தன் பூமி காதலியை மறைத்து விட்ட கோபத்தில், தன் கோபக் கதிர்களால் வெண்பனியைப் புகையாக விரட்ட…
அதில் பச்சை நிற இச்சை கூட்டும் மேனியாகக் கிடந்தவளை வஞ்சனை இல்லாது ரசித்தானோ ஆதவன்…??
உத்தமபாளையத்தில் ஊர் திருவிழா களைகட்டியது…
தனக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்தை அறியாமல்… திருவிழாவிற்குத் தயாராகினாள் மதுரா…
முதல் முறை பாவாடை தாவணி அணிந்தவள்… தன்னை கண்ணாடியில் பலமுறை பார்த்துக்கொண்டு வெளியே வர, எதிரே வந்த தனஞ்ஜெயன் அவள் அழகில் சொக்கி நிற்க…
அது மதுராவிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளைப் பறக்க வைத்து… அவள் தலையைத் தானாக நிலத்தைப் பார்க்க வைத்தது வெட்கம்… இப்பொழுதே எல்லாம் தனாவைப் பார்க்கப் பார்க்க… அவளே அறியாமல் வந்து ஒட்டிக்கொள்கிறது இந்த வெட்கம்… அவன் பார்க்காமல் போனால்… வாடிவிடுகிறாள்… ஏன் என்று தெரியவில்லை, அதற்குப் பெயர் என்னவென்றும் தெரியவில்லை அவளுக்கு…
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே கடக்கையில், பிறர் கவனத்தை ஈர்க்காமல்… அவள் காது அருகே குனிந்து… “அம்சமா இருக்குடி…!” எனச் சொல்லப் படபடத்துப் போனாள்… எதைச் சொல்கிறான் என அவன் முகத்தைப் பார்க்க… கண்கள் சொன்ன செய்தியில் சரிந்த தாவணியை… இழுத்து விட்டுக்கொண்டாள்…
காதை பிளாக்கும் வேட்டுகள்… திருவிழா தொடங்கியதன் அறிகுறி…
பெண்கள் முன்னே செல்ல… பாண்டியன் வீட்டு ஆண்கள் பின்னால் பாதுகாப்பாகச் சென்றனர்…
சந்தியாவுடன் பேசியபடி வந்த மதுரா…. அவர்கள் பின்னால் வந்த தனயாவைப் பார்த்துக்கொண்டே வருக….
தங்க ஜரிகை இட்ட வேட்டி சட்டையில் நாயகனாக வந்தவன்… என்ன என புருவம் உயர்த்தி கேட்க…. அவன் கண்டு கொண்டதில் செந்தாமரையாக வெட்கம் கொண்டவள்…. சந்தியா இழுத்த இழுப்புக்கு எல்லாம் அவளோடு சென்றாள்….
இருவரும் ஒரு கடையில் நின்று கண்ணாடி வளையல் பார்த்துக்கொண்டு இருக்க…. அங்கு வந்தனர்… கதிர் மற்றும் அவனது நண்பர்கள்….
அவர்கள் செய்த கலாட்டாவில்…. அவர்களுக்கும் தனஞ்ஜெயனுக்கும் கைதவறி மோதல் ஏற்பட்டு…. அதில் இருவர் மண்டை உடைந்து பெரும் பஞ்சாயத்து ஆகிவிட….
அடுத்த சீன் என்னவென்றால் எல்லாம் பஞ்சாயத்து தான்….
கதிரவனின் தந்தையான கரிகாலனுக்கும் அதிவீரராம பாண்டியர்க்கும் ஏற்கனவே இருந்த தகராறு, இப்பொழுது பெண்களிடம் வம்பு செய்ததால் பெரிதாகிவிட…. கரிகாலன் வார்த்தைகளைக் கொட்டினார்… “உன் வீட்டுப் பொண்ண ஒழுங்கா இல்லை…. மொதல்ல அதுங்களை அடக்கு, அதுக்குள்ள என்ன பேச வந்துட்டியா…!!” என்று.
இரு குடும்பங்களுக்கும் வெட்டு குத்து என்று இறங்கிவிடாமல் இருக்க…. ஊர் பொதுத் தலைவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்….
அவள் சொல் பொறுக்க முடியாத கோபத்தில் அதிவீரராம பாண்டியர் அதை மதுரா மீது காட்டிவிட… வெகுண்டு விட்டாள் மதுரா….
