முகிலே!! உன் முகவரி என்ன-10

தம்பிகளிடம் பேசிவிட்டு வந்துவிட்டானே ஒழிய, விஜயேந்திரனின் மனதுக்குள் ஆயிரம் குழப்பங்கள் நீடிக்கக் கொண்டிருந்தன…

யோசிக்க யோசிக்க தலை வெடித்தது… நேற்று வரை குழந்தைக்குத் தகப்பன் யார் என்பது மட்டும் தான் கேள்விக்குறியாக இருந்தது… இன்றைய சம்பவம் விஜயனை ஏகத்துக்கும் குழப்பிக் கிடந்தது… வந்தவள் தான் யார்…? அவள் தான் அந்த குழந்தைக்குத் தாயா…? அப்படி எனில் இன்று அவன் கண்ட காட்சி மெய்யா…? பொய்யா…? எதற்காக உள்ளே வந்து இருக்கிறாள், விஜயனைப் பழிவாங்கவா…? ஆஆ, யோசிக்க யோசிக்க தலை வின் வின் என்று வெடித்தது…

இன்று பகல் முழுவதும் இந்தத் தென்றல் யார், அவளின் ஆணிவேர் என்ன…? எனத் தேடித்தேடித் களைத்தது தான் மிச்சம், ஆனால் பதில் கிடைக்கவில்லை…

நாளை நிச்சயம் ஒரு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கண்ணை மூடித் தூங்க விடாமல் செய்தது அந்த கனவு; அன்று நடந்த நிகழ்வின் பிரதிபலிப்பு அவை… கனவுகள் எல்லை மீற ஆசையில், அடி கனக்க குபீர் என்று வியர்த்து வழிதலுடன் எழுந்து அமர்ந்து விட்டான் விஜயேந்திரன். அவனின் இத்தனை வருடத் தவ வாழ்வைச் தடம் புரல செய்தவளால்… “யாருடி நீ? எங்கிருந்துடி வந்து இருக்க? என்னையே இப்படிப் புலம்ப வச்சிட்டியே உன்னை… ஆஆ மாயக்காரி, மாயக்காரி! கண்டதையும் காட்டி மயக்கிட்டாளே…!!” என அதற்கும் அவளைத் தான் குற்றம் சாட்டினான் நாயகன்…

சுட்டெரிக்கும் சூரியனின் சூட்டைத் தணித்தது இதமான தென்றல் காற்று… வான் மேகம் யாவும் தெளிந்த கடல் நீலம் என நீண்டு கிடக்க, மஞ்சள் வெயில் தோரணையில் மரகதப் பச்சை எங்கும் மின்ன, எழில் சூடி நின்றது இயற்கை…

விண்ணும் மண்ணும் காதலால் கைகோர்த்துச் செல்லும் நீண்ட பாதை அது… தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு அருகே நிழலில் ஜீப்பை நிறுத்திவிட்டு, அதன் போனெட் மீது ஏறிப் படுத்துவிட்டான் விஜயேந்திரன்…

அவன் தேடிச் சென்ற இடங்களில் எல்லாம் எதிர்மறைப் பதிலை கேட்டு அலுத்துவிட்டான்… அவன் தேடிச் சென்ற நகை செய்யும் ஆசாரி தலைமறைவாகிப் போனார்… தென்றலை விசாரிக்கப் பக்கத்து ஊர் பள்ளிக்கூடம் சென்று விசாரித்தபோது அவனுக்குக் கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது…

“ஆமா தம்பி, தென்றல்ங்கிற புள்ள இங்கதான் வேலை பார்த்துச்சு. ரொம்ப நல்ல புள்ள, வேலைலாம் முகம் சுளிக்காம செய்யும்.. இங்க எல்லார் கிட்டயும் அன்பா பழகும். ஒருநாள் அந்தப் பிள்ளை பயிற்சி காலம் முடியுறதுக்கு முன்னாடியே வேலைய விட்டுடுறேன் சொல்லுச்சு. ஏன் கேட்டா, தன்னை ஒரு அனாதைன்னும், இந்த ஊர் பூபதி ராஜா பேரான காதலிக்கிறதாவும் சொல்லுச்சு. நானும் நல்லா இருந்தா சரின்னு விட்டுட்டேன்…!!” என தலைமை ஆசிரியர் கூற, கேட்டவன் ஆடித்தான் போனான்…

