நியூயார்க் நகரம் உறங்கும் நேரம், தனிமையில் தனஞ்சயனின் மணிகுயில்….
ஆம், குளிரில் வெடவெடவெத்தக் கோழிக்குஞ்சாக நடுங்கிக் கொண்டிருப்பது மதுராவே தான்….
ஜெய அவளை ஓடிப் போனவள் என்றதும் கலங்கிப் போனாள்….
ஜெயினின் வார்த்தைகள் தனாவை நினைவுபடுத்துகின்றன என மருகினாள்….
என்று பிடிவாதம், முன் கோபம் போன்றவைகளால் மூடப்பட்டிருக்கும் அவள் அறிவு கண் திறக்கிறதோ…. (ரொம்ப எதிர் பார்க்காதீங்க…)
அன்னைக்குத் தான் தனாவுக்கு கடைசி நாள்…. என்பது மட்டும் உறுதி…. ஏன்னா அவ மேக் அப்படி….
ஜெயிடம் எதுவும் பேசாமல் தன் கைப்பையைத் தூக்கிக்கொண்டு அர்த்த ஜாமத்தில் வெளியே வந்தவளின் மனக்குமுறல் அடங்காமல்… கால் போன போக்கில் நடந்து போனாள்…
“பொறுக்கி * எப்படிப் பேசுறான்… இதே எங்க ஊரா இருந்து இருக்கணும்…. அசிங்கமா பேசுற அந்த வாயையும்…. தப்பா பாக்குற அந்த ஆந்தை கண்ணையும்…. நோண்டி மணிக்கு டிபனா போட்டு இருப்பேன்… ச்ச…. இப்படி வந்து மாட்டி இருக்கேனே…. ஆஆ…!!” என அவள் வாய் வசைபாடிக்கொண்டே இருக்க….
திடுதிடுவென எதிரில் போதையில் சலம்பியபடி வந்து இருவர்… இவளைப் பார்த்து…. கரையான் அரித்த பற்களை வைத்து மன்மதச் சிரிப்பை உதிர்க்க….
அது இவளுக்கு…. கருணக் கொடூரமாகத் தெரிய….. அப்பொழுதுதான் சுத்தி பார்த்தாள்…. எங்கும் கும் இருட்டு சூழ்ந்து இருக்க…. அவசரத்திற்கு அழைத்தால் வருவதற்குக்கூட ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிற்பதை…. உணர்ந்தவள்….
எடுத்தாள் ஓட்டம்…. தலைதெறிக்க ஓடி வந்தவள்…. ஜெயின் வீட்டு கதவில் கை வைக்கப் போக… சற்று தயங்கியவள்… அந்தத் தெருவின் எல்லையில் உருவம் தெரிய…. எங்கே அந்த குடிகார மாகன்கள் தான் பின்னாடியே வந்தார்களோ என பயந்தவள்….
“மதுரா, இது மான ரோஷம் காட்டும் நேரம் இல்லை…. தெரியாத பேய்க்குத் தெரிஞ்ச பிசாசு மேல்…. நமக்கு இதைத் தவிர வேற வழி இல்லை…. அப்படியே இவன் கிட்ட கேட்டு இந்த ராத்திரியில எங்க போக…. உள்ளையே போவோம்…. இன்னைக்கு நைட் பாதுகாப்பா இருந்துட்டு அப்புறம் வருவதைச் சமாளிக்கலாம்….!!” என அவள் மனதோடு ஆலோசித்துக் கொண்டு இருக்க…. அதுக்குள்ளே அந்த உருவங்கள் அருகில் வருவதைக் கண்டவள்…. அதற்கு மேல் அங்கு நிற்பாளா என்ன…. கதவைத் திறந்து கொண்டு தன் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள்….
இவள் பையைத் தூக்கி கொண்டு செல்வதைப் பார்த்த… தனாவும் அவள் பின்னாடியே தொடர்ந்து சென்றான்….
அவளை வதைப்பவனும் அவனே… அதில் அவள் பெரும் வலியை விட அவனுக்கே அதிகம்….
வெறும் மூன்று முழம் தாலி கட்டி வந்த பந்தமா..?? இல்லையே… என்று அவள் பிறந்ததும் இவன் கையில் ஏந்தி… அவள் அவன் சுண்டு விரலை இறுகப் பிடித்துக் கொண்டாளோ…. அன்று தொட்டு…
அவனுள் பொதிந்து போனவள்… அவள் குறும்பு, சிரிப்பு, அழுகை, கோபம், வலி என அனைத்தையும் அறிந்தவன்.. அவன் அன்றோ….
இந்தக் கணத்தில் அவன் உயிர் யார் என்றால், சடுதியில் பதில் வரும், ‘மதுரா’ என்று….
ஆனால் அவளுக்கு…???
எதை நாம் அதிகம் நேசிக்கின்றோமோ அதுவே நம்மை அதிகம் காயப்படுத்தும்… அதுபோலத் தனாவிற்கும்…
அவன் ஆசை மனைவியே மறக்க முடியாத ரணத்தைத் தந்துவிட்டுச் சென்றுவிட்டாள்…. அதற்காக விட்டுவிட முடியுமா…. வலிக்கும் என்று பிள்ளை பெறாமல் இருக்க முடியுமா, அதுபோலவே….. தான் தனாவின் காதல்…..
யாரும் வேண்டாம் என்று சென்றவளை…. அப்படியே விட முடியுமா…??? அவளை விட அவளைப் பற்றி அறிந்தவனுக்குத் தெரியாதா..???? அவளை மீண்டும் குடும்பத்தோடு சேர்க்க வேண்டும் என்றே தான்… வந்ததே….
