காதல் செய்யாதே இராவணா-27

தன் முன் காளி அவதாரம் எடுத்து வந்து மகிழைக் கண்டு அஞ்சி…

“தம்பி காப்பாத்து…” என ராவணன் பின்னால் ஒளிந்து கொண்டார்…

புடவை முந்தானையை இழுத்து சொருகி சண்டைக்கு தயாரானவள்…

“அடியே தாய் கிழவி உன்னை எவ்ளோ நம்புனேன்… என்ன இப்படி கழுத்தறுத்துட்டியே… உன்னைக் கொல்லாம விட மாட்டேன்…!” என அவர் மீது பாயப் போனவளை ராவணன் ஒரு புறமும் மாதுரி மறுபுறமும் எனப் பிடித்துக் கொள்ள விடாமல் சலம்பினாள் மகிழ்…

“அக்கா ஏன் இப்படிப் பைத்தியம் மாதிரி நடந்துக்குற..!!”

“நானா… நானா… பைத்தியம்..!!” என சந்திரமுகி சாயலில் கேட்க…

“ஐயோ அத்தான்…!” என இளையவளும் பயந்து பதுங்கிவிட (பிள்ளைக்குப் பதட்டமா இருக்குமா இல்லையா..)

“சிட்டு… என்னடி பண்ற சொன்னா கேளு…”

“முடியாது இந்த கிழவியைக் கொல்லாம விடமாட்டேன்… ஆஹ் எங்க தூக்கிட்டு போறீங்க வி….டுங்க விடு…ங்க நான் வரமாட்டேன்…” என விடாது துள்ளியவளை இடையோடு கையிட்டு தூக்கிக் கொண்டு மேலே சென்றான்…

ராவணன் மகிழை தூக்கிக்கொண்டு செல்ல, ஆஆ என பார்த்தவாறே வெளியே வந்தார் கோரால் பாட்டி.. (ஜஸ்ட் மிஸ்ஸு கோரால் பாட்டி..)

மகிழ் துள்ளத் துள்ள அறைக்குள் தூக்கிச் சென்று இறக்கி விட்டவன்.. வில்லில் இருந்து பாயும் அம்பாக வெளியேறப் போனவளை.. பின்னிருந்து தூக்கி சுவற்றில் சாய்த்து அழுத்திப் பிடித்தவன்..

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. இப்போ எதுக்குடி சலம்புற.. ஆமா அவங்க நான் சொல்லி தான் உன்னை எங்க ஊருக்கு கூட்டிட்டு போனாங்க.. நான் சொல்லித்தான் உன்னையும் மதுவையும் பார்த்துகிட்டாங்க.. அதுக்கு என்னடி இப்போ..?”

அவனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டவள்..

“நீங்கதான எங்க அப்பா அம்மா சாவுக்கு காரணம் என பழைய பல்லவியை பாட..!!”

பொறுத்தது போதும் என நினைத்தவன்.. அவள் குரல்வளையைப் பற்றி இருந்தான்.

“போதும் நிறுத்துடி….!! நானும் பொறுமையா போகனும்னு பார்த்தா ரொம்ப பேசுறடி நீ…!!”

உனக்கு தெரியாது அஞ்சு எதனால செத்தான்னு.. அப்புறம் உங்க அப்பா அம்மா சாவு எதிர்பாராதது தான், ஆனா அவர் சாகும் போது கூட ஒரு போலீஸா உன் தங்கச்சிய காப்பாத்தி இருக்காரு… அவர் பொண்ணாடி நீ..?? எப்படி… எப்படி நான் பொம்பளை பொறுக்கியா.. அப்படி நான் பொறுக்கியா இருந்தா உன்ன அனுபவிச்சிட்டு தூக்கி போட எவ்ளோ நேரம்டி ஆகும் எனக்கு… ஹான் சொல்லுடி..!!! சை உன்ன லவ் பண்ணி தொலைஞ்சுட்டேன், இல்லனா எக்கேடோ கேட்டு போன்னு விட முடியல… அன்னைக்கு கூட உன்கிட்ட பேசி என்னோட கூட்டிட்டு போக தான் வந்தேன், ஆனா நீ.. சும்மா இருந்தவனை சீண்டி விட்ட.. கட்டின பொண்டாட்டி கிட்ட எனக்கு என்னடி தடை.. அதான் என் உரிமையை நானே எடுத்துக்கிட்டேன்..!! என்றவன் அவள் கழுத்தை விட்டு தோள்களை முரட்டுத்தனமாக பற்றியவன்… அவள் கண்களை உற்று நோக்கியவன்…

