தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரனே…13

13

இன்று:

வழக்கம் போல் கல்லூரிக்கு கிளம்பிச் சென்ற தேன்மொழியின் மனம் ஏனோ எதிலும் நாட்டம் கொள்ளவில்லை…

அவள் அறைக்குள் வந்த தீரன் ஒரு பக்கம்…

அவள் திருமணப் பேச்சு ஒரு பக்கம்…

என இரண்டிற்கும் நடுவே சிக்கித் தவித்தாள் பேதை…

அவள் மனம்…

கடந்த கால கசப்புகளை நினைத்து வருந்துவதா…

நிகழ்கால சிக்கல்களை நினைத்து குழம்புவதா…

அல்லது…

கேள்விக்குறியாகி நின்ற அவள் எதிர்காலத்தை நினைத்து கலங்குவதா… என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்தது…

மொத்தத்தில்…

திசை தெரியாமல் சுழலில் சிக்கிய சிறு படகு போல…

தவித்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி…


தயாராகி கிளம்பிச் சென்ற தீரன் நேரே காணச் சென்றது தன் நண்பர்கள் கூட்டத்தைத்தான்…

“டேய் மச்சான், உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! வாடா, எப்படிடா இருக்க?” எனப் பாய்ந்து வந்து பாசத்துடன் தழுவிக் கொண்டது ‘பம்பர மிட்டாய்’ என்று சிறுவயதில் அழைக்கப் பட்ட பராந்தகன் தான்…

“நல்லா இருக்கேன்டா பராந்தகா, நீ எப்படிடா இருக்க?” என விசாரித்தான் தீரன்…

காலம் அவர்கள் இருவரையும் சிறுவர்களிலிருந்தவர்கள் வளர்ந்த ஆண்மகன்ளாய் மாற்றியிருப்பதை உணர முடிந்தது…

“என்னடா மச்சான், வெளியூருக்குப் போய் எல்லாத்தையும் மறந்துட்டியாடா? நான் அப்போவும் இப்போவும் எப்போவும் உன் பம்பர மிட்டாய் தான்டா…” என உரிமையுடன் கோபித்துக் கொண்டான் தீரனின் ஆருயிர் நண்பன் பம்பர மிட்டாய்…

சிறுவயதில் பராந்தகன் என்னும் பெயர் தீரன் வாயில் நுழையாத காரணத்தால், அவனுக்கு ‘பம்பர மிட்டாய்’ எனப் பெயர் வைத்தான்…

அன்று விளையாட்டாக வைத்த பெயர்… அதுவே அவன் அடையாளமாகிப் போனது…

டேய் பம்பர மிட்டாய் என உரிமையோடு அணைத்துக்கொண்ட தீரனின் கண்களில் இருந்தது என்ன கண்ணீர் துளியா…???

அல்லது இந்த வருடங்கள் கழித்து தன் வேர்களை மீண்டும் சந்தித்ததால் வந்த நெகிழ்ச்சியா என்பதை அவனே அறிவான்…

சரிடா மச்சான், ஃபாரின்ல இருந்து எங்களுக்காக என்னடா வாங்கிட்டு வந்த… என மற்றவர்கள் ஆர்வமாக கேட்க…

அடச்சி அல்பைங்களா, அலையாதீங்கடா, பொறுமையா இருங்க. மச்சான் நிச்சயம் நமக்காக நிறைய வாங்கிட்டு வந்து இருப்பான். மச்சான், நான் கேட்ட அந்த மேட்டர் வாங்கிட்டு வந்துட்ட தான பம்பர மிட்டாய் கண்ணடித்து கேட்கவும் .. தீரன் அவனை முறைத்தான்..

மச்சான் தீரன் முறைகிறத பார்த்தா இவன் எதோ விவாகரமானதை கேட்டு இருப்பான் போலையே .. மற்றவர்கள் பம்பர மிட்டாயை சந்தேகமாக பார்த்தனர்…

ஃபாரீன் சரக்கா

ம்ஹும்

ஃபாரீன் ஜட்டியா

ம்ஹும் இல்லைடா

அப்போ **** புக்கா இல்ல ****மா இல்ல **** மாத்திரையா

சீ போங்கடா நீங்க எல்லாம் ரொம்ப மோசம் நான் கேட்டது எல்லாத்துக்கும் மேல ராஜ போதை டா நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப ஏங்கி போன ஒண்ணு

என்ற பம்பர மிட்டாய் வளைந்து நெளிந்து வெட்க பட்டு சிரிக்க, அடப்பாவி பிஞ்சிலே பழுத்தவனா நீ என்பது போல்

என்ன கன்றாவிடா இது !! டேய் அப்படி என்ன தாண்டா இவன் உன்கிட்ட கேட்டான் சொல்லித்தொலையேன்டா நண்பர்கள் அவன் வெட்க படுவதை பார்க்க சகியாது தீரனிடமே கேட்டு வைக்க தீரனுமே அதே நிலையில் தான் இருந்தான் சை என தலையில் அடித்து கொண்டவன் அவன் கொண்டு வந்த பையில் இருந்து சில பொட்டலங்களை எடுத்து போடவும்

