விமானத்தில் அமர்ந்து மதுராவிற்கு நினைவுகள் பின்னோக்கி சென்றது….
விழா முதல் நாள் இரவு….
இந்திர பவனத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு அந்த நிலவொளியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் மின்னியது..
பணியாட்கள் அனைவரும் தங்கள் வேலையை முடித்து கொண்டு உடல் கட்டையாக நீட்டி விட்டனர்..
அப்பொழுது ஒரு உருவம் சத்தம் எழுப்பாமல் அந்த மாளிகையின் பால்கனியில் வெளியே எட்டி பார்த்தது….
அங்கே மற்றொரு உருவம் வெளியே நின்று கொண்டிருந்தது….
அந்த இரண்டு ஆள் உயர மதில் சுவற்றை எப்படி தாண்டவென்று ஆராய்ந்து கொண்டு நிற்க..
அருகில் கிடந்த ஏணி மீது டார்ச் லைட் அடித்து காட்ட…
அந்த இருட்டிலும் கண்களில் பளிச்சிடல் தெரிய… அதை பற்றி மேல் உள்ள வந்தவள்….. அங்கு வைக்க பட்ட…. பொருட்கள் மீது விழுந்து வைக்க…..
“யாருடா அது..!!” என கண்ணை கசக்கி எழுந்து விட்டார் வேலா….
அதில் அரண்டு போன அவ் உருவம் அருகில் இருந்த தூண் பின்னால் ஒளிந்து கொள்ள…
அதன் விம்பம் வேலா கண்ணுக்கு மங்களாக தெரிய
“யா.. ர்ர்ருஉஉஉ..!!”என திகில் அடைந்தார்..
அதற்குள் அருகில் இருந்த பணியாள்.. “என்ன வேலா நடு ராத்திரியில தனியா உக்காந்து புலம்பிட்டு இருக்க..!!”..
அண்ணே அங்கே எதோ கருப்பா போச்சுனே…..என பயத்தில் கைகால் வெடவெடக்க சொன்னான்….
“அது எதாவது சமகோடங்கியா இருக்கும்.. கம்முனு படுடே என்றார்..!!”அவர் கண்களை திறக்காமல்..
“எதே சமகோடங்கியோ..!!” என அஞ்ச..
“அதற்கு ஏற்றாற்போல் ‘ஜல் ஜல்’ என்ற சத்தமும் தொடர்ந்து ‘ஆவூஓஓ…’ என சத்தமும் வர வேலன் பயத்தில்”
“காக்க காக்க கனகவேல் காக்க..”
“நோக்க நோக்க நொடியில் நோக்க..”
“தாக்க தாக்க தடையறத் தாக்க..”
“பார்க்க பார்க்க பாவம் பொடிபட..!!” என போர்வையை மூடிக்கொண்டு குப்புற படுத்துக்கொண்டே பாடினார்..
அவரது பயத்தை பயன்படுத்திக்கொண்டே பால்கனி அருகே போன உருவம் அங்கு தொங்கிய கயிற்றை பிடித்து மேலே ஏற….
அதை போர்வைக்குள் இருந்து பார்த்த வேலன்….
“ஐயோ இப்போ மேல பறக்குதே. எப்ப முனியா என்ன இதுல இருந்து காப்பாத்தி விடு சாமி..!!” என ஊரில் உள்ள அனைத்து தெய்வத்திற்கும் பெட்டிஷன் போட்டார்….
கஷ்டப்பட்டு காற்றில் தூங்கி மேலே ஏறிய அந்த உருவம் பால்கனியை தாண்டி குதிக்க முடியாமல் துணைக்கு அழைக்க….
“ஸ்.. ஸ்… நிரு மாமா… இறங்க முடியல வந்து தூக்குடா…!!”. என மெல்லிய குரலில் அழைக்க….
பதில் இல்லை அப்பக்கம்….
“டேய் நிரு மாமா எங்கடா இருட்டுல தனியா விட்டுட்டு….. போய்ட்ட…. பலன் இல்லை….
“டேய் மாமா பழி வாங்குற நேரமாடா… இது…??? வீட்ல யாராவது பார்த்தா காலிடா… ப்ளீஸ் மாமா வாயேன்..!!” கெஞ்சலுக்கு மாறினாள்….
