எபிலாக் -31
துரியனின் உடல்நிலை நன்றாக தேரிய பிறகு… ஒரு நாள்…
மும்பையில் உள்ள சத்தியவதியின் இல்லம்…
அழகோவியமாக வைக்க பட்டு இருக்கும் குடம் தூக்கும் பதுமைகள் முதல் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அமைத்த ஆர்ச் தொட்டு உள்ளே வரவேற்பு வரை நவீன அலங்காரத்தில் மின்னி ஜொலித்து விழாவிற்கு வருவோரை எல்லாம் அசர வைத்தது…
என்ன நிகழ்ச்சியா எல்லாம்… நம்ம துரியன் – கனலினி கல்யாணம் தான்… மக்களே…
வாங்க யார் யார் வந்து இருக்காங்கனு பார்க்கலாம்…
அடடே கனலினியோட குடும்பமும் கூடவே விஹான் குடும்பமும் வந்து இருக்காங்க போலயே…
ரித்விக் தான் பிளாக் மாம்பா என்பது இப்பொழுது வரை அவர்கள் குடும்பத்திற்கு தெரியாது… கனலினி கேட்டு கொண்டதால் ரித்விக் விபத்தில் இறந்து விட்டதாகவே கூற பட்டது…
கனலினியின் பெற்றோர் அருகில் புன்னகை மின்ன புது கல்யாணமான கலையில முகத்தில் அதற்கு உரிய தேஜஸ் உடன் அமர்ந்து இருந்தது வைஷு சொல்லுவேன் எதிர் பார்த்தீங்களா இல்லை அது கர்ணன்…
தாலாட்ட , தலை கோத , மடி சாய தோள் அணைக்க , என அனைத்துமாக ஒரு உறவு வாழ்வில் கிடைத்த பின் அதை விட பெரு வாழ்வும் உண்டோ… அதன் பிரதிபலிப்பே அவன் முகத்தில்… அருகிலே அவனுக்கும் குறையாத மிடுக்குடன் அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி…
நெஞ்சில் வைத்து தாங்கும் கணவன் அவள் போல் அமைந்து விட்டால்… மிடுக்கும் சாத்தியமே…
சின்ன மகளின் பூரிப்பை கண்டு அகமகிழ்ந்து போயினர் கனலினியின் பெற்றோர்… அவர்கள் ஒன்னும் காதலுக்கு எதிரிகள் இல்லையே… சொல்ல போனால் அவர்களே காதல் திருமணம் செய்தவர்கள் தானே… கனலினியின் வாழ்வு கேள்வி குறி ஆகி போய்விடுமோ என சாதாரண பெற்றோரின் வருத்தத்தின் வெளிபாடு தான அவர்களின் கோவம்… இதோ அதற்கும் வழி விடாமல்… துரியன்… நேரடியாக சென்று நடந்ததிற்கு வருத்தம் தெரிவித்து கனலினி சொந்தங்கள் அனைவரையும் அழைத்து வந்து விட்டானே… ஆம் துரியன் கனலினி திருமணத்திற்கு… மினி கனடாவே வந்து இருக்கிறது… அதிபர் கொஞ்சம் பிஸி இல்லனா அவரையும் கூட்டிட்டு வந்து இருப்பான்…( உன் வாய் உன் உருட்டு அதானே )
அவர்களுக்கு வெகு அருகில் ஸ்டீபனும் அமைராவும் கல்யாணத்துக்கு கெஸ்ட்டா வந்து இருக்காங்கனு நினைச்சுகாதிங்க இங்கையும் ஜோடியா பாதுகாப்பு வேலை தான்… துரியன் எவ்வளவு சொல்லி கேக்காம இந்த வேலைய செய்வது… அதே ஆர்வ கோளாறு அமைராவே தான்…
ஆன் அப்புறம் அவங்க ரெண்டு பேருக்கும் சர்ச்ல அவங்க முறை படி திருமணம் செஞ்சி வச்சது துரியன்… கடமை, கட்டுப்பாடு சுத்துற ஜோடி இப்போ கூடவே காதலையும் சேர்த்துகிச்சு… கேப் கிடைக்குற அப்போ எல்லாம் ஒரே டெடி பியர் ரொமான்ஸ் தான் அமைராவிற்கு ஸ்டீபன் எப்போவும் டெடி பையா தான்…
