வேர்த்து விறுவிறுக்க உள்ளே வந்தவளை அமரக் கூட விடாமல் அழைத்து வேலைகளை அடுக்கியவன், தன்னோடு வைத்துக்கொண்டு திரிந்தான்.
அவன் போகும் மீட்டிங் எல்லாம் இவளையும் இழுத்துக்கொண்டே போனான். உணவு நேரம் தாண்டியும் அவன் விடாததால் சோர்ந்து போய் இருந்தவளை, போனால் போகுது என்று அனுப்பியவன், அவள் உணவை முடித்ததும் மீண்டும் அழைத்துக்கொண்டு நிமிர விடாமல் வேலை வாங்க, அவள் கலைத்து இளைத்துப்போனாள்.
கழுத்து வரை இருந்த வேலையைப் பார்த்து மயங்கிப்போனவளை அழைத்து…
“காபி போட்டு எடுத்துட்டு வாடி…” எனச் சொன்னான்.
“எதை, எத்தனை காபி (நகல்) பாஸ்…?” என அவள் கேட்க,
பல்லை நரநரவென்று கடித்ததும்…
“ஹிஹி இல்லை, ஸ்ட்ராங்காவா அல்லது லைட்டாவா என்று கேட்டேன்…?” என இளித்துவிட்டு,
“டென்ஷனா இருக்காரேன்னு… ஒரு ஜோக் சொன்னா கூட முறைக்கிறாங்கபா… நாட்டுல நல்லதுக்கே காலம் இல்லை…!” என அவன் காது பட புலம்பிக்கொண்டே காபி எடுத்துவர வந்தவள்,
அவன் மேஜை கோப்புகளால் நிரம்பி இருக்க, எங்கு வைப்பது என்று முழித்தவள், அவனிடமே கொடுத்துவிடலாம் என அருகில் செல்ல,
அவள் போதாத நேரமா அல்லது அவன் துரதிஷ்டமா என்று தெரியவில்லை. அவள் கையில் இருந்த காபி வழுவி அவன் மேல் கொட்டியதோடு மட்டுமில்லாமல், அவன் கையில் இருந்த முக்கியமான கோப்பிலும் கொட்டிவிட்டாள்.
“ஐயாயோ போச்சி செத்தேன்…!” எனப் பதறிவிட்டாள். “மதுரா முறைக்கிறான்… அசால்ட்டாக ஹேண்டில் பண்ணி தப்பித்துவிட வேண்டும், இல்லை என்றால் வச்சி செய்வான்…!” என நினைத்தாள்.
“ஏய், கண்ணில்லையாடி உனக்கு…!” எனச் சீறியவன்,
அசால்ட்டாகப் பார்த்து, “சும்மா காது வலிக்குது, இப்போ எதுக்கு சும்மா குதிக்கிறீங்க… காபி தானே ஊத்துச்சு… தொடச்சுப் போட்டு வேலையைப் பாருங்க…” என்றான்
“சும்மா சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் பண்ணிக்கிட்டு..!!” என சலித்துக்கொண்டு சொன்னவளை….
கண்ணில் சீற்றம் பொங்க பார்த்தவன் மேஜையில் கையால் தட்ட…. அது இரண்டாக நொறுங்கி விழ….
பயந்து பின் விலகியவள்..
கோபத்தில் ஜொலித்த தனஞ்சயனின் முகத்தைப் பார்த்து மிரண்டவள் அங்கிருந்து வெளியேற பார்க்க…
விரைந்து வந்து அவள் கையை வலிக்கப் பற்றி இழுத்தவன்….
“எதுடி உனக்கு சின்ன விஷயம்? அது எத்தனை கோடி ரூபாய் ப்ராஜெக்ட்! நம்ம கம்பெனிக்கு எவ்வளவு முக்கியமான ப்ராஜெக்ட் உனக்கு தெரியுமாடி?”
“எது தாண்டி உனக்கு பெரிய விஷயம்? ஹான்? தாலி கட்டிய புருஷன் பெரிய விஷயம் இல்லை… உன்னை சீராட்டி வளர்த்த குடும்பம் பெரிசில்ல… வேற எதுதான்? சொல்லுடி! உன்கிட்ட போய் கேட்கிறேன் பாரு, நீ ஒரு பக்கா சுயநலவாதி… உனக்கு உன்னோட விருப்பம் மட்டும் தான் எப்பவுமே பெருசு… யார் எப்படி நாசமா போனா உனக்கு என்ன!!” ஏன், எதற்கு இந்த கோபம் என கண்மண் தெரியாமல் அவளை வார்த்தைகளால் வதைக்க ஆரம்பித்து விட்டான்….
