே ஒழுங்கா பார்த்துக்கத் தெரியல, இதுல வெளில பஞ்சாயத்துக்குப் போறிங்களா? வாங்கயா என தீரன் கத்தத் தொடங்கவும், பயந்து போன தேன்மொழி எம்பி தீரனின் வாயை பொத்தினாள்…

“ஐயோ கத்தாதேங்க…” என்றவள் கைகள் இன்னும் அவன் வாயின் மீது இருக்க…

அதை ரசனையோடு பார்த்தவன்,

மெல்ல அவள் கண்களை நோக்கி புருவத்தை உயர்த்தினான்…

அந்த பார்வையில் தேன்மொழிக்கு தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது உணரப்பட்டு, கையை எடுத்துக்கொண்டாள்…

அவள் கையை எடுத்ததும் ஏமாந்து போனவன், “யோவ் அவிநாசி! டேய் ருத்ரா!” என மீண்டும் கத்தத் தொடங்கவே, எடுத்த கைகளால் மீண்டும் அவன் வாயைப் பொத்தினாள். அதில் “இவ்வளவு தான் உன் தைரியமா?” என்பது போல் பார்த்த தீரனின் கர்வம் கூடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட பேதை, தலை குனிந்து நின்றாள்.

“ப்ளீஸ், தயவு செஞ்சி கத்தாதீங்க… இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்? எதுக்காக என்னை இப்படி சித்திரவதை பண்றீங்க?” என கேட்டவளின் குரல் தழுதழுத்தது…

தன் வாயை அடைத்து இருந்த தேன்மொழியின் பொற்றாமரை கரங்களை விலக்கியவன், ஒற்றை விரலால் அவள் நாடியைத் தூக்கி அவள் கண்களை உற்றுப் பார்த்தான்…

“எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாதா?” என உயிரை உருக்கும் குரலில் கேட்டான்.

அதில் சிலை எனச் சமைந்தாள் பெண்…

தன் பாக்கெட்டில் இருந்து தங்கக் கொலுசுகளை வெளியே எடுத்தான், “இதை நீ போடு, நான் இங்கிருந்து போயிட்டுறேன்,” என்றான் சமாதானமாக…

நெஞ்சடைக்கத் தலையை ஆட்டி மறுத்தாள் தேன்மொழி.

வெறும் கொலுசுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று தோன்றலாம், ஆனால் அதன் பின்னால் இருக்கும் வலியையும் வேதனையையும் அவள் மட்டுமே அறிவாள். மேலும், இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாக கிடைப்பதில்லை; இந்த கொலுசுக்கு பதிலாக அவன் கேட்கப் போவது என்ன என்பதையே அவள் நன்கு அறிவாள். அவன் எண்ணமெல்லாம் அவளை வைத்து அவள் பெற்றவரையும் உடன் பிறந்தவனையும் வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே; அப்படி இருக்க இவள் எப்படி ஒப்புக் கொள்வாள்?

“கண்ணை விற்று கனவை வாங்க முடியுமா? அவளின் உயிரை விற்று தான் காதலை வாங்க வேண்டுமா? முடியாது!” என்று உடனே மறுத்தாள். அதில் தீரன் வெகுவாக அதிர்ந்தான்.

ஒரு நொடி, ஒரே நொடி; அதற்குள் தன்னை மீட்டுக் கொண்டவன்…

முடியாதா ??? இங்க பாருடி நான் நினைச்சதை நடத்தியே பழக்கப் பட்டவன் என்கிட்ட இந்த முடியாது நடக்காது சொல்றது எல்லாம் எடுபடவே செய்யாது… இப்போ நீயா இந்த கொலுச போடுரியா இல்ல நானா போட்டு விடவா.. என அவளுக்கு மேல் பிடிவாதமாக நின்றான்..

ஒன்றோடு ஒன்று ஒட்டி உரசி நிற்கும் உடல்கள் இரண்டிலும் வெப்பச் சலனங்கள்… தேன்மொழியின் விழிகள் பயத்தில் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன… அதை ரசித்தவாறே அவளை மேலும் ஒட்டி நின்றான்…

என் சம்பாதியத்துல என் அப்பா அம்மாவுக்கு கூட நான் இதுவரை எதுவும் வாங்கிக் கொடுத்தது இல்லை உனக்காக ஆசையா கொலுசு வாங்கி வந்தேன் பாரு சை என்ன சொல்லணும் சண்டையை கூட அவளை அணைத்தப்படி நின்று தான் போட்டான்

“ப்ளீஸ் தீரன், என்னை விட்டுடுங்க” என இறைஞ்சினாள் தேன்மொழி…அவளால் அவனை ஏற்கவும் முடியவில்லை விலக்கவும் முடியவில்லை

“உன்னை விடாவாடி நான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து இருக்கேன்… இங்க பாருடி, நீ எனக்கு தான் எப்போவோ பிக்ஸ் பண்ணிட்டேன்… அதை மாத்தவோ மறைக்கவோ உன்னால மட்டும் இல்லை, உன் அப்பனே வந்தாலும் முடியாது” என உறுதியாகச் சொன்னவனை… கண்கள் விரியப் பார்த்தவள் எப்படி உணர்ந்தாள் என்றே சொல்ல முடியாது…

