காலை கண் விழித்ததில் இருந்து எல்லாமே வெறுமையாக உணர்ந்த மதுரா… மெத்தனமாக அலுவலகத்திற்கு கிளம்பினாள்….
அவளையே வரவேற்பு அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவகாமிக்கு, மதுராவின் நலிந்த தோற்றத்தைக் கண்டு வருத்தம் ஏற்பட்டது….
கைப்பையைத் தூக்கக் கூட தலை பாரமாக இருக்க… பையை அப்படியே போட்டுவிட்டு சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றவளைப் பார்த்து பதறிப்போனவர்….
அவளைப் பிடித்துத் தாங்கி வந்து… லெமன் ஜூஸ் புகட்டி மடியில் படுக்க வைத்துத் தலை கோதினார்….
ஆறுதலுக்கு மடி தேடியவளுக்கு, மதகை உடைத்து ஓடி வரும் வெள்ளம் போல் அவள் மனக்குமுறல் வெளிப்படையாக வெளிப்பட்டது… அவளுக்கு இப்போது தேவை வார்த்தைகள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டவர்… நிற்காமல் தடவிக்கொடுத்தவர் கண்களிலும் கண்ணீரே….
“அவன் எப்படி பாட்டி அப்படிச் சொல்லலாம்? அப்போ அவனுக்கு நான் ஒன்னுமே இல்லையா? இங்க வலிக்குது பாட்டி… வலுவா வலிக்க அடிச்சுட்டான்..!!” என இதயத்தைத் தொட்டுக்காட்டி வினவினாள்….
மனதில் விழுந்த ரணத்தைச் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவர்… அவள் தலையைத் தேற்றிக் கொண்டே….
“அடி கூறு கெட்ட கிறுக்கி! அவன் உன்னை வேணாம் சொன்னா அவ்ளோ எளிதா அவனைப் போன்னு நீ விட்டுக்கொடுக்க மாட்டங்கிற திமிர்ல தான் அப்படிச் சொல்லி இருப்பான்….!!” என்றதும் அவரை ஒரு கேள்வியாக மதுரா பார்த்தாள்….
“உனக்குத்தான் உன்னைப் பத்தியும் தெரியல, அவனைப் பத்தியும் தெரியல.. ஆனா அவனுக்கு உன்னைப் பத்தி எல்லாமே தெரியும், அதான் எங்க அடிச்சா எங்க விழுவேன்னு தெரிஞ்சு அடிச்சிட்டுப் போறான்…!!”
அப்பவும் தெளியாமல் நெற்றி சுருக்கிப் பார்த்தவள்; முன் உச்சியில் உள்ள முடியை ஒதுக்கி முத்தமிட்டவர்….
“அவனைப் புரிஞ்சிக்க முடியுதாப் பார்… இல்லை உன்னைச் சுத்தி என்ன நடக்குதுணுப் பார் புரியும்” என்றவர்….!! அவளைத் தேற்றி அலுவலகம் அனுப்பி வைத்தார்….
குழம்பிய மனநிலையில் அலுவலகத்தில் நுழைந்தவள்…. சுத்தி சுத்திப் பொருட்களைத் தேடி அதில் ஒன்றும் கிடைக்காமல் போகவே..
ப்ச்! ஒன்னையும் காணோம். இந்தத் தாய் கிழவிக்கு நம்மளப் பார்த்தா எப்படி இருக்கு என அவரைத் திட்டிவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்…
(அடப்பக்கி… அவர் எதைச் சொன்னா, இது எதைத் தேடுதுப் பார்த்தீங்களா… இது தேறவே தேறாது…. தானாத்தான் பாவம், அதனால பிரிச்சி விட்ரா வேண்டியதுதான்…)
வேலையில் முழ்கிப் போனவளுக்குச் சோர்வாக இருக்க… கை தானாக டேபிளில் தேட… கைக்குத் தட்டுபட்ட ஹாட் காபியை எடுத்து எப்போதும் போல் குடிக்க… முழுவதும் குடித்து முடித்ததும்… உணர்வே வரத் திடுக்கிட்டுப் போனாள்… ஏன் என்றால் இதுவரை… அவளுக்கு அந்த ட்ரிங்க்கை வாங்கி வைப்பது ஜெடன் என நினைத்து இருக்க… அது அவன் இல்லை போலவே… காரணம் ஜெடன் இன்று வர இருக்கும் ஜெர்மன் கிளையன்ட்டை அழைத்து வர காலையிலேயே சென்று இருக்க… யார் வைத்து இருப்பார்கள் எனத் தேட…
ஏதோ தோன்ற ஜெயின் அறையைப் பார்க்க…. அவனோ வேலையில் மூழ்கி இருக்க… தேடி சோர்ந்து போனவள் மீண்டும் வேலையில் கவனமாகிவிட…. அவள் தலை திரும்பியதும்…. அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டான் தனஞ்ஜெயன்….
