மனோவை சாம்பவி அண்ணன் என்பதை அறிந்து அவனை உள்ளே அழைத்து வர வரவேற்பறையில் குழந்தையுடன் அமர்ந்தவாறு சிவசங்கரனுடன் பேசிக்கொண்டு இருந்தவனைப் பார்த்து மகிழ்க்கு உள்ளுக்குள் பூகம்பம் வெடித்தது (வி.எஃப்.எக்ஸ் எபெக்ட் நீங்களே போட்டுக்கோங்க..).
அதுவும் அவன் நான்கு வயது மகள் அபியுடன்.. அமர்ந்தவனின் பார்வை சிறிதும் மகிழைப் பார்க்கவில்லையே தவிர அவன் கவனம் முழுவதும் அவளிடம் இருப்பதை யாராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாதே..
“மகிழ்..?” என மனோவும், “வா மா ” என சிவசங்கரனும் அழைத்ததும், அவளுக்குக் கேட்கவில்லை அவர்கள் குரல் மட்டுமல்ல அண்டத்தின் அனைத்து ஓசையும் அவள் செவியில் மியூட் பட்டன் போட்டது என்பதே உண்மை..
மகிழ்ழ்ழ்ழ்..???? என மனோ அவள் கையைப் பிடித்து உலுக்க..
“ஹான்.!!!”. அதிர்விலிருந்து வெளியே வந்தவள்..
அவன் கவனம் தன்புறம் இல்லை என நினைத்தவள் அவனிடமிருந்து தப்பிவிடும் எண்ணத்தோடு அங்கிருந்து நழுவி பின்னால் எட்டு வைத்து போனாள்..
அவளின் வாசத்தை மட்டும் குடித்து வாழ்ந்த அரக்கனுக்கு அவளின் வருகையும் அவளின் அதிர்வும் தெரியாது என எண்ணியவளுக்கு எங்கே தெரியும் அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால் அவனின் நிழல் இருக்கிறது என்று..
வந்த தடம் தெரியாமல் நழுவ பார்த்தவளை.
“மகிழு…! என்னையா தேடுன நான் அபி கண்ணுக்கு பால் எடுத்து தர சொல்லி பக்கத்து வீட்டு அக்காவுக்கு சொல்லிட்டு வந்தேன் புள்ள வா எங்க போற..?” என்றவள் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவள்..
“அடடே மனோ அண்ணா நீ எப்போ வந்த வா வா..!!”
“இப்போ தான் வந்தேன் மகிழ் கூட தான் வந்தேன்..!!”
“எங்க வீட்டுக்கு வரதுக்கு உனக்கு மகிழ் தான் வழிகாட்டணுமா..சரி சரி வா.. பெரிய அண்ணா ஊர்ல இருந்து வந்து இருக்காரு..!!”
” வா மகிழ் உனக்கு எங்க பெரிய அண்ணன அறிமுகப்படுத்தத்தான் நான் நேத்துல இருந்து காத்து கெடக்கேன்..!!” என அவளையும் அழைத்துக்கொண்டு செல்ல..
“அ.. அண்ணி நான்… நான் வந்து அப்புறம் வரவா..நீங்க கெஸ்ட் அஹ் கவனிங்க ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன்..”
அவளை விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது என்பது போல் முன்னே அறிந்தாளோ என்பது போல்..
“அப்படியே ஒன்னு போட்டேனா பாரு.. சும்மா வா புள்ள நம்ம வீட்ல என்ன தயக்கம்.. “
“இருக்குற சோலி எங்கயும் ஓடிடாது அது பாட்டுக்கு இருக்கட்டும் இங்க விருந்து முடிச்சிட்டு போய் செஞ்சிக்கலாம்..!!” வா என தர தர இழுத்தவள் அழைத்துச் சென்று (இதுக்கு மேல எங்க சோலியா பார்க்க உள்ள வந்தா உன் அண்ணன் அவ சோலியா முடிச்சிடுவான்..).
