மாடிபடியில் ஹரிச்சந்திரன் ஏற…. ரூமில் நிரஞ்சன் மேல் அலங்கோலமாக யாழினி…. ரெண்டு இடத்தையும் மாத்தி மாத்தி கேமரா ஜூம் செய்கிறோம்…. அப்படியே அல்லு விடற மாதிரி பிஜிஎம் வைக்கிறோம்…. இந்த எபிசோடை ஓட்டுறோம்…. (ஹிஹி சும்மா சும்மா…. சீரியஸா எடுத்துக்கிட்டு ரைட்டரைத் தேட வேண்டாம்… சரியா….)
தன் மீது அலங்கோலமாக கிடக்கும் பூச்செண்டின் அழகிலும் அதன் மென்மையிலும் தொலைந்தவன்…. இடையூறாகக் கேட்ட…. ஹரிச்சந்திரனின் குரலில்… திடுக்கிட்டது உண்மை….
ஆனால் அவர் தன் மீது உள்ள நம்பிக்கையில் நிச்சயம் உள்ளே வரமாட்டார்… என கணிக்க….
அது சரியே என்பது போல் கதவருகில்… நின்று விசாரிக்க…..
“ஒன்னும் இல்லை அங்கிள்…. யாழினிக்கு… லாஸ் ஆப் அட்ராக்சன் அண்ட் லாஸ் ஆஃப் கிராவிட்டி பற்றிச் செய்முறைப் பயிற்சியாக (Practical) நடத்துறேன் அங்கிள்….!!” என யாழினியை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு கூற….
“ஓ அப்படியா சரிப்பா சரிப்பா….!!” என்று விட்டு நகர…
“அப்பா…ஆஆ…!!” என கத்தப் போன யாழினியின் குரல்.. நிரஞ்சனின் அதரத்தால் விழுங்கப்பட்டது….
அதிர்ந்தவள் கண்களைச் சுருக்கி… “ம்ம்ம்.. மு. ஊஊ” அவனைத் தள்ளப் பார்க்க… அவன் கண்களோ அவள் இதழ் தரும் போதையில் சுகமாக மூடி லாய்க்க… மெல்ல அவளைத் தன்னிலிருந்து பிரித்து கைவளைவுக்குள் வைத்துக்கொண்டவன்…..
“பிசினஸ் ஸ்டூடண்ட்க்கு எதுக்கு லாஸ் ஆப் அட்ராக்சன் அண்ட் லாஸ் ஆஃப் கிராவிட்டி வரப் போகுது… சொன்னா எவனாவது நம்புவானா… ஆனா நான் சொன்னா உங்க அப்பா எதையும் நம்புவார்… இப்ப கூட நீதான் என் மேல இருக்க…. கத்தி கூப்பிட்டாலும்… உங்க பொண்ணு தான் அங்கிள் என் மேல விழுந்தான்னு சொல்லுவேன்… அதையும் அவர் நம்புவார்….!!” என ஹாயாகத் தலைக்குக் கைகளை கொடுத்துக்கொண்டு அலட்சியமாகச் சொல்ல
குளிர் பணியாக உறைந்து போனாள் யாழினி….
“ஹே ரிலாக்ஸ் ஜிலேபி…. அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்…. ஏன்னா… என் பொண்டாட்டியை யார் முன்னாடியும் தலை குனிய விட மாட்டேன், அது அவங்க அப்பாவா இருந்தாலும் சரி…!!” என ஆழ்ந்த குரலில் சொன்னவன் அவளை அணைத்து விலக்கினான்….
அவனிடம் இருந்து விழுந்து அடித்துக்கொண்டு செல்லாத குறையாக…. விலகி ஓடினாள்… போனவளைப் பார்த்து கொண்டே உதட்டை நாவால் வருடி ருசித்தவன்…. கண்களை மூடி அந்தத் தருணத்தை ரசித்தான்…
(அவங்க அப்பாக்கு உன்னைப் பத்தி தெரியும் போது இருக்கு. ராசா….)
“பட் பட்” கதவை உடைக்காத குறையாகத் திறந்து கொண்டு இருந்தாள் மதுரா….
உள்ளே வந்ததும் கைப்பை பறந்தது… காலணிகள் திசைக்கும் ஒவ்வொன்றாகப் பிரிந்தன… தன் அறைக்குள் சென்று படார் என்று அறைந்து சாத்தி விட்டுச் சென்றாள் அவ்வளவு கோவத்துடன்… காரணம்…
நம்மள அலற வைப்பவளை அலற வைக்க சிவகாமி தேவியால் மட்டுமே முடியும். அதே.. அதே…
தனா சொன்னது போல் சிவகாமியை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான்…. அவரும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல்…. சமர்த்தாகத்தான் இருந்தார்….