இதோ அவள் அந்த குடிகாரர்களைப் பார்த்து அலறி அடித்து ஓட, எங்கே அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற படபடப்புடன் அவளைத் தொடர்ந்து வந்தவன்… அவள் வீட்டுக்குள் செல்வதைப் பார்த்த பின்னரே…. நிம்மதி வந்தது….
அழகான காலைப் பொழுது…. குளிரான காற்று… முகம் காட்டத் துடிக்கும் சூரியன்…. ரம்மியமான மனநிலை, ஆனால்…
இரண்டு ஜோடிக்கும் ஊடலோடு விடியல்….
லாஸ் ஏஞ்சல்ஸ்..
சூரியன் உதிக்கும் முன்னே எழுந்த நிரஞ்சன் குளித்துத் தயாராகி வெளியே சென்றான்.
சரியாக ஹரிச்சந்திரன் குடும்பம் காலை வேலையில் மூழ்கியிருந்த சமயம்.
அவர்கள் முன்னால் பட்டு வேட்டி சட்டையில், நெற்றியில் குங்குமம் வைத்து, பளிச்சென்று பல்லைக் காட்டித் கொண்டு வந்து ஹரிச்சந்திரனிடம், “அங்கிள், இந்தாங்க அஷ்டலட்சுமி கோவில் பிரசாதம்…!” என நீட்டினான்.
“நீ எப்போப்பா கிளம்பிப் போன…?” என ஆச்சரியமாகக் கேட்டார்.
“அது வழக்கம் போல அதிகாலையிலேயே எழுந்து கோவிலுக்குப் போயிட்டேன்… கோவிலுக்குப் போனாத்தான் அந்த நாள் எனக்கு விடியும் அங்கிள்…!” என வாய் கூசாமல் புகழ்ந்தான்.
அதை நம்பி, “இந்தக் காலத்துல இப்படிப்பட்ட புள்ளையா…?” என மெச்சிக் கொண்டவர்.
அப்போதுதான் தூங்கி எழுந்து ஊத்த வாயோடு வந்த தன் மகள்களைப் பார்த்தார். மணியைப் பார்க்க அது எட்டைத் தாண்டியது; பற்களை நரநரவென்று கடித்துக்கொண்டார்.
“நீங்க எல்லாம் என்ன பிள்ளைகளோ…! இந்தப் பையனைப் பார்த்தாவது திருந்துங்க…!” என எரிந்து விழுந்தார்.
“அக்கா, அந்த கரடி காலையிலேயே நம்மள எப்படித் திட்டு வாங்க வைக்குறான் பாரு…!” என அம்மு யாழினி காதை கடித்தாள்.
“விடு அம்மு, அப்பா இல்லாத போது மாட்டாட்டும் துண்ட காணோம், துணியும் காணோம் என்று ஓட வைப்போம்… அதுவரை அமைதியா இரு…!” என இவளும் அதே போல் சொன்னாள்.
“அங்க என்ன குசுக்குசு இடியட்ஸ் போய் பிரெஷ் பண்ணிட்டு கிளம்புங்க…!!” என கத்த, அவர்கள் தலைதெறிக்கத் தங்கள் அறைக்குச் சென்று தயாராகினர்.
பின்பு நிரஞ்சனிடம்…..
“எல்லாம் சரி தம்பி, இப்படியே தான் காலேஜ் போகப் போறீங்களா….!!” என ஒரு மாதிரியாகக் கேட்க….
“ஐயோ இல்லை அங்கிள்…. இடத்துக்கு ஏத்த மாதிரி நம்மை மாத்திக்கணும்னு எங்க வீட்டுப் பெரியவங்க சொல்லி இருக்காங்க… நான் எப்பவும் அவங்க பேச்சைத் தட்டவே மாட்டேன் அங்கிள்…. இப்போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்….!!” எனப் போனவன், நங்கூரத்தை நச்சென்று போட்டுவிட்டுப் போக….
“எவ்வளவு அருமையான பிள்ளை….!!” என ஹரிச்சந்திரன் நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டார்… இவருக்கு எப்படித் தெரியும்… அவன் அக்யூஸ்ட் நம்பர் ஒன்னு என்று….
ஆம், மதுரா கூட இவனுக்கு அடுத்தபடி தான் வருவாள்….
வேஷ்டி சட்டையில் சென்றவன், ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட் என நவநாகரிகமாகத் தயாராகி, பவ்யமாக வந்து உணவு மேஜையில் அமர…
“என்ன அங்கிள், இன்னும் யாரும் சாப்பிடலையா….?” என கேட்க…
“எல்லாம் உனக்காக தான் தம்பி…!!”
“அச்சச்சோ அங்கிள், எனக்காகத்தான் காத்திருக்கிங்க … மன்னிச்சுடுங்க அங்கிள், தெரியாம காக்க வச்சிட்டேன்…!!” என வருத்தமாக கூற…
“அக்கா கொழுப்பு பார்த்தியா… படிக்கட்டு கிட்ட ஒளிஞ்சு நின்னு கேட்டுட்டு வந்து நல்ல புள்ள மாதிரி நடிக்குறத…!!”
“ம்ம்ம்..”
“அடடே விடுப்பா, இதுக்கு போய் எதுக்கு வருத்தப்படுற…!!” என உருகியவர்… என்றவர்… வெண்ணிலாவிற்கு கையை காட்ட…
அவர் அனைவருக்கும் சாப்பாடு பரிமாற…
யாழினிக்கு வைக்க போகும்போது, “அங்கிள்…” என நிரஞ்சன் கண்ணைக் காட்ட, ஹரிச்சந்திரான் முறைத்தபடி, “அவளுக்குத் தண்டனை கொடுத்து இருக்கேன்…!!” எனச் சொல்ல, அம்மா-மகள் இருவரும் பாவமாகப் பார்த்தனர்…



