சில வருடங்கள் கழித்து….
தேனி… உத்தம பாளையம்…
நேரம் நள்ளிரவைத் தாண்டியது…..
பதுங்கிப் பதுங்கி சில உருவங்கள் இருட்டான சமையல் அறைக்குள் நுழைந்து, சத்தம் போடாமல் பிரிட்ஜைத் திறந்து….
அதில் இருக்கும் ஐஸ்கிரீமைத் திருட்டுத்தனமாக…. சாப்பிட்டனர்….
மதுரா… அவள் மகன் ரிஷி மற்றும் நிரஞ்சன் – யாழினி மகள்கள்….. அனன்யா… அனியா…
கிட்சன் விளக்கை போட்டுவிட்டு, பின்னால் இவர்களை முறைத்துக் கொண்டு இருக்கும் இரு ஜீவன்களைக் கவனிக்காமல்….. திருட்டு ஐஸ்கிரீமைச் சப்புக் கொட்டித் தின்று கொண்டு இருக்க…..
ஹ்க்கும்…. என ஜெய் தன் தொண்டையைத் கணைக்க…. அதில் திரும்பிப் பார்த்த…. குழந்தைகள்…. “ஐயோ பெரியப்பா…. நாங்க இல்லை பெரியம்மா…!!” என ஓடிவிட…
சட்டையில் ஐஸ்கிரீம் ஒழுக வந்த மகனை முறைத்தனர்…. தனஞ்சயனும் மகள்…. ஆராத்யாவும்…
“ஹா… ஹையோ ஹிட்லர் டாடி கூட்டிட்டு வந்துட்டா… குட்டி பிசாசு….!!” என முனங்க,
“நான் சொன்னல டாடி…. பாருங்க அண்ணாவும் அம்மாவும் எப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுறாங்கன்னு….!!” என போட்டுக்கொடுக்கும் போதே தெரிய வேண்டாம்… அவள் யார் ஜெராக்ஸ் என்று…
“நான் இல்லை டாடி…” என பாவமாக முகத்தை வைக்க….
“என் கிட்டயேவா உங்க அம்மாவையே பார்த்தவன் டா…. ஆரா… அண்ணாவை உன் ரூம்க்கு கூட்டிட்டு போ, நாளைல இருந்து ஒரு வாரத்துக்கு அவனுக்கு ஐஸ்கிரீம் கிடையாது….!!” என அனுப்பி வைத்துவிட்டு….
இன்னும் மும்முரமாக ஐஸ்கிரீம் தின்று கொண்டு இருக்கும் மனைவியின் காதை திருக…
“ஆஆஆஆ…. மாமா…ஆஆ. வலிக்குது….!!” என கத்தினாலும் அவனைப் பிடித்துக்கொண்டு தான் எழுந்தாள்… நிறைமாதக் கர்ப்பமான மனைவியைக் கையைத் தாங்கி… அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தான்….
அவர்களுக்குள் நடக்கும் “யார் காதல் பெரிது?” என்னும் போட்டியில்… ஒரு ஆண் ஒரு பெண் என இருவரும் சம புள்ளியில் இருக்க… இதோ தன் காதல் தான் பெரிது எனக் காட்ட… அடுத்த இரட்டைக்கு கருவைச் சுமக்கிறாள்…..
“என்னடி இது…. சிறந்த பெண் தொழில் அதிபர் அவார்டு வாங்கியவள்…. பாக்குற வேலையா இது ஹ்ம்….!!” எனக்கடிந்து கொண்டே… அவள் உதட்டில்… வழிந்த ஐஸ்கிரீமைத் துடைக்கப் போக… அவன் கையைப் பிடித்தவள்… நாவினை வெளியே நீட்டித் காட்ட…..
கசக்க வைக்கும் அவள் மதுரத்திற்கு…. குனிந்தவன்…. சில மணி நேரத்திற்குப் பின் விலகும் போது இருவர் நாவிலும் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் சுவையை உணர்த்தியது….. ஆனால் இருவர் உணர்வுகளும்… அதற்கு மேலும் கேட்க…. இருக்கும் இடம்…. சரியாக வராத காரணத்தால்…
அவளைக் கைத்தாங்கி அறைக்குள் அழைத்து வந்தவன்…… அவளோடு உறவாடி உயிர் வண்டாக அவள் மதுரத்தைக் குடித்தவன், விலகிப் படுக்க வைத்து அணைத்துக்கொண்டவன்…. அவள் மேடேறிய வயிற்றைத் தடவிக்கொடுத்துக் கொண்டே….
பாப்பு….
ம்ம்ம்ம்…..