மணமக்களுக்காக போடப்பட்டிருந்த பிரத்தியேக பந்தலில் துரியன் அமர்ந்து இருக்க… அவன் மடியை அலங்கரித்தால் அவன் இளவரசி அவினி… மணமகளை அழைத்து வரச் சொல்ல… மேடை அருகே நின்ற சத்தியவதியும் ஜீவாவும்… தியாவை அனுப்பி அழைத்து வர சொல்ல…
நிறை மாத கர்ப்பமாக இருந்தவள் மேடை இறங்க சிரமம் கொள்ள… அவளை தூக்கி கொண்டான் அவளின் ஆருயிர் காதலன் விஹான்…
“விஹான் எல்லாம் பாக்குறாங்க இறக்கி விடுங்க…!!”என தியா கூச்சம் கொள்ள
“அட ஏன்டி நீ வேற இந்த கதைலே சீனே வைக்காம குழந்தை வந்தது நமக்கு மட்டும் தான்… அதை பேலன்ஸ் பண்ண தான் ரைட்டர் என்ன காதல் மன்னனா காட்டுது அதையும் ஏன் கெடுக்குற வா..!! என அவளை சுமந்து சென்றான்… கைகளில் மட்டுமல்ல இதயத்திலும்…
மணமகள் அறைக்கு சென்று பார்த்த இருவரும் அதிர்ந்து
“அண்ணா… துரியன்… அலறிய படி உள்ளே ஓடி வந்தனர்…
ஏன் இப்படி ஓடி வராங்களா…???
பின்ன கல்யாண பொண்ணை காணோம்னா பதறாம கப் ஐஸ் பஞ்சி மிட்டாயா… சாப்டுட்டு இருப்பாங்க…
“என்ன கல்யாண பொண்ண காணோமா…?? கனலினி இல்லையா… எங்க போனா…??”என மண்டபத்தில் உள்ள அனைவரும் பதறினாலும் பதற வேண்டிய துரியனோ மகளோடு போனில் கேண்டி கிரஷ் விளையாடி கொண்டு இருக்க… அவன் அருகே வந்த ஸ்டீபன்… “பாஸ் மேடம யாரோ கடத்திட்டாங்க… நீங்க கவலை படாதீங்க அவங்க ட்ராக்கர் வச்சி மேடம கண்டு பிடிச்சிடலாம்…!!”என தீவிரமாக சொல்ல…
“அட ஏன்டா… கதை முடிஞ்ச அப்புறமும் ரைட்டர் சண்டை காட்சிகள் வைக்கும்னா நம்புற… நீ வேற நானே டான் ஸ்டோரினு கமிட் ஆகிட்டு காதல் மன்னன் ஆகிடுச்சேனு கடுப்புல இருக்கேன்… இந்த இதை நீ விளையாடு அவ எங்க போய் இருப்பாள்னு எனக்கு தெரியும்…!!’ என அவினியையும் கேண்டி கிரஷ் கேமையும் ஸ்டீபனிடம் கொடுத்து விட்டு…
வெளியே சென்றவன்…
“அங்கே ஆள் உயர மதில் சுவரை எப்படி தாண்ட…?? என நன்கு வளர்ந்த தொப்பையுடன் நின்று இருந்த கனலினி பின்னால் போனவன்…
“வேணும்னா ஹெலிகாப்டர் கொண்டு வர சொல்லவா…??” என துரியன் கேட்க…
“ஏன் எதுக்கு கடைசி எபிலயும் நீங்க காஸ்டலி ஹீரோனு பேர் வாங்கவா ஒரு ஏணி எடுத்து போடுங்க போதும்…!!!” என கனலினி அசால்ட்டாக சொல்ல
“அடிங்க போன போகுதுணு விட்டா ரொம்ப தான் துள்ளுறா வா உள்ள…!” என வாய் பேசினாலும் செயல் அவளை அலுங்காமல் குலுங்காமல் தூக்கி சென்றான்
“நான் வரமாட்டேன்… வரமாட்டேன் விடுங்க துரியன் எனக்கு இந்த கல்யாணம் வேணாம் விடுங்க…!!” என கனலினி அதம் பண்ண…
அதை காதில் வாங்காமல் தூக்கி சென்றான் துரியன்…
கனலினி கல்யாணம் வேணாம்ணு ஏன் அடம் பிடிக்குறானு உங்களுக்கு தெரிஞ்சிக்கனுமா…??
