காதல் செய்யாதே இராவணா -20

சென்னை…

அந்த ‘காவலர் குடியிருப்பு’ பகுதியின் ஒரு மாடியில்..

“கண்டாங்கி கண்டாங்கி

கட்டி வந்த பொண்ணு

கண்டாலே கிறுகேத்தும்

கஞ்சா வச்ச கண்ணு

அந்த கண்ணுக்கு

அஞ்சுலட்சம் தாரேன்டி

அந்த நெஞ்சுக்கு

சொத்தெழுதி தாரேன்டி

முத்தம் தாியா…ஒஹோ…ஒஹோஒ….!”என தன் காந்த குரலில் (அவளுக்கு மட்டும் ) பாடியபடி தன் கைபேசி முன்னால் காக்கா வலிப்பு வந்தது போல் கை, கால், முகம் கோணலாக இழுத்துகிட்டு இருந்தார்கள் மகிழினி மற்றும் அவள் தங்கை மாதுரி…”என்னமா ஆச்சுன்னு போய் கேட்டா இன்ஸ்டா ரீஈஈஈ…ல்ஸ்…! இது ட்ரெண்ட் உனக்கு சொன்னா புரியாது சொல்லுவாங்க நமக்கு ஏன் வம்பு…

“பைத்தியங்கள் பலவிதம் அதில் இவள் ஒரு விதம்னு..!” நினைச்சுக்க வேண்டியது தான்..

அவர்கள் ஆடிய ரீல்ஸ் வீடியோவை எடுத்து சரிபார்த்து அது திருப்தி அளிக்காததால், மீண்டும் ஒரு முறை கழுதையைப்போல் காலை உதைத்து ஆடினர்.

“அடியே அக்கா, போதும்டி இதுக்கு மேல என்னால முடியாது. நீ 1000 லைக்ஸ் வாங்கு. ஹ்ம்ம்… இந்த வெயிலில் ஆட முடியாதுமா. எனக்கு எக்ஸாம் இருக்கு நான் போறேன்” என மூச்சு வாங்கியபடி சொன்ன இளையவளிடம், “இன்னும் ஒரே ஒரு வீடியோ மட்டும்டி பட்டு ” என எவ்வளவோ கெஞ்சி, கொஞ்சியும் மசியாமல் செல்வேன் என அடமாக இருந்தவளை…

“போடி, போடி. ரொம்ப தான் பண்ற… நீ வேணா பாரு அக்கா, இன்ஸ்டாவில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கி என் தலைவன் ‘டைகர் ஷெராஃப்கூட’ ஹீரோயினா நடிப்பேன். அப்போ வந்து ஆட்டோகிராஃப் கேட்டு பாரு. இருக்கு… ம்ஹும்…” என சிலிர்த்து கொண்டவள் மீது வந்து விழுந்தது கற்கள்…

அம்மா…ஆஆஆஆ.. யாரோ நான் வளரக்கூடாதுன்னு செய்யற சதியா??

இப்படியே உளறிட்டு இருந்தேன்னா… அடுத்து பாறாங்கல்லு தான் வரும்.. சீக்கிரம் வந்து சேரு.. என கத்தினாள் மாதுரி.

பொறாமை புடிச்சவ.. ஸ்ஸ்ஸ் ஆஹ் வலிக்குதே.. என தலையை தேய்த்து விட்டவாறே அடுத்தடுத்து வீடியோக்களை எடுத்த வண்ணம் இருந்தாள்… ஒரு கட்டத்தில் இசைத்த பாட்டுக்கு ஏர்ப்ப ஆட எண்ணி சுழன்றவள்.. இரும்பு தூண் மீது மோதி நின்றாள்.

