மதுரம் சிந்தும் காதலே-30

“போடி லூசு…. தாத்தா எங்க உன்னை கல்யாணம் பண்ண சொன்னார்…. நிரஞ்சனுக்கு தான் உன்னை முடிக்குறதா இருந்தது…. நான் தான் குறுக்க புகுந்து…. உங்க அக்கா லவ் பண்ற கதிரவன் நம்ம குடும்பத்துக்கு ஆகாதவன் இருந்தாலும் நல்லவங்கிறதால அவனை வச்சு அவங்க வீட்டு பெரியவங்க கிட்ட சமாதானம் பேசி…. அவனுக்கே கட்டி வைக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்… என்ன பாக்குற அப்போ தான உன்னை உஷார் பண்ண முடியும்.. அதுக்கு தான்…!!” என அவளை இழுத்து கட்டி கொள்ள….

அவனை புரியாமல் பார்க்க…

அவள் நெற்றியில் முட்டி… “தாத்தாவுக்கு உன்னை வீட்டை விட்டு அனுப்பக் கூடாது… அவ்வளவுதான், அதுக்கு நானா இருந்தா என்ன… நிரஞ்சனா இருந்தா என்ன….?”

“ஏன் மாமா….??”

“ஏன்னா.. இப்படி புருஷனை முட்டிப் போட வைக்கும் இந்த ராட்சசியத்தான் எனக்குப் பிடிக்குது… இப்பவும் எப்பவும்…!!”

“என்ன பிடிக்குமா மாமா.. அப்போ ஏன் மாமா… எனக்காக …!!” அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் திக்கின…

அவளை ஆறுதலாகத் தன் மேல் போட்டுக்கொண்டவன்….

“இங்க பாரு குட்டி… அப்போ பண்ணது தப்புதான்… இல்லைனு சொல்லல… தப்பா புரிஞ்சிகிட்டேன்… ஆனா உண்மை தெரிய வரும்போது எல்லாமே முடிஞ்சு இருந்தது…. அப்போ நீயும் ஒன்னும் பெருசா கஷ்டப்பட்ட மாதிரி காட்டிக்கல… சரின்னு விட்டுட்டேன்… ஆனா அன்னைக்கு எல்லார் முன்னாடியும்…. இருட்டைப் பார்த்து பயந்தேன், அம்மா மடி தேடுனேன்… சொன்ன போது எனக்கு இங்க உயிர் போற மாதிரி வலிச்சுது…!!” என இதயத்தைக் காட்ட…

அங்கேயே கடித்து வைத்தாள்… அவன் ராட்சசி… ஆனால் அது அவனுக்கு வலிக்கவில்லை… மாறாக… அவள் கொண்ட காயம் இதன் மூலமாக மருந்தைத் தேடிக்கொள்ளட்டும் என விட்டுக்கொடுத்தான்….

அவன் வெண்கலப் பதக்கத்தைச் சுற்றி… அவள் பல் வரிசை….

“என்ன எப்போ இருந்து பிடிக்கும் மாமா….??” எனச் சந்தேகம் கேட்டாள், அவளுக்கு ஒரு யூகம் இருந்தது…….

அவள் கூந்தலை வருடிக்கொண்டே…

“இந்த ராட்சசியைப் பிறந்தது முதலே பிடிக்கும்…. உன்னை என்னை தவிர யாராவது தூக்கி வச்சிருந்தாலே… சண்டை போடுவேன்… நிரஞ்சனையிடம் விட மாட்டேன்…. அப்போ தான் முதல் முறையா ஹாஸ்டல் போனப்போ என் கிட்ட இருந்து என்னமோ பிரிஞ்ச மாதிரி இருந்துச்சு…. அப்போ அதுக்கு பேர் லவ் தெரியாது…. ஆனா போர்டு எக்ஸாம் அப்போ வந்தப்ப அத்தை நீ வயசுக்கு வரலைன்னு கஷ்டப்பட்டாங்க…. இப்படியே போனா யார் இவளைக் கட்டிப்பானு அழுதப்போ “ஏன் நான் இல்லையே” என என் மனசு கேட்டதும் தான் புரிஞ்சுகிட்டேன்… நீ எனக்கு என்னனு…!!” என அவளைத் தன்னோடு நெருக்கிக் கொள்ள… பிரமித்துப் போனாள்… அவன் காதலை நினைத்து…

“அன்னைக்கு வீட்ல வச்சு சொன்னியே உனக்காக யாருமே இல்லைனு, அன்னைக்கு அங்கேயே கத்தி சொல்லணும் போல இருந்துச்சு…. நான் இருக்கேன் பொண்டாட்டியே…. அன்னைக்கு நீ பேசலனாலும் உனக்காக நான் பேசி இருப்பேன்… ஆனா தனியா… அத்தனை பேர் முன்னாடி என்னால தாத்தாவை விட்டுக்கொடுக்க முடியாது…. அவர் பாவம்டி, தெரியாம பண்ண தப்புக்கு நீ மன்னிக்கலனு மனுஷன் மனசால கிடந்து சாகுறாரு….!!” அவள் உடல் நடுங்குவதை உணர்ந்து வருடி கொடுத்து கொண்டே… தொடர்ந்தான்…

“அதான் விடாம வந்து உன் காலேஜ் வாசல்ல நிக்கும் போது நானும் கூடவே இருப்பேன்….!!”