“டேய் இப்போ நீ மட்டும் வரல….. என்னோட எல்லா களவாணி தனத்துலயும் உனக்கும் பங்கு இருக்குன்னு சொல்லிடுவேன் அப்புறம்….ராதிகா கிட்ட அடிவாங்கனா மேட்டர் சொல்லிடுவேன்…. !!” கெஞ்சலுக்கு இருந்து மிரட்டலுக்கு தாவி விட்டாள்….அவள் மதுரா…..
மிரட்டலுக்கு பயன் இருந்தது….இரு கைகள் அவளை தூக்கியது…..
“அப்படி வா வழிக்கு…!!” என்றபடி அந்த கைகளுக்கு சொந்தமான புஜங்களைப் பிடித்துக்கொண்டு மேலே வந்தவள்…. தடுமாறி எதிரில் இருந்தவன் மீதே விழ…
இருவரும் உருண்டனர்…. அவள் மெல்லிய வயிற்றில் மீசை குத்த, வட்ட நாபி குளத்தில் அவன் அதரங்கள் அழுந்த….
“ஹா… ஸ்ஸ்…. எருமை ஒழுங்கா பிடிக்க மாட்டியா…. மாமா… எந்திரிடா மாமா விட்டா வயித்துல பள்ளம் போட்டுடுவ போல இருக்கு…..!!’என தன் முடியை பிடித்து தூக்க…..
“ஆஆஆஆ….!!” என அவள் வீரிட்டத்தில் மொத்த அரண்மனையும் விழித்துக்கொண்டது…..
அனைவரையும் ஓட விடுபவளை அலற வைப்பவன் நம் தனஞ்செயனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்….
விரிட்டலறியவளின் வாயிலிருந்து ஹிட்லர் மாமா என பூனைக்குரல் வந்தது…
அப்புறம் என்ன நேரா பஞ்சாயத்து தான் மக்களே…
அதிவீரராமபாண்டியன் நடுவே அமர்ந்திருக்க சுற்றி அனைவரும் நின்று கொண்டிருந்தனர்….
அனைவரும் அமைதியாக இருக்க…
வேலனோ……”ஏன் பாப்பா நீதானா சுவர் ஏறுனது.. நான் கூட சாமகோடாங்கின்னு நினைச்சு குளிர் காய்ச்சல்ல கிடந்தேன்…. இப்படி பயம் காட்டியே பாப்பா…!!” என போட்டுக் கொடுக்க…..
சுத்தம் சும்மாவே இங்க நம்மள வச்சி செய்வாங்க இவர் வேற எரியுற தீயில எண்ணெய ஊத்துறாரே….!! என உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே பல்லை ஈ என இளித்து வைத்தாள் மதுரா…..
எங்க போனாளாம் அதட்டலாக…!”… அதிவீரர் கேட்க….
இன்டர்வியூக்கு போயிருந்தேன் மாமா…!!” என வீர பாண்டியனிடம் சொன்னாள்….
ஏன் சொல்லிட்டு போக வேண்டியது தானா? அது என்ன திருட்டு தனமா யாருக்கும் தெரியாம போனது மட்டும் இல்லை….வீட்ல இருக்குற மாதிரியே பம்மாத்து பண்ணிட்டு போயிருக்கா…. இதுக்கு எல்லாம் தைரியம் எங்க இருந்து வந்தது…..!! என்றதும் மதுரா சுந்தர பாண்டியன் மகனான நிரு என்கிற நிரஞ்சனை பார்க்க….
