என்ன மச்சான் மூஞ்சி பளிச்சென்று ஒரே பிரகாசமாக இருக்கு..??
அதுவா… நீ மாமா ஆகிட்ட மாப்பிள.. இன்னும் ஏழு மாசத்துல உனக்கு ஒரு மருமகனோ மருமகளோ வரப்போகுதுடி..!!!
தீயா வேலை செஞ்சிருக்க போல..!!! இதுல வெட்க கன்றாவி வேறயா, பார்க்க சகிக்கல..!!!!” என அவனின் வெட்கம் கண்டு கேலி செய்திட…
ஏன் அங்க மட்டும் எப்படியாம்…? மகிழ் மாதிரி அமைதியான பொண்ணு கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்… (இதுக்கு சங்கம் பொறுப்பல்ல )
யாரு அவ அமைதியா? நீ பார்த்ததுண்டா ஏன் டா.. இன்னைக்கு காலையில கூட பவளபாட்டிய பார்த்துட்டு அந்த குதி குதிச்சா….!!”.என்றவனுக்கு காலையில் அவள் இழுத்து சொருகிய புடவையோடு நின்ற காட்சி வர புன்முறுவல் தோன்ற…
“இப்போ எதுக்குடா சம்பந்தம் இல்லாம சிரிக்கிற? என் தங்கச்சி ஏதும் காலையில உன் மண்டைய பூரி கட்டையால பொளந்துடுச்சா? டேய் மாப்புள டேய்..!!!” என வளவன் கனவில் மிதந்த ராவணனை உலுக்கி நிகழுவுக்கு கொண்டு வர…
“இல்ல மச்சான்..!! எனக்கு உதவி செஞ்ச பவளதுக்கே இந்த அடின்னா..!! எனக்கு இந்த ஐடியா கொடுத்ததே நீதான் தெரிஞ்சா உன் நிலைமை என்னனு நினைச்சு சிரிச்சேன்.. ஹாஹா…!!!!”
“எதே அட கொலைகார பாவிகளா… எதோ மாப்புள நல்லா இருக்கட்டும்னு ஐடியா குடுத்தா.. என் கதைய முடிச்சிடுவாங்க போல இருக்கே… புருஷன் பொண்டாட்டி எப்படியோ போங்கடா டேய் இதுக்கு மேல நான் வரல சாமி…!!” என மகிழின் கோவத்தை நினைத்து பம்மியவனாக வளவன் சொல்ல…
“அப்படியெல்லாம் சொல்ல கூடாது மச்சான்.. அவ உன் அமைதியான, அடக்கமான தங்கச்சி ஆச்சே, நீயே அப்படி சொல்லலாமா..!!!”
ஏன்டா ஏன்..?? இந்த கொலைவெறி??
ஹா ஹா.. நீதான் தைரியமான ஆள் ஆச்சே, சமாளிச்சு பாரு..?
சிரிச்சது போதும், இப்போ எங்க போயிட்டு இருக்கோம்..!!
(அதான் குற்றவாளியைப் பிடிக்கப் போற நேரத்துல என்ன இளிப்பு வேண்டி கிடக்கு… விட்டா ஐட்டம் சாங் கேட்பாங்க போலயே…)
ம்ம்ம்…நமக்கு கிடைச்ச தகவலை வச்சி நாம இப்போ அரிசி ஆலைக்கு தான்..!, என அதுவரை நகைமுகமாக வந்தவர்கள் கடமையை தத்தெடுக்க இறுக்கமாக மாறிப் போயினர்..
இருவரும் ஜீப்பில் சிங்கம்பட்டி வந்து சேர்ந்தனர்.
ஆம்…! எந்த ஊர் அவனைத் தூற்றியதோ அதே ஊரில் உள்ள சில நல்லவர்களின் முகத்திரையைக் கிழிக்கவென வந்துள்ளான்.
