காலை உணவை இருவருக்கும் எடுத்து வைத்துவிட்டு அவர்களை அழைக்கச் சென்றார்…
சிவகாமி வந்த மாத்திரத்தில் அவதானித்து விட்டார்… இருவருக்குள் எதுவும் நடக்கவில்லை என்பதை…
“தாய் கிழவி வா வந்து கொட்டிக்கோ…!!” என அழைக்க…
அமைதியாக வந்து உணவு மேஜையில் அமரவும், தனா வரவும் சரியாக இருந்தது…
இருவருக்கும் உணவை பரிமாறிவிட்டு… அவளும் அமர்ந்து உண்ண…
“து… து…சைக்கு என்ன கன்றாவி… இது இதை மனுஷன் சாப்பிடுவனா…!!” என சிவகாமி கத்த ஆரம்பிக்க…
“என்ன பாட்டி என்ன சொல்றீங்க, நல்லா தான இருக்கு…!!” தனா
“ஐயோ பேராண்டி, இப்படி உப்பு சப்பு இல்லாத சாப்பாட சாப்பிட்டு உனக்கு நாக்கு செத்தே போச்சு ராசா… அதான் நாய் கூட இப்படி ஒரு கேவலமான சாப்பாட திங்கறது என்ன மோர்ந்து கூட பார்க்காத, சாப்பிடணும் என்ன தலை எழுத்தோ… ஐயோ என் பேரன் இப்படி ஒரே மாசத்துல இப்படி துரும்பா இளைச்சு போய்ட்டானே…!!” என பரிவாகச் சொன்னவர்…
“இதெல்லாம் ஒரு சமையல்னு செஞ்சி போட்டு… சிலுத்துக்கிட்டு அலையுதுங்க… வாய்க்கு வக்கணையா சமைக்கத் தெரியாத மட்டியை உன் தலையில கட்டி வச்சி உன் வாழ்க்கையே போயிடுச்சே ராசா…!!” என முகாரி பாட…
“அவனா இளைச்சுட்டானா? நல்லா வளர்ந்த புல் டாக் மாதிரி இருக்கான் அவன், இளைச்சு போய்ட்டானமா… வந்ததுல இருந்து இப்போ தான் பேரன் அந்த நொள்ள கண்ணுக்குத் தெரியுறானா… என் சாப்பாடு நல்லா இல்லாம தான் இப்படி வளைச்சு வளைச்சு தின்னுதா… தாய் கிழவி நம்மள சீண்டிப் பார்க்குது மதுரா… அமைதியா விடு… பார்த்துக்கலாம்…!!” என தனக்குள்ளே சொல்லி கொண்டாள்…
ஆனால் சிவகாமிக்கு அந்த எண்ணம் இல்லை போலும்….
வீட்டில் மதுரா செய்யும் அனைத்து விஷயங்களிலும் அது சொத்தை இது நொட்டை என குறை கூறி கொண்டே விரட்டினார்…..
அதோடு விட்டாரா….
கிழவி கிட்ட இருந்து தப்பிச்சா போதும் என மதுரா அலுவலகம் கிளம்பி கொண்டு இருக்க…
அதற்கும் வேட்டு வைக்க என்று அவரும் அலுவலகம் கிளம்பினார்…..
“வேணாம் பாட்டி..!!” என தடுத்த தனாவிடம்….. “நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போனதுக்கு அப்புறம் நான் மட்டும் இங்க தனியா இருக்க தான் என் வீர் டார்லிங்கை விட்டு போட்டு இங்க வந்தேனா…. ஓ வீர் டியர்…!! என்ன ஒரு சுயநல உலகம்… நம்மள மாதிரி யங் லவ் ஜோடியை பிரிச்சி விட்டு வேடிக்கை பார்க்குது…!!” என புலம்பி கொண்டே மூக்கை உறிஞ்ச…
“சரி சரி பாட்டி நீங்களும் கூடவே வாங்க, ஆனா ஒரு கண்டிஷன் எங்களை எந்த தொந்தரவும் பண்ணக்கூடாது….!!” என எச்சரிக்கை செய்து விட்டு அழைத்து போக…
“தாய் கிழவி எதுக்கு இப்போ ஹெவி பர்பாமன்ஸ் கொடுக்குது…. ஊர்ல இருந்தா அவர் தண்ணி கேட்டா கூட போயா கிழவா உனக்கு வேற வேலை இல்லன்னு சலிச்சிக்கும்…. இப்போ என்னமா கூவுது…. என்னவா இருக்கும்….??” என யோசித்தாள்…..