எங்க என் கண்ணைப் பார்த்து சொல்லுடி உனக்கு என் மேல காதலே இல்லன்னு…

அவள் பதில் கூற வரும் முன்னே… “அப்படி காதல் இல்லாதவ எதுக்குடி நான் எவன் கூடவோ வெளிய போனதுக்கு கோவப்படனும்..? என்ன புடிக்காதவ எதுக்குடி நான் கட்டுன தாலிய கழுத்துல இன்னும் சுமந்துட்டு இருக்க..? என் மேல காதல் இல்லாமையாடி என்ன அப்படி பார்த்து வச்ச…?” என கேட்டவனை கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஏறிட்டு பார்த்தாள் பேதை…

அவள் கண்ணீர் அவன் இதயத்தைத் தாக்க, இமைகளில் மென் முத்தம் பதித்தவன்…

“இங்க பாரு சிட்டு, உன் வறட்டுப் பிடிவாதத்தை விடு. யோசி…!!!!” என்றவன் அவளை ஆரத் தழுவி இருந்தான்.

“உனக்காகக் காத்துட்டு இருப்பேன். என்கிட்டயே வந்துடு சிட்டு…!!!!” என அவள் உச்சியில் முத்தமிட்டவன் அவளை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட…

அவள் அவன் விட்டுச் சென்ற இடத்திலே கால் மடிந்து அமர்ந்து ராவணன் சொல்லிச் சென்றதைப் பற்றி சிந்திக்கலானாள். (இப்பவாவது ஒழுங்கா யோசிப்பாளா ஹிஹி… யோசிக்கல நீ காலி அதான்…)

ராவணன் தயாராகி அபியைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தவன்…

“பாட்டி, இந்தாங்க அபியை பிடிங்க. காலைக்கு நான் சமைச்சுட்டேன். மதியத்துக்கு பார்த்துக்கோங்க, ஃபிரிட்ஜ்ல எல்லாமே இருக்கு,” என்றவன் மாதுரியிடம் திரும்பி…

“நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுடா. நான் ஈவினிங் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர பார்க்கிறேன்.”

“அத்தான் அக்கா..??”

“இப்போதான் அவளை யோசிக்க வச்சிட்டு வரேன். நல்ல விதமா யோசிப்பான்னு நம்புறேன்… இல்லனாலும் நான் எதுக்கு இருக்கேன். நான் பார்த்துக்கிறேன்.”

“ம்ம்ம் சரி அத்தான்..!!”

மாடியைப் பார்த்தவாறே மூணு பேரையும் பார்த்துக்கோங்க..!! நான் இல்லாத நேரம் யாரையும் உள்ள விடாதீங்க.. என்றவன் பணிக்குச் சென்றுவிட

அந்த யாரையும் என்பதைத் தெளிவாக ‘யார்’ என்று சொல்லிவிட்டுச் சென்று இருந்தால்.. பின்னால் நடக்கப் போகும் அசம்பாவிதங்களைத் தடுத்து இருக்கலாமோ…??


“அக்கா…!!!” என மகிழின் தோளைத் தொட

“ப்ச் போடி..உனக்குக் கூட என்ன விட அவர்தான் முக்கியமா போய்ட்டார்ல??” எனக் கைகளைத் தட்டி விட்டவாறே சொல்ல…

“சும்மா எரிஞ்சு விழாத அக்கா… அத்தான் எவ்ளோ நல்லவர் தெரியுமா.. அப்பா அம்மா போனதுக்கு அப்புறம் நம்மள எப்படி வச்சி பார்த்துக்கிட்டாரு.. நீ வீட்ட விட்டு போனதுக்கு அப்புறமும் உன்னையும் என்னையும் எப்படிப் பார்த்துகிட்டாரு தெரியுமா..??”