சண்டாளி நம்மள கோர்த்து விடுவா போல இருக்கு…!! என பயந்தவன் கண்களால் அவளிடம் கெஞ்ச…
சே ஒழிஞ்சு போ..!! என செய்கையில் சொன்னவள்…
சொன்னா போக விட மாட்டிங்க அதான் சொல்லாம போயிட்டு வந்தேன் மாமா…!! என அவளின் தாத்தாவின் கேள்வி அனைத்துக்கும் மாமாவிடமே பதில் சொன்னாள்…
இது அங்கு இருப்பவர்களுக்கு புதிதாக இல்லை என்பதால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை…
ஓ அவ்வளவு தைரியம் ஆயிடுச்சா… கிழவன் தானே ஏமாத்திடலாம்னு நினைச்சிங்களா… இந்தக் குடும்பத்துக்கு ஒரு கௌரவம் இருக்கு… அது கெட்டுப் போக நான் விடமாட்டேன்… குற்றம் செய்தது யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்..!! எனக் கூறினார் நாட்டாமை…
அதிவீரராமபாண்டியர்க்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்னும் கொள்கையை உடையவர்; தவறு செய்தது யாராக இருந்தாலும் தண்டனை கொடுத்தே தீரவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் நவீன கால மனுநீதி சோழன் அவர்.
“என்ன பெருசா கொடுத்திட போறீங்க…மிஞ்சி மிஞ்சி போனா வீட்டைவிட்டு அனுப்புவீங்க அதானே…!” என்பதுபோல் அசால்டாக பார்த்தவள் அமைதியாக உறங்க போனாள் மதுரா. ஆனால், அவளுக்கு தெரியாது நாளைக்கு பெரிய இடியை அவர் போட போகிறார் என்று.
குயில்கள் கூவ… பறவைகள் வேட்டை தேடிப் பார்க்க….தெளிந்த வானம் கொண்ட அழகான விடியல்…..
ஆனால் மதுராவிற்கு…???
நாளைக்கே மதுராவுக்கும்… தனாவுக்கும் கல்யாணம் என மின்னாமல் முழங்காமல் இடியை அவள் தலையில் போட்டார்……
“நோ….முடியாது…. எனக்கு இஷ்டம் இல்லை….!!” என அவள் கத்த…..
“இங்க யாரோட அபிப்ராயமும் நான் கேட்கல தகவல் மட்டும் தான் சொல்றேன் எல்லாரும் போய் தயாராகுங்கள் என்றார்..!!’.
அப்பொழுதும் விடாமல்….”நிரு மாமாவைக் கூட கல்யாணம் பண்ணிக்குறேன்… ஹிட்லர் மாமா வேணாம்” என கெஞ்ச…..
“அடி பாதகத்தி..!” என நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்…. நிரஞ்சன்…. பின்னே அவளைப் பற்றி அறிந்தவன் எவனும் திருமணம் செய்ய ஒத்துக் கொள்வானா…
நான் சொன்னது சொன்னதுதான், எந்த மாற்றமும் இல்லை…!! என்று அறிவிப்பு போல கூறினாள்.
உடனே சந்தியாவைப் பிடித்து, “அக்கா, நீ ஹிட்லர் மாமாவை விரும்புறதானே அக்கா? இங்க மனசு பிடித்ததுக்கு மேல ஜாதகம் எல்லாம் ஒன்னும் பெரிய விஷயமே இல்லக்கா. நீயே சொல்லேன்…!!” என அவளைச் சரிக்கட்ட நினைத்தாள்.
ஆனால் அவள் எப்படி சொல்வாள்? அவளுக்கு கதிரவனைப் பிடிக்கும் என தாத்தாவிடம் சொன்னதால்தான் தனாவிற்கு மதுராவை பேசி முடித்தனர் என்று….
அதன் பிறகுதான் அவள் ஒவ்வொருவரிடமும் கெஞ்சியும், யாரும் கொஞ்சமும் செவி சாய்க்காமல் சென்ற கோபத்தில் எடுத்த முடிவை நினைத்து கலங்கினாள். யாருக்கும் தான் ஒரு பொருட்டே இல்லை என்று….
என்ன இந்த நிலைமைக்கு தள்ள அவங்கதான் காரணம். அதனால நான் எந்த தப்பும் பண்ணல, நான் கவலைப்பட மாட்டேன்… என தனக்குத் தானே சொல்லி தேற்றிக் கொண்டாள்.
அவளுக்கு தனஞ்செயனுடனான திருமணம் தண்டனையாகத்தான் தெரிந்தது, அவள் அப்போது இருந்த மனநிலையில்…
பெண்களுக்கு பிடித்த வாழ்க்கை துணை அமைந்துவிட்டால், பூமியில் அதுபோல் சொர்க்கம் வேறு எதுவும் இல்லையே…