ஆள் அதி புத்திசாலிதான் ஆனால் தனாவிடம் மட்டும் கூமுட்டையாக இருக்கிறது…. ஏன் அவனிடம் மட்டும் அவள் அறிவும் மனமும் செயலை இழக்கிறது என்பதை அவளாக அறிந்து கொண்டால் தான் உண்டு…. (இப்போதைக்கு பல்ப் எரிய மாதிரி தெரியல, அதனால நாமளே டைரக்ட் கனெக்ஷன் குடுத்துட வேண்டியது தான்….)
லாஸ் ஏஞ்சல்ஸ்….
நிரஞ்சன்….. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடிப்பை கொட்டி….
ஹரிச்சந்திரனிடம்…. நல்ல பெயரை வாங்கி கொண்டான்…. அது எந்த அளவுக்கு என்றால்…
அம்முவுக்கும் யாழினிக்கும் நிரஞ்சன் டியூஷன் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு…
“சீசாவாக ஒரு பக்கம் உயர்ந்தால் மறுபக்கம் இறங்கித் தானே ஆக வேண்டும்… அதே போல் ஹரிச்சந்திரனைத் தவிர்த்து மற்றவர்களிடம் மனதில் மேலும் கீழ் இறங்கிப் போய்க் கொண்டு இருந்தான்….”
இன்றும் வழக்கம் போல் பள்ளி, கல்லூரி முடிந்து வந்த இருவருக்கும் வழக்கம்போல் பாடம் எடுக்க அவன் அறையில் அமர்ந்திருக்க…
நிரஞ்சன்… அம்முவுக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டே.. யாழினியை கண்ணால் கபளீகரம் செய்து கொண்டு இருந்தான்….
“வச்ச கண்ண வாங்காம எப்படி பாக்குறான் பாரு….. பொறுக்கி பையன்…. இவனை எல்லாம் எங்க நம்புறாரே எங்க அப்பா…. அவரை சொல்லணும்…!!” யாழினி அவனை உதடுகள் உள்ளாகவே முனுமுனுத்துக் கொண்டிருக்க,
“ப்பா… என்ன உதடுடா… செர்ரி பழம் கணக்கா இருக்கு… பார்க்கவே இப்படி இருக்கே, அதை பிடிச்சு…ம்ம்ம்…சப்பா….. கற்பனைக்கே அள்ளுதே…. இன்னும் எத்தனை நாளைக்கு நாம கனவில் மட்டும் லவ் பண்றது….. இந்த குட்டி பூனை அனுப்பி விட்டு இன்னைக்கு அக்கா பூனை கிட்ட லவ் சொல்றோம்… ரியல் டூயட் ஆடுறோம்….!!” என முடிவு எடுத்தவன்…
“அம்மு குட்டி… இன்னைக்கு ஹோம் ஒர்க் எல்லாத்தையும் முடிச்சுட்டீங்களா ஸ்வீட்டி பாப்பா…. இப்போ போய் விளையாடுங்க… அங்கிள் கிட்ட நான் சொல்லிக்குறேன்….!!” என அவன் பண்ணப் போகும் சம்பவத்திற்கு இருக்கும் இடையூறை நைஸாக அப்புறப்படுத்திய….
