மதுரம் சிந்தும் காதலே-20

வெளியில் சிவகாமி பேசுவதையும், தனஞ்ஜெயன் அதற்குப் பதில் சொல்லுவதையும் கேட்டவள்…

என்னைப் போன்ற மனநிலையில் இருந்தாள் என்று சொல்வதற்கு இல்லை… ஆனால் சிவகாமி மீது கொலைக் கோபத்தில் இருந்தாள்…

“அந்த ஊசி கண்ணுகாரி கிரணி கூப்பிட்டா அவளை என் மாமாவுக்குக் கட்டி வைக்குமா? என் மாமாவை என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்கிறாளா அந்தத் தாய் கிழவி? அந்தத் கிழவி கட்டி வச்சி தான் பார்க்கட்டுமே , கிரானைட் கல் தூக்கித் தலைல போட்டு உடைக்கிறேன்…!” ஆங்காரம் கொண்ட சொரூபிணியாகினாள்…

தரையை மிதித்துக்கொண்டு நடந்து ட்ரெஸ்ஸிங் டேபிள் அருகில் சென்றவள், தன் உருவத்தைப் பார்த்தாள்… “ஏன் எனக்கு என்ன குறைச்சல்… இருக்க வேண்டியது எல்லாம் அம்சமா இருக்கு… என்ன அந்த லிசா கிசாவுக்கு கொஞ்சம் தூக்குன மாதிரி இருக்கும், மத்தபடி என்ன விட அழகு எல்லாம் இல்லை… பகல்ல பசு மாடு எங்கன்னு தெரியாத கிழவிக்கு என்ன தெரியும்!!” எனத் தன் உடலை கண்ணாடியின் முன் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு நின்ற போதே, தனஞ்ஜெயன் உள்ளே வந்தான்… அவன் விம்பமும் மதுராவின் விம்பமும் அருகருகே தெரிய… பொருத்தமாக நின்ற தங்கள் தோற்றத்தைப் பார்த்துக்கொண்டு மெய்மறந்து நின்றனர்…

அவள் மனம் தன்னையும் மீறி… திறந்த மார்பையும் கட்டுமஸ்தான உடலையும் இறுக்கிப் பிடித்தபடி எடுப்பாகக் காட்டும் டீ-ஷர்ட்டில் அவன் அழகை ரசித்தாள்… அவர்களின் திருமண நாளில் இருவரும் ஜோடியாக நின்ற நினைவு அவளுக்குத் தோன்றியது…

தன் மனதை மதிக்காமல் எவனைத் திருமணம் செய்து வைத்து, தவறு செய்து விட்டதாகக் கூறினாளோ….. இன்று அவன்தான் பொருத்தமானவன் என யோசிப்பது ஏன்…?? அவனுடனான நினைவுகள் ஏன் இத்தனை சுகமாக இருக்கின்றன…???

நம்மிடம் இருக்கும் வரை ஒரு பொருளோ அல்லது மனிதரோ அவர்களின் அருமை புரிவதும் இல்லை, தெரிவதும் இல்லை….

அதே விஷயத்தை வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடும் போது தான், நமக்கு அவை எவ்வளவு முக்கியம் என்பதே தெரிய வரும். மதுராவும் அதே போல் தான்…. லிசா பங்குக்கு வந்து விடுவாளோ என்கிற பயத்தில்…. இது என் பொம்மை என உரிமை கொடி பிடித்தாள்….

உள்ளே வந்த தனா, கண்ணாடியில் தெரியும் இருவரின் ஜோடி பொருத்தத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டான்…. கண்ணாடிக்கு கூட தெரியுது, இவளுக்கு தெரிய மாட்டிங்குதே என்று….

ஆனால்…

எதையுமே முதலில் குதர்க்கமாக யோசிக்கும் மதுராவின் மூளை இப்பொழுதும் அதையே செய்தது….

“எதுக்கு இப்போ பெருமூச்சு ஓ? உனக்கும் அந்தத் தாய் கிழவி சொன்ன மாதிரி…. அந்த ஈரக் குச்சி லிசா கிடைக்கலையேணு சோகமா மாமா…?”

“ச்சச் சச்…. ஆனா பாரு உனக்கு வேற வழியே இல்லை…. என்கூட தான் கடைசி வரை குப்பைய கொட்டணும்… என்ன கழட்டி விட்டு போக நினைச்ச மாமா…. உன்னை எதுக்குமே முடியாத மாதிரி பண்ணி …… கச்சக் பண்ணிடுவேன்…!!” என வெட்டுவது போல் கையை காட்ட….

அதுவரை கத்துவாள், குதிப்பாள்.

..அவளை எப்படி சமாதானம் செய்வது என யோசித்துக் கொண்டு இருந்தவன்…. அவள் வாயாலே தன்னை விட்டு கொடுக்க மாட்டேன் என சொன்னவளை ஆர்வமாக பார்த்தான்….

இன்று தன் முன்னால் வெஸ்டர்ன் ஆபீஸ் பிட் போட்டு நின்றவள் மீது உவகை உற்று எடுத்தது….. பதின் பருவத்தில் அவள் வயசுக்கு வந்த போது ஓலை பின்னால் அமர வைக்கப்பட்டு, பாவாடை தாவணியில் மல்லிகை மொட்டாக இருந்தவள் மீது முதல் முதல் வந்த ஈர்ப்பு… இன்னும் மாறவில்லை……

அவனுக்கு இப்பொழுது….. அதே பருவ மொட்டாக காட்சி தர அவளைத் தவிர மனதில் வேற ஒன்றும் இல்லை என்கிற நிலை…

“ஆமா அவளை நினைச்சு தான் ஏங்கிப் போறேன், என்னடி அதுக்கு இப்போ… அவ என்ன உன்ன மாதிரியா கட்டுன புருஷனுக்கு கூட காட்டாம பொத்திப் பொத்தி வச்சிகிட்டாளா….!!” என அவளைத் தூண்டி விட்டு ஒவ்வொரு அடியாக அவளிடம் நெருங்கி வந்தவன்….