ஆவுச்.. ஆஹ யாருடா இங்க அதுக்குள்ள தூணை நட்டு வச்சது.. என நிமிர்ந்து பார்த்தவள்.. அதிர்ச்சியில் கண்கள் விரிய வாயை பிளந்து “ஆஆஆஆ…பூ…தம்ம்ம்ம்ம்..” என கத்தி கொண்டு ஓட முயன்றவளை…தன் உலோக கைகளால் பிடித்து தன் மீது அழுத்தி கட்டிக்கொண்டான்.. ராவணன்..!!

இரவு நேர பணி முடிந்து வந்து உறங்க முயல்பவனை தூங்க விடாமல் தொந்தரவு செய்யும் மகிழினியின் வெண்கலக் குரல்..!! இவன் எழுந்து வருவதற்குள் சிட்டாகப் பறந்துவிடுவாள்.. நம் மோகினி..

இன்று வழமைக்கு முன்பாகவே வந்தவன் மாடியின் மறைவில் நின்று அவர்கள் செய்யும் சேட்டைகளை ரசித்தவன்.. மகிழினி ஆடும் மும்முரத்தில் அருகில் இருந்த குட்டிச் சுவரை கவனிக்காமல் சுழல அவள் விழும் முன் தடுக்க எத்தனித்தவன் மீது மோதி நின்றாள். அவனின் பேராண்மை பொருந்திய தேகத்தைக் கண்டு பயந்து ‘பூதம்’ என கத்திக்கொண்டு போனவள் மீது எரிச்சலுற்று பிடித்து இழுத்தான்.. ஆனால் தன் மீது வெண் பஞ்சு மேகமாக வந்து விழுந்தவள் மென்மையில் கிறக்கமாக நின்றவனை..

“ஐயோ.. அம்மா என்ன பூதம் பிடிச்சி வச்சிருக்கு காப்பாத்துங்க என்னை காப்பாத்துங்க…!!” என்றவளை இன்னும் தன்னோடு சேர்த்துப் பிடித்தது.

ஏய். ஷ்..!! யார பூதம் சொல்ற..?”டூட்டிக்கு போயிட்டு வர மனுஷனை தூங்க விடாம.. தகர டப்பா குரல்ல கீச் கீச்ன்னு கத்திக்கிட்டு. தைய தக்கான்னு லூசு மாதிரி குதிக்கிற..

ஹெலோ…! அது ரீல்ஸ்.. அப்புறம் இப்படி திடுதிப்புன்னு வந்து பயமுறுத்தி கட்டி பிடிச்சி நிக்கிறவரை பூதம் சொல்லாம என்ன சொல்லுவாங்களாம்..?’ என அவன் தன் குரலை கேலி பேசிய ஆதங்கத்தில் சொல்லி வைக்க..

அவன் மூச்சு காற்று அவள் முகத்தில் மோதும் அளவு நெருங்கி நின்றவன்.. அவன் தடிமனான உதடு அவள் சிவந்த அதரங்களில் உரச..”ம்ம்.. என்னையே பூதம் சொல்ற..!! தைரியம் தான்…!! இனி அதை பண்றேன் இதை பண்றேன்னு கிறுக்குத்தனம் பண்ண.. உன்னை தூக்கிட்டு போ….ய்இஇஇஇஇ..’ என ஏற்கனவே அவன் உரசலில் விதிர்த்து நின்றவள் அவன் கடைசி வரிகளில் மூச்சு விட மறந்தாள்…

அவளை கேலியாக பார்த்தபடியே, அவள் காது அருகில் குனிந்து, “நீ நடிச்ச ரீல்ஸை உனக்கே போட்டு காட்டுவேன் சொல்ல வந்தேன்!” என எள்ளலாக சொன்னவனை தள்ளிவிட்டு இதயம் படபடக்க ஓடி சென்றவளை அழுத்தமாக பார்த்த வண்ணம், அவள் இதழ் பட்ட இடத்தை நாவால் தன் உதட்டை வருடியவன் அதன் தித்திப்பை உணர தலையை அழுந்த கோதிய வண்ணம் நின்றான். சில நிமிடங்கள் திரும்பி செல்ல எத்தனித்தவன் காலில் தட்டிய மகிழின் உடைந்த கைபேசியை பத்திரப்படுத்தினான்.