“என்ன முழிக்கிற நீ என்ன ஹாஸ்டல்ல விட்டுட்டு வந்ததுக்கு அப்புறம் நீ என்ன வந்து பார்க்கவே இல்ல ஆனா அத்தான் ஒவ்வொரு வாரமும் நேர்ல வந்து பார்த்துட்டு போவாரு.. போன் பண்ணி என்ன விசாரிச்சிட்டே இருந்தாரு..!!!”

“இவ்ளோ ஏன் என்ன இப்போ ஏன் இங்க கூட்டிட்டு வந்தாருன்னு தெரியுமா..நாளைக்கு நம்ம அப்பா அம்மாக்கு திதி குடுக்கத்தான்..!!!” என்றதும் திட்டிக்கிட்டு பார்த்தாள் மகிழ்..

“என்ன அதுகூட உனக்கு தெரியாதா..!!” எனக் கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள்…

“உன்ன குறை சொல்லனும்னு இல்ல அக்கா.. நீ அத்தான புரிஞ்சிக்கலனா கூட பரவாயில்ல ஆனா தப்பா மட்டும் புரிஞ்சிக்காத… அவர் நிரம்ப நல்லவர்…!!!!!”

சரி சீக்கிரம் கீழ வா அக்கா.. எனக்குப் பசிக்குது சேர்ந்து சாப்பிடலாம் என அழைத்து விட்டுச் சென்று விட..

மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள் மாது.

தன் முன்னால் அமர்ந்து இருந்தவர்களையும் கையில் இருந்த கோப்பினையும் பார்த்தவன்..

“இது ரொம்ப ரிஸ்க் ஆன ஆபரேஷன் ராவணன் உங்களுக்கு போர்ஸ் தேவைப்படலாம்..!!”

“இவங்க எல்லாம் என்கூட வர வேண்டாம் சார்.. என்கூட ஒரு ஆஃபீஸர் வந்தா போதும் அதுவும் நானே செலக்ட் பண்ணிக்கிறேன் சார்..!!!” என்றான் தன் உயர் அதிகாரியிடம்..

“ஓகே கேரி ஆன்…!!” அனுமதி அளித்தவுடன்..

தான் தெரிவு செய்த அதிகாரியுடன் போதை கும்பலை பிடிக்க சென்றான் ராவணன்…

வாயில் சீட்டி அடித்தபடி ராவணன் ஜீப்பை ஓட்ட… அவனை அருகில் முறைத்தபடி வந்தான் நம் வளவன்.

“என்ன அப்படி குறுகுறுன்னு பார்க்காத மச்சான்.. எனக்கு என் சிட்டு மட்டும் போதும்…” என குழைந்தபடி சொன்னவனை…

“தூ.. நாயே எனக்கும் என் பவி மட்டும் போதும் இப்போ எதுக்குடா என்ன கூட கூட்டிட்டு சுத்துற ஊர்ல எவனாவது நம்மள இப்படி பார்த்தா என்ன ஆகுறது…!!” என படபடத்தவனை..

“சும்மா புலம்பாம வா மச்சான்… எல்லாம் காரண காரியத்தோட தான் உன்ன கூட்டிட்டு போறேன்.. போர்ஸ் ஓட போனா அலெர்ட் ஆகிடுவான்… இப்போ நீயும் நானும் ஒண்ணா போனா அவனுக்கு பேயறைஞ்ச மாதிரி இருக்கும் இல்ல அத ரசிக்க வேணாம்..”

“அதுவும் சரிதான் மாப்புள… எத்தனை வருஷம் நம்ம குடும்பத்தை ஆட்டி படைச்சவனை சும்மா விடக்கூடாதுடே…”

ம்ம்ம் விடக் கூடாது மச்சான்…!!!!

இத்தனை வருஷம் நாம ரெண்டு பேரும் தனியா தனியா பிரிஞ்சு இருந்த மாதிரி நடிச்சு செயல் பட்டதுக்கு இப்போதான்லே பலன் கிடைக்கப் போகுது…!!

எதே..அப்போ ரெண்டு பேரும் கூட்டு களவாணியா.. ச்சு இல்ல கூட்டு போலீஸாஆஆஆஆ…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top