மதுரம் சிந்தும் காதலே -7

வான் நோக்கி உயர்ந்து நிற்கும் கான்கிரீட் மரங்கள்….

ஆங்காங்கே வரவேற்கும் அழகிகளின் கவர்ச்சி எல் ஈ டி திரைகள்….

போனிடெய்ல் போட்டுக்கொண்டு ஸ்டார் பக்ஸில் வாங்கிய குளம்பியை அருந்தியும், நியூஸ் டுடே வாசித்துக்கொண்டே பிராடுவேய் ஸ்ட்ரீட்டில் நடந்து போனாள் ஒரு மாடர்ன் யுவதி….

ஜே.எம் பிசினஸ் ப்ரோபஷனல்….அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பதினாலாவது மாடியில்….

சிரித்த முகமாக…. அனைவர்க்கும் வணக்கம் வைத்துவிட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்…..

“ஹாய் மடுரா…!!” என வந்தான்….சப்ப மூக்கு கண்ணாடிகாரன் ஜடேன்….

“அட நாசமா போன நல்லி எலும்பு வாயா உன்ன…. எத்தனை தடவை சொல்லிக் கொடுக்குறது….??” என அவனை வழக்கமாக மொத்துவது போல் மொத்தி விட்டு….

தன் இருக்கையில் அமர்ந்தாள் திருமதி மதுரா தனஞ்ஜெயன்….

சரியாக சாப்பிடாமல் இளைத்துப்போன உடல்….பல நாள் தூக்கத்தை தொலைத்ததன் பலன் அவள் வண்டு விழியில்….கருவளையம்… சோர்வு தொய்ந்த முகத்தில் போலி புன்னகை….நானும் சந்தோஷமா இருக்கேன் என காட்டிக்கொள்ள…

இதோ அதோ என்று அவள் நியூயார்க் வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன….

கம்பெனி கெஸ்ட் ஹவுஸில் தான் தங்கி இருக்கிறாள்….வீடு நகரத்தை விட்டு கொஞ்சம் தள்ளி அமைதியான சூழலில்….வீட்டில் அவளும் ஓனர் ப்லோரா மட்டுமே….

வேலை வீடு என அவளுக்கு பிடித்த வாழ்க்கை… யாரும் அவளை எதுவும் சொல்வதற்கு இல்லாமல் தனிமையில் இனிமையாக….இனிமையாக இருந்ததா அவளுக்கு…???

இல்லை, நிச்சயமாக இல்லை….

கையில் இருக்கும்போதும் ஒரு பொருளின் அருமை தெரியாது. நம்மை விட்டு சென்ற பின்பே அது நமக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்று தெரியும். அதே போல்…

மதுரா பிரிந்து வந்த பின்பே அவர்களின் அருமையை உணர்கிறாள்.

“சாப்பிட்டியா…?? நலமா..??” என்று கேட்கக்கூட யாரும் இல்லாமல் வெறுமையை அனுபவிக்கிறாள்.

அவள் நண்பர்கள் வட்டம் குறைவு. உயிர் நண்பன் ஸ்ரீ, அவனும் இப்போது அவளிடம் பேசுவதில்லை, காரணம் அவளுக்கு தெரியாதே….

கொடிது கொடிது இளமையில் வறுமை – ஔவையார் சொன்னது…

இல்லை…

கொடிது கொடிது எவ்வயதிலும் தனிமை என மதுரா சொல்லுவாள்…

அந்தளவுக்கு வெறுமையை உணர்கிறாள்…

அதுவும் இந்த ஒரு வாரமாக அவள் வெறுமை உடலில் தெரியும் அளவிற்கு அழுத்தத்தில் இருக்கிறாள்….

காரணம்…

நிரஞ்சன் அவளுக்கு அழைத்ததுதான்….

நீண்ட நாட்கள் கழித்து புதிய நம்பரில் இருந்து அழைப்பு வரவும், குடும்பமாக இருக்கக்கூடாதா என்னும் ஆவலும், கூடாது என்ற பயத்திலும் எடுத்தாள்….

“ஹலோ…” அவளுக்கே கேட்காத குரல்….

ஹலோ மதுரா… நான் நிரஞ்சன் பேசுறேன்….!! என்றதும்…

அவளுக்கு சந்தோஷத்தில் வார்த்தைக்கு பதில் அழுகை பீறிட்டு வந்தது…. வாயில் கை வைத்து கதறலை தடுத்தவள்… தோற்றுப் போனாள்.