அன்றைக்கான ஓய்வுக்கு பின் தன் பணிகளில் முழுமையாக ஈடுபட்டான்.

மகிழை மறந்துதான் போனான்…

ஒளி மறைந்து இருள் சூழத் தொடங்கிய போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது சென்னை மாநகரம்.

அந்த அடர்ந்த வனப்பகுதியில் மூச்சிறைக்க ஓடி வந்தனர் சில தாடியர்கள்…

“ஓடுறா ஓடு சீக்கிரம்…!”

“டேய் போலீஸ் வரல டா.. ஹா… ஹு.. ம்ம்..” சரி வா சரக்கு மாட்டிக்கிச்சுனு ஆண்டே கிட்ட சொல்லுவோம்..!” என இருவரும் சென்று தகவல் கூறிய மறு நொடியே அவர்கள் உயிர் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றது அவர்களின் ஆண்டேவால்.

புகைந்து கொண்டு இருந்த துப்பாக்கியை ஊதியவாறே.. “சரக்கை விட்டுட்டு நீங்க மட்டும் என்ன ம**த்துக்குடா வந்தீங்க? அந்த சரக்கோட மதிப்பு தெரியுமாடா?” என மாண்டவர்கள் மீது ஏறி மிதிக்க..

“அது யாருடா என் எல்லைக்குள்ள வந்து.. என் சரக்கைத் தூக்குற தைரியம் யாருக்குடா இருக்கு?” என கர்ஜித்தவனிடம்.. ராவணன் பெயரை சொல்ல..

ஒரு நிமிடம் ஸ்தம்பித்தவன்.. “என் கையால தான் சாவணும்னு இருந்தா யாரால மாத்த முடியும்?”

“இடம் தெரியாம மோதிட்ட.. இனி உன்னை விட்டு வைக்க மாட்டேன் ராவணா.. ஆ..” என அந்த காடே அதிரும் வண்ணம் கத்தினான்…

இரவு நேர தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர் காவலர்கள்..

“யோவ்.. எங்கய்யா அந்த ஏட்டு..?”

“சார்..??”

“ஐயா கூப்பிடுறார் போயா போய் பாரு..!!”

“சொல்லுங்க சார்.?” என பவ்யமாக நின்ற தயநிதியிடம்..

“சரக்கோட மாட்டுனவங்கள கூட்டிட்டு வாங்க..”

“சரி சார்.!”

“ஆன்…! அப்புறம்.. எஃப். ஐ. ஆர்.. ஏதும் போட வேண்டாம்.. இது நமக்குள்ளேயே இருக்கட்டும்..”

“சரிங்க சார்..!”

“விஷயம் ரகசியமா இருக்கட்டும்..!” என்றதுக்கும்..

“சரிங்க சார்..!”

என்ன எல்லாத்துக்கும் சரிங்க சார் சொல்றீங்க..?? நாளைக்கே ஏடாகூடமா.. ஏதாவது கேட்டு வைக்கப் போறேன் அதுக்கும் சரிங்க சார் சொல்லிட்டு மாட்டிக்கிட்டு முழிக்கப் போறீங்க….!! என்றவனை புன்னகை மாறாது..

கேக்குறது நீங்களா இருந்தா எல்லாமே சரிதான் சார்..!! என சிரித்து விட்டு சென்றார்..

சென்னைக்கு மாற்றலாகி வந்தது முதல் தான் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியே தொடர.. சற்று சிந்தித்தவனுக்கு தெரியவந்தது.. அது தன் கூடவே இருக்கும் ‘கருப்பு ஆடுகளின்..’ வேலை என்று.. அதிலிருந்து தன் வேலைகள் அனைத்தும் நம்பிக்கைக்குரிய தயாநிதியிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறான்…

சார்..

