கனா கண்டேனடி சகியே -29
“வேணாம் சுலேனா சொன்னா கேளு துப்பாக்கிய கீழ போடு…!!”என டான் லியோ கர்ஜிக்க…
“யோவ் கிழவா… எல்லாம் உன்னால தான்யா… ஒழுங்கா உன் பதவியை எனக்கு குடுத்து இருந்தா நான் ஏன் இந்த வழியா தேர்ந்தெடுத்து இருக்கப் போறேன்… அந்த துரியன் நான் அவ்ளோ சொல்லியும் இவள் பின்னாடி போறான்… அதான் அவனை தீர்த்து கட்ட முடிவு பண்ணிட்டேன்… மிஞ்சி இருக்குறது நீ மட்டும் தான் உன்னையும் கொன்னுட்டா… தி கிரேட் கோல்டன் டிராகனோட தலைவி நான் தான்… “டான் சுலேனா” கேக்கவே நல்லா இருக்குல… இது நடக்கணும்னா நீ செத்து போ… நீ செத்து போ பா… ஹாஹா..!!!” என கத்தி கொண்டு துப்பாக்கியை டான் லியோவை நோக்கி குறி வைக்கும் நேரம்… அவள் தலையில் அடித்து அவள் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து அவளை கைது செய்து இருந்தனர்… டான் லியோவின் நிழல்கள்…
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த நிழல்கள் சுலேனாவை அவர்களின் பாதாள சிறைக்கு கொண்டு போக… டான் லியோ வின் காலில் விழுந்த ஜான்…” தயவு செய்து என் குழந்தை எதுவும் பண்ணிடாதீங்க என்ன எது வேணுனாலும் பண்ணிக்கோங்க…!!”என கெஞ்ச…
அவனை எட்டி உதைத்த டான்… “உன்னை நம்பி பொறுப்பு கொடுத்தேன்… என் பொண்ணு மேலே கை வச்சதுக்கு உன்னை சும்மா விடுவேன் நினைச்சியா…???”என்றவர் கண்ணை காட்ட…
அவரின் நிழல்கள் இருவர் வந்து ஜானை இரண்டு பக்கமும் பிடித்து கொள்ள… கத்திய எடுத்து அவன் இடது கையை தூண்டாக்கியவர்… “ஆஆஆஆ…!!!”. அலறி துடித்தான் ஜான்..
“இது என் மகளை தொட்டதுக்கு… இவனை கூட்டிட்டு போய் டிரீட்மென்ட் குடுங்க… அப்படியே அவள் வயத்துல வளர்ர குழந்தையை அவள் கண்டிப்பா பெத்து எடுத்துதான் ஆகணும்… அந்த குழந்தையோட பணமும் சேர்த்து இவன் கிட்டயே குடுத்துடுங்க… !!”என்றவர் ஜானிடம்… “இது என் பொண்ணு செஞ்ச தப்புக்காக… நீயாவது குழந்தையை நல்ல படியா வளர்க்க பாரு…!!” என சொன்னவர்…
திரும்பி கனலினியிடம் வந்தவர்…
“ஒரு மணி நேரத்துல என் குடும்பத்தையே சிதைச்சுட்ட…!” என கடு கடுத்தவர்..