போனை ஹோல்டில் போட்டு விட்டு ஓடி சென்று முகத்தை கழுவி சாதாரணமாக குரலை காட்ட பெரும் பாடு பட்டாள்…

“ஹலோ சொல்லு நிரு மாமா….!!” என முயன்றும் நைந்து வந்தது குரல்….

“என்ன குண்டோதரி செம சந்தோஷமா இருக்க போல….. உனக்கு என்னமா எங்கள மறந்துட்டு நீ பாட்டுக்கு போய் ஜாலியா செட்டில் ஆகிட்ட….!!” என அவன் எதையும் கண்டுபிடிக்காதது…. சாதாரணமாக பேசினான்….

“டேய் குச்சி ஐஸ் மாமா….. இப்போதான் நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்…… என்ன அதை பண்ணாத இதை பண்ணாதன்னு திட்றதுக்கு ஆள் இல்லையே….. தண்டனை கொடுக்கவும் ஆள் இல்லையே….!!” என குதுகலமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்….

“ஓ அப்போ நீ அங்க ரொம்ப சந்தோஷமா தான் இருக்க….?” என்றான் ஒரு மாதிரி குரலில்….

“நிச்சயமா…!”.

“அப்போ இத்தனை நாள் உன்னை மார்ல போட்டு தூங்க வச்ச என் அப்பாங்க….. எங்களை விட உன்னை செல்லமா வளர்த்த அம்மாங்க…. அத்தை, பாட்டி இவங்களோட பாசம் கூட வேணான்னு தூக்கி போட்டு போகுற அளவுக்கு கல் நெஞ்சக்காரியா நீ….!!” என்றவன் குரலில் கோவம் இருந்தது….

“அறிவுகெட்ட மாமா…. தெரிஞ்ச மாதிரி பேசாத… அத்தை கையால திரும்ப சாப்பிட மாட்டோமா….??? மாமா மடியில் தலை சாஞ்சு பௌர்ணமி நிலாவை பார்க்க மாட்டோமா….?? கவி கிட்ட சண்டை போட்டு…. அப்பா பின்னாடி ஒளிஞ்சுக்க மாட்டோமா..??? அந்த கிழவி கிட்ட திட்டு வாங்கி சுருக்குப் பையல இருக்குற

“வெத்தலை திருடி போட மாட்டோமா….?? எவ்வளவு ஏங்குறேன் எனக்கு தாண்டா தெரியும்…!!!” என்றவள் குரல் உடைந்து அழுதாள்…

“அப்புறம் ஏன் வீட்டை விட்டு போன….?” கோபம் குறையவில்லை அவனுக்கு…

“என்ன மாமா நீயும் இப்படி கேக்குற….. இத்தனை நாள் நான் செய்யுற குறும்புத்தனம் மட்டும் தான் பிடிக்காதுன்னு நினைச்சேன்… ஆனா அங்க இருக்குற யாருக்கும் பிடிக்காத புள்ளையா போய்ட்டேன்…??”

“யார் சொன்னா…??” குரல் புதியது …ஆனால் அவள் இருந்த மனநிலையில் கண்டுகொள்ளவில்லை.

“யார் சொல்லல மாமா ஆனா அதே சமயம் யாருமே எனக்கு ஒரு மனசு இருக்குனு யோசிக்கவே இல்லை மாமா…. எங்க அம்மா கூட..!!’என்றவள் முற்றிலும் உடைந்தாள்…

சிரித்து நேரம் அவளை அழ விட்டவன்…

சரி குண்டோதரி ரொம்ப அழுகாச்சி சீன் ஒட்டாத… நீ தான் அங்க போய்ட்டியே இன்னும் உன் ஃப்ரெண்ட் அந்த ரேகாவை நான் உஷார் பண்ணிட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவ…

“நான் ஒன்னும் பண்ண மாட்டேன் அந்த நாலு பேர் உன்ன எதுவும் பண்ணிடாம பார்த்துக்கோ..!!” என இயல்புக்கு திரும்பிய குரலில்…

“யார் அவ அண்ணன்களா….!!”

“அவ புருஷனும் மூணு பிள்ளைங்களும்..!!” எனக் கூறி விட்டு கலகலவென சிரித்தாள்…. நீண்ட நாள் கழித்து தன்னை மறந்து சிரிக்கிறாள்…

“சரி மாமா அங்க எல்லாம் நல்லா இருக்காங்களா…. என் மேல கோவமா இருப்பாங்கன்னு தெரியும்… நான் இல்லன்னு யாராவது ஃபீல் பண்ணாங்களா மாமா…!!” என ஆவலில் கேட்க…

அவன் பதில் கூறும் முன்னே…

“என்ன அத்தை இது” என சத்தமாக…!! சகுந்தலாவின் குரல்…

சிவகாமி… “எல்லாம் அந்த மேனாமினிக்கி உடுப்பு தான் சக்கு…. அந்த சிறுக்கியே இல்லையே அதான் நான் எடுத்து போட்டுக்கிட்டேன்…. இந்த உடுப்பு அவளை விட எனக்கு அம்சமா இருக்கு..!!” என சொல்ல….

