மகிழ், தன் தந்தை கால்கள் துவள சரிந்து விழப் போனவளை தேர்ந்த காதலன் போன்று தூக்கி நிறுத்தினான்.
“இனி நீ நினைச்சாலும் என்னை விட்டு போக முடியாத மாதிரி பண்ணிட்டேன் நான். ராவணன் இல்லடி” விடைப்பாய் சொல்லி தன்னிலிருந்து அவளை விலக்கி நிறுத்தினான் அசுரன்.
அவன் விலக்கியதும் விட்டால் போதுமென சிட்டாக பறக்க முயன்றவளை தன் வலிய நரம்புகள் பின்னிய கையால் தடுத்தான்.
“ஆஆன் ஆஆன் எங்கே? இருமா! இன்னும் முடிக்கலை…” நிறுத்தியவனை ஏறிட்டு பார்க்க கூட அஞ்சினாள் மகிழ்.
அவன் பக்கம் கூட திரும்பாமல் நிற்க, அவள் பின்னாக அவளில் தன் உடல் உரசியபடி நின்றான்.
“உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்… முடிஞ்சா தப்பிச்சிக்கோ.!!”
என்றதும் சடாரென திரும்பியவள் அவன் மீதே மோதி நின்றாள்.
அவளின் சுகந்த வாசனை இவனுள் மோகத்தை மீட்டெடுக்க…. ஆழ்ந்து சுவாசித்தபடி,
“ஹ்ம்ம் சும்மா அள்ளுதுடி.!!” முனகினான்.
“இன்னைக்கு ஒரு நாள் அதுக்குள்ள என்கிட்ட இருந்து தப்பிக்க முடிஞ்சா தப்பிச்சிக்கோ!!.. இல்லன்னா நாளைலருந்து நீ எனக்குத்தான், எனக்கு மட்டும் தான் புரியுதா சிட்டு?!..” விசமமாய் கூறி பின்,
“ஹான்!! அப்புறம் மறந்துட்டேன். என்னைப் பத்தி வெளியில சொல்லி தப்பிச்சிடலாம்ன்னு கணக்கு போடாத” என்றதும், திருட்டு முழி முழித்து வைத்தாள் மகிழ்.. அதுவே சொல்லியது அவள் அதுதான் பண்ண நினைத்தாள் என்பதை…
(ஹான்! யாருகிட்ட? இவன் ஆன்டி ஹீரோவா!!!.)
“அப்படி ஏதும் பண்ணிட போற.. அப்புறம் உன்னைய தான் தப்பா நினைப்பாங்க.. என்ன நம்பலையா..? அவ்ளோ ஏன், என் தங்கச்சி அதான் சாம்பவி கிட்டக் கூட சொல்லிடாத! அப்புறம் அவளே உன்ன வெட்ட அருவாளை எடுத்துட போறா!”
ராவணன் மிரட்டல் கேட்டு
மகிழுக்கு உள்ளே பயப்பந்து உருண்டோடியது.
“அப்புறம் ஊருக்குள்ள என்னை எதிர்த்து உனக்கு எந்த உதவியும் எவனும் பண்ணமாட்டான்.. வளவன் கிட்டயும், மாமா கிட்டயும் சொல்ல நினைச்சா?!! அது சாம்பவிக்கும் சேர்த்து தான் பாதிக்கும் அதனால நீ அவங்க கிட்ட போகமாட்ட!!” என அவளுக்கு இருக்கும் அனைத்து வழிகளையும் மூடினான் அரக்கன்.
செய்வதறியாது தவித்து நின்ற பேதைக்கு கண்ணை இருட்டி கொண்டு வந்தது.
யாரிடம் உதவி கேட்பது? இந்த கயவனிடம் இருந்து தன்னால் தப்பிக்க இயலுமா? என தனக்குள் உழன்றபடி நின்றவளின் கையை சுற்றி இழுத்துவிட்டான்.
“ஹா..!!”
அவன் சுழற்றியதில் தலை கிறுகிறுக்க தடுமாறி நின்றவளின் முந்தானையை இழுத்து தன் மேல் உள்ள ஈரத்தையும் உதடுகளையும் அவள் சேலையிலே…துடைக்க.. அவனை ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தபடி மகிழ் நின்றிருந்தாள்.