“அங்கிள் அப்போ அக்கா…???” இந்த மலை விழுங்கிய மகாதேவனிடம் விட்டுப் போக மனமில்லாமல் கேட்க…
“பார்ரா.. ரொம்ப தான் பாசம் பாயசம்… அவளுக்கு இன்னும் ஸ்பெஷல் சப்ஜெக்ட் எடுக்க வேண்டியிருக்கு… முடிஞ்சதும் வருவா…. இல்லை அவ கூடவே தான் இருப்பேன்னா… உக்காரு… நான் கேட்கிற கேள்விக்கு எல்லாம் ஆன்சர் பண்ணு….!!” என்றதும்….
“ஐயோ அங்கிள் மறந்துட்டேன் எனக்கு…. நாளைக்கு எனக்கு ஃபுட்பால் கேம் இருக்கு…. நான் போய் பிராக்டிஸ் பண்ணப் போறேன் பாய்…!!” என விழுந்து அடித்துக்கொண்டு ஓடினாள்….
அவள் பயந்து ஓடுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது….. இவன் யாழினியிடம் ஜொள்ளுவிடவும், ஹரிச்சந்திரானிடம் நல்ல பெயர் வாங்கவும்…. டெஸ்ட் வைக்கிறேன் என்கிற பெயரில் செய்யும் கொடுமை இருக்கிறதே அந்த கொடுமை…
அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வி கேட்டால் கூட பரவாயில்லை, இவன் அவுட் ஆஃப் சப்ஜெக்ட்டில் இருந்து கேட்டு அலற வைக்கிறான்….
அம்மு சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டவன்….. யாழினி அருகில் வந்து நின்று கொண்டு … அவளையே வைத்த கண் வாங்காமல் மிட்டாய் கடையை வெறிக்கும் குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டு கொண்டிருக்க…
“இப்படியே என் முகத்தை வெறிச்சுப் பார்த்துட்டு உட்கார்ந்துட்டே இருக்கப் போறியா? என் பின்னாடி லோலோன்னு சுத்துறீயே… உனக்கு வேற வேலை வெட்டியே இல்லையா?” என யாழினி கடுப்புடன் கேட்க…
“ஹா… அதுதான் தெரியுதுல… உன்னத்தான் பார்க்கிறேன்னு… அப்போ தெரிஞ்சே தான் என்ன சுத்தல்ல விடுறியா ஜிலேபி?” அவளது முகத்திற்கு அருகில் தன் முகத்தை வைத்துப் பேச…
நூல் அளவை விடக் குறைவாக இருந்த நெருக்கத்தில் திகைத்தவள், பின்னாலே சரிந்து நாற்காலியில் இருந்து விழப் போக…
அவளைப் பிடிக்குறேன் என்கிற பெயரில் அவள் மென் இடையை வழுக்கப் பிடித்துக் கொண்டு… அங்கம் முழுவதும் இவன் உடல் அழுத்தி உரச… அவளோடு உருண்டு… நசுக்கி விழுந்தவன் மீது யாழினி கிடக்க…
வீட்டில் எப்போதும் அணிந்திருக்கும் இலகுவான சட்டை… பொத்தான் அவிழ்ந்து… அவள் வெண்ணெய் கோலங்கள்… நிரஞ்சன் கண்களுக்கு விருந்து வைக்க…
அவன் கண்கள் போகும் திசையைப் பார்த்தவர்கள்… “சீ பன்னி நாயே, விடுறா!!” என அவனிடம் விடுபடப் போராடிக்கொண்டிருக்க…
“யாழினி, அங்க என்னமா சத்தம்?” என கேட்டபடி வந்தார் ஹரிச்சந்திரன்…
“ஐயயோ… அங்கிள்!!” என நிரஞ்சன் பதற…
“ஹாய் அப்பா… செத்தடா… இன்னைக்கு மாட்டிக்கிட்ட மகனே!!” என யாழினி நினைக்க…
ஹரிச்சந்திரனிடம் நிரஞ்சன் மாட்டிக்கொள்வானா? யாழினி ஆசைப்பட்டது போல் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்புவாரா? இப்படி கேள்வி கேட்டால் கல்லு வரும் என்று தெரியும், இருந்தாலும் இந்த இடத்துல நாம… தொடரும் போட்டு விட்டு எஸ் ஆகும் ரைட்டர்…