“போதும்டி… இதோட நமக்கு பிள்ளைங்க…!!” ஏற்கனவே இரண்டு பிள்ளைகளைப் பெற்று எடுக்க…. அவள் பட்ட துயரத்தை அருகில் இருந்து பார்த்தவன்…. அதனால் அடுத்த குழந்தை என மதுரா பேசும்போது…. “வேணாம்” என உறுதியாக… இருக்க…. விட்டாளா கள்ளி….”நோ, எங்க காதல் ஜெயிக்கப் போகுதுன்னு பயந்துட்டேன் மாமா….!!” விட மாட்டேன் என்று கட்டிப் போட்டுத் தழுவிவிட்டாள்…. (புருஷனுக்கும் பாதுகாப்பு இல்லை)
“அது இவங்க பிறந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்…. ஏன் இப்போவே தோத்து போயிடுவோம்னு பயமா மாமா…?” என அவள் கேட்க….
“சரிடி, என் காதலை விட உன் காதல் தான் பெரிது என்று ஒத்துக்கிறேன்…. பிள்ளை பெத்துற இந்த வேலைய இதோட விட்டுடுறியா…?” என அவள் நலனுக்காக அவளிடம் இறங்கிப் போக….
தனக்காக கெஞ்சும் கணவனைப் பார்க்கப் பார்க்க…. அவன் பால் ஆசை கூடியதே ஒழிய குறையவில்லை….
“சரி சரி, பொழச்சுப் போங்க… இவங்க ரெண்டு பேரும் பையனா பிறந்துட்டா விட்டுடுறேன்….!!” என போலி மிரட்டலாகச் சொல்ல….
“அப்போ பொண்ணு பொறந்தா…!!” என பயந்து கேட்டவனை இழுத்துப்போட்டுக்கொண்டு…..
அப்போ பழையபடி இளநில சரக்க மிக்ஸ் பண்ணி மோட்டார் ரூம்ல… மேட்டர் முடிச்சுட வேண்டியது தான் என கண்ணாடிக்க….
“அடிப்பாவி!” என அலறிவிட்டான்….
தனஞ்ஜெயன், மதுரா இருவரும் சேர்ந்தே ஜே.எம். தொழில் அமோகமாக நடக்க…. வளர்ந்து வரும் பில்லியனர் என அவர்களைப் பற்றி நியூயார்க் நாளிதழியில் வந்தது…. அதன் பின் அங்கு இருந்த அலுவலகத்தை ஜெடன் பொறுப்பில் கொடுத்துவிட்டு இந்தியாவிற்கு வந்துவிட, மதுரா பெயரில் தொழிலைத் தொடங்கி அவளுக்குச் சிறந்த பெண் தொழில் அதிபர் விருது கொடுக்க… “தன் கணவர் இல்லையென்றால் இது சாத்தியமில்லை…!!” என மேடையில் நெகிழ்ச்சி பொங்கச் சொன்ன பேட்டி யூடியூப்பில் மில்லியன் வியூஸ் வாங்கியது….
நிரஞ்சன் படிப்பை முடித்து யாழினியைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு மகள்களுடன் நிம்மதியாக இருக்கிறான்.
மதுரா எப்படி இருக்கிறாள்? காதல் போட்டியைப் பற்றி யாழினிக்குச் சொல்லி கொடுத்துவிட்டு விடுவாள்.
அவள் நிரஞ்சனை விடாமல் பிச்சுக் பிச்சிரண்டு… இப்பொழுது மூன்றாவது டெலிவரிக்காக அம்மாவிடம் சென்று இருக்கிறாள். அவனோடு நிரஞ்சனும் சென்று இருக்கிறான்.
அத்தோடு விட்டாளா இல்லையே! காதல் போட்டி பற்றி பாண்டியன் சகோதரர்களின் மனைவிகளிடமும் மற்றும் கவியிடமும் சொல்லி கொளுத்திப் போட்டாள்.
விளைவு, அனைவரும் தங்கள் கணவர்களை அதட்டி மிரட்டி உருட்டி, தனித்தனியாகத் தங்கள் மனைவிகளோடு ஹனிமூனுக்குச் சென்று இருக்கின்றனர். ஏதேதோ… ஹிஹி! இதுக்கே வா… இந்த கதையைக் கேட்டுவிட்டு ஷாக் ஆகுங்கள்.
இவர்களுக்கு எல்லாம் முன்னாடியே சிவகாமி தான் ஹனிமூனுக்கு வர மறுத்த, அவர் டார்லிங்கைக் கடத்திச் சென்று இருக்கிறார் என்பது சிறப்புத் தகவல். பாவம் தாத்தா! உயிரோடு வருவார் என்று நினைக்கிறீர்களா??? ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
இப்படியாக அவரவர் காதலில் யாருடையது பெரியது என நிரூபிக்க அங்கே போட்டி நடக்க, ஆண்கள் பாடு பட்ட மோசமான நிலைக்குச் சென்றாலும், அவர்களின் காதலே அவர்களை வழிநடத்திச் செல்லும். நிறைவாக, இனிப்பான மதுரமான காதலோடு…
நன்றி!!
வணக்கம்!!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!



