மதுரம் சிந்தும் காதலே-25

நீ தாத்தாவை ஏற்றே ஆக வேண்டும், அதற்கு என் காதலையும் பலி கொடுக்கத் தயார் என்னும் பிடிவாதத்தில் தனா ஒரு பக்கம்….

என் காதலையே என் கண்ணில் குத்த நினைப்பவனையா விரும்பித் தொலைத்தேன்… என்ன ஆனாலும் அதிவீரராமபாண்டியரை மன்னிக்கும் மனமில்லாமல்… தனாவிடம் காதலை யாசிக்க சுயகௌரவம் இடமளிக்காமல் தடுக்க… நடைபிணமாகச் சுற்றி வந்தாள்….

முன்னிலும் கேடாகிப் போனாள்… உடல் நலனில் பேணுவத்தில் ஆர்வமில்லை… யாரிடமும் பேசுவதில்லை… அன்று நிரஞ்சனோடு பேசிய பின்பு யாரையும் அணுகவில்லை… தனாவை முற்றிலுமாக… அலுவலகம்… வீடு இரண்டிலும் தவிர்த்து வந்தாள்…

இவள் ஒதுக்கம் கண்டாலும்…. அவள் முடிவை மாற்றும் வரை.. அவன் எதுவும் செய்யக்கூடாது என தன்னைத் தானே கட்டிப் போட்டுக்கொண்டான்…

இது ரெண்டும் இப்படி அடிச்சிக்கிற அளவுக்கு அப்படி என்னதான்டா நடந்துச்சுன்னு கேக்குறீங்களா…

அதுக்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கு மக்களே…. போயிட்டு வந்துடுவோம் வாங்க….

ஹிஹி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…. பிளாஷ்பேக் வந்தே தீரும்….

சுருள் சுருள்… கொசுவாத்தி… ச்சே.. நல்லா இல்லை… ஸ்பிரிங் ரோல்…..

அதாவது…. வீர பாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும்… அடுத்து கடைசியாகப் பிறந்த கவி அவ்வீட்டின் செல்வச் சீமாட்டியாக இருந்தாரோ அதைவிடச் செல்லமாகத் தாங்கினர்…. அவ்வீட்டின் கடைக்குட்டி மான்… மதுராவையும்… பிறப்பிலே துடிப்பான பிள்ளை….

அதில் தோள் விட்டு இறக்காமல் மாமன்கள் தாங்க… சின்னச் சின்னச் சேட்டைகளைச் செய்யத் தொடங்கிய… சமயம் அது…

அப்போது… சந்தியா… நிரஞ்சன்… மதுரா மூவரும் அவர்கள் விவசாய நிலத்தில் உள்ள பம்ப் செட்டில் விளையாடிக்கொண்டு இருந்தனர்…..

அப்பொழுது சந்தியாவிற்கும் நிரஞ்சனுக்கும் இடையில் விளையாட்டு வினையாகி கைகலப்பாகவும் மாறிவிட… அவர்கள் இருவரும் சண்டை போடுவதைப் பார்த்து பயந்த மதுரா அவர்களை விலக்கச் செல்ல… அதற்குள் சந்தியா நிரஞ்சனை வேகமாகப் பிடித்துத் தள்ளியதில்…. அவன் கிணற்றில் விழுந்து…. உயிருக்கு போராட…

அதை தூரத்திலிருந்து பார்த்த தனஞ்ஜெயனுக்கு….. அந்த பக்கம் இருந்த சந்தியா தெரியாமல் இந்த பக்கம் இருந்த மதுரா மட்டுமே தெரிந்து இருக்க… தவறாகப் புரிந்து கொண்டவன்… ஆட்களை அழைத்து வந்து நிரஞ்சனையை காப்பாற்ற….

