கனா கண்டேனடி சகியே -28
சாமான்யனும் எளிதில் நுழைய முடியாத கோல்டன் ட்ராகன் கோட்டை…
அங்கு தனியாக செல்ல நினைக்க அதை திடமாக மறுத்த கர்ணன்…
“அவர பார்க்க வேணாம் சொன்னதுதான் நீ கேக்கல… ஆனா இப்படி உன்ன தனியா அனுப்புனா துரியன் மட்டும் இல்லை நானே என்னை மன்னிக்க மாட்டான்…அதனால உன் கூட நாங்க வரோம்…!!”
“ஆமாம் மேடம் துரியன் சார் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லி எனக்கு கட்டளை போட்டு இருக்காரு… அதனால நீங்க எங்க போனாலும் நான் வருவேன்…!!” என இருவரும் அவளோடு போக…
அதை ஏற்று கொண்ட கனலினி அவினியை வைஷு மற்றும் அமைராவிட கொடுத்து விட்டு…
மூவரும்… கூர் தீட்டியா இரண்டு டிராகன்களோடு வரவேற்ற கோட்டைகுள் சென்றனர்…
இரண்டாயிரம் பேர் இருக்க கூடியா பெரிய ஹாலில்… முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்அங்கு கனலை கண்டதும் வியந்து பார்த்தனர் …
கையில் பல பல ஆயுதங்களுடன்… அரக்க தோற்றத்தில் ஆண்கள் பலர் நின்று இருக்க…
அது எதையும் துச்சமாக மதிகாமல் முன்னேறி சென்றாள் கனலினி…
அங்கு நடு நாயகமாக போட பட்டு நாற்காலியில் இருந்த ஐம்பது வயதைத் தாண்டிய ஒருவர் அமர்ந்து இருப்பதை கவனித்தவள் அவரை நோக்கி செல்ல…
அவர் அருகே ஒய்லாக நடந்து வந்து நின்றாள் சுலேனா…அவள் முகத்தில் அத்தனை இளக்காரம் வழிந்தது…
எதையும் பொருட் படுத்தாத கனல்…
” என் கணவர் துரியன் எங்கே…?? ” என அதிகாரமாக கேட்க…
அதில் ஸ்தம்பித்தவர்கள் ஒரு நொடிகுள் அந்த இடம் முழுவதுமே குண்டூசி விழுந்தால் கூட ஓசை வரும் அளவுக்கு அமைதியாகி போனது
“பாருங்க டாடி என் துரியனை அவள் புருஷன் சொல்றா…எவ்வளவு தைரியம் இருந்தா இங்க வந்து உங்க முன்னாடி குரல் உயர்த்தி பேசுவா… அவள் சாவ அவளே தேடிகிட்டா சும்மா விடாதீங்க டாடி இவளை இங்கயே கொன்னு போடுங்க…!!”என்றவள் கண்ணில் தான் எத்தனை வெறி…
சுலேனாவை அடக்கியவர்… திரும்பி பார்த்த பார்வையில் அந்த இடம் முழுவதும் காலியானது…
“உன் புருஷனா…??? அவனுக்கும் என் மகளுக்கும் நிச்சயம் ஆகும் போது அப்படி ஒன்னும் சொல்லலையே… அப்படியே இருந்தாலும் என் மகள் வாழ்க்கைக்கு போட்டியா வந்த உன்னை எப்படி உயிரோட விடுவேன்…?” என நக்கலாக டான் லியோ…
“எனக்கு என் சாவை பத்தி பயம் கிடையாது… துரியன் தான் என் கணவர்ணு நிரூபிக்க என்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கு ஆனா உங்க பொண்ணு வயத்துல வளர்ர குழந்தைக்கு அப்பா துரியன் தான் நிரூபிக்க உங்க கிட்ட ஆதாரம் இருக்கா…??”என கனலினி அவரை விட படு நக்கலாகவும் தைரியமாகவும் கேட்க…
“இவளுக்கு எப்படி தெரிந்தது…??” என சுலனா திடுக்கிட்டு… கனலினி மேலும் பேச விடாமல் தடுக்க…
“டாடி பாருங்க இவளை என்ன மட்டும் இல்லாமல் என் வயத்துல இருக்குற துரியன் குழந்தையை எவனோக்கோ உண்டானது அசிங்கமா சொல்ற… கேட்டுட்டு சும்மா இருக்கீங்களே டாடி…???” என டான் லியோவின் ஆசை மகள் போலி கண்ணீர் வடிக்க…
“பொறுக்குமா தகப்பனின் நெஞ்சம்… உடனே துப்பாக்கியை எடுத்து கனலினி நெற்றி பொட்டில் வைக்க… பதறிய ஸ்டீபனும் கர்ணனும் முன்னால் வர அவர்களை தடுத்தாள் கனல்…அவளை பார்த்து வெற்றி களிப்பில் நின்றாள் சுலேனா…
“உனக்கு எவ்வளவு தைரியம் என் முன்னாடியே என் பொண்ண பத்தி பேசுவ… நீ ஒரு பொண்ணாச்சே விட்டு வச்சேன்…இனி ஒரு வார்த்தைக பேசுனா இந்த குண்டு உன் மூளை சிதைச்சுட்டு வெளியே வந்துடும…!!” என ஆத்திரம் கொண்டு கத்த
“நீங்க இப்படி ஆத்திரப்பட்டு கத்துவதாலையோ என்னை மிரட்டுவதாலையோ உண்மை மாறிவிட போவதில்லை… மிஸ்டர் டான்… உண்மை இதுதான் என்னால நூறு சதவிகிதம் அடித்துச் சொல்ல முடியும்… உங்க பொண்ணு வயித்துல வளர்ர குழந்தை துரியனோடது இல்லை இருக்கவும் முடியாது… அவர் மனசும் உயிரும் எனக்கு மட்டும் தான் சொந்தம்… என்ன தீண்டுன கையால தெரியாம கூட உங்க மகளை தீண்டி இருக்க மாட்டார்… அதுக்கு காரணம் எங்க காதல்…!!!” என கண் பாயிண்டில் நின்று கொண்டு தைரியமாக பேசும் கனலினி கண்கள் சுருக்கி பார்த்தார் டான் லியோ…
“அவள் கண்களில் பொய் இல்லை… எது அவளுக்கு இவ்ளோ தைரியம் கொடுத்தது… நிச்சயம் துரியனின் காதலாக தான் இருக்கும் இல்லையேல் யாருக்கு இந்த அண்டர் வேர்ல்ட்டை ஆட்டி படைக்கும் டான் லியோ எதிரில் துணிந்து பேச தைரியம் வரும்…!!”
