மதுரம் சிந்தும் காதலே-12

“என்ன ப்லோரா சொன்னதை கேட்கலையா….. ஓ… மேடம் தான் என்கிட்ட மயங்கி கிடந்தீங்களே…!!” என இகழ்வாகச் சொன்னவன்…

அதில் மதுராவின் முகம் கருக்க நின்றாள்….

“இப்போ வருத்தப்பட்டு என்ன பண்ண முடியும்…. இந்த ரெண்டல் அக்ரீமெண்ட்ல கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்….!!” என அவள் மேல் அக்ரீமெண்ட் பேப்பர்களைத் தூக்கிப் போட…

அதை வாங்கிப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்….

ஏனெனில் அவள் கையெழுத்து போடும்போது அதில் கவனிக்காமல் விட்ட வரிகள் எல்லாம் பூதாகரமாகத் தெரிந்தது….

முக்கியமாக… வீட்டை காலி செய்ய வேண்டும் என்றால் முன்பாகவே நோட்டீஸ் கொடுத்து இருக்க வேண்டும், இல்லை என்றால் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என மிக பெரிய தொகை குறிப்பிட்டு இருக்க… இல்லையென்றால் ஜெயிலுக்குச் செல்ல வேண்டும் என இருக்க தலை சுற்றிப் போய் நின்றாள் மதுரா….

“என்ன பண்ணப் போறீங்க மேடம்? எனக்கு இங்க கம்பெனி கொடுக்கப் போறீங்களா இல்லை ஜெயில்ல போய் கம்பி எண்ணப் போறீங்களா…?” என எகத்தாளமாகப் புருவத்தை உயர்த்தி கேட்டவன், அவள் விக்கித்து நின்ற நிலையைப் பார்த்து…

அவள் காது அருகே வந்து…. “இப்போ ஓடிப் பார்க்கலாம்…!!” என்றவன்…

ஹாங்…. என விழி விரித்துப் பார்த்தாள்….

நேரம் நள்ளிரவு… இடம் லாஸ் ஏஞ்சல்ஸ்…..

பூட்டிய அறைக்குள் கையில் புத்தகத்துடன் இருந்த நிரஞ்சன்…. அவனது கண்களும் நினைவுகளும் அங்கு இல்லை என்பதை….

அவன் விரிந்த புன்னகை அரும்பும் முகம் சொன்னது…..

அவன் நினைவுகள்… இன்று காலை அவன் கையில் விழுந்த அந்தப் பெண் மீதே….

கனவா… இல்லை காற்றா…

கனவா… இல்லை காற்றா…

கையில் மிதக்கும் கனவா நீ…

கை, கால் முளைத்த காற்றா நீ?

கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…

நுரையால் செய்த சிலையா நீ? என அவளைக் கையில் ஏந்தி கொண்டு அந்த வளாகம் முழுவதும் சுற்றி வந்தவனை…

அடித்து அடித்து ஓய்ந்து போனாள் அந்த வெளிநாட்டு அழகி…

ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளால் கழுவித் ஊற்றுவது கூட புரியாமல்… அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்ற அந்தச் சொரணைக் கெட்ட மனிதனை அவள் அடித்துவிட்டு, அவனிடமிருந்து துள்ளி விலகி ஓட….

அவள் அடித்தது கூட வலிக்கவில்லை என்பது போல நின்றவனைப் பார்த்து, ‘பைத்தியமா இவன்?’ என்பது போல் அங்கிருந்த மாணவர்கள் பார்க்க, இளித்துக்கொண்டே நின்றான் நிரஞ்சன்….

அவளைத் தொட்டுத் தூக்கிய மயக்கத்திலே அலைந்து திரிந்தவன்….

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான்…..

அது ஒரு வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வீடு…. அங்கு தங்கிப் படிப்பதற்காக.. பேயிங் கெஸ்டாகத் தங்கி இருக்கிறான்…

கண்ணை மூடினால் கனவில் நீதானா என்பது போல், அவன் அழகி காதல் அரக்கியாக வந்து கொல்கிறாள்…. என அவளோடு கனவில் உலக நாடுகள் முழுவதும் சுற்றி டூயட் பாடிக்கொண்டிருக்க…

அதற்கு இடையூறாக கிரீச் என்ற சத்தம் கேட்டு கடுப்பானவன்… மீண்டும் கனவு தொடர….

யாரோ உள்ளே வரும் காலடி சத்தம் கேட்டு…. திடுக்கிட்டான்; ஏனென்றால் உள்பக்கமாகத் தாழ்பாள் போட்டு இருக்கும் வீட்டுக்குள் யாரோ வருகிறார்கள் என்றால், நிச்சயமாக அது திருடர்களாகத்தான் இருக்கும் என்று நினைத்தவன்.

மெல்ல மெல்ல சத்தம் எழுப்பாமல் அவன் அறையைத் தாண்டி வந்து வெளியே எட்டிப்பார்த்தபோது… அப்போது ஒரு உருவம் கருப்பு நிற ஜெர்க்கினைப் போட்டுக் கொண்டு பதுங்கிப் பதுங்கி உள்ளே வருவதைக் கண்டவன்….

அவனும் அதே போல் பதுங்கிச் சென்று, திருடன் தப்பிக்காமல் இருக்க பின்னால் இருந்து அணைத்து, கழுத்தை இறுக்கிப் பிடித்தபடி கத்தினான்….

“அங்கிள், ஆண்டி, வாங்க! திருடன்… திருடன்…!” என கத்தினான்….