அடச்சை இதுவா என எல்லோர் முகமும் பமப்ர மிட்டாயை காரி துப்பாத குறையாக பார்த்தது

“இவன் இன்னும் திருந்தலடா மச்சான், நாளைக்கே இவனுக்கு ஒரு புள்ளை பிறந்தாலும் விடமாட்டான் போலையே அவ்வளவு வெறி மாப்பிளைக்கு” என தீரன் சொல்ல, கூட்டமே கொள்ளென்று சிரிக்கவும், வெட்கம் கொண்ட பராந்தகன்…

“அடிங்க என்னடா சிரிப்பு வேண்டி கிடக்கு உங்களுக்கு ஏன் நீங்கள் எல்லாம் மிட்டாயே தின்னது இல்லையா எதோ ஃபாரீன் மிட்டாய் தீங்கணும் ஆசைபட்டு கேட்டேன் அதுக்காக இப்படியாடா கிண்டல் பண்ணுவீங்க, எல்லாம் உன்னால தான்டா தீரா” என்று தீரன் மீது பாய, இருவரும் கட்டிக்கொண்டு புரண்டனர்; அந்த இடமே களோபாரம் ஆனது அவர்களின் ஆனந்தக் கூச்சலில்…

ஒருவாரம் அவர்களின் கொட்டமெல்லாம் ஓய்ந்த பின்பு…

“டேய் மச்சான், நீ ஊர்ல இல்லாதப்ப இந்த ருத்ரன் பையன் ஆட்டம் ஓவரா போய்டுச்சுடா, ரொம்ப பண்றான்டா…”

“ஆமாடா மச்சான், அவனும் சைட் அடிக்க மாட்டான், அடுத்தவங்க சைட் அடிக்க விடமாட்டானாம்”…

டேய், அது கூட பரவால்லடா! ஃபிரண்ட்ஸ்ன்னு ஒரு கூட்டத்தை சேர்த்துக்கிட்டு ஊருக்குள்ள அவன் பண்ற அராஜகம் இருக்கே, பா முடியலடா சாமி! என் நண்பர்கள் கூட்டம் வீரனை கண்டதும் ஆதங்கத்தோடு ருத்ரனைப் பற்றி குறை சொல்ல…

சரி விடுங்கடா, அதான் நான் வந்துட்டேன் இல்ல? இனி நான் பாத்துக்குறேன்… என தீரன் நம்பிக்கையோடு சொன்னான்.

எப்படி மச்சான், உங்க அப்பாக்கு கிடைக்க வேண்டிய டெண்டரை அவன் புடுங்கிட்டான்? நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லு, அந்தத் டெண்டர்ல ஊழல் இருக்குன்னு மொட்டை கடுதாசி போட்டு அந்த டெண்டரே கெடுத்துடுறேன் என பம்பர மிட்டாய் பரபரப்புடன் சொன்னான்.

அதுக்கெல்லாம் அவசியமே இல்ல மச்சான், டெண்டர் மட்டுமல்ல, இந்த ஊர் மரியாதையும் என்ன தேடி வரும்; அதுக்கான வேற வழியை நான் எப்பவோ யோசிச்சு வச்சுட்டேன் என கண்கள் பளபளக்க சொன்ன நண்பனைச் சூழ்ந்து கொண்டதுக்குள்ள நரி கூட்டம்…

அன்றே தன் நண்பர்கள் கூட்டத்தோடு தேன்மொழி படிக்கும் கல்லூரி அருகே சென்றான் தீரன்…

ஒருவழியாகக் கல்லூரி முடிந்து வெளியே வந்தாள் தேன்மொழி… வெளியே வந்ததிலிருந்தே அவளது இதயம் படபடவென்று அடித்துக் கொண்டு இருந்தது. என்ன காரணம் என்று புரியாமல் நெஞ்சில் கை வைத்து நின்றவளின் பார்வையோ சுற்றிலும் அலசியது…

போச்சு, அவனேதான் தீரன், அவளைத் தேடி இங்கயே வந்துவிட்டான் என அறிந்ததும் விதிர்த்துப் போனாள்…

வெளிறிய முகத்துடன் அங்கிருந்து அவன் கண்களில் படாதவாறு தப்பிச் செல்லப் பார்த்தாள்… ஆனால், இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அவனைத் கண்டு ஓடுவது என்று அவள் உள்ளம் அவளைப் பார்த்து கேட்டதும், அந்த எண்ணத்தைக் கைவிட்டவள்… பெருமூச்சு எடுத்துக்கொண்டு, வரவழைக்கப்பட்ட தைரியத்துடன்… இன்றோடு அனைத்திற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டுகிறேன் என்கிற முடிவோடு… தீரன் இருக்கும் திசையை நோக்கி நடந்தாள்…

கல்லூரி விட்டு தேனு வெளியே வந்ததும், அவனை கண்டு பயந்து பின்வாங்கியதும், பின் திரும்பி அவனைத் தேடி வருவது வரை அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல் நின்றவன் முன்னால் வந்து நின்றது அழகிய வெண்கலச் சிலை; வெயில் பட்டு வெள்ளிச் சிலையாகக் காட்சி அளித்தாள்…