“துப்பாக்கி வச்சி சுட்டு தள்ளாமா இந்த கிழவன் என்ன அவளை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறான்..!!” என உள்ளே குமுறிய சுலேனா…
“டாடி என்ன யோசிக்குறீங்க அவளை பேச விடாதீங்க சுட்டு தள்ளிடுங்க…!” என சுலேனா பட படக்க
அவசர படாத சுலேனா என்றவர்… துப்பாக்கியை கனல் நெற்றியில் இருந்து எடுத்து விட்டு… இது துரியன் குழந்தை இருக்காதுங்கிறது காரணம் சொன்ன ரைட்… அப்போ யாரோடைய குழந்தையா இருக்கும் நீ சொல்ற என துப்பாக்கியில் குண்டை சரி பார்த்து கொண்டே மிரட்டும் தோரணையில் கேட்க…
கனலினி அவரை பார்த்து ஒரு அலட்சிய சிரிப்பை உதிர்த்து விட்டு பின் திரும்பி ஸ்டீபனை பார்க்க… அவன் புரிந்து கொண்டவனாக ஒருவனை இழுத்து வந்து டான் லியோ முன்னால் விட…
சுலேனா அதிர்ந்து நின்றாள்… என்றால்… டான் லியோ “நீயா…??” என கண்கள் சுருக்கி பார்த்தார்… காரணம் அவன் சுலேனாவின் மெய் காப்பாலன்…ஜான்
“என்ன மன்னிச்சிடுங்க மாஸ்டர்… நான் எவ்ளோவோ மேடம் கிட்ட சொன்னேன்… அவங்க தான் என் மேல பல வருஷ காதல் அது இதுனு சொல்லி அவங்க பிறந்தநாள் பார்ட்டில தப்பு பண்ணிட்டோம்… அவங்க வயத்துல வளர்ரது என் குழந்தை தான்… டான் என் குழந்தை எதுவும் பண்ணிடாதீங்க…!!”என அவர் காலை பிடித்து கெஞ்ச…
இது மட்டும் இல்லை… இந்த குழந்தை இவரோடது தான் நிரூபிக்குற ரிப்போர்ட்… அதோட உங்க பொண்ணும் இவரும் பேசுன ஆடியோ என அவர் முன்னால் ஓட்டி காண்பிக்க…
“இங்க பாரு ஜான்…எனக்கு பணம் பதவி பவர் மேல தான் ஆசை… அதுக்கு துரியன் தேவை… ஆனா அவன் என்னை நெருங்கவே விடுவதில்லை… அதான் அவனுக்கு பதில் உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன்… எனக்கு உன் மேல லவ் மண்ணாங்கடி எல்லாம் இல்லை … துரியனை அடைய எனக்கு தேவை ஒரு குழந்தை… இதை துரியன் குழந்தைனு எங்க அப்பாகிட்ட சொல்லி அவனை என் வழிக்கு கொண்டு வந்துட்டா போதும்… அப்புறம் இந்த உலகம் என் காலடில… ஒழுங்கா நான் கொடுக்கிற பணத்தை வாங்கிட்டு ஓடிடு இல்லை உன் குழந்தையை கொன்றுவேன்…!!” என மிரட்டியவள்… அவனை கொல்ல முயன்று அதில் அவன் தப்பி சென்றது… தகவல் கேட்ட தகப்பனிடம் பணத்தை திருடி சென்று விட்டான் என கூறியது தனி கதை…
“டாடி டாடி இல்லை டாடி அவன் பொய் சொல்றான் இது துரியன் குழந்தை தான் இவள் தான் ஏதேதோ சொல்ல வைக்குற… இவளை விடாதீங்க.. இவளை கொன்ன எல்லாம் சரி ஆகிடும்…!!”என பிதற்றியவள்… டான் கையில் இருக்கும் துப்பாக்கியை பிடிங்கி கனலினி நோக்கி சுட…
நொடியில் ஸ்டீபனும் கர்ணனும் புகுந்து கனலினியை காப்பாற்ற… அவர்களை நோக்கி வெறி வந்தவள் போல் சுட்டாள்…
சுலேனாவின் தோட்டகளுக்கு பலி ஆகுமோ கனலினியின் கனவுகள்…