“செம தூள் அத்தை.. அப்படியே சின்ன பொண்ணு மாதிரி இருக்கீங்க….!!” என வேத வள்ளி குரல்…

“பாருடா மாமா இந்த தாய் கிழவிக்கு கொழுப்ப…. கடைசி யாத்திரைக்கு போற வயசுல மாடர்ன் ட்ரெஸ் கேக்குதாம் … அதை இந்த சக்கும், வேதவும் எதுவும் சொல்லல…. என் மேல பாசமே இல்லை… என்ன இருந்தாலும் என் கவி மாதிரி வருமா…. நான் இல்லன்னு அவ அழுது இருப்பா…!!” என அவள் சொல்லி முடிக்கும் முன்னே….

“பெரிய அண்ணி மதியத்துக்கு எனக்கு நல்லி எலும்பு போட்டு குழம்பு வைங்க… சின்ன அண்ணி ஆட்டு கால் சூப் செஞ்சுடுங்க உங்க கையால செஞ்சாதான் நல்லா உரைப்பா இருக்கும்…!!” என சப்பு கொட்டி சொல்ல.

“அடி பாவி கவி..” என அவள் கோழி முட்டை கண்ணை விரிப்பதை ஃப்ளோராவின் போன் வழியே வீடியோ காலில்… பார்த்து நிம்மதி அடைந்தனர்…

அவள் போனை ஹோல்டில் போட்டதுமே தனஞ்செயன் வீடியோ காலில் ஃப்ளோராவை அழைத்து விட்டான்…

அது மட்டும் இல்லை… அவளும் நிரஞ்சனும் பேசியதை… அவன் குடும்பத்திற்கு ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியாக…. வழங்கினான் என்பது அவளுக்கு தெரியாதே…

அவள் அங்கு பேச பேச இங்கு இருப்பவர்கள் கதறி அழுதது அவளுக்கு எப்படி தெரியும்….அவளை சமன் செய்யும் பொருட்டு அவர்களை பேசும்படி தனா செய்கை செய்ய… கவி முடியாமல் மடிந்து அழ அவரை பிடித்துக் கொண்ட… சகுந்தலாவும், வேதவள்ளியும் கூட அழுதனர்…..என்றால் ஆண்கள் வார்த்தைகள் அற்று கலங்கி போயினர்…

இவர்களையும் அவளையும் அமைதிப்படுத்தும் பொருட்டே நிரஞ்சன் ரேகாவைப் பற்றி பேசி அனைவரின் முறைப்புக்கும் ஆளானான் என்பது தனிக்கதை…

அனைவரது குரல் கேட்ட மகிழ்ச்சியில் திளைத்தவளுக்கு ஷாக் கொடுத்தான்…

அதை கேட்டதில் இருந்து அவள் சோக பதுமையாக வலம் வருகிறாள்…

அப்படி என்ன ஷாக்ன்னா கேக்குறீங்க…

இதோ…

அதாவது தனஞ்செய்க்கும் அவர்களது உறவினர் பெண்ணுக்கும் இன்னும் இரண்டு வார காலத்தில் திருமணம் என்று கூற…

“ஓ ரொம்ப நல்ல பொண்ணுடா.. ரெண்டு பேருக்கும் பொருத்தமா இருக்கும்… அவரவர் சந்தோசமா இருக்கட்டும்…!!” என்றவள் அதற்கு மேல் பேசாமல் வைத்து விட…

அணைத்து போட்ட போனை வெறிக்க பார்த்தபடி அமர்ந்த மதுரவை…

வீடியோ காலில் பார்த்த தனஞ்ஜெயன்…

“அடி என் ராங்கி இதுக்கே இப்படி சோர்ந்து போய்ட்டா… எப்புடி… இனிமே தான்டி உனக்கு இருக்கு இந்த மாமா கையால சரவெடி…!!” என திரையில் அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து கூறியவன்…

ப்லோராவிடம் சிலதை பேசி விட்டு விமானம் ஏறினான்…

எங்கையா…??

எல்லாம் அள்ளி ராணிய தேடி தான்…

இனி காதல் சரவெடி ஆரம்பம்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top