“இங்க பார் உலகத்துல கோல்டன் ட்ராகன் மாதிரி நிறைய அண்டர் கிரவுண்ட் மாபியா இருக்கு… அதையெல்லாம் விட ஏன் கோல்டன் டிராகன் மட்டும் தலைசிறந்த இருக்குனா…எங்களுக்கு சில விதிகள் இருக்கு… அதை காலம் காலமாக நாங்க கடுமையா கடை பிடிச்சிட்டு வரோம்… அதனால எங்களை நம்பி பல வியாபாரிகள் வராங்க… அது பிடிக்காத சில குழுக்கள்… எங்க வியாபாரிகளை கடத்தி வச்சிட்டு மத்த வியாபாரிகளை மிரட்டு வாங்க… அவங்க கிட்ட எங்க தலைவன் சண்டை போட்டோ இல்லை பணமோ பொருளோ குடுத்து அவங்களை காப்பாற்றிக் கொண்டு வருவோம்… அதே போல தான் இப்போவும்… ஆனா இந்த முறை அவங்களை கடத்திட்டு போனது… “பிளாக் ட்ராகன்…!!” ஆள் பலத்துல எங்களை மிஞ்சினவங்க…”வரைமுறை இல்லாத..கருணைனா என்னன்னே தெரியாத கொடூர மிருகங்கள் அவனுங்க…!!! அவங்களை பார்க்க தான் துரியன் போய் இருக்கான்… திரும்பி வர வாய்ப்பே இல்லை… இந்தா இதுதான் துரியன் போன இடத்தோட வழி தடம்.. இதை எந்த சாட்டிலைட்டாலும் கண்டு பிடிக்க முடியாது… முடிஞ்சா இங்கே போய் உன் புருஷனுக்கு காப்பாத்திக்கோ … என்றவர் அவர்களை அனுப்பி வைத்தார்…
**************
அவர்கள் கையில் இருந்த வழிகாட்டியையும் எதிரில் இருந்த பரந்த கானகத்தையும் பார்த்தவர்கள் மலைத்துப் போய் நின்றனர்…
“எனக்கு என்னமோ இது சரியான வரைப்படமா இருக்காதோனு தோணுது…!!” என கர்ணன் சந்தேகிக்க…
“இல்லை கர்ணன் என் மனசுக்கு துரியன் இங்க தான் இருப்பாருனு தோணுது…!!”என உறுதியாக கூறிய கனலினி முன்னேறி செல்ல… வேறு வழி இல்லாமல் ஸ்டீபனும் கர்ணனும்… அவளோடு சென்றனர்…
அங்கோ…
துரியன் பிளாக் டிராகன் பிடியில் சிக்கி இருந்த வியாபாரிகளை விடுவிக்க அவன் உயிரையே பணயமாக கேட்க…
கொடுக்க முன் வந்தான் துரியன்…
வியாபாரிகள் முன்னால் கண்களில் துணி கட்ட பட்ட துரியன் முட்டிகாலில் நிற்க வைக்க பட…
துரியனை பழிவாங்க துடித்து கொண்டு இருந்த பிளாக் மாம்ப ரித்விக் சுட தயாராக…
பைபாய் மிஸ்டர் டிராக்கோ என சொல்லி ட்ரிக்கர் அழைத்தி இருந்தான்…
அடர்ந்த கானகம் நடவே தொடர் துப்பாக்கிகளின் சத்தமும்… பறவைகளின் அலறல் சத்ததும் கேட்டு… திடுக்கிட்டு அவ்விடம் நோக்கி விரையந்த னர் கனலினி ஸ்டீபன் கர்ணன் ஆகியோர்…
ஓசை வந்த இடத்தை நெருங்க நெருங்க கனலினியின் இதயம் “டொம் டொம்…” என துடிக்க…
துரியனுக்கு ஒன்னும் ஆகி இருக்க கூடாது… ஆகி இருக்காது… என தன்னை திட படுத்தி கொண்டே அந்த சமவெளி தளத்தை அடைய… அங்கே சிலர் பிணைய கைதிகளாகவும் சிலர் தரையில் வெல் ரத்த வெள்ளத்தில் குண்டடி பட்டு விழுந்ததும் கிடந்தனர்…
கனலினியோ அக்கூட்டத்தில் துரியன் இருந்துவிடக் கூடாது என படபடப்போடு ஒவ்வொருவராக தேடிக் கொண்டு வர
அவளை பிடித்து தடுத்து நிறுத்திய கர்ணன்…
அங்க என்னமா தேடுற… அவன் அங்க இருக்க மாட்டான்… என கூற..
