மதுரம் சிந்தும் காதலே-29

ஜெர்மன் கிளையண்டிற்கு மதுராவின் பிரசன்டேஷன் பிடித்துப் போக, டீலை ஜே.எம் நிறுவனத்திற்கே தந்துவிட்டுப் போனதும்….

ஜெய் முதல் வேலையாக… லிசா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து… அவளைப் பற்றி போலீசில் புகார் கொடுக்கப் பட்டதால் அவளை வேலையை விட்டுத் தூக்கிவிட்டான்….

அலுவலகம் முழுவதும் மதுரா ஜெயின் மனைவி எனத் தெரிந்ததும்… சலசலப்புக்கு உள்ளானது… ஆனால் இருவரும் அதை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

பின் நிதானமாக வந்தவன் அமர்ந்து யது நந்தினியிடம் பார்ட்னர்ஷிப் பற்றிப் பேச, இருவருக்கும் பிடித்துவிட உடன்படிக்கை செய்து கொண்டனர்…..

அதன் தொடர்பான வேலைகளை ஜெய் பார்க்கப் போய்விட….

தனியாக அமர்ந்து இருந்த யது நந்தினியிடம் மதுரா நட்பாகப் பேச ஆரம்பிக்க…

பேச்சு வழக்கில் மதுராவிடம் நான் கதை எழுதுவதாகச் சொல்ல…

“என்ன கதை…” என ஆர்வமாகத் கேட்டவளிடம்….

“மதுரம் சிந்தும் காதலே…” கதையைப் பற்றிச் சொல்லி… “அதுல பாரு மது, ஹீரோ டிவோர்ஸ் கேட்டு மிரட்டுனதும், அந்த ஹீரோயின் ஹீரோவை “போடா நீ என்ன பெரிய இதுவாணு” டிவோர்ஸ் கொடுத்துட்டுப் போய்டுவா…. செம சீன் ரெடி, மத்தில அவ்ளோ வரவேற்பு….!!” (பத்த வச்சிட்டியே பரட்டை…)

“ஹ்ம், என் கதையில இருக்குற ஹீரோயின் ரொம்ப… ரோஷக்காரி… சுயமரியாதை ஜாஸ்தி… இந்த மாதிரி ஆளுக்கு எல்லாம் இப்படி பண்றது தான் சரி… என்ன நான் சொல்றது சரிதான மதுரா…!” நச்சுனு நங்கூர மாதிரி ஒரு பிட் போட்டுவிட்டுப் போய்விட….

நந்தினி சொல்லிவிட்டுச் சென்றதையே யோசித்த மதுரா… வீட்டிற்கு வந்ததும் ஒரு முடிவுக்கு வந்தவளாக தனஞ்ஜெயனிடம் சென்று விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இட்டுத் கொடுக்க….

“ஆடித்தான் போனான்….!” அவன் எதிர்பார்த்தது இது இல்லையே….

என்னாச்சு, ஏதாச்சு என்று காலில் விழாத குறையாக ஜெய் மதுராவிடம் கேட்டுத் துடித்தான்… ஒரு வழியாகத் திருவாய் மலர்ந்தாள் (போட்டு கொடுத்துவிட்டாள்.. சோகத்தில் பதிவர்).

“அடியே, அந்த லூசு ரைட்டர் சொன்னது என்று டிவோர்ஸ் கொடுக்காதடி… நான் உனக்கு இருக்கும் ஒரே ஒரு புருஷன்… எனக்கும் நீ ஒருத்தி மட்டும்தான் ஆசைப்பட்ட பொண்டாட்டி…..!!” என கொஞ்சினான்…

“தள்ளிப் போ தடியா, நீதானே டிவோர்ஸ் கேட்டு மிரட்டுன… அதான் கொடுத்துட்டேன், எடுத்துட்டு கிளம்பு…!!” என உறுதியாகச் சொல்ல…

அவளைப் பற்றித்தான் அவனுக்குத் தெரியுமே…. இதுக்கு பேர்தான் சொந்தச் செலவில் சூனியம் என்பதா.. என மிரண்டுவிட்டான் ஜெய்….