மதுராவை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே… “அவ கலர் என்ன..?? ஷேப் என்ன…?? அந்த ரெண்டு.. ப்…!!” என மேலே பேச போனவன் வாய் மீது அடி போட்டவள்…. காளி அவதாரம் எடுத்து அவன் முன்னால் நின்று கொண்டு…

“யோவ் மாமா! எவ்வளவு திமிர் இருந்தா கட்டின பொண்டாட்டி கிட்ட கண்ட கழிச்சடைய பத்தி பேசுவ…. இனி ஒரு தடவை அவளை பத்தி பேசுனா கொலைகாரியா ஆகிடுவேன்….!!” என சில்வண்டு கிடந்து கத்தினாள்…

அவள் உயரத்துக்கு குனிந்தவன், “அவளை பத்தி பேசுனா உனக்கு ஏன்டி கோபம்…!!” என்று ஒவ்வொரு அடி அவளை நோக்கி முன்னேறி கொண்டே கேட்டான்…

“அப்படித்தான் கோபம் வரும்… என் புருஷன் வேற பொண்ண பத்தி என்கிட்டயே பேசுனா… சும்மா இருக்க நான் ஒன்னும் கண்ணகியோ… நளாயினியோ கிடையாது…. மதுரா….!!!” என அவன் மேல் உள்ள கோபத்தில் கத்திக்கொண்டே பின்னால் நகர்ந்தாள்….

“ஓ அப்போ மேடம் என்ன விட்டுக்கொடுக்கவும் மாட்டீங்க..?? விட்டுப்போகவும் மாட்டீங்க..?? அப்படித்தானே…..!” என அவள் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்டான்…

“நிச்சயமா… கூடவே வச்சு செய்வேன் ஒழிய விட்டுக்கொடுக்க மாட்டேன்….!!” என பிடிவாதமாகச் சொல்ல

“நிரூபி…??” என

“எப்படி..??” மதுரா…

பேச்சுவாக்கில் அவள் சுவற்றில் மோதி நிற்க… அவள் இருபுறமும் கை வைத்து சிறை பிடித்தான் அவள் கவனத்தை ஈர்க்காமல்…

“பசிக்குது… மொத்தமா வேணும்….!!” எனச் சொல்ல

“இப்பதானே சாப்பிட்டு வந்தேன் மா..அ.மா அ….!” என்றவளின் குரல்….

அவன் கடித்துத் தின்னும் பார்வையில் தொண்டை குள்ளாகவே மீண்டும் விழுங்கியது….

பார்வையும் நெருங்கிய உடலில் இருந்து வெளிப்பட்ட உஷ்ணமும்… அவன் பசிக்கு தான் தான் உணவு என்பதை கண்டு கொண்டவள்…. அப்பொழுது தான் அவன் கை சிறையில் இருப்பதை கவனித்து விட்டு… “ஆத்தி.. இது அந்த பார்வை ஆச்சே… தேனில் எஸ் ஆனதுக்கு இங்க நியூயார்க் வந்து காவு வாங்க போறாரா…. அம்மாடி எப்படி இன்னைக்கு எஸ் ஆக..??” என யோசித்தவளுக்கு வழிகள் எதுவும் கிடைக்க விடாமல் மூளை தறிகெட்டுப் போக…

அவள் சடுகுடு ஆடும் கண்களைப் பார்த்துக் கொண்டே, வலது கையை எடுத்து அவள் இடையில் வைத்து அழுத்தியதில்… அவன் பசியின் அளவைக் காட்ட…

“ஹா..ப்..” அழுத்தம் தாங்காமல் உதட்டை கடித்துத் தாங்க முயல…

“நீ ஏன்டி கடிக்குற? அது என்னோடது!!” என மறுபக்கத்தால் அவள் உதட்டை விடுவிக்க…

“ம்ஹும்…” வாயை இறுக மூடி மறுக்க, இடையில் இருந்த கை அழுத்திப் பிசைய…

“ஹா.. ம்மா..!!” என வலியில் வாயைத் திறந்து கத்த…

வாய்ப்பை உருவாக்கியவன் சரியாகப் பயன்படுத்திக் கவ்விக்கொண்டான். “ம்ம்ம்ம்ம்.. ம்ஹு…. ம்ம்…” என அவள் துள்ள, அவள் தொண்டை வரை நாவினை விட்டுத் துழாவிக், அவள் எச்சிலைச் சுவை அறிந்து, அவள் மறுக்க மறுக்கத் தன் எச்சிலை அவளுக்கும் புகட்டினான்…

அவன் இதழ் முத்தத்தில் திணறித் திமிறியவள், அவனைத் தள்ளிவிட்டுத் துள்ளித் கதவை நோக்கி ஓடினாள்…

உதட்டில் வடியும் இரத்தத்தைத் தொட்டுப் பார்த்தவன், தன்னை கடித்து வைத்துவிட்டு ஓடும் மனைவியைப் பார்த்தான்…

ஒருமுறை தப்பிக்க விட்டவன் இப்பொழுதும் விடுவானா…? அடியே, முக்கியமான நேரத்துல கட்டையப் போட்டுப் போற உன்னை… கட்டையால அடிக்கப் போறீங்க, அதனா… ஹிஹி… நான் எஸ்கேப்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top