காற்றில் கரைந்து செல்லும் வெண்பனியைப் போல மேகம்…. எட்டிய தூரம் வரை வானின் நீலம்….. பார்ப்போர் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் அழகிய காலைப் பொழுது…..
தாமதமாகக் கண் விழித்த மதுரா…
அரக்கப் பறக்க தன் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்….
அவளுக்கு ஜெய் மீது கோபம் எல்லாம் இல்லை….
அவள் செய்தது மிகப்பரிய தவறு, அது அறியாமல் நடந்தது தான், ஆனால்…. அதற்காக இவள் மன்னிப்பு கேட்கச் சென்றால்… வான்டெட் ஆக வந்த கோழியைச் சுக்கா…. போற்றுவானே அந்த பயம்…. ஏதோ அவள் சோகமாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் தான் விட்டு வைத்து இருக்கிறான், அது அவளுக்கே தெரியுமே….. எங்கே முகத்தைப் பார்த்தால் கண்டுபிடித்து விடுவானோ என்று தானே முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு திரியுது பக்கா கேடி…. அவள்….
இவள் கள்ளதனம் தெரியாமல், பாவம் நம் நாயகன் தனஞ்ஜெயன் பிடில் வாசிக்கிறான்….
“என்ன, இன்னும் நம்ம டிராகுலா எந்திரிக்கவே இல்லை போல, பெருச்சாளி உருட்ற சத்தத்த காணோமே….!!!” என அவன் வைத்திருக்கும் உடற்பயிற்சி உபகரணங்களை வைத்து அவன் உடற்பயிற்சி செய்வதை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்….
அவனுக்கு இவள் டாகால்டி வேலையில் தெரிஞ்சால்… இவளை வைத்து தான் பார்பெல் பயிற்சி எடுத்து இருப்பான்….
அவன் சிந்தனையிலேயே சமைத்து முடிக்கவும், அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருக்க… போய் கதவைத் திறந்தவளுக்கு உலகம் தட்ட மாலையாகச் சுற்றி, ஒரு கையை கதவைப் பிடிமானமாகவும், மறு கையை நெஞ்சில் வைத்து நின்றாள்….
“அப்படி பிள்ளை என்னத்த பார்த்து பயந்து போச்சு? வாங்க எட்டிப் பார்ப்போம்…..??”
“அம்மே… அது ஒரு அபாயகரமான மிருகம் மக்களே, ஓடிடுங்க…..!!” அது நம்மள நோக்கித்தான் வருது….
“ஹாய் டால்… வூ ஆர் யூ….!!” என கேட்ட வேற்றுகிரக வாசியினை….
புரியாமல் மதுரா பயந்து பார்க்க….
“ஊ கேல்… நோ இங்கிலீஷ்…???” என தான் அணிந்து இருந்த கண்ணாடியை கழட்டினார்…. அது அவருக்கு காரின் முன் கண்ணாடி போல் இருந்தது வேறு விடயம்….
“யார்டா இந்த கூத்து பார்ட்டி…. கூத்து முடிஞ்சி நேரா வந்த மாதிரி இருக்கு, குரல் வேற தெரிஞ்ச மாதிரி இருக்கே??” என தன் முன்னால் முழு மேக்கப்பில் ஆங்கிலோ-இந்தியன் ஆடை அணிந்து நின்ற வயதான பெண்மணியின் முகத்தை உற்று உற்றுப் பார்த்தாள்.
“ஊ கேல், வொய் ஷௌட்டிங் அட் மீ…!!” என அதிகாரமாக கேட்க….
“எங்கயோ கேட்ட குரல்…!!” என நினைத்தவள்…..
“உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு, பட் வெர்னு தான் தெரியல…!!” அவரை சுத்தி சுத்தி வந்தவள்….
“மீ நோ நோ… நான் பிறந்தது வளருந்தது அல்லாமே அமெரிக்கா தான்… கேல்…!!”
“தாய் கிழவி நீயா…!!” என மதுரா ஒரு நிமிடம் சந்தோஷத்தில் கத்தினாள்….