“இதுதான் மகிழ் நான் சொன்ன முக்கியமான ஆளு எங்க அண்ணே பேரு ராவணன்.. இது அவர் பொண்ணு அபிராமி.. என்றவள், அபிக்குட்டி அத்தை கிட்ட வாடா…!!” என குட்டியை தூக்கிக்கொண்டு வந்தவள்.
(உன்ன விட உங்க அண்ணனா அவளுக்கு நல்லாவே தெரியும் போமா..)
“அண்ணே இதுதான் மகிழ்னி நம்ம பக்கத்து வீட்டு பவள பாட்டி இருக்குல்ல அவங்க வீட்ல தான் இருக்குது ..!!” என அவளை அறிமுகப்படுத்த..
அவளை முதல் பார்ப்பது போல்.. “ஓ அப்படியா வணக்கம்ங்க!!” என்க..(அடேயப்பா..!!)
அவளுக்கு தான் பதில் வணக்கம் தெரிவிக்கும் முன் நாவு உலர்ந்து விட்டது..
“அப்புறம் மனோ நீ எப்போ வந்த..??”
“போன வாரம் வந்தேன் அண்ணா…” என்றவனிடம்..
“சரி உக்காரு அப்பா அம்மாலாம் நல்லா இருக்காங்களா..?” என சிவசங்கரன் கேட்க அவர்களுடன் அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டான் மனோ..
வணக்கம் சொன்னதோடு சரி அவளிடம் எதுவும் பேசாமல் மீண்டும் சிவசங்கரனிடமும் மனோவுடனும் திரும்பி பேச அரமித்து விட்டான்.
அவளுக்கு குழப்பம் மட்டுமே எஞ்சியது “ஒருவேளை இது அவன் இல்லையோ, நம்ம கண்ணுக்கு தான் அப்படி தெரியுதோ..?” என கண்களை கசக்கி பார்க்க அப்போதும் கனகம்பீரமாக தெரிந்தது அவன் தோற்றமே..(மறக்க முடியுமா என்ன? இல்லை அவன் தான் மறக்க விட்ருவானா.)
“ஒருவேளை மறந்து இருப்பானோ.. இருக்கும் நாள் ஒரு மேனிக்கு பெண்களுடன் சுற்றுபவன் தானே. அப்படி மட்டும் மறந்துட்டா நல்லது கடவுளே..!!” என நினைத்தவளை..
“என்ன மகிழ் அப்படியே நின்னுட்டே வா, எனக்கு கூடமாட ஒத்தாசை பண்ணத்தான் இன்னைக்கு விடுப்பு எடுத்தேன்னு சொன்ன, இப்படி நின்னுகிட்டே பகல் கனவு கண்டுகிட்டு நிக்குற, வா புள்ள வந்து இதெல்லாம் எடுத்து சாப்பிட்டு மேசை மேல எடுத்து வை..!!” என அவளை அழைக்க போதுமென்று சென்று விட்டாள்.
அனைவரும் சாப்பிட அமர்ந்தவுடன் மகிழும், சாம்பாவியும் பரிமாறினார்.
தன்னை பார்த்தும் எந்த வித சலனமும் இல்லாமல் இருப்பவனை நினைத்துக்கொண்டே இருந்தவளை..
“அடி மகிழு..??”
“ஹான் அண்ணி..!!”
“என்ன மசமசன்னு நிக்குறவ..
அங்க பாரு அண்ணன் உன்கிட்ட தான் குழம்பு கேக்குது போய் பரிமாறு புள்ள..!!”
“அபிக்குட்டிக்கு தூக்கம் வந்துடுச்சு போல நான் கொண்டு போய் படுக்க வைக்கிறேன்.. நீ பார்த்து பரிமாறு..!!” என்றவள் தூங்கும் குழந்தையை தூக்கி உள் அறைக்கு சென்று விட்டாள்.
மெல்ல குழம்பை எடுத்து வந்து அவனை பார்த்தபடி பரிமாற போக..
அவளை மொத்தமாக அளந்தபடி தன் விரல்களை ஒவ்வொன்றாக சப்பி இழுத்துக்கொண்டே “குழம்பு ருசியா இருக்கு இன்னைக்கு ஒரு பிடி புடிக்க வேண்டியது தான் என்க..!!”