“யார் இந்த விபரீதச் செயலைச் செய்தது..?” என அதிவீரராம பாண்டியர் கேட்க… செய்யாத குற்றம் மதுரா மீது சுமத்தப்பட்டது…. அதுவே அவளை வீண் பழிகளைச் சுமக்கத் தொடங்குவதற்கு அமைந்தது தான் அவள் துரதிஷ்டமாகிப் போனது….

“தான் இல்லை” என அந்த வயதில் எவ்வளவு சொல்லியும் அவளை நம்பாமல்… வீட்டில் இருப்பவர்கள் அவளுக்கு அதிக செல்லம் கொடுப்பதால் வந்த விபரீதம் இது என சாடிய அதிவீரர்…. அவள் குறும்பு எல்லை கடந்து விட்டதால்…. அவளை ஹாஸ்டலில் சேர்க்க முடிவு எடுத்தார்…

பால் வண்ணம் மாறாத குழந்தையாக இருந்த மதுரா…. “எதற்காக தன்னை பிரித்து எங்கோ அனுப்புகின்றனர் என தெரியாமல்…. தாயையும்…. தாய் போன்ற தாய் மாமன்களையும் கட்டி கொண்டு போக மாட்டேன்….!!” என அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்…. அது அவர்கள் குடும்பத்தாருக்கு மட்டும் இல்லை… அந்த காட்சியைப் பார்ப்போருக்கும் குழந்தையின் கதறல்…. நெஞ்சைக் கிழித்தது….

குழந்தை தனம் அகலாத மதுரா…. அதுவரை அறியாத… தனிமையும் இருளும் பயம் காட்டிட…. பல முறை பலம் கொண்டு… கதவைத் தட்டித் தட்டி… ஓய்ந்து அங்கே அமர்ந்து அழுதபடி மயங்கிப் போனாள்….

பயந்து அலறும் போது தாய் மடி கிடைக்காமல் சோர்ந்து போனவளுக்கு… துணையாகிப் போனது போர்வை…. புதிய இடமும்… மனிதர்களும் அவளுக்கு வெகுவாக அச்சம் தந்தது… உண்மை…

அன்பாக அரவணைக்கும் தாய் தந்தை எங்கே….?? அத்தை மடி மெத்தை எங்கே…..?? ஆசையாக தோள் மீது சுமக்கும் மாமாக்கள் எங்கே….?? இணை பிரியாத உடன் பிறப்புகள் எங்கே….?? என தேடித் தேடி அயர்ந்து போனவளுக்கு…..

இதுக்கெல்லாம் “அன்று நிரு மாமா ஹாஸ்பிடலில் இருக்கும் போது தன்னை கை காட்டி ஏதோ கூரிய தனஞ்ஜெயனும், அதை கேட்டு தன்னை முறைத்த தாத்தாவும் மட்டுமே இதற்கு காரணம்…!” என்பது வரை புரிந்தது… ஆனால் ஏன்…??? எதற்கு..?? என்பது தான் தெரியவில்லை….

அதுதான் முதன் முதலில் அவள் மனதில் விழுந்த வடு…. அவர்களை மெல்ல வெறுக்க ஆரம்பித்த தருணமும்…. கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களோடு பழக ஆரம்பித்தவள்… தன் கவலையை போக்கும் வித்தையாக குறும்பை கையில் எடுத்தாள்…

அவளை விடுதியில் விட்டு வந்த சில நாட்களில் மதுராவிற்கு உடம்பு முடியாமல் போனதாக தகவல் வர… பதறித் துடித்து ஓட நினைத்தவர்களைத் தடுத்தார் அதிவீரர்… “இப்போ நீங்க போய் பார்த்தா… உங்க கூடவே வர அடம் பிடிப்பா… அவள் இங்கயே வளர்ந்தா இன்னும் கெட்டுப் போகக்கூடும்…. அவள்… நல்ல மாதிரியாக வளரணும்னா நாம சில வலிகளைத் தாங்கித்தான் ஆகணும்…!!” என்று கூறி… அவரின் வார்த்தையை மீறி யாரும் சென்று பார்க்கவில்லை… ஆனால் அவர்கள் அறியாமல் அதிவீரர் சென்று பார்த்தது தனி கதை…

தன்னைப் பார்க்க வந்த அதிவீரராம பாண்டியரை… கோபத்தில் பார்க்க மறுத்து பெரும் அடம் பிடித்துவிட்டாள்….