“செல்லம்ல… பட்டுல…. ப்ளீஸ் டி, நீயே மாமாவை போகச் சொன்னா மாமா பாவம்ல… என் முத்துல, ப்ளீஸ் டி இரக்கம் காட்டுடி…!!” என அவள் கையைப்பிடித்துக் கெஞ்சினான்….

“அப்போ என்னமோ பேசுன, இவ்ளோதானா உன் வீரம்…!!” என கேவலமாக அவனைப் பார்த்து ஒரு லுக் விட்டாள்…

“பாப்பு, இதைவிடக் கேவலமாகக்கூடப் பாரு… திட்டுடி… ஏன் அடி, மிதி, என்ன வேணும்னா பண்ணு மாமா தாங்கிப்பேன்… ஆனா விட்டுட்டுப் போகாதடி பொண்டாட்டி… ப்ளீஸ் ப்ளீஸ்…!!” என அவன் கெஞ்சுவதைப் பார்க்க மதுராவிற்குச் சிரிப்பாக இருந்தது… அதை வெளியே காட்டிக்கொள்ள விரும்பாமல்… “உர்” என்று நின்றாள்….

அவளுக்கு தனஞ்ஜெயன் தன்னை விட்டுச் செல்வான் என்று நினைத்து எந்தப் பயமும் இல்லை…. அப்படி அவனாகப் போனாலும் இவள் விடமாட்டாள் என்பது வேறு கதை…. அவன் எப்படித் தாத்தாவுக்காகத் தங்கள் காதலைப் பணயம் வைக்கலாம் என்கிற கோபம் தான்…

இதோ வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்து செய்கிறாள்….

‘ஓ, நீ பார்த்த வேலைக்கு உன்னை கொஞ்சுவாங்கன்னு நினைப்பு வேறயா…!!”என அவனிடம் சென்றவள்….

“முட்டி போடு…’ என அதிகாரமாக கேட்க….

“என்னது…??” என தனா முழிக்க….

“அடிக்க மாட்டேன்னு நினைச்சியா தடியா… அடி அடின்னு நீதானே கேட்ட…??”

“நீ வேற உசரமா இருக்கியா… அதான் எனக்கு வாட்டமா குனிய வச்சு வெளுக்கலாம்னு… ம்ம்ம் சீக்கிரம் முட்டி போடு…!!” என அதட்ட

“பாப்பு… மாமா பாவம் டி, மாஸ் ஹீரோன்னு நினைச்சிட்டு இருப்பாங்க, இப்போ இதை படிச்சா மாமா கெத்து போயிடும் டி…!!’ என வெள்ளை கொடி பறக்க விட்டு கெஞ்ச.

மனம் இறங்கவில்லை…. “முட்டி போடுறா… தடியா..!!” என எகிறி அவன் தலையில் கொட்ட…

“அம்மாஆஆ..!” என தலையை தேய்த்துக் கொண்டே…. “அந்த ரைட்டர் மட்டும் கைல கிடைச்சா…!!’ என முணுமுணுக்க…. (படிப்பவர்களும் இதையே தான் நினைப்பார்கள்)

“என்னடா சத்தம்…??”என்றதும், அவள் முன்னால் ஆறு அடி உயரமுள்ள ஆண் மகன் முட்டி போட்டு நான்கு அடியாக நிற்க….

அவனை டெரர் லூக்கில் சுத்தி சுத்தி வந்தவள்…. அவன் பின்னால் நின்று கொண்டு, ‘எப்படி எப்படி… எனக்கே டிவோர்ஸ் தருவியா… அப்புறம்… என்ன எப்படி எல்லாம் வேலை வாங்குன… அப்புறம்… அந்த குச்சி உடம்புக்காரி லிசாவ வச்சு வெறுப்பு ஏத்துன…!!”என கேட்டு கேட்டு தலையை உலுக்க….