“ஏன் சார், நீங்க அந்தப் ஆளை நேர்ல பார்த்து இருக்கீங்களா…?” என விஜயேந்திரன் கேட்க…

நேரடியா பார்த்தது இல்லை தம்பி, ஆனா ஒரு தடவை அந்தப் பிள்ளையை ஸ்கூலுக்கு கார்ல கூட்டிட்டு வந்து விடறப்ப அவர் கையை மட்டும் பார்த்தேன். அதுல கூட ஏதோ ஒரு படம் வரைஞ்சு இருந்துச்சு, அது என்ன…? என மண்டையை ஆட்டி யோசித்தவர், ‘ஆன் தேள் படம் வரைஞ்சு இருந்துச்சு தம்பி’ என கூறியதை கேட்டவன் மேலும் குழம்பித்தான் போனான்…

விஜயேந்திரன் ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை பார்த்தவர், “ஏன் தம்பி, அந்தப் புள்ளைக்கு ஏதாவது பிரச்னையா? இப்போ தான் இன்னொரு பொண்ணு வந்து தென்றலையும் அவள் காதலனையும் பற்றி விசாரிச்சிட்டு போச்சு…?” என கேட்க…

“பொண்ணா…?” என சற்று யோசித்தவனுக்கு மூலையில் ஏதோ பொறி தட்ட,

அவசர அவசரமாகத் தன் போனை எடுத்து தென்றலாக வந்தவளின் புகைப்படத்தைக் காட்டி, “இவளான்னு பாருங்க ஐயா…?” என கேட்க,

“இந்த பொண்ணு இல்லை தம்பி, அந்தப் பொண்ணு வேற மாதிரி இருந்துச்சு…?” என வேறு பதில் கூறி குழப்பத்தை அதிகரித்தார்…

“ஓ அப்படியா! அந்தப் பொண்ணு மறுபடியும் வந்தால்… எனக்கு தகவல் சொல்லுங்க…!” என்றவன் யோசனையாக,

“அப்புறம் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம், அதையும் கொஞ்சம் தீர்த்து வைக்கிறீங்களா…?”

சொல்லுங்க தம்பி…!!

இந்த போட்டோல இருக்குறது…??? எனத் தொடர்ந்து கேட்டவனுக்குத் தலைமை ஆசிரியர் கூறிய பதில் ஒன்றும் பேரதிர்ச்சியாக அமைந்துவிடவில்லை; எல்லாம் விஜயேந்திரன் ஏற்கனவே கணித்து வைத்திருந்ததைத்தான் அவரும் கூறினார்…

“சரிங்கய்யா, ஏதாவது தகவல் கிடைச்சா எனக்கு சொல்லிவிடுங்க…!!” என்று விட்டு வந்தவனுக்கு வீட்டுக்குச் செல்லும் எண்ணம் இல்லை. ஒரு புதிர் அவிழ்ந்தால் அதில் இருந்து பல புதிர்கள் வருகின்றன… இதற்கு என்னதான் முடிவு? நாளை வேறு தீர்ப்பு இருக்கும் பட்சத்தில் பூபதிகளுக்கு ஆதரவாக ஒரு தடயமும் இல்லை… அதிலே பாதி சோர்ந்து விட்டான் விஜயேந்திரன். நாளை தகுந்த சாட்சியை அளிக்கவிட்டால் ஊர் முன் என்ன நடக்கும் என்பது அவனும் அறிவான்…