அதிலிருந்து அவளைச் சென்று யாரையும் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதின் பெயரால்… யாரும் சென்று பார்க்கவில்லை…

ஆனால் அவளைப் பற்றி அனைத்தையும் விசாரித்துக் கொண்டே தான் இருப்பார்….. அவர்களும் அவள் செய்யும் சேட்டைகளைச் சொல்வார்கள்….

கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவள் யாரையும் பார்க்காது…. தாயின் மடியையே கட்டிப்பிடித்துக் கொள்ளும்…. அந்த இரண்டு மாதமும் எப்படிச் சென்றது என்றே தெரியாமல் ஓடிவிடும். மீண்டும் ஹாஸ்டல் போக வேண்டும் எனச் சொல்லும் போது உதட்டைப் பிதுக்கி “வேணாம் ப்ளீஸ் மா…” என கெஞ்சும் மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவார் கவி…

“அவள் நல்லதுக்கு..” என்று…அவரைச் சமாதானம் செய்து…. அழைத்துச் சென்று விடுவார்கள்….முதலில் கெஞ்சிப் பார்த்த மதுரா…பின் தானாகவே கிளம்பி விடுவாள்…

ஆனால் அவள் விடுமுறைக்கு வரும் ஒவ்வொரு முறையும்… தனஞ்ஜெயனிடமோ அல்லது அதிவீரர் பாண்டியனிடமோ தவறி கூட பேச மாட்டாள்… அவர்களாகக் கேள்வி கேட்டால் கூட ஆம் அல்லது இல்லை என்பதோடு முடிந்துவிடும்… அவள் விளையாட்டு எல்லாம்… நிரஞ்சன் மற்றும் சந்தியாவிடம் மட்டுமே இருக்கும்…

அதை முதலில் கண்டு கொள்ளாத தனா, அவளின் ஒதுங்குதலைக் கண்டு கேட்க… நிரஞ்சன் உண்மையைச் சொல்லி விட… அதிர்ந்து போனான்… தாத்தாவிடம் சொல்லிவிடலாம் என நினைக்கும் போது சந்தியா வந்து அவனிடம் மன்றாடி கேட்க…

நிதானமாக யோசித்தவன்… ஏற்கனவே அவள் தண்டனை அடைந்து விட்டாள்… “இனி போய் சொல்லி என்ன மாறிவிடப் போகிறது..!” என நினைத்து அப்படியே மறந்து விட்டான்… மதுராவிற்கு நியாயம் செய்யத் தவறிவிட்டான்… ஆனால் அவள் வரும் போது எல்லாம் அவள் ஒதுங்கியே போனாலும், இவன் விடாமல் அவளைப் பொத்திப் பொத்திப் பார்த்துக்கொள்வான்…

ஒரு வழியாக… ஒன்பது வருட சிறை வாழ்க்கை முடிந்து மதுரா ஊருக்கு வந்தாள்….

சில பெண்களுக்கு உடல்நிலை காரணமாக பூபெய்தல் காலதாமதம் ஆவது போல் மதுராவிற்கும்….

அவள் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை பூபெய்த வில்லை… அது பற்றி கவிதாவிற்கு கவலை இருந்தது… அதனால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினார்…. அது ஒன்றும் பெரிய குறை இல்லை…. கொஞ்சம் தாமதம் தான் ஆகும்.. அதனால் பயப்பட வேண்டாம் என்று கூறிவிட்டார்…

சற்று நிம்மதி வந்தாலும் கவலை இருந்தது….

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top