அந்நேரம் உள்ளே குழந்தை அழுகுரல் கேட்க, அசுரன் உடனே தகப்பனாக மாறி இவளை கிஞ்சித்துக்கும் மதியாது அவ்விடம் விரைந்தான்.
“என் கண்ணுல்ல! என் முத்துல்ல!! அழாத தங்கம்!” என சாம்பவி குழந்தையை கையில் ஏந்தி கொஞ்ச..
“அபிக்குட்டி எழுந்துட்டீங்களா?. அப்பா கிட்ட வாங்க! வாங்க! அழாதீங்க அம்மு!..” தங்கையிடமிருந்து இராவணன் வாங்கியதும்.. அவன் குரலுக்கு அடங்கியது, முகம் கண்டதும் சிரித்தது..
“என்னடா அம்மு அப்பா இல்லனு பயந்துட்டீங்களா..!” என்றதும் உதட்டை பிதுக்கி “ஆம்” என்று தலையை ஆட்டியது. ஆதரவாக தலையை தடவியவன், “அபிக்குட்டிக்கு பசிக்குதாமா? அப்பா ஊட்டி விடவா? குட்டி.” என்றதும் அவன் கழுத்தை கட்டி கொண்டு ம்ம்ம்! என்றது..
பாருடா..!
“இவ்ளோ நேரம் நான் ஒருத்தி தோள் மேலயும் மார் மேலயும் போட்டு தாலாட்டுறேன் அப்பவும் அழுதுட்டே இருந்தா உன்கிட்ட வந்ததும் அமைதி ஆகிட்டா சரியான அப்பா கோந்து போல அப்படியே உன்ன மாதிரி..” என்றவள் தான் கூறியதை உணர்ந்து நாக்கைக் கடித்து கொண்டவள், அண்ணனை ஏறிட்டு பார்க்க, எந்த சலனமும் இல்லாமல் முகத்தை வைத்து கொண்டவன்..
“போய் பாப்பாக்கு பருப்புசாதம் எடுத்துட்டு வா! நான் ஊட்டுனா தான் சாப்பிடுவா..”
“எப்படிணா இப்படி மாறுன? ஊர்ல ராஜா வீட்டுக் காளை கணக்கா சுத்துவ.. இப்போ உன்னையே இப்படி மாத்தி வச்சி இருக்காங்களே அண்ணி.. ஆமா ஏன் அண்ணே அண்ணிய கூட்டிட்டு வரல கல்யாணத்துக்கு கூட கூட்டிட்டு வரல.. அபிக்குட்டிய மட்டும் அனுப்பிட்டு அவங்க அங்க என்ன பண்றாங்க? “
“ஏன்ணே! ஒருவேளை, எங்க மேல அண்ணிக்கு ஏதாவது வருத்தமா அண்ணே..?”
“ச்சே ச்சே! அப்படிலாம் ஒன்னுமில்லமா.. உங்க அண்ணிக்கு என்ன விட உன்ன தான் ரொம்ப பிடிக்கும் தெரியுமா?..”
“அப்புறம் ஏன் அவங்க என்கிட்ட பேச கூட மாட்டேங்கறாங்க.? அவங்க பேர் கூட நீ சொல்ல மாட்டேங்கற போண்ணா..?”
“குட்டிமா! அண்ணன் மேல உன் அண்ணிக்கு கொஞ்சம் கோவம் அதான் அவ வரல. நாளைக்கு கண்டிப்பா உங்க அண்ணி இங்க இருப்பா.. அதுக்கு நான் பொறுப்பு சரியா?!..”
“அண்ணிக்கூட சண்டை போட்டியா? ஏன்ணே இப்படி பண்ற? போய் சமாதானம் பண்ணி அண்ணிய கூட்டிட்டு வாங்க..”
“உத்தரவு இளவரசியே…!!”
“போண்ணே..!!”
“சரி வா! அபிக்குட்டிக்கு ஊட்டிவிட்டு கொஞ்சம் நேரம் ஓய்வு எடு..”
குழந்தைக்கு உணவு குடுத்து முடிக்கும் வரை மகிழ் கொல்லையிலே நின்றப்படி என்ன செய்வது, எப்படி தப்பிப்பது என சிந்தித்த படியேயிருந்தாள்.
சாம்பவி கிட்ட சொல்லிடலாமா? இல்ல!! அவங்க என்ன நம்