ஆனால் மதுராவிற்குத்தான் “என்ன கிழவி அமைதியா இருக்கே…. ஆஹா ஏதோ பெருசா பிளான் பண்ணுது போலையே, அலெர்ட் ஆகிக்கோ மதுரா…. அலெர்ட் ஆகிடு…!!” என அவரை நம்பாமலே, அவளின் நல்ல கண்ணு நொள்ள கண்ணு அனைத்தையும் சிவகாமி பக்கம் வைத்துக்கொண்டாள்….
முக்கியமான வேலையை அன்றே முடிக்க வேண்டியதால், லிசா ஜெடன் மதுரா மற்றும் தனாவுடன் சேர்ந்து முடித்து கிளம்ப தாமதமானது.
வழக்கத்தை விட தாமதமான காரணத்தால், தனா மதுராவை உடன் அழைத்தான். எல்லாம் நன்றாகத்தான் சென்றது, சிவகாமி தொடங்காத வரை.
“ஏன் பேராண்டி, அந்த லிசா நல்ல அழகு, அறிவான புள்ளையா இருக்குல..!”
“ஆமா பாட்டி, நல்ல அறிவான பொண்ணும், செம திறமைசாலி..!” எனத் தனா சாதாரணமாக தான் சொன்னான்.
“அந்த புள்ள நல்ல வெள்ளாவி வச்சி வெளுத்தது போல நிறமா இருக்குல..!” எனச் சிலாகித்ததும், துணுகுற்றாள் மதுரா…
“இதுல என்ன இருக்கு, இந்த ஊர்ல பாதி பேர் அப்படித் தான் கலரா இருக்காங்க பாட்டி..!” கிழவி வைக்கும் பொறிக்கு இவன் தான் இரை எனத் தெரியாமல் வாயைத் திறந்தான்.
“அப்புறம் ஏன் ராசா, உனக்கு இந்த தலை எழுத்து… இங்கையே ஏதாவது நல்ல ஒரு வெள்ளைக் காரப் புள்ளையப் பார்த்து கட்டி இருக்க வேண்டியதுதான… அதை விட்டுட்டு ஊர்ல பொண்ணுக்குப் பஞ்சம்ங்கற மாதிரி… இந்த ஓட்டை உடைசல கட்டிக்கிட்டு அனுபவிக்கனும், உனக்கு என்ன தலை எழுத்து…” என மதுராவை இகழ்ச்சியான பார்வையால் பார்த்துவிட்டு, “எம்புட்டு பாசமான பிள்ளை தெரியுமா, என்ன விடவே இல்லை… கேணி கேணின்னு கழுத்தை கட்டிக்கிட்டு சுத்தி வருது..!” என்றதும்…
“பாட்டி, அது கேணி இல்லை, கிரணி பாட்டி..!” எனத் தனா திருத்தினான்
“ப்ச், அதுவா இப்போ முக்கியம்… இந்த ஊர்ல பிறந்தாலும் அடக்கமான பிள்ளையாவும் இருக்கு…”
“உன் நேரத்துக்கு உயரத்துக்கும் அந்த லிசா புள்ள தான் சரியான ஜோடி…” என்றதும், சடன் பிரேக் போட்டு தனா தன் அதிர்ச்சியைத் தெரியப்படுத்த, அதில் மதுரா முன்னால் இருந்த சீட்டில் இடித்துக்கொண்டாள். பாட்டி இதை எதிர்பார்த்தது போலத் தெரியாமல் சமாளித்துக் கொண்டார்.
“நான் சொல்றதக் கேளு பேராண்டி…. இந்த கோட்டி சிறுக்கியா டிரைவர் பண்ணிட்டு… லிசா புள்ளையா கட்டிக்கோ…” என்று மதுராவும் தனஞ்சயமும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள…
“ஏய் தாய் கிழவி! நான் எதுக்கு டிரைவரா போகணும்…. வேணும்னா நீயும் உன் பேரனும்… அந்த ஈர் குச்சி லிசாக்கு டிரைவரா போங்க… அப்படியே அவள் வீட்டு பாத்ரூம் கூட கழுவி விடுங்க….!!” என முன் பாதியை மட்டும் கேட்டுவிட்டு கத்த….
