மதுரம் சிந்தும் காதலே-31

அப்படி அவள் அதிர்ந்து நிற்கக் காரணம்…???

அவள் மொத்த குடும்பமும்… அவளுக்காக…. வீரபாண்டியன்… சுந்தர பாண்டியன்… மாறன்…. சகுந்தலா… வேதவள்ளி… கவிதா…. அவர்களோடு சிவகாமியும் இருந்தார்…… ஒரு நொடி உறைந்து போனவள்….

மீட்டுக்கொண்டு ஓடிப் போய் அவர்களைக் கட்டிப்பிடித்துக் கதறினாள்….

அவர்களின் அன்பைப் பரிமாறிக்கொண்டே வந்தவள் யாரையோ தேட…. கிடைக்காமல் போக அத்தனை பேரையும்… விட்டு விலகிச் சென்று பார்க்க… அங்கே பௌண்டைன் ஓரம் அமர்ந்து இருந்த…. அதிவீர ராம பாண்டியன் இடம் சென்றாள்….

வார்த்தைகள் அற்ற மௌனத்தில்… இடைவெளி விட்டு அமர்ந்து இருந்தனர்….

சிறிது நேரத்தில் இருவரும் ஒன்றாக நகர… அவரைப் பார்த்து புன்னகைக்க…. அவரும் அவளைப் பார்க்க…. அதில் என்ன கண்டாரோ, அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்ள…. அவர் கை தானாக…. அவள் தலையைத் தடவிக்கொடுக்க…..

அதுவரை என்ன ஆகுமோ எனப் பதறிக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்திற்கு, அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒருசேரத் தந்து திகைக்க வைத்தனர்…. பேத்தியும் தாத்தாவும்…..

“அவள் யாரையும் மதிக்காமல் விட்டுப் போய்விடுவேன் என்று சொன்னீர்களே…. பார்த்துக்கொள்ளுங்கள்…. இவள் தான் என் மதுரா…. அவளுக்கு யாரையும் முழுமையாக ஒதுக்கவோ…. வெறுக்கவோ தெரியாது…. பனித்துளியை விடப் பரிசுத்தமான அன்பை மட்டும்தான் தரத் தெரியும்…!!” எனச் சொன்னபடி வந்த தனஞ்சயனை ஆமோதித்தனர்…

அதன் பின் தாத்தாவும் பேத்தியும் சேர்ந்து அடித்த லூட்டியில்…. சிவகாமி பாட்டியே காண்டாகி…. அவரின் வீர்க்கு டிவோர்ஸ் கொடுக்கும் வரை போய் விட்டார்….

அவரை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வருவதற்குள்…. போதும் போதும் என்றாகி விட்டது…..


லாஸ் ஏஞ்சல்ஸ்….

காலையில் எழுந்த நிரஞ்சன் தலையில் பெரிய இடியை தூக்கி போட்டு விட்டு அசால்ட்டாக சுத்தியது ஹரிச்சந்திரன் குடும்பம்….. அதில் கொலை வெறியில் திறிகிறான்…..

அதாக பட்டது என்னவென்றால்…..

“ஹரிச்சந்திரன் பெரிய பொண்ணு யாழினியைப் பெண் பார்க்க வராங்க…. அதுக்கான ஏற்பாட்டில் பெண் வீட்டு சார்பாக நிரஞ்சனே பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ள….!!”

அவரிடம் பேச முடியாமல் தவித்து போனவன்…. யாழினியைத் தேடிப் போக அவளோ…

பட்டுப் புடவை சரசரக்க…. தங்க நகை மினுமினுக்கத் தயாராகி நின்றதை பார்த்து மேலும் வெறி பிடித்தவன்…..

அவளை இழுத்துக்கொண்டு கட்டிலில் விழுந்தவன்…. அவளிடம் அத்துமீற ஆரம்பிக்க….

“ஹே.. நிரு…. ஹா…ம்ம்ம்…என்ன பண்றீங்க…. ட்ரெஸ் ஐயோ அம்மா…. விடுங்க யாராவது பார்த்துடப் போறாங்க. ஆவ்.…!!” என பதறி அவனைத் தள்ள… முடிந்தால் தானே…. ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை…..

“ஏண்டி என்ன பார்த்த இளிச்சவாய் மாதிரி இருக்கா….. கஷ்டப்பட்டு உன்னை உஷார் பண்ணி லவ் பண்ணா…. உன்னை வேற ஒரு * கட்டி வைப்பானா உங்க அப்பன்…. நீ அவர் பொண்ணா இருந்தா தானே… இப்போவே கெடுத்து என் பிள்ளைக்கு அம்மா ஆகிட்டா”

…முடியாது இல்ல..!!’ என மூர்க்கத்தனமாக…. அவளிடம் நடந்து கொள்ள…

“ஐயோ…. நிரு…. நான் உங்களை மட்டும் தான் லவ் பண்றேன்…. நீங்க நினைக்குற…. மாதிரி ஒன்னும் ஆகாம நான் பார்த்துக்கிறேன், என்னை நம்புங்களேன் ப்ளீஸ்…!!” என கொஞ்சி கெஞ்சி அவன் மனதை மாற்றி அனுப்ப நினைக்க….