தேன்மொழியை கண்டதும் தீரன் தன் நண்பர்களை ஒரு பார்வை பார்த்தான்; கல் விட்டு எரிந்தால் பறந்தோடிச் செல்லும் காக்கை கூட்டம் போல் கலைந்து சென்று விட, தனித்து விடப்பட்டனர் தீரனும் தேன்மொழியும்…

இருவரையும் மௌனம் ஆட்கொண்டு இருக்க… முதலில் அதை உடைத்தது என்னவோ தேன்மொழி தான்…

கை நீட்டுங்க என்றவளை வினோதமாகப் பார்த்தவன், அவள் சொன்னதைச் செய்யும் ரகம் இல்லையே! ஆகையால் தன் கைகளை இறுக மூடி தன் பாண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, அவளைப் பார்த்து ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தினான்; அந்த கண்ணில் தான் அத்தனை கல்மிஷம்…

ப்ச்! அதில் சலித்துக் கொண்டவள்… அவனது பிடிவாதக் குணத்தை நன்கு அறிந்தவள் ஆகிற்றே , சிரமம் பார்க்காமல் தீரனின் முழங்கையை பிடித்து வெளியே இழுத்தவள்… கையைத் திருப்பி அவன் உள்ளங்கையில் திணித்தாள்… “இந்தாங்க, இது எனக்கு தேவைப்படாது நீங்களே வச்சிக்கோங்க …”

அதுவரை தேன்மொழி செய்வதையெல்லாம் ரசனையாகப் பார்த்திருந்த அவனது முகம், அவன் கையில் கிடைத்த பொருளைப் பார்த்ததும் இருண்டு போனது… அது தேன்மொழிக்கு தீரன் கொடுத்த கொலுசு…

“என்னடி இது?” எனப் பல்லிடுக்கில் வார்த்தைகள் தெறித்தன…

“இங்க பாருங்க, நீங்கள் எந்த நோக்கத்தோடு இதை என்கிட்ட கொடுத்தீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்… ஆனால் ஒன்னு, நீங்கள் நினைக்கிறது எதுவும் இந்த ஜென்மத்துல நடக்காது…”

“ஒரு முறை சூடு பட்ட பூனை திரும்பவும் பால் கிட்ட போகாது… ஒருமுறை உங்களை நம்பி நான் பட்ட சூடே போதும்… இனியும் என்னை பின் தொடர்ந்து வந்து என்னை தொந்தரவு செய்யாதீங்க…” என அமைதியாகச் சொன்னாலும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

“வந்தா என்னடி பண்ணுவ?” எனத் தெனாவட்டாகக் கேட்ட தீரனை, உதடு கடித்துப் பார்த்தவள் கண்களை மூடி திறந்து…

“அதற்கான பின்விளைவுகளை நீங்கள் நீங்கள் தாங்கமாட்டீங்க தீரன்… இந்த முறை நானே நினைத்தாலும் என் அண்ணனை தடுக்க முடியாது…” என எச்சரித்தவள், வேலை முடிந்துவிட்டது என்பது போல் அங்கிருந்து நகர்ந்தாள். தீரனின் கண்ணில் இருந்து மறையும் வரை வைராக்கியத்துடன் தன்னைத் திடமாகக் காட்டிக் கொண்டவள்

அவனை விட்டு அகன்றதும், சுவர் மறைவில் சாய்ந்து நின்றவளுக்கு நெஞ்சோரம் இருந்த பாரம் இறங்கியது போல் இலகுவாக இருந்தது. புதுத் தெம்புடன் புத்துணர்ச்சியோடு வீட்டிற்குச் சென்றவளுக்கு காலம் அவளுக்கு என்ன வைத்திருக்கிறதோ…???

தன்னிடம் துணிச்சலாகப் பேசிவிட்டுச் செல்லும் தேன்மொழியை இமைக்க மறந்து பார்த்து நின்றான் தீரன்…

கையில்… “தேன்மொழி வேண்டாம்” என்று தூக்கி எறிந்த கொலுசுகள் அவன் கண்களைத் தழுவின. அதை இறுகப் பற்றியவன்…

ஒரு நொடி கண் மூடித் திறந்தான்…

அவன் பார்வையில் அத்தனை குரோதம் வழிந்து ஓடியதோ…?

இல்லை…

அதை விட ஆபத்தான பிடிவாதமோ…? அதை அவனே அறிவான்…

“இந்தத் தீரனுக்கே சவாலா…?” எனத் தனக்குள் முணுமுணுத்தவன்… உதட்டோரம் ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது

“என் கேரக்டரையே நீ இன்னும் புரிஞ்சிக்கலையேடி… இந்தத் தீரன் நினைச்சதை எதையும் இதுவரைக்கும் நடத்தாமல் விட்டதில்லடி…” என ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திச் சொன்னவன்…

கையில் இருந்த கொலுசை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்…

அது காதலின் அடையாளமா…

இல்லை…

யுத்தத்தின் தொடக்கமா…

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top