அதில் அவன் கையில் சிக்கிய உருவம் “ம்ம்ம்ம்” என கத்தியபடி மறுக்க…

“ஏய், என்ன தப்பிக்கப் பார்க்கிறாயா? நான் இருக்கும் போதே இந்த வீட்டுக்குள் திருட வருவாயா? அங்கிள், சீக்கிரம் வாங்க… யாராவது போலீஸ்க்கு போன் பண்ணுங்க…!” என மீண்டும் கத்தினான்…

திருடன் அவன் கையில் இருந்து தப்பிக்கப் பார்க்க…

“உன்னை கிடுக்குப்பிடி போட்டுப் பிடிக்கிறேன்” என அவன் கழுத்திலிருந்து கையை கொஞ்சம் கீழே இறக்க…

அது திருடன் இல்லை, திருடி என அறிந்தவன் யார்… எனப் பார்ப்பதற்குள்…

திரு மற்றும் திருமதி ஹரிச்சந்திரன், வென்னிலா… அவர்கள் மகள் அம்மு… அவ்வீட்டின் உரிமையாளர்கள்…

“என்னாச்சு நிரஞ்சன்..?” என கேட்டபடி வந்தவர்கள்…

அவன் பிடியில் இருந்த உருவத்தைப் பார்த்துவிட்டு…

“அவளை விடு நிரஞ்சன்….!!” என்றதும் விலகிச் சென்றான்…

“போலீஸ் போகத் தேவையில்லை… இது எங்க வீட்டுத் களவாணி தான், நாங்க பார்த்துக்கிறோம்” என்றவர்….!!

“மணி என்னாச்சு….??” என அதட்டலாகக் கேட்க…

“ரெண்டு பா…!!” என நலிந்து கூறிவிட்டு அவரைப் பார்க்காமல் குனிந்து கொண்டாள்… அவள் பெரிய மகள்… யாழினி.

“இது என்ன கோலம்… யாழினி…. ஒரு பெண் பிள்ளை… இப்படி அர்த்த ராத்திரியில வந்தா… என்ன பிள்ளைய வளர்த்து வச்சிருக்கானுன்னு ஊர்ல காரி துப்பனுமா…??? எல்லாம் நீ குடுக்குற செல்லம் தான்…!!” மனைவியைச் சாடியவர்…

“இதுக்கு பனிஷ்மென்ட் அவ பர்த்டே பார்ட்டி கட்…. அதோட ரெண்டு நாளைக்கு இவளுக்கு சாப்பாடு பாக்கெட் மணி கட் பண்ணு…. இல்லை உனக்கு சாப்பாடு கட் பண்ணிடுவேன்…!!” என கத்தி விட்டுச் சென்றார்..

அங்கே நின்ற அம்மா மற்றும் மகள்கள் மூவரும் ஹரிச்சந்திரன் போனதும்… நிரஞ்சனை முறைக்க…

அவன் இவர்களைக் கவனித்தால் தானே… அவனே தான் காட்டி கொடுத்தது தன் அழகுத் தேவதையவளா என உறைந்து போய் நிற்க….

“மம்மி இந்த ஆளால தான் அக்கா… மாட்டின…. இவனை சும்மா விட கூடாது….!!” மூவரும் அவனைச் சுற்றி வலம் வந்து ஏதோ வில்லன் கேங்க் போல் பேச… அது நிரஞ்சனுக்கு காமெடியாக இருந்தாலும் அவர்களை மேலும் வெறுப்பேற்ற நினைக்காமல் அமைதியாக நிற்க…

“விடு அம்மு, ஆள் எங்க போகப் போறான்? இங்கதான் படிப்பு முடியுற வரை இருக்கணும், பார்த்துக்கலாம்…!!” என யாழினி கூற மற்ற இருவரும் அதை ஆமோதித்து

அவனை முறைத்துக் கொண்டே அவர்கள் அழைத்துச் செல்ல, இறுதியாகச் சென்ற யாழினியை கடித்துத் தின்பது போல் பார்த்தவன், தன் கைகளை எடுத்து முத்தமிட, முதலில் அவனைப் புரியாமல் பார்த்தவள்… அவன் கண்கள் போன திசையை வைத்துப் புரிந்து கொண்டவள்… கண்களை விரித்து “ராஸ்கல்” எனத் திட்ட, அவன் கைகளை ஜூஸ் பிழிவது போல் காட்ட…

“சீ..” என உள்ளே ஓடிவிட்டாள்…

அவள் செல்வதைப் பார்த்தபடி தலையைத் தேய்த்தபடி நின்றவன்…

“யாஹூ…” என கத்தியபடி துள்ளலோடு அறைக்குச் சென்றான்….

அவன் துள்ளலுக்குக் காரணம் இருந்தது…

இன்று காலையில் கையில் கிடைத்த மலரைச் செண்டை விட்டவனுக்கு… அவள் பெயர், டிபார்ட்மென்ட் எதுவும் தெரியாமல் நாள் முழுவதும் அலைந்து திரிந்த அவனுக்குப் பலன் பூஜ்ஜியமாகவே இருக்க, சோர்ந்து போய் வீடு வந்தவனுக்கு…

பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவி அவன் மடியிலே விழுந்தது போல் அவளும் அவனும் ஒரே இடத்தில்…

எப்படியும் அவள் மனதில் இடம் பிடித்து விடுவேன் என்ற நம்பிக்கையில், அவள் நினைவுகளோடு தூங்கச் சென்றான்…

ஐயோ பாவம் பிள்ளைக்கு எப்படிச் சொல்வேன்…. அவனுக்கு இது பிக்பாஸ் அல்டிமேட் விடக் கஷ்டமான டாஸ்க்… என்று…

புயலாய் என்னுள் நுழைந்தவளே…..

பூவாய் என்னை

தீண்டியவளே….

உன்னைச் சுற்றியே

நகர்கிறதடி

என் வாழ்க்கை

என் காந்தப் புயலே…!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top