“அடி கோண சிறுக்கி… எனக்கு என்னடி தலை எழுத்து? என்ன உள்ளங்கையில வச்சி தாங்க என் வீர் டார்லிங் இருக்கு…. உன்னைய விவாகரத்து பண்ணிட்டு அந்த லிசா புள்ளைய கட்டி வைக்குறத தான் அப்படி சொன்னேன்…!!!” என சரிக்கு சரியாக அவளிடம் மல்லுக்கட்ட….
அயர்ந்து போனான் தனா… “ரெண்டு பேரும் இப்போ அமைதியா வரலன்னா, நடு ரோட்டுல இறக்கி விட்டுட்டு நான் எங்கையாவது போய்டுவேன்….!!” என மிரட்ட…
ரெண்டு பேரும் பார்வையில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு அப்போதைக்கு அடங்கிப்போக….
வண்டியை கிளப்பி கொண்டு வீடு வந்து சேர்ந்தான்…..
அதில் இருந்து பொருட்கள் எல்லாம் அவள் கையில் உடைவது மட்டும் இல்லாமல்….
தன்னை கண்களால் எரிக்கும் மனைவியைப் பார்த்து துவண்டு போனவன்….
“சும்மா விட்டு இருந்தா கூட அவளே சமாதானம் ஆகி இருப்பா… இவங்களை கூட்டி வந்து எனக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்டேன் போலையே….!!” என காலம் கடந்து சிந்தித்தவன்…
“என்ன பாட்டி இப்படி பேசிட்டீங்க…!!” என வருத்தமாக தனஞ்சயன் கேட்க….
“நான் என்னடா கேட்டுட்டேன் இப்படி என்கிட்ட சண்டைக்கு வர…??” என எகிறி…
“நான் எங்க பாட்டி உங்க கிட்ட கத்தினேன்…!!” என அவர் குற்றச்சாட்டால் திகைத்து கத்த…
“சும்மா சலம்பாத பேராண்டி….!” என அசால்ட்டாக காதை குடைந்தபடி….
“வாய்க்கு ருசியா சமைக்க தெரியுதா… இல்லை வீட்டுக்கு சோர்வா வந்த புருஷனுக்கு கை கால் அமுக்கி விடதான் முடியல… கொஞ்சமாவது சிரிச்சாவது பேசுறாள…. இரும்ப முழுங்குன பெருச்சாளி மாதிரி உர்ன்னு வச்சிட்டு சுத்துறா… இவ்வளவு ஏன் நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தான, அப்புறம் எதுக்கு நீ தனியா அவள் தனியா இருக்கீங்க….. அப்படி இருக்கும் போது நான் சொல்றதுல என்ன தப்பு… அந்த கோட்டி சிறுக்கியா வெட்டி விட சொன்னா என் கிட்டயே துள்ளுற…??” என சரியாக சரமாரியாக கேள்வி கேட்க…
வாயடைத்து நின்றான் தனஞ்சயன் ஒரு நிமிடம் தான்…. உடனே….
“பாட்டி என் பொண்டாட்டி பத்தி எனக்கு தெரியும்…. அவள் எப்படி இருக்காளோ அப்படியே இருக்கட்டும் அதுதான் எனக்கும் வேணும்…. என்னைக்கும் அவளை யாருக்காகவும் எதுக்காகவும் கை விட மாட்டேன்… இனி அவளை பத்தி தப்பா பேசாதீங்க… உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்…!!” என கை எடுத்து கும்பிட்டவன்…. மனைவியை சாமதானம் செய்ய அவள் அறையை நோக்கித் திருந்து கொண்டு உள்ளே போவதை பார்த்தவர்….
“ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், படியாத மாட்டை இப்படித்தான் வழிக்கு கொண்டு வரணும் பேராண்டி…. இப்போதான் பத்த வச்சி இருக்கேன்….!!” என சிரித்துக்கொண்டவர்….
அவர்கள் இருவரையும் உள்ளே வைத்து பூட்டி விட்டார்…. “அப்பா கடவுளே உன் கிட்ட பெருசா ஒன்னும் கேக்கல, வெளிய வரும் போது எனக்கு ஒரு கொள்ளு பேரனோட வரணும்..!!” என… கடவுளுக்கே ஹார்ட் அட்டாக்கை கொடுத்தவர்….
ந்தியாவில் இருக்கும் அவர் பாய் ஃப்ரெண்ட் வீரிடம் கடலை போட சென்று விட்டார்….
பாட்டி வைத்தியம் எப்படி வேலை செய்துச்சுன்னு.. அடுத்து எபிசோடில் சொல்றேன்….