அவன் செயலில் செய்வது அறியாது நின்றவள் பிறகு சுதாரித்து கொண்டு குழம்பை ராவணனுக்கு ஊற்ற, நிமிர்ந்து பார்த்தவன் யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்தவன்.
“சௌக்கியமா சிட்டு..?” என கேட்க..
கையில் இருந்த குழம்பை ‘பட்டென்று’ அவன் மேல் கொட்டிவிட
“என்ன மா..?? இப்படி பண்ணிட்ட..??” என சிவசங்கரனும்,
“பாத்து மகி…!” என மனோவும்..
“என்ன புள்ள இப்படி மேலே கொட்டிட்ட..?” என்றபடி ஓடிவந்தாள் சாம்பவி.
அவ்வளவுதான் அவன் தன்னை மறக்கவில்லை, தன்னை வேட்டையாடவே வந்து இருக்கிறான் என்பது நிச்சயமாக கை, கால் உதரலெடுக்க அதற்கு மேல் நிற்க முடியாமல் தவறி விழுந்த பொருளை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்கு ஓடிவிட்டாள்.
“மன்னிச்சிடு அண்ணே அது அறியா புள்ள கை தவறி விழுந்து இருக்கும்..!!”
“அச்சச்சோ.. துணி முழுக்க குழம்பு ஊத்தி நனைஞ்சிடுச்சே வா அண்ணே மாத்து துணி தரேன் மாத்திக்கோ..!!”
“சரி பரவால்ல, அபிகுட்டி தூங்கிட்டாளா..!!”
“அப்போவே தூங்கிடுச்சே அண்ணே போ கொள்ளைக்கு போய் சுத்தம் பண்ணிட்டு சட்டையை மாத்திக்கோ..??”
“துண்டு எடுத்து கொடு எந்த பக்கம் மட்டும் காட்டு சாம்பவி நான் போய்க்கிறேன்..!!”
“இந்த பக்கமா போ அண்ணே பின்னாடி துண்டு கொண்டுவரேன்.!!”
“நீ போய் சாப்பிடறவங்கள கவனி.. எனக்கு யார்கிட்டயும் குடுத்து விடு..!!” என இயல்பாக சொல்வது போல் சொல்லிவிட்டு சென்று விட்டான்.
கையில் துண்டை எடுத்துக்கொண்டு சமையலறையில் நின்று இருந்தவளிடம்..
“என்ன மகிழு இப்படி பண்ணிபுட்ட அண்ணன் ஏதோ நல்ல மனநிலையில இருக்கு..!! அதுக்கு நாககண்ணுல அழுக்கு பட்டா கூட பிடிக்காது.. சரி இந்த இத கொண்டு போய் கொள்ளைல அண்ணன் இருக்கு அதுகிட்ட கொடு..!!” என்று சொன்னவள் அவள் கூற வருவதை கேட்க்காமல் சென்று விட்டாள்.
“என்ன இது இந்த அண்ணி அவன்கிட்ட தனியா மாட்டி விட்டுட்டாங்க.. அங்க அத்தனை பேர் இருக்கும் போதே மேல கைவச்சான்..!!”
எது இது எப்போனா கேக்குறீங்க.. ஆம், அவள் அவனுக்கு உணவு பரிமாறும்போதே விலகி இருந்த அவள் அல்லவா துண்டு இடையில் கைவிட்டு இழுத்தவாறே “சௌக்கியமா சிட்டு” எனக் கேட்டதால் தானே அவன் மீது குழம்பு ஊற்றும்படி ஆகியது என நினைத்தவள்.
ராவணன் வேண்டுமென்றே தான் தன்னை தனியாக வரவழைக்க செய்துள்ளான் என்பதை புரிந்து கொண்டவள், போகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் ஒருவாறு பயத்துடனே துண்டை கொண்டு சென்றாள்.
அவன் சட்டையில் பட்ட கரையை அவளை பார்த்தப்படியே சுத்தப்படுத்தினான். அதுவரை அவளிடம் பேசாமலே இருந்தவன் அவளிடம் கையை நீட்டினான்.