சற்றுப் பொறுத்தவன்… “சரிடி, கடைசியா எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணு, உன்னை விட்டுடுறேன்…” என்றவனை கேள்வியாக ஏறிட்டுப் பார்க்க…

“வா, இப்போவே போய் உங்க அப்பா கிட்ட தீரன் என் ரூம்குள்ள அத்துமீறி வந்து வம்பு பண்றான்னு சொல்லு, மத்தத அவங்க பார்த்துப்பாங்க…” என தீரன் தேன்மொழியின் கையைப் பிடித்து அழைக்க…

“விடுங்க ஐயோ விடுங்க சொல்றேன்ல… என்னால அப்படி செய்ய முடியாதுன்னு தெரிஞ்சே இப்படி பண்றிங்களே, உங்களுக்கே இது நல்லா இருக்கா?” என விம்மினாள்…

“இங்க பாரு தேனு, உனக்கு நான் கட்டாயப்படுத்திய படத்துல முன்னாடி ரெண்டு ஆப்ஷன் இருக்கு… இப்போவே போய் உங்க அப்பா கிட்ட சொல்லி என்னை மாட்டிவிட்டு நீ தப்பிக்கலாம், இல்லை…” என்றவன் தன் பாக்கெட்ல இருந்து கொலுசுகளை எடுத்து அவள் முன் காட்டி, “இதை போட்டுக்கிட்டு இந்த ஜென்மம் முழுவதும் என்கூடவே இருந்துட வேண்டியது தான்… முடிவு உன் கையில இருக்கு” என்றவன் அவளை விட்டு தள்ளி நின்று அவள் யோசிப்பதற்கு அவகாசம் அளித்தான், அந்தப் பெரிய மனசுக்காரன்…

எப்படி முடியும் அவளால் உயிரா மனமா என்ற நிலையிலே, அவனை காட்டிக் கொடுக்க முடியாதவளால் இப்போது மட்டும் முடியுமா… அவள் நிலையை உணர்ந்தே இப்படி ஒரு சூழ்நிலையில் தள்ளி நிறுத்தி வேடிக்கை பார்க்கும் இவனை என்ன தான் செய்வது…

சுவற்றில் சாய்ந்து கண்ணை மூடி யோசித்தவளின் மனத்திரையில் அரும்பு மீசைக் கொண்ட தீரன் தோன்றி பெண்ணவளை மேலும் வாட்டி வதைத்தான். கள்வன் தொடர்ந்து அவனைச் சந்தித்ததும், அவனால் அவள் வாங்கப்பட்ட மரண அடி கூடவே சேர்ந்தே வந்ததே…

என்ன முயன்றாலும் தீரன் அளித்துச் சென்ற காயத்தை அவளால் மறக்க முடியவில்லை… கண்ணோரம் கண்ணீர் வழிய நின்றவள், தன் கால்கள் தானாகத் தூக்கப்படுவதை உணர்ந்து கீழே குனிந்து பார்க்க…

கண்ணீர் படலத்தின் நடுவே அவள் முன்னால் மண்டியிட்ட தீரன், தேன்மொழியின் வெண்தாமரை பாதத்தை அவன் மடியில் வைத்து, கொலுசை அவள் காலில் பூட்டினான்…

உதடு துடிக்க, தீரன் தனக்குக் கொலுசு அணிவதைப் பார்த்து நின்றவளின் விழிகளில் இருந்து சொட்டு சொட்டாகக் கண்ணீர் வழிந்து தீரனின் தோள்பட்டையை நனைத்தது…

நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையும், குனிந்து நின்றவளின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் ஒன்றோடு ஒன்று மோதி நின்றது…

என்ன நினைத்தானோ, சட்டென்று எக்கி தேன்மொழியின் துடிக்கும் இதழ்களைக் கவ்விக் கொண்டான்…

ம்ம்ம்ப்ச்! அவள் நகர்ந்து விடாமல் இருக்க அவள் பிடரியைப் பிடித்துக் கொண்டு முத்தத்தைத் தொடர்ந்தான்… அந்த நிலையில் முத்தம் கொடுக்க தேன்மொழிக்குக் கழுத்து வலி எடுத்தது, முகம் சுணங்கியது… இதழ்களுக்கு நொடி அளவு இடைவெளி விட்டவன், எழுந்து நின்று எச்சில் வழிந்த தேனுவின் இதழைக் லபக்கு என்று மீண்டும் கவ்விக் கொண்டான். அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டு சுவர் மீதே சாய்ந்து உருண்டான்… அவன் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் காற்றோடு செல்லும் பட்டம் போல் வளைந்து சென்றாள்…

மீளாத சுழலில் மாட்டிக் கொண்டவளை… மாளா காதல் தன் வசம் சிறை பிடித்துக் கொண்டதோ…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top