“ஏன் என்ன அப்படிப் பார்க்கிறாய்? ஆமாம், தாத்தா வரும் போதும் கூட நானும் வருவேன்… தாத்தா இல்லாத போதும் நீ காலேஜ் முடிக்கும் வரை தினமும் வந்து என் பொண்டாட்டியைத் சைட் அடிச்சிட்டு தான் போவேன்… என்ன நம்ப முடியலையா? நீ ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஒரு பையன், அப்புறம் பைனல் இயர் படிக்கும் போது ஒரு பையன்… ப்ரபோஸ் பண்ணிட்டு மறுநாளே வந்து ‘சாரி தங்கச்சி’ன்னு சொல்லிட்டு போனது ஞாபகம் இருக்கா?” என கேட்க, விழி விரித்து பார்த்தாள்.

அதில் விரும்பியே தொலைந்து போக எண்ணியவன் முத்தமிட்டுத் தொடர்ந்தான்.

“நீயும் படிப்பு முடிச்சிட்டு வருவ… அப்போ உன்கிட்ட என் லவ் சொல்லிக்கலாம்னு இருந்தேன்… ஆனா நீதான் வரவே இல்லை… அதுக்குள்ள ஏன், ட்ரீம் ஆன அமெரிக்கால பிஸ்னஸ் தொடங்க நேரம் கூடி வந்துடுச்சு… சரி, நீயும் உன்னோட கோர்சஸ் முடிச்சிட்டு வர்றதுக்குள்ள… இங்க எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வந்து உன்னையும் கூடவே கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன்… ஆனா அதுக்குள்ள என் பார்ட்னர் அவசரக் குடுக்கையாக வேலை பார்த்து வச்சிட்டா!”

“என்ன புரியலையா…. ஜெ. ஃபார் ஜெய் எம்… ஃபார் மதுரா….அதுதான் ஜெ. எம்…!!” என்றது தான் தாமதம் குரங்கு குட்டியாகத் தாவி அணைத்துச் சிச்சுச் என முத்தம் வைத்தாள்….

“ஐ லவ் யூ ட்ராகுலா… ஐ லவ் யூடா மாமா….!!” என அவன் காதில் கத்தி தன் காதலை அவனுக்குப் பறைசாற்றினாள்…..

“அப்புறம் பொய் சொன்னா பொம்பள பிள்ளை பிறக்கும் சொன்னியே கேட்டுக்கோ…. பொய் சொன்னா… இல்லை… பொண்டாட்டிய விட புருஷன் அதிகமா காதலிச்சா தான் பொம்பள பிள்ளை பிறக்குமாம்…!!!! அதே மாதிரி புருஷன விட அதிகமா பொண்டாட்டி காதலிச்சா தான் ஆம்பள புள்ள பிறக்கும் தெரிஞ்சிக்கோ….!!” என்றதும்….

“அப்போ நமக்கு என்ன பிள்ளை மாமா பிறக்கும்…???” என கேட்டவளை இழுத்துக்கொண்டு…..

“அதையும் தான் பார்த்திடலாம் யார் காதல் பெருசான்னு…!!”

“அப்போ சரி நான் ரெடிடா மாமா” என போருக்குத் தயார் ஆவது போல் தயாரான மனைவிடம் விரும்பிய கட்டில் போரில் தோற்றான்… அங்கு தானே தோல்வியும் வெற்றியாகும்….!!

காலையில் எழுந்து வழக்கம் போல் தயாரான மதுரா, தலை சுற்றிக் கொண்டு போய் நிற்க… அப்போதுதான் குளியல் அறையில் இருந்து வெளியே வந்த தனஞ்ஜெயன், அவளைப் பார்த்துவிட்டுத் தாங்கிப் பிடித்துக் கட்டிலில் படுக்க வைக்க…

“ஏண்டா மாமா, இப்போலாம் ரொம்ப தலை சுத்துது… ஏதாவது பெரிய வியாதியா இருக்குமோ…?” என அவன் மடியில் படுத்துக் கொண்டு கேட்க…

“சே எரும… அப்படிலாம் இல்லை… ஒருவேளை மாசமா இருந்தா கூட அப்படி ஆகும்…!” என யோசனையாகச் சொன்னவன், அவளிடம் அதற்கான பரிசோதனை கிட்டை வாங்கித் தந்து பார்க்கச் சொல்ல…

அதில் வந்த இரண்டு சிவப்பு கோடுகள், உறுதிப்படுத்தி இருவரையும் ஆனந்தத்தில் திக்குமுக்காடா வைக்க…

“நீ தான மாமா… நின்னு போச்சு சொன்ன போது… அவ்வளவு சீக்கிரம் ஆக வாய்ப்பில்லை சொன்னது…!” என அவனைச் செல்லமாக அடிக்க…

“அப்படி இல்லடா குட்டி, உனக்கு ரெகுலரா இல்லையே, ரெகுலர் தானே… அதான் வீணாக எதிர்பார்த்து நீ ஏமாந்திடக் கூடாதுன்னு சொன்னேன்டா…!” என்ற கணவனைத் தழுவிக்கொண்டு, பாட்டி சொன்னது சரிதான், “என்னைப்பற்றி என்னை விட இவனுக்குத் தெரிந்திருக்கிறது… நான் கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கிறான்…!” அவன் காதலை நினைத்து பெருமிதம் கொண்டாள்…

அன்று அவளை வீட்டில் விடாமல் வெளியே அழைத்துச் சென்றவன், நியூயார்க்கைச் சுற்றி காண்பித்துக்கொண்டிருக்கும் போதே திடீரென காணாமல் போய்விட்டான். அவனைத் தேடித் தேடித் களைத்தவள், பவுண்டன் அருகில் சென்று பார்க்க… பெரும் ஆனந்த அதிர்ச்சி!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top