“ஏ… நோ.. நோ… மீ நோ கிழவி… மீ பூட்டி …!!” பியூட்டி தான் கிழவி அப்படி சொல்லுது…. யாராவது இந்த கிழவி கிட்ட இருந்து அந்த இங்கிலீஷ காப்பாத்துங்களேன்…
“ஆமா கிழவி, வயசானா ஆனா பூட்டி தான்… இல்லனா பருவ குமரியா நீ…!!” என சரிக்கு சரி பேசினாலும், அவள் கண்கள் வெளியே ஆவலாக தேட, தனா மட்டுமே சிவகாமியின் பையை தூக்கி கொண்டு வர…. அவள் எதிர்பார்த்த காட்சி இல்லாமல் சோர்ந்து போன முகத்துடன்…
சிவகாமியை கட்டி கொள்ள….
மதுராவிலிருந்து இந்த பிரதிபலிப்பை எதிர்பார்க்காத சிவகாமி இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்க…
“என்னதான் இத்துப்போன பழைய சாமான சீனா காரன் பளபளன்னு பாலிஷ் போட்டு வித்தாலும்… அது பல்லு இளிச்சிகிட்டு போய்டுமாம்… அது மாதிரி தான் கிழவி நீ என்னதான் மிடி, பிராக், மூஞ்சிக்கு பிளஷ் போட்டு இந்த கார் கண்ணாடி பின்னாடி மறைஞ்சுகிட்டாலும்… இந்த உன் சுருக்கு பை சொல்லிடுச்சு தேனி மாவட்ட உத்தம பாலைய சில்லு கருப்பட்டின்னு…!” தாய் கிழவி என அவர் இடுப்பில் இருந்த பையைத் தூக்கி காட்டி…
மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துட்டியே பாடி சோடா என எடுத்து காட்ட…
அவர் அடிப்பாவி “நான் கூட என்னை பார்த்ததும் சந்தோஷத்துல கட்டிப்பிடிச்சோணு நினைச்சு புட்டேன்…?” என அங்கலாய்த்துக் கொண்டார்…
“அப்படி நீயா நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்…!” அதற்குள் அவர்கள் அருகே வந்த தனஞ்ஜெயன் முகத்தைத் தூக்கிக் கொண்டவள்…
“இந்த ட்ராகுல கிட்ட என்னை புடிச்சு குடுத்ததுக்கு உங்க கழுத்தை பிடிக்கலையேனு சந்தோஷப்பட்டுக்கோங்க…!” வெடுக்கென்று கூறி சென்றவளைப் பார்த்தவர்…
“என்ன ராசா இந்த வெட்டு வெட்டிட்டு போறா…?” என தனாவிடம் கேட்க
“இதுக்குதான் பாட்டி உங்கள முன்னவே வரவைச்சேன், என்னால அவள தனியா சமாளிக்கவே முடியல, நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும்…!” என பாவமாக கேட்டவன் முகத்தில் இருந்த உண்மையான வருத்தத்தைக் கண்டு கொண்டார்… வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் அன்றோ…
“அதுக்கு ஏன் ராசா வாடி கிடக்குற… விடு நான் வந்துட்டேன்ல… இனி அந்த கோட்டி சிறுக்கிக்கு இருக்கு அவளா நானான்னு பார்த்துக்கிறேன்… ஊ டோ பூரி…!” என ஆறுதலாக சொல்ல…
“அது என்ன பாட்டி புது பூரி…?” என புரியாமல் கேட்க…
“அதான் பேராண்டி, நீ விசன பட்டுக்காதங்கிறத இங்கிலீஷ்ல சொன்னேன்…!!”
“ஹாஹா… பாட்டி பாவம், இங்கிலீஷ் விட்ருங்க…. நம்ம ஊர்ல பேசுனா கூட பரவல…. அவன் ஊர்ல வந்து அவன்கிட்ட இப்படி பேசுனா… என்ன பண்ணுவான் தெரியுமா…????”
தெறிச்சு ஓடிடுவானா ராசா…??