இது வாசுகி.. இவ கிட்ட இருந்துதான் அந்த 90 கிலோ சரக்க புடிச்சோம்.. இவ ஒரு பரத்தை சார் இவமேல நிறைய கேஸ் இருக்கு ஆனா கோக்கைன் கடத்துவான்னு நினைச்சது கூட இல்ல.. என அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே.

ஓடி வந்து ராவணன் கால்களில் விழுந்தவள், “சார் என்ன நம்புங்க… உடம்பு வித்து பொழைக்கிறவ தான்… அது என் விதி… ஆனா சத்தியமா நான் இந்த பாவத்தை பண்ணல சார்… என்ன நம்புங்க…” என கதறினாள்.

“நீ விக்கும்போதுதானே கையும் களவுமா பிடிச்சேன்… அப்புறம் உனக்கு சம்பந்தம் இல்லைன்னா எப்படி… ஒண்ணு நீயே வித்துட்டு இல்லைன்னு சாதிக்கணும்… இல்லைன்னா வித்தது யாருன்னு உனக்கு தெரிஞ்சு இருக்கணும்… நீயா சொல்றியா இல்லை போலீஸ் அடி எப்படி இருக்கும்னு வாங்கி பார்க்கிறியா…?”

“எனக்கு எதுவும் தெரியாது. சார், என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்!” என அழுதவளை தூக்கி…

“என்ன சொன்னாலும் கேட்பியா?” என அழுத்தி கேட்டான்.

“கேட்கிறேன் சார்!”

“குட்! போய் ஜீப்ல உக்காரு. வேலைய முடிச்சிட்டு வரேன்!” என சொன்னவனை புரியாமல் பார்க்க…

“போக சொன்னேன்?” என பல்லை கடித்தவனை…

“நீயும் இவ்வளவுதானா?” என்ற பார்வையை தாங்கியபடி சென்று ஜீப்பில் அமர்ந்தாள்.

தன் வேலைகளை முடித்துக்கொண்டு ஜீப்பில் சென்று ஏரியாவனை பார்த்து,

“என்னைய அவர புலி கிலி சொன்ன.. இப்படி அத்தனை பேரு முன்னாடி அந்த கேஸ தள்ளிட்டு போறாரு..? அப்போ இந்த ஆளும் மத்தவங்கள மாதிரி தானா என எள்ளி நகையாடினர்.

ஜீப்பை குடியிருப்பு நோக்கி செலுத்தியவன், வாசுகியை உள்ளே அழைத்து சென்றதை பார்த்தாள் மகிழினி.

“நம்ம மை டியர் பூதம் மாதிரி இருக்கு… இந்த நேரத்துல யாரை கூட்டிட்டு வந்திருக்கான்” என அவள் வீட்டை விட்டு வெளியே வந்தவள்…

ராவணனுடன் வந்தவள் முகத்தை கண்டதும் உறைந்து நின்றாள்.

“சீய்ய்… சரியான பொறுக்கி பூதம்… கண்ட கண்ட பொம்பளைங்களை கூட்டிட்டு வரான் பாரு ராஸ்கல்..”

“போலீஸ் இல்ல சரியான பொறுக்கி அதான் மாடியில் வச்சி என்னை கட்டிபுடிச்சானா இனி வரட்டும் இந்த மகிழினி யாருன்னு காட்டுறேன்..!” என எண்ணி கொண்டவளால் ராவணனின் இந்த கீழ்மையான செயலை ஏற்க முடியவில்லை.

நானும் ராவணனை ஆன்டி ஹீரோவா தான் காட்டணும்னு நினைக்கிறேன்.. ஆனா அது ஆண்ட்டி ஹீரோவா போகுதே.. இப்போ என்ன சொல்ல வரேன்னு கேக்குறீங்களா … ஹிஹி மீ அப்புராணி.. கிரீன் மண்ணு.. என்பதை பதிவு செய்கிறேன்..

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top