பல சிந்தனைகளுடன் படுத்துக் கிடந்தவனை கலைத்தது அந்த சைக்கிள் பெல் கிளிங் கிளிங்…

“ஹே ஓரம் போ, ஓரம் போ! யது நந்தினி சைக்கிள் வருது, ஓரம் போ! பிரேக் பிடிக்காத சைக்கிள் வருது…!!” எனப் பாடிக்கொண்டே போஸ்ட் உமேன், யது நந்தினி வந்து கொண்டு இருந்தால் ஈஈஈ…

சர்ர்ர்ர்ர் என விஜயனைத் தாண்டி வந்தவள், சடன் பிரேக் போட்டு நிறுத்தி, “என்ன இது நம்ம ஹீரோ மாதிரி இருக்கு…?” என சைக்கிளை பேக் அடித்து பின்னால் போக…

“என்ன ஹீரோ சார், அதுக்குள்ள நடுரோட்டுக்கு வந்துட்டீங்க? இன்னும் அதுக்கு நாள் இருக்கே…!!”

“என்னது…??” முறைத்துக் கொண்டே எழும்பி அமர்ந்தான்…

“ஹிஹி, அதுல அவ்ளோ பெரிய பேலஸ் இருக்கும் போது நடு ரோட்ல படுத்துக் கிடக்குறீங்களே, அதான் என்னனு கேட்டேன்…??” (உன் கூட சேர்ந்தா வேற எங்க போவாங்க… (என் மனசாட்சி))

“ப்ச், என்னத்த பெருசா மாளிகை மஞ்சம்னு படுத்தா நிம்மதியா தூங்க முடியுதா? தென்றலுன்னு பேர்ல நீ அனுப்பி வச்ச சூறாவளி என்னை சுழட்டி சுழட்டி அடிக்குது…!” என சலித்துக் கொள்ள…

“அட என்ன பாஸ், இதுக்கே இப்படி சலிச்சுக்குறீங்க… நீங்க யாரு, கிராமத்து கதாநாயகன், உங்க ஹைட் என்ன, உங்க வெயிட் என்ன, உங்க கெத்து என்ன… (உனக்கே தெரியாம தான அடிச்சு விட்ரு)… அந்தப் பிள்ளை நாலு போடு போட்டு உண்மையை வாங்குவதை விட்டுட்டு இப்படி இருக்கீங்க… (இது அந்தப் பிள்ளைக்கு தெரியாம இருக்கணும்… அவ்வ்வ்..)” என நந்தினி

“அந்த ஈர வெங்காயத்தை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். உன்னால எனக்கு ஒரு காரியம் செய்ய முடியுமா, முடியாதா அத முதல்ல சொல்லு…???” (க..க..கதாநாயகன்)

“என்ன பாஸ் செய்யணும்? என்ன செய்யணும் சொல்லுங்க, சிறப்பா செஞ்சிடலாம்…??” என யது பரபரக்க

“ஏன் உனக்கு இவ்ளோ ஆர்வம்…??” என விஜயேந்திரன் சந்தேகமாக கேட்க…

“அது ஒன்னுமில்ல தல, நீங்க எப்பவும் ஹீரோயின்க்கே சப்போர்ட் பண்றீங்க, ஹீரோவை டீல்ல விட்டுட்டு இருக்கீங்கன்னு ரசிகர்கள் குமுறல், அதான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு சின்ன ஆர்வம், அம்புட்டு தான்… ஈஈ…!!”

“எது? இதென்ன நம்ப சொல்றே??” என விஜயேந்திரன்…

“சரி சரி, கூட்டத்தில் கட்டு சோத்த அவுக்காத, தல! உனக்கு இன்னா என்ன ஹெல்ப் வேணும்னு சொல்லு, முதல்ல அதைச் செய்வோம்…??”