அவன் அருகில் வந்ததும் குனிந்தபடியே துண்டை நீட்டினாள்.
கையை நீட்டியபடியே சில நிமிடங்கள் இருக்க அவன் வாங்கவே இல்லை.
மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் தன் முகத்திற்கு வெகு அருகில் அவன் குனிந்த முகத்தை கண்டாள்.
“ஆஆஆஆ..!” என பதறி விலகியவளை
ஒற்றை கையால் பற்றி தன் மீது மோதி நிறுத்தினான்.
“என்ன சிட்டு, என்ன விட்டுட்டு வந்து ரொம்ப சந்தோஷமா இருக்க போல..!!” என்றவன் இரண்டடி பின்னால் நகர்ந்து அவளை மேலிருந்து கீழ்வரை சேலையில் இருந்தவளை பார்த்தவன் கண்கள் பித்தம் கொள்ள அவளருகே சென்றான்.
“ப்ளீஸ். வேணாம்..?” என்றபடி பின்னால் சென்றவளின் முடியை கொத்தாக பற்றி தன் முகத்தருகே கொண்டு வந்தவன்.
மூச்சு காற்று அவள் முகத்தில் மோதும் வண்ணம் நிறுத்தியவன் “என்ன இளிச்சவாயன் ஆகிட்டு தப்பிச்சு வந்துட்டல்லடி” என்றவன் கை அவள் முடியில் கொடுத்து அழுத்த, தாங்காமல் கண்களில் கண்ணீர் வழிய…
“ஹா.. ஆஆஆஆ ப்ளீஸ் வலிக்குது விடுங்க.. ப்ளீஸ் என்னை விட்ருங்க வலிக்குது கையெடுங்க..!!”
“எதுக்கு விடனும் ஏன்டி விடனும் என்ன விட்டு ஓடிப்போக உனக்கு எங்கிருந்து வந்தது அவ்ளோ தைரியம்..??”
“ஆமாம்ல தைரியம் இருந்ததால தான தப்பிச்சி ஓடுன அத அழிச்சிட்டா..?? என்கிட்ட இருந்து தப்பிக்கனும்னு தோணாதுல..!!” என்றவன் அதி தீவிரமாக யோசித்தவன் ஒரு முடிவு எடுத்தவனாக.
“உனக்கு என்கிட்ட இருந்து தப்பிச்சி போக துணிச்சல் குடுத்தது நீ இப்போ முழுசா இருக்குறதால தானே..?? அதுதான என் இந்த செல்ல சிட்டை சிறகடிச்சு பறக்க வச்சது.. அத அழிச்சு சிறகை ஒடச்சிட்டா பறக்க தோணாதில்லடி..!!” என்றவன் குனிந்து அவள் கண்ணீரை நாக்கால் துடைக்க அருவருக்க கண்களை முடியவளை கன்னம் பற்றி மேலும் நாவால் கோலம் போட்டபடி
“நாளைக்கே உன் சிறகை உடைக்குறேன்..!!” என்றவனை புரியாது பார்த்தவளை “என்ன புரியலையா உன்ன எடுத்துகிறேன் மொத்தமா..!!” என அவள் காது அருகில் கூறியவனை தள்ளிவிட்டு உதவிக்கு அழைக்கும் பொருட்டு “அண்ணி.. இஇஇஇஇஇ..” என்றவளின் வார்த்தை அவன் இதழ்களுக்குள் சென்று மறைந்தது.
இதழை இணைத்தவனை விலக்க முடியாமல் அவனை அடித்து அடித்து கலைத்தவள் துவள அவளை மேலும் நொறுக்கி அணைத்துக்கொண்டே சிறை செய்தான் ராவணன்.
இராவணனிடம் மாட்டிய மகிழை யார் காப்பாற்றுவர்..?? அபியின் அம்மா எங்கே.?? அனைத்து கேள்விக்கும் இனி வரும் பகுதியில் விடையை பார்ப்போம் மக்களே..