“போதும் நிறுத்துங்க… ஆமா, எனக்கும் எதுவுமே பெருசு இல்லை தான்… என்ன ஏதுன்னு விசாரிக்காம, யாரோ செய்த தப்புக்கு எனக்கு தண்டனை கொடுத்து, ஏன், எதுக்குன்னு புரியாத வயசுல என்னை குடும்பத்தை விட்டு பிரித்து வைத்த அந்த”
குடும்பம் எனக்கு பெருசா படல….
“தாலி கட்டினோம்னு ஒரே காரணத்துக்காக எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும்… என் மனச பத்தி கவலைப்படாம என்கிட்ட அத்துமீறினீங்களே… அதனால நீங்க புருஷனா எனக்கு தெரியல…!”
“ஆமாம், நான் சுயநலவாதி தான்… சின்ன வயசுல அடுத்தவங்க செஞ்ச தப்புக்கு நான் தண்டனையை அனுபவிச்சேனே, அப்போ கூட உண்மை தெரிஞ்சவங்க அமைதியா இருந்தாங்களே, அவங்க நல்லவங்கனா நான் சுயநலவாதியாவே இருந்துட்டுப் போறேன்…. விடுமுறைக்கு ஆசையா வீட்டுக்கு வரப் பொண்ண ஏன் வந்தேன்னு திருப்பி அனுப்புறவங்க நல்லவங்க…. என்னோட ஆசை, விருப்பம் எதையும் புரிஞ்சிக்காம… அவங்க இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்க நினைக்கிறவங்க கிட்ட இருந்து… இல்லை, எனக்கும் ஒரு மனசு இருக்கு அதை புரிஞ்சிக்கோங்கன்னு சொன்னா நான் சுயநலவாதியா? தாராளமா சுயநலவாதியாவே இருந்துட்டுப் போறேன்….!!” என அவளின் வாழ்நாளில் சேர்த்து வைத்த வலியை கொட்டியவள் துணிவாக நிமிர்ந்து நின்றாள்.
“என்னை யாரும் வேணாம்னு சொல்லும் போது…. எனக்கும் யாரும் வேணாம்… என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும்…!!” என்றவள், அங்கு நிற்காமல் வெளியே சென்றுவிட்டாள்.
அவள் உதிர்த்த வார்த்தையில் இருந்த உண்மை தனஞ்ஜெயனைச் சுட… தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.
“மன்னிச்சுடு குட்டிமா…. உன்னோட வலி எல்லாத்துக்கும் நான் தான் காரணம்…. நீ இழந்ததை திருப்பித் தர வேண்டியது என்னோட பொறுப்பு…!!” என முடிவு எடுத்தவன், அதற்கு ஆதாரங்களைச் செய்ய முடிவு பண்ணிவிட்டான். பாழான வேலையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கினான். (இதை முதல்லயே செஞ்சிருக்கலாம்)
இவன் நினைத்து விட்டால் போதுமா? அதற்கு நம் சண்டிராணி விடணுமே…..
வாஷ் ரூம் சென்று வந்தவள் வேலையில் கவனமாகிவிட, கிட்ட தட்ட அந்த அறையில் பேப்பர் திருப்பும் சத்தமும், டைப் பண்ணும் சத்தம் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.
அதில் எரிச்சல் கொண்டான்….. அவளை ஓட்டை வாய் என்று திட்டினாலும், அவள் அமைதி அவனைப் பாதிக்கிறது என்பது உண்மை….. அவனாக இழுத்து வைத்துப் பேசினாலும் அவளிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் போகவே…. சரி, வீட்டிற்குச் சென்று சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்து, கழுத்தை நெரித்த வேலைகளைப் பார்க்கலானான்….. அதற்கும் அவள் விட்டால் தானே!
எங்க அவள் முகத்தைப் பார்த்தே இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது…
அலுவலகத்தில் வந்தால் கூட அவன் கேட்கும் கேள்விக்கு “ஆம்” அல்லது “இல்லை” என்பது மட்டுமே பதிலாக இருக்கும்; அதற்கு மேல் அவன் முகத்தை நிமிர்ந்து கண்டதில்லை….
கூட்டுப் புழுவாகத் தனக்குள் சுருண்டு கொண்டவளை எப்படி மீட்க எனத் தெரியாமல் திணறிப்போனான்… தனஞ்ஜெயன்….
வேறு வழியே இல்லாமல் ஏற்கனவே முடிவு செய்தபடி… தன் திட்டத்தைச் செயல்படுத்த… இவன் ஒன்று நினைக்க அது வேறாக நடக்க… மதுரா முன்பிலும் மோசமாகப் போய்விட… தனஞ்ஜெயன் முழி பிதுங்கிப்போனான்….
அப்படி என்ன சொதப்பல் பண்ணான்னு யோசிச்சிட்டே இருங்க, அடுத்த எபிசோடில் சொல்றேன், எப்படி? ஹிஹி…. நோ வொயலன்ஸ்….