“சொல்றேன்…?” என்றபடி விஜயேந்திரன் தன் திட்டத்தை நந்தினியிடம் விளக்கினான்…

“அவ்வளவுதானே? விடு, செஞ்சு போடுறேன்…!!” என்றவள் நேராகச் சென்றது பூபதி மாளிகைக்குத்தான்…

“அம்மா, இங்க தென்றலுக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்து இருக்கு, வாங்கிக்கோங்க…!!” என்று யது அழைக்க, அங்கு இருப்பவர்கள் அனைவரும் அவளைக் கொலைவெறியுடன் முறைத்தபடி நின்று கொண்டிருந்தனர்…

“யோவ்! என்ன லுக் இது? இந்த முறைப்பு எல்லாம் என்கிட்ட வேகாது! உங்க எல்லாருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சம்பளத்தைக் கம்மி பண்ணிடுவேன், பார்த்துக்கோங்க…!!” என மிரட்ட, அதில் மிரண்ட அனைவரும் தத்தம் வேலைகளைச் செய்தனர்… (செய்யவைத்தால் கடங்காரி)

உள்ளே தகவல் சொல்லப்பட்டு, தென்றல் வெளியே வந்து என்னவென்று கேட்க…

“மேடம், தென்றல்ங்கிறவங்களுக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்து இருக்கு, ஒரு கையெழுத்து போட்டு வாங்கிக்கோங்க…!!” என யது

“எனக்கா…?? ரெஜிஸ்டர் போஸ்ட்டா? அதுவும் இங்கையா? என்னம்மா சொல்றீங்க நீங்க…??!” என குழப்பத்துடன் வாங்காமல் நிற்க…

“அட ஆமா! இங்க தென்றல் நீங்க தான? உங்க பெயருக்கு தான் வந்து இருக்கு, கையெழுத்து போட்டு வாங்கிக்கோங்க…!!” என நந்தினி அதிலே குறியாக நிற்க…

“ஏங்க எப்படிங்க… எனக்கு இங்க ரெஜிஸ்டர் போஸ்ட் யாரு அனுப்பி இருக்கா அதை சொல்லுங்க முதல்ல…!!” என தென்றல் உஷாராக இருக்க…

“ப்ச்! என்னமா, நீ போஸ்ட் வந்தா டெலிவரி பண்றது மட்டும் தான் எங்க வேலை. அது எங்க இருந்து வந்தது, எப்படி வந்தது என்று தெரிஞ்சுக்கிறது எல்லாம் என் வேலை இல்லை… சீக்கிரம் கையெழுத்து போட்டு போஸ்ட்டை வாங்குங்க. மா, எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. உங்க ஒரு போஸ்ட்க்கே இவ்ளோ நேரம் ஆனா எப்படி மத்த போஸ்ட் எல்லாம் எப்போ டெலிவரி பண்றது… சீக்கிரம் சீக்கிரம் இதுல கையெழுத்து போடுங்க, நான் கிளம்பனும்…!!” என வம்படியாக தென்றல் கையில் போஸ்ட்டை திணித்து விட்டு, அவளை யோசிக்க விடாமல் நெருக்கடி கொடுத்து அவளின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு, யது நந்தினி சிட்டாகப் பறந்து சென்று விட்டாள்…

கையில் திணித்த போஸ்ட்டை வெறித்து பார்த்து நின்றாள் தென்றல்…

“ஷப்பா ஒரு கையெழுத்து வாங்கறதுக்குள்ள என்ன பாடு பாட வேண்டி இருக்கு…?” என விஜயேந்திரன் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தபோது யது…

“போன வேலை என்னாச்சு…?” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தபடி கேட்டான்…

“சக்ஸஸ்…!! இந்தா புடி தல…!” என தென்றலிடம் கையெழுத்து வாங்கிய காகிதத்தை விஜயனிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்ட அவனது கண்கள் நொடியில் எவ்வளவு மகிழ்ச்சியைக் காட்டியது…

“மவளே சிக்கிட்டாடி! என் தவிட்டு குருவி நாளைக்கு இருக்குடி உனக்கு…!!”

“நாளைக்கு பஞ்சாயத்து சும்மா கலைக்கட்ட போகுது மறக்காம வந்துடு…!” என சிரித்தபடி மீசையை நீவிக்கொண்டான் விஜயேந்திரன்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top