“போதும் நிறுத்துங்க….. எதை வைத்து என் மேல் தப்பு என்று முடிவு பண்ணீங்க….. கொலை குற்றவாளிக்கு கூட…. அவன் தரப்பு நியாயம் என்ன என்று கேட்பார்கள்…. ஆனா இங்க….. என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று என்னை ஒரு வார்த்தை கேட்காமல்….. நீங்களா முடிவு பண்ண உங்களுக்கு யாரு அதிகாரம் குடுத்தா….??”
“தவறான குற்றச் சாட்டை ஏத்துக்கிட்டு அமைதியா போக நான் ஒன்னும்…. அதே ஐந்து வயது மதுரா… இல்லை….!!” என அழுத்தமாகச் சொன்னதும்…. திடுக்கிட்டுப் போயினார்…. அதிவீரராம பாண்டியன்…. மற்ற குடும்பத்தினரும்….
“மதுரா தாத்தா கிட்ட இப்படி கத்திப் பேசாத…!!” என அடக்கிய தனஞ்ஜெயனை ஏளனமாகப் பார்த்தவள்….
“ஏன்… ஏன் கத்திப் பேசக்கூடாத…. சொல்றீங்களா மிஸ்டர்….. நான் பேசலைனா எனக்காக நீங்க பேசப் போறீங்களா…???” என்றதும் தலை குனிந்து கொண்டான்… அவனை ஏளனமாகப் பார்த்து விட்டு…
“இது எனக்கான நேரம்…. இப்போவும் எனக்காக நான் பேசலைனா… என் ஆன்மா கூட என்னை மன்னிக்காது….. தப்பு பண்ணவங்க… தப்புக்கு துணை போனவங்க…. எல்லாம் நல்லா இருக்கும் போது…. எந்த தப்புமே செய்யாத… நான் என்னத்துக்கு தண்டனைய அனுபவிக்கணும்…???” என ஆவேசமாக…. கேட்டாள்…..
அதில் என்னவென்று தெரியாதவர்கள் குழம்பி நிற்க…. தெரிந்தவர்கள் தலை குனிந்து நின்றனர்… ஏன் எனில் அவள் கேள்விக்கு நியாயமான பதிலை கூட தர முடியாதே…
அன்னையிடம் சென்று… “கவி அன்னைக்கு நிரு மாமாவை நான் தள்ளி விடல…!!” என அவர் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னவள்… மறந்து கூட தள்ளியது யார் என கூறவில்லை… “நீயும் என்ன விட்டுட்டியே கவி, எத்தனை நாள்…. நைட்ல இருட்டப் பார்த்து பயந்து தூங்காம இருந்து இருக்கேன் தெரியுமா…. உடம்பு சரி இல்லாத போது உன்னை எப்படி தேடுனேன் தெரியுமா…. நீ கூட என்ன நம்பலைல, அதனால தான் வரல…!!” என அவரை விட்டு விலகியவள்.
அங்கு ஆதங்கம் பொங்க பேசியது அவர்கள் கண்ணிற்கு வளர்ந்த மதுராவாகத் தெரியவில்லை… ஹாஸ்டல் போக மறுத்து அடம் பிடித்த குழந்தையாகத் தான் தெரிந்தாள்.
“அன்னைக்கு நான் அவ்ளோ கெஞ்சுனேன்…. யாராவது ஒருத்தர்…. எனக்காக… பேசுனீங்களா……??? இப்போ கூட எனக்காக பேச வரல, என்ன அடக்கத்தான் வரீங்க இல்லை…!!” என்றவள்…
அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு…. “என்னை நம்பாத…. என்னை பிடிக்காத குடும்பத்துல இனி நான் இருக்கப் போறது இல்லை….!!” என்றவள், முறை அவளே விருப்பப்பட்டு…. யார் தடுத்தும் கேட்காமல் மேல் படிப்புக்கு வெளி ஊருக்குச் சென்று விட்டாள்….