அது… அது வந்து அவ கல்யாண போட்டோல கனலினி உப்பிய வயிரோட நிக்குறது பிடிக்கலையாம்…. வாழ்க்கை முழுக்க வர போற போட்டோல அவ அப்படி தெரியுறது பிடிக்கல குழந்தை பிறந்ததும் பண்ணிக்கலாம்…!!” என துரியனிடம் கூற
அவன் சும்மாவே சுத்தல்ல விடுவான் கேக்கவா வேணும் இதோ வச்சிட்டான்ல… டெலிவரி டேட்க்கு இன்னும் இரண்டு நாள் இருந்த வேளையில் கல்யாணத்தை வைத்து விட்டான்… “ஏன்டா இப்படினு கேட்டா…??”
அவினி பிறப்பு தான் எனக்கு தெரியாம போச்சு… பிறக்க போற குழந்தையாவது என் அடையாளத்தோட பிறக்கட்டும்… என அனைவரையும் ஆப் பண்ணி விட… வேறு வழி தெரியாமல் தான் கனலினி தப்பிக்க பார்க்க…
எங்க அதான் விடாமல் தூக்கி வந்துட்டானே…
பெற்றோர் பெரியோர் ஆசீர்வாத்தில் கனலினியை கை பிடித்தான்… நண்பர்கள் வாழ்த்துமடல் வாசிக்க… அந்த தருணம் அழகான புகைப்படம் ஆக்க பட்டது
சப்பா இதுங்க ரெண்டு கல்யாணம் பண்ணி வைக்கறதுக்குள்ள… முடியல…
அதற்குள் மண மேடையில் நின்ற கனலினி பிரசவ வலி வந்து விட… அவளை ஹெலிகாப்டரில் தூக்கி சென்ற துரியன் மருத்துவ மனையில் சேர்த்தான்… அந்த காட்சி தான் சமூக வலைத்தளைத்தில் ட்ரெண்டிங்…
“எல்லாம் உங்களால தான் பாருங்க… என் கல்யாண ட்ரெஸ் நாசமாகி போச்சு…!!” என வழி முழுக்க கனலினி திட்டி கொண்டே வர… அவள் கையை பிடித்து கொண்டு துரியன் கண்ணில் கண்ணீர்… அவனுக்கு தெரியாத மனைவி தன்னை தேற்ற நினைக்கிறாள் என்று…
பல கலவரங்களுக்கு இடையே ஒரு வழியாக கனலினி நல்ல படியாக ஆண் குழந்தையை பெற்று எடுக்க…
கொலை செய்யும் போது வராத நடுக்கம் மகனை கையில் வாங்கும் போது துரியனுக்கு… முழங்கை அளவே உள்ள அவன் மகன் தகப்பனை உதைத்து பெருங்குரலெடுத்து அழ… துரியனுக்கு ஆனந்த கண்ணீர்… பிள்ளையின் நெற்றில் முத்தமிட்டவன்…மயக்கத்தில் கிடந்த கனலினிக்கும் முத்தமிட்டு… “தேங்க்ஸ் காமினி” என சொன்னவன் வாழ்வு அவளால் நிறைவானது…
கனவாகவே போக வேண்டிய துரியனின் வாழ்வை மலர வைத்தது கனலினியின் காதல்…
தூக்கம் பறித்தவள்…
கனவுகளை தந்தாள்…
கனவை பறித்தவள்…
காதலை தந்தாள்…
கனா கண்டேனடி சகியே…
அனுதினமும் உன் காதலில் கரைந்திட….
வாழ்க வையகம்…
வாழ்க வளமுடன்….