சுத்தும் பூமி… கதக் ஆடியது தனஞ்ஜெயனுக்கு அவள் செல்ல ராட்சசியால்…

“ஆ… அடியே… வலிக்குதுடி… விடு மது… தலை சுத்துதுடி..!!” என அவன் கத்த கத்த வெளுத்து வாங்கினாள்…

அவள் இப்போது நிறுத்தப் போவதில்லை என அறிந்தவன், பின்னால் கைவிட்டு அவள் இரண்டு காலையும் தன் தோள் மேல் இழுத்து போட்டு, கெட்டியாகப் பிடித்து கொண்டு தலைக்கு மேல் அவளைத் தூக்க…

“ஆஆஆஆ…. மாமா தடியா என்ன பண்ற… விடு, விழுந்துடப் போறேன், பயமா இருக்கு..!!”என கத்த…

“ஏன்டி, ஒரு பேச்சுக்குச் சொன்னா இப்படிப் போட்டு அடிப்பியா? ராட்சசி! இரு, உன்னை இப்படியே தூக்கிட்டுப் போய் பால்கனியில் இருந்து கீழே போடுறேன்…!” எனச் சொன்னதோடு மட்டும் இல்லாமல், அவளைத் தூக்கிச் சென்று பயமுறுத்த…

அவன் கழுத்தை காலால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள,

அவள் அழுத்தம் தாளாமல் அவள் தொடையில் கடித்து வைக்க,

“ஸ்ஸ்… ஆஆஆஆ… பிராடு மாமா, இறக்கி விடுடா…!” என அவன் கள்ளத்தனத்தைக் கண்டுகொண்டவள், விலகுவது போல் பாசாங்கு செய்ய, அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்று படுக்கையில் தள்ளி அவள் மேல் சரிந்து,

கிடைத்த இடம் எங்கும் கடித்து விளையாட, கரையில் இட்ட மீனாகக் கட்டிலில் துள்ளினாள்,

ஆடை மேலாகப் போன்லெஸ் இறைச்சியைக் கடித்து இழுத்துக்கொண்டே, மோகமாக அவள் கண்களைப் பார்த்து கேட்க,

அவன் செல்ல மனையாளோ, இரு கரம் நீட்டி அழைப்பு விடுக்க, பாய்ந்து கவ்விக்கொண்டான் கோவவை இதழ்களை. பரபரத்த கைகள் ஆடையை அவிழ்த்து எறிந்து, பற்றி எரியும் அவன் ஆண்மைக்கு பெண்மை குளத்தைக் கேட்க,

சடுதியில் சகதி காட்டில் குதி ஏறி சகடை ஆடி, லட்ச முத்தங்களால் அவளுக்கு அர்ச்சனை பண்ணி, நடு நடுவே, “ஐ லவ் யூ… பொண்டாட்டி… பாப்பு… மது…” என அவளை இன்பத்தில் குளிப்பாட்டி அவனும் முழ்கி, அவளில் தன்னை விதைத்து பின்னும் விலகாமல் அவளைக் கட்டிக்கொண்டு கிடந்தான்…

“ஐ லவ் யூ டி அழகி…. எத்தனை வருஷ கனவு தெரியுமா….??” என மொச் மொச் என முத்தம் வைக்க….

“சும்மா பொய் சொல்லாத மாமா… பொம்பளை பிள்ளை தான் பொறக்கும்…. தாத்தா சொன்னாருன்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… இல்லனா அக்காவை தான் கட்டி இருப்பேன்….!!’ என அவன் நெஞ்சில் கிடந்த முடியை பிடித்துக் கொண்டே விளையாடிக் கொண்டே கேட்க…

அவள் அறியாத பக்கங்கள் இன்னும் எவ்வளவோ அதை அறியும் ஆசையில் கேட்டாள்

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top