“ஏன்…??” புரியாது விழித்த கனலினியை பார்த்து சிரிக்க…
அதில் கடுப்பானவள் திட்ட வாயை திறக்கும் முன்பே…
ஏன்னா இவங்கள கொன்னேதே பாஸ் தான் மேடம் அங்க பாருங்க அவரோட டிரேட் மார்க்கை… என அக்கூட்டத்தில் கிடந்த ரித்விக்கின் உடலில் ட்ராக்கோ கோல்டன் டிராகன் முத்திரை இருந்தது…
“அப்போ அவர் எங்க…?? என சுற்றி சுற்றி தேடியவள்… அவன் கிடைக்காமல் சாமாதானம் ஆக முடியாமல் தவித்த மனதோடு அந்த கானகத்தின் ஒரு காலடிச்சுவடு இருக்க அதை பின்பற்றி சென்றாள்…
அவள் பின்னோட வாந்தவர்கள் கனலினியை காணாமல் போனதை அறிந்து கொண்டு… இப்பொழுது துரியனோடு சேர்ந்து கனலினியையும் தேட துரியனின் தனிபட்ட பாதுகாவலர்களை வரவைக்கும் ஏற்பாட்டில் ஈடுபட்டனர்…
அப்படி எங்க இந்த புள்ள காட்டுக்குள்ள போய் இருக்கும் வாங்க தேடி பார்ப்போம்…
காலடிச்சுவடுகளை பின்பற்றி வந்தவள் வழி தொலைந்து போய் காட்டில் அலைய…
தேடி வந்த துரியனும் கிடைக்காமல்… திரும்பி செல்ல வழியும் தெரியாமல் பரிதவித்து நின்ற கனலினியை காப்பாற்ற யார் வருவார்கள்…??
அட தெரியலையா… அது நானே… சொந்த கதைல கெஸ்ட் ரோல் பண்ணியே தீருவேன் அடம் பிடிக்கும் ரைட்டர் நானே… யா இட்ஸ் மீ யது நந்தினி…
நியா…?? ஆமா காட்டுக்குள்ள என்ன ரோல் பண்ண போற தான கேக்குறீங்க… வேற என்ன கழுதை மேய்க்க போறேன்…
“எதே… கழுதையாஆஆ…??” ஷாக் ஆகாதீங்க சொல்ல மாட்டேன் இதையும் கேட்டுட்டு ஷாக் ஆகிக்கோங்க… நான் டைனோசர் தான் மேய்க்கலாம்னு இருந்தேன்… பட்ஜெட் ப்ரோப்லேம்…வாட் டு டூ..
அதுவும் இல்லாம எங்க அம்மா வேற அடிக்கடி என் பேச்சை கேக்கலனா கழுதை தான் மேய்க்க போவணு… சொல்லிட்டே இருப்பாங்க…அதான் அவங்க ஆசைய இப்ப நிறைவேர்த்தலாமேனு… அது மட்டும் இல்லை நம்ம முன்னோர்களே ஆடு மாடு மேய்ச்சுவங்க தான… அப்போ நாமெல்லாம் எம்மாத்திரம்… அதான் நம்ம ரேஞ்சுக்கு ஒரு கழுதைய புடிச்சிட்டு வந்துட்டேன்…சரி சரி வெட்டி கதை பேசாம வாங்க கதைக்குள்ள போவோமா…
விதி வலியது அதான…
அடர்ந்த மரங்கள் நிறைந்த கானகத்தில் மாட்டி தவித்து கொண்டு இருந்த கனலினி அருகில் கழுதை கத்தும் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க அவள் முன்னால் மந்தை கணக்கில் கழுதைகள் மேய… தூரத்தில் ஒருவர் தெரிய…
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவனுக்கு சிறு மரக்கட்டை கிடைத்தது போல் … அந்த கழுதை மேய்க்கும் நபரிடம் வந்தவள் மூச்சு வாங்க நிற்க…