“இல்லை, நம்மள ஓட விட்ருவான்… ஏற்கனவே உள்ள ஒருத்தி விரட்டுறது போதாதுன்னு இதுவேற வேணாமே பாட்டி…!!” என கொஞ்சலாக கேட்க…
“அப்படியா ராசா, சரி விடு, இந்த ஊர் ஒரு லேடி காளி புலவர மிஸ் பண்ணிடுச்சு, அம்புட்டுதான்….!!” என்று விட்டு உள்ளே சென்றார் சிவகாமி.
“ஆங்” என விழித்து நின்றான் தனஞ்ஜெயன்….
(பாவம், பிள்ளை கிட்ட அவங்க ஷேக்ஸ்பியர் தான் காளி புலவர் ஆகிட்டு போறாங்கன்னு ஹவ் டூ ஐ டெல்…)
உள்ள வந்த மதுராவிற்கு சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை….
“இந்தத் தாய் கிழவி எதுக்கு வந்து இருக்கும்… நாம இங்க இருக்குறது எப்படி தெரிஞ்சி இருக்கும்…. யார் இவங்களுக்கு போட்டு கொடுத்து இருப்பா….?” (எப்ப யோசிக்க வேண்டியதை எப்போ யோசிக்கிறாளோ!)
பாவம், இவளுக்கு எப்படி தெரியும், இவளைத் தேடி அவர்கள் வரவில்லை…. அவர்கள் வலை விரிக்காமலே தானே வந்து சிக்கினாள் என்பதை…
ஆம்… இவள் படித்து முடித்ததும்… வேலைக்கு பல இடங்களுக்கு விண்ணப்பித்து இருக்கிறாள், அதில் ஒன்றுதான் தனஞ்ஜெயனின் ஜே. எம். கம்பெனியும்…
பல கட்டத் தேர்வுகளுக்குப் பின் சலித்துக்கொண்டவர்களை மட்டுமே… ஜெய் என்கிற தனஞ்ஜெயன் இறுதியாக நேர்முகத் தேர்வில் அணுகுவான்… அவன் என்ன செய்கிறான், ஏது செய்கிறான்… என்பதே தெரியவில்லை… நம் சண்டி ராணிக்கு…
அப்படி அனைத்துத் தேர்விலும் தன் திறமையால் அடித்து நொறுக்கியவள்… இறுதி நேர்முகப் போட்டிக்குத் தகுதியாகி இருக்கிறாள்… அதற்குச் செல்வதற்குத்தான் அன்று சுவர் ஏறி குதித்துச் சாகசம் எல்லாம் செய்தாள்…
ஆனால் அன்று இவளை நேர்முகத் தேர்வு செய்ய வேண்டிய தனஞ்ஜெயன் தான் கல்யாண வேலையில் பிசியாக இருந்தானே… இவனுக்குப் பதில் வேறு ஒருவரைத் தேர்வு நடத்த வைத்து… அதன் முடிவை தனாவிற்கு அனுப்பி வைத்திருந்தார்… கல்யாண அலைச்சலில் அவன் அதை கவனிக்காமல் விட்டுவிட்டான்…
அதன் பின் இவள் செய்த கூத்துதான் தெரியுமே…
அவள் தந்து சென்ற வலியை மறக்க… வேலையை கையில் எடுத்தான்… எங்கு போனாள், எப்படி இருக்கிறாள் எனத் திண்டாடியவனிடம்… வகையா வந்து மாட்டிக்கொண்டவளை நினைத்துச் சிரிப்புதான் வந்தது… “அடியே சில்வண்டு, என்ன விட்டு எங்கேயும் போக முடியாதபடி வச்சான்… பாரு செக்… இருடி என் அத்த மவளே…” என நினைத்தவன், அவளுக்கு அவன் தான் கம்பெனி முதலாளி என்பது தெரியாமல் பார்த்துக்கொண்டதும்… உதவியவர்களைப் பிடித்து எங்கு தங்கி இருக்கிறாள் என்பது வரை தெரிந்து கொண்டவன்… கட்டம் கட்டித் தூக்கிவிட்டான்…
பாவம், இது தெரியாமல் தான போய் மாட்டிக்கிச்சு கைப்புள்ள… என்னத்த சொல்ல… கட்டத் துறைக்குக் கட்டம் சரியில்லை மக்கா…