வந்தவன் நேராகச் சென்றது அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமான அரிசி ஆலைக்கு. அங்கு நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள், போதைப் பொருட்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான ஒப்பந்த பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
“என்ன இது..?? என்ன நடக்கிறது இங்கே…??” என ஒன்று திரண்டனர் ஊர் மக்கள்.
என்ன ராவணன் தம்பி இது…? என வந்தார் தலைவர்.
ம்ம்ம் சொல்றேன்…!! என்ற ராவணன் வளவனுக்கு கண் அசைக்க, அவர்கள் முன் கைகள் கட்டப்பட்ட ஒருவனைக் கொண்டு வந்து நிறுத்தினர்…
இவனா..??? என சிலர் அதிர்ச்சியிலும், சிலர் ‘இவன் எப்படி இங்கே’ என்ற ஆச்சர்யத்திலும் இருந்தனர்…!!!
(அட எவன்னு சொல்லுங்கய்யா… ரீடர்ஸ் கேக்குறாங்களே!)
“ரோடு காண்ட்ராக்ட்ல இந்த ஊரை ஏமாத்திட்டு ஓடிப்போன அதே பழனியப்பன் தான்…!!” (அட இந்த ஏழாவது எபியில் ஓடிப்போன ஆளா..)
இவனை ஜெயிலில் போடாமல் இங்கே ஏன் தம்பி கூட்டிட்டு வந்திருக்கீங்க..???
“அத அவன் வாயாலே சொல்லுவானாம் நீங்க கேப்பிங்களாம்..!”என கைகளை தூக்கி நெட்டி முறித்தவன் ஜீப்பின் மீது சாய்ந்து நின்று கொண்டு அவர்களுடன் கதையை கேட்க…
“எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க.. ரோடு காண்ட்ராக்ட்ல மட்டும் இல்ல ராஜதுரை ஐயா எடுத்த எல்லா வேலைலையும் அவர ஏமாத்தி தப்பு பண்ணி அவர மாட்டி விட நினைச்சது நான் தான்…அது மட்டுமில்ல…?!” என்றவன் தயக்கத்துடனே இராவணனையும் வளவனையும் பார்க்க..
அவர்கள் சாதாரணமாக இருந்தாலும் அவர்களின் பார்வையின் தகிப்பு அவனை உண்மை சொல்ல வைத்தது…
“என்ன இந்தமாதிரி செய்ய சொன்னது.. சின்னவர் குணசீலன் தாங்க..!!”
“இத எங்கள நம்ப சொல்றியா…..?? எங்க ஐயா மேலயே பழி போடுறியா…?” என சீற்றத்துடன் கேட்டனர் குணசீலனின் விசுவாசிகள்
“நீங்க என்ன நம்ப மாட்டீங்கன்னு தெரியும்… ஆனா இதப் பாருங்க உங்க ஐயா பண்ணி இருக்கிற வேலைய… கடத்தல் வேலை, கள்ள நோட்டு, போதைப் பொருள்ன்னு இன்னும் நிறைய சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைப் பண்ணிட்டு வராரு… இப்பவும் உங்க ஐயாவ நம்புனா உங்கள மாதிரி முட்டாள் யாரும் இல்ல…!!!” என்றவன் நேராக ராவணனிடம் சென்றவன்…
நீங்க சொன்னது தான் தம்பி கரெக்ட். இவங்கள மாதிரி வெளித் தோற்றத்தையும், விளம்பரத்தையும் நம்புறவங்க இருக்குற வரைக்கும் குணசீலன் மாதிரி ஆளுங்க இவங்கள ஏமாத்திட்டே தான் இருப்பாங்க… என்னை மன்னிச்சிடுங்க தம்பி. பணத்துக்கு ஆசைப்பட்டு உண்மையான நண்பனுக்கு துரோகம் பண்ணிட்டேன்…!!! எனக்கு இந்த தண்டனை தேவை தான். என்ன கைது செய்யுங்க. நான் பண்ண குற்றத்தை ஒத்துக்குறேன். அது மட்டுமில்ல, அந்த குணசீலனுக்கு எதிராகவும் நான் சாட்சி சொல்றேன்…!!!” என்று அவர் முடிக்கவும்.