ஜெடன் வந்ததும் “இதுவரை உனக்கு தேங்க்ஸ் சொல்லல… தேங்க்ஸ் ஜெடன்…!!” எனச்說…
“எதுக்கு..” என அவன் கேட்க… இவள் காரணத்தைச் சொல்ல…
“ஹே கிரேசி…. அப்படி நான் எதுவுமே பண்ணாத போது… எதுக்கு தேங்க்ஸ் சொல்ற…. ஆர் யூ ஓகே… சரி சீக்கிரம்… கிளியன்ட்ஸ் வந்துட்டாங்க…. மீட்டிங் ரெடி ஆகு, நீதான் இன்னைக்கு ப்ரெசென்ட்டேஷன்… நல்லா பண்ணு…!!” என்று விட்டுச் சென்றுவிட…
குழப்பமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள், கைப்பேசியை எடுக்க முயல… ஆஃப் ஆன ஸ்கிரீனில்… ஜெய் தன் அறையிலிருந்து இவளைப் பார்ப்பது தெரியாமல்… விடையைக் கண்டுவிட்டாள்…
பின் எதார்த்தமாகத் திரும்புவது போல் பார்த்தாள்… ஆனால் அவன் கவனம் அங்கு இல்லை…
அங்கு கிளையண்டிற்கு கொடுக்க வேண்டிய முக்கியமான டாக்குமெண்ட்கள் காணாமல் போய்விட்டதால் பெரும் பதட்டமான சூழல் நிலவியது. ஏன் எனில், இதற்காகத்தான் பல வருடங்களாகப் பாடுபட்டு உழைத்து வந்ததாக ஜெய் ஏற்கனவே கூறி இருந்தான். அந்த டாக்குமெண்ட்களைத் தொலைத்துவிட்டு விக்கித்து நின்றாள். அதை பாதுகாக்கும் பொறுப்பு அவளுடையது தானே?
பழி மதுராவின் மீதே விழுந்தபோது, எதற்கும் கலங்காதவள், தன் கவனக்குறைவால் ஏற்பட்டதற்குத் தான் பொறுப்பு என்று வீண் பழியைச் சுமந்து குனிந்து நின்றாள்.
ஆனால் அவளே எதிர்பாராமல் அங்கு ஒரு அதிசயம் நடந்தது.
என்னவாக இருக்கும்?
வாங்கப் பார்க்கலாம்.
பல காலமாக தனஞ்ஜெயனுடன் இருந்து அவன் திறமையைக் கண்டு அவன் மேல் காதலில் விழுந்த லிசாவிற்கு… மதுராவின் வரவும்… அவளுக்கும் ஜெய்க்கும் இடையே உண்டான நெருக்கம்… நெருடல் தர… இருவரும் லிவிங் டூ கெதரில் இருப்பதாக ப்லோரா கூறியதை நம்பி… தனஞ்ஜெயனிடம் சென்று தான் அவனை விரும்புவதாகவும்… அவனோடு லிவிங் டூ கெதர்க்குத் தயார் என கூற… அதை நாசுக்காக மறுத்துவிட்டான்…
அதில் கோபம் கொண்டவள்… மதுரா இங்கிருந்து போனால் தான் ஜெய் தனக்கு கிடைப்பான் என நினைத்து… முக்கியமான அந்த டாக்குமெண்ட்டைத் திருடி எதிர் கம்பெனிடம் விற்றுவிட்டாள்… இது போனால் பரவாயில்லை, இதைவிடப் பெரிய டீலைப் பிடிக்கும் திறமை ஜெயிடம் இருக்கு என கணித்தவள்… அதைச் செய்து இருக்க…
இதோ அவள் கணித்தது போல் மதுரா மீது பழி சுமத்தி நிற்க வைத்துவிட்டாள்… இனி நாம் நினைத்தது நடக்கும் என நினைத்து இருக்க… அங்க தான் யது, நந்தினி என்ட்ரி ஆகிறார்கள்…
(ஹிஹி… இதோ வந்துடுச்சு லேடி கே. எஸ். ரவிக்குமார்ணு நீங்க கலாய்க்குறது கேக்குது… இருந்தாலும் கண்டுக்க மாட்டேன்… வாங்க… கதைக்குள்ள போவோம்…)
“ஸ்டாப் லிசா… நீ என்ன சொன்னாலும் நம்பிடுவேன்னு நினைச்சியா? எனக்கு மதுரா மேல முழு நம்பிக்கை இருக்கு… அவள் அப்படி பண்ணியிருக்க மாட்டாள்… அப்படி பண்ண வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை… எதையும் முகத்துக்கு நேரா பேசுவா, முதுகுல குத்த மாட்டாள்…!” எனச் சொல்லி கொண்டே இருக்கும் போதே…
“வெல் சைட் ஜெய் ப்ரோ…..!!” என சத்தத்தில் திரும்பிப் பார்க்கும்போது…. கையில் தொலைந்து போன டாக்குமெண்ட்டுடன்… “வொய் என்(YN)… கம்பெனி ஓனர் யது நந்தினியை எதிர் பார்க்காமல் அனைவரும் திகைத்து நிற்க…”
“முதுகுல குத்துற பழக்கம் தமிழனுக்கு கிடையவே கிடையாது….. அதான்… எனக்கு இல்லீகளா கிடைச்ச இந்த டாக்குமெண்ட்டை உங்க கிட்டயே குடுத்து… அப்படியே இதை என் கம்பெனிக்கு வித்த லிசா கிட்ட எச்சரிக்கை செஞ்சிட்டு, அப்படியே உங்க கிட்ட அப்பாலாஜி வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்…. இது எனக்கே தெரியாம நடந்த ஒரு சம்பவம்…!!” என்றவளிடம் இருந்து பைலை வாங்கியவன்… லிசாவை விரல் நீட்டி எச்சரித்து விட்டு, மதுராவை அழைத்துக்கொண்டு…. மீட்டிங்கிற்குச் சென்று விட….
அடப்பாவிங்களா! ரைட்டரா வந்தா தான் மதிக்க மாட்டறீங்க… ஒரு கம்பெனி ஒனரா வந்தா கூட மதிக்க மாட்டீங்களா… (உனக்கே ஓவரா இல்லை அதானே?)
நான் திரும்பிப் போகும் போது… “மேடம், சார் உங்கள வெயிட் பண்ண சொன்னார், மீட்டிங் முடிச்சிட்டு வரராம்…!!”
மீட்டிங் ஹாலில் நுழைந்தவன்…. “அனைவருக்கும் இன்னைக்கு ப்ரெசென்ட்டேஷன் கொடுக்கப் போறது திருமதி மதுரா ஜெய் @ தனஞ்ஜெயன்” என அறிமுகப்படுத்த… விழி விரித்து அவனைப் பார்த்தாள்…. இதுவரை யாரிடமும் தங்கள் உறவைப் பற்றி கூறியது இல்லையே…
மீட்டிங் நல்லபடியாக முடிந்து ஜெய் கம்பெனிக்கு அந்த டீல் கொடுக்கப்பட்டது… அனைவருக்கும் பரம சந்தோஷம்….
மீட்டிங் முடித்து வந்து யது நந்தினியிடம் நன்றி சொன்னவன்.. அவளது நேர்மை பிடித்திருந்ததால் இந்த ப்ராஜெக்ட்டை இருவரும் பார்ட்னர்களாகச் செய்யலாம்… வேலை பிடித்திருந்தால்… பார்ட்னர்ஷிப் தொடரலாம் என முடிவெடுத்தான்… அனைவருக்கும் இது நல்ல முடிவாகத் தோன்ற ஏற்றுக்கொண்டனர்….
ஆனால் இந்த டீல் முடிந்ததும் தனஞ்ஜெயன்… கொலைவெறியுடன்… யது நந்தினியைத் தேடிக்கொண்டிருக்கிறான்…
அப்படி என்ன வேலை பார்த்து வைத்திருக்கிறார்… அடுத்த எபிசோடில் சொல்கிறேன்… என்ன இப்போதே வேண்டுமா…??? அடேய்… பிள்ளையே ஆல்ரெடி உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறது… அவ்வ்வ்..