மதுரா பேசியதைக் கேட்ட அதிவீரர் நிலை குலைந்து போய் இருக்க…. அவரிடம் தனஞ்ஜெயன் சொன்ன உண்மைகளால் இடிந்து போனார்… நீதி தவறாத மனுநீதி சோழன்… கதையைச் சிறு வயதில் இருந்தே கேட்டு வளர்ந்தவர்…. அவர் எடுத்த தவறான முடிவால் வீட்டை விட்டுப் போன செல்லப் பேத்தியை நினைத்து மனதுக்குள்ளாகவே மாண்டு போனார்…
ஆம், மதுரா அவருக்கு செல்லப் பேத்தி தான்…. அவள் மேல் உள்ள பாசத்தாலே… அன்று நிரஞ்சனையைத் தள்ளியது அவள் தான் என்று அறிந்ததும்…. அவள் எதிர்காலம் கெட்டுவிடும் கூடும் என நினைத்தே அவளை ஹாஸ்டலில் அனுப்பி வைத்தது…. அவளைப் போய் பார்த்தால் பிள்ளை மனம் ஏங்கிவிடும் என நினைத்து மற்றவர்களை மறுத்து…. மாதத்திற்கு இரண்டு முறை அவளைத் தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட்டு வந்து விடுவார்….
அப்படி இருக்க அவள் தவறே பண்ணவில்லையாமே…!!… இன்று கூட பஞ்சாயத்தில் நான்கு பேர் மத்தியில் அவதூறாகப் பேசியதால் வந்த கோபத்தையும் அவள் மேல் காட்டி விட…. நெக்குருகிப் போனார்…
அதில் இருந்து எப்படியாவது மதுராவிடம் மன்னிப்பு கேட்டுவிட அவள் படிக்கும் கல்லூரி வாயிலில் பல நாள் தவம் கிடந்தது தனி கதை….
ஆனால்…
அவளோ…. காலம் கடந்த மன்னிப்பு எனக்கு வேண்டாம் என்று ஒதுங்கிப் போனாள்…
தனக்காகப் பேசாத தனாவையும் ஒதுக்கி வைத்துவிட்டாள்…
அதன் பிறகு…. அவள் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தங்களோடு வருவாள் என காத்திருக்க… அவளோ நான் ஸ்பெஷல் கோர்ஸ் பண்ணப் போகிறேன்… என்று கூறி மறுத்துவிட்டாள்…. அதன் பின் இது பண்ணப் போகிறேன், இதை பண்ணப் போகிறேன் என்று அவள் குடும்பத்தையே ஒதுக்கி வந்தவளை… வரவைக்கவே சஷ்டியப்தபூர்த்தி சிறப்பாக ஏற்பாடு செய்தனர்….
அவளும் வந்தாள்…. ஆனால் அங்கு தனாவுக்கும் சந்தியாவிற்கும் திருமணம் எனப் பேச…. முதலில் திகைத்தவள்…. பின்பு நடந்த அனைத்தையும் யோசித்துப்பார்த்தபோது… அதில் தனாவின் செயல் அனைத்துமே சந்தியாவிற்குச் சாதகமாக இருக்க…. அவன் சந்தியாவை விரும்புவதாக முடிவு கட்டிவிட்டவள்…. வருத்தம் கொண்டாலும்…. எவன் எப்படிப் போனாலும் நமக்கு என்ன என இருக்க…. தனா கல்யாணத்தின் போது மதுராவிற்கும் திருமணம் செய்யப் போவதாகத் தகவல் வந்துள்ளது…
வேணாம் என்று சொல்ல வலுவான காரணம் இல்லை… அதற்காகத்தான் அந்த இன்டர்வியூக்குச் சென்றது…. வெளிநாட்டில் வேலை கிடைத்து இருக்கிறது…. என வலுவான காரணத்தைக் காட்டி கல்யாணத்தைத் தள்ளிப் போடலாம் அல்லது… அதற்கு ஒத்துவர வரும் படியான வரணையைத் தந்துவிட்டுப் பறந்து விடலாம் எனக் காத்திருக்கிறது….
அவளை விடும் எண்ணம் அதிவீரருக்கு இல்லை…. அதனால்தான்.. தனாவிற்கும் மதுராவிற்கும் திருமணம் செய்து அருகிலேயே அவளை வைத்துக்கொள்ளலாம் என நினைத்து நடத்தியும் வைத்துவிட்டார்…
இவை அனைத்தையும் நினைத்துக் கொண்டு அழுதபடியே தூங்கிப்போனாள்….
அவள் தூங்கியதும்…. பால்கனி வழியாகத் தனஞ்சயன் வந்து தினமும் பார்த்துவிட்டுச் செல்வது அவளுக்கே தெரியாது….