உடனே எங்கிருந்தோ வந்த தோட்டக்கள் அவரின் உடலை துளைத்து உயிரை குடித்திருந்தது.
எதிர்பாராத இந்தத் தாக்குதலில் மக்கள் பதறியடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடினர்.
தன் கண் முன்னால் இறந்து கிடந்த பழனியப்பனை அதிர்ச்சியாகப் பார்த்த ராவணன்… கொன்றவனைக் குறி வைக்க விடாமல் மக்கள் அலைபாய, தடுமாறி நின்றவனுக்கு வந்தது அலைபேசி அழைப்பு….
அதை எடுக்காமல் அமைதியாக நின்றவனிடம்…
“என்ன மாப்பிள யாரு..??”
“பிரைவேட் நம்பர்ன்னு வருது மச்சான்..!!”
“அவனாகத்தான் இருக்கும் எடு..!”
“ம்ம்ம்…!!!” என அழைப்பை ஏற்றவன்.
என்ன பங்காளி… பழனியப்பன் செத்துட்டானாமே… ஐயோ பாவம்.. அப்புறம் அடுத்து என்ன பண்ண போற.. சரக்க கொண்டு போய் கொடுத்தாலும் எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது… எல்லாம் உங்க அப்பா சொத்துன்னு அவர கோர்த்து விட்டு போயிட்டே இருப்பேன்.. எங்களுக்கு என்ன அது புதுசா… சொல்லு…!!
டேய்…!
ஹா ஹா இதுக்கேவா பங்காளி… இரு இன்னும் இருக்கு.. அப்புறம் ஊர்ல இருந்து மச்சினிச்சி வந்து இருக்கா போல… அது எப்படிடா உனக்கு மட்டும் பொண்டாட்டி.. மச்சினிச்சின்னு… எல்லாம் அழகான பொண்ணுங்களும் உனக்கேவா அது தப்பில்ல அதான் நான் தூக்கிட்டேன்… சும்மா சொல்லக்கூடாது அக்காவும் தங்கச்சியும் உன் பேரையே சொல்றாங்க…என்ன வசியம் பண்ணியோ……அந்த வாய்…
டேய்ய்ய்ய்ய்…மனோஒஒஒ…உன்ன கொன்றுவேண்டா…!!
நீ மட்டும் எங்க கையில கிடைச்சா அப்போ இருக்குடா…!
ஹாஹா..யாரு மச்சானா பேசுறது…உன்னை விட்டுட்டேன் நினைக்குறியா? என் தங்கச்சி, உன் பொண்டாட்டி மாசமா வேற இருக்காளாம்… நீ வருவ, வருவன்னு காத்துட்டு இருக்கா மச்சான்..!!
அப்புறம் பங்காளி, அடுத்து நான் என்ன சொல்ல போறேன்னு உனக்கே தெரியும்.. சோ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்து சேரு, லொகேஷன் ஷேர் பண்றேன்… ஆன், அப்புறம் உன் போலீஸ் புத்தியை காமிக்காத.. நான் என்ன பண்ணுவேன்னு அப்புறம் என் வாயால சொல்ல வேண்டி வரும்… ப்ப்பா உன் பொண்டாட்டி மகி… சும்மா நச்சுனு இருக்காடா..
சீ பொறுக்கி.. என் மேல கை வைக்காத சொறி நாயே… என் அத்தான் வருவார் டா…!! என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பளார் என அறையும் சத்தமும், தொடர்ந்து.. “ஆஆஆஆ..!!” என மகிழினியின் அலறல் சத்தமும் ஒலிக்க.. அங்கேயே துண்டிக்கப்பட்டது அழைப்பு….
“மனோ… மனோ… மனோ…” என ராவணன் காட்டுக் கர்ஜனையில் பூமியும் சில நாழிகை தன் சுழற்சியை நிறுத்தியதோ… புள்ளினங்களும், விலங்கினங்களும் தான் உறைந்து நின்றனவோ…??