அவளை விட்டு விலகியவன் யாழினியை இழுத்து அணைத்து, அவள் இதழில் தன் உதட்டைப் பதித்து…. எழுந்தவன்….” இங்க பாருடி…. யார் எப்படி தெரியாது, ஆனா என் காதல் உண்மையானது…. நீ எனக்கு கிடைக்கலனா எங்கிருந்தாலும் வாழ்க… சொல்லிட்டு போக மாட்டேன்…!!”

“கல்யாண மேடை ஏறினாலும் வந்து தூக்கிட்டு போய் குடும்பம் நடத்துவேன்…!!” என மிரட்டி விட்டு போக…. அவள் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தம் அவன் காதல் அளவைச் சொல்ல… அதை நாவால் வருடிக்கொண்டாள்….

“யாருக்கு வந்த விருந்தோ..?” என காண்டில் அமர்ந்து இருந்த நிரஞ்சன்… “தம்பி வாங்க, மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்துட்டாங்க…. வாங்க…!!” என வரவேற்க கூப்பிட…. கடுப்பில் அவரை பச்சை பச்சையாகத் திட்டி கொண்டே போனவன்….

வாசலில் நின்ற கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து போனான்…

அதே அதே….

அங்கு…. அதிவீர ராம பாண்டியன் – சிவகாமி, பாண்டியன் புரோதேரஸ் மற்றும் மனைவியார்…. மாறன் – கவிதா கூடவே தனஞ்ஜெயனும் மதுராவும் நிற்க….

அவளைப் பார்த்ததும் புரிந்து கொண்டான்… இது யார் வேலை என்று….

“அடியே குட்டச்சி உன்னை…!” என அவளைத் துரத்த….

“ஐயோ ஜெய் மாமா காப்பாத்து… தாத்தா காப்பாத்து….!!” என அவர்களைச் சுற்றி ஓடியவளைப் பின் தொடர்ந்தான் நிரஞ்சன்…. மதுரா தடுக்கி விழப் போக….

“ஏய்.. மதுரா… மதுமா… மது குட்டி பார்த்து…!!’என மொத்த குடும்பமும் கத்த…. நிரஞ்சன் அவள் விழாமல் பிடித்துக் கொள்ள… நிம்மதி அடைந்தனர்…..

அதன் பின் நிரஞ்சனுக்கும் மதுராவிற்கும் பல அறிவுரைகள் வழங்கப்பட்டன… அதை எல்லாம் தலையை ஆட்டி கேட்டுக்கொண்ட இருவரையும் சந்தேகமாகத் தனஞ்ஜெயன் பார்க்க…. அவன் நினைத்தது போலவே இரண்டும் காதில் பஞ்சை வைத்து டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தன…. கேடி ஜோடிகள்!

பின் இரு குடும்பமும் தட்டை மாற்றி யாழினி – நிரஞ்சன் திருமணம் நிச்சயம் செய்து கொண்டனர்…..

விருந்து முடிந்து அனைவரும்… மகிழ்ச்சியாகப் பேசித்துக் கொண்டு இருக்க… இதற்கு காரணமான மனைவியை தேட…. அவளோ… அம்மு யாழினி, நிரஞ்சன் மத்தியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருக்க…

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தான்….

யாரடி நீ மோகினி…???

கிள்ளை மொழிக்கு

சொந்தக்காரியாக…

கோடி குறும்புகளின்

உரிமைக்காரியாக..

வம்பு சண்டைக்கு அலையும்

கோட்டிகாரியாக…

தூய அன்பை மட்டுமே

கொடுக்கத் தெரிந்த

பேரன்புக்காரியாக….

காதல் மொழி கட்டிலில்

பேசுகையில்…

பனியாக உருகும்…

காதல்காரியாக……

மதுரமே நீ என் காதலடி….!!!

தன்னையே காதலிப்பதாகக் கருதிய கணவனை, யாரும் அறியாமல் கண்ணாடியின் வழியே பறக்கும் முத்தம் கொடுக்க…

அதை எதிர் பாரதவன்… முதலில் திடுக்கிட்டு… பின் உதடு கடித்து வெட்கப்படுவதைப் பார்க்க கோடி அழகு…

மதுரா மற்றும் தனஞ்ஜெயன் காதலில் மதுரம்… கசிந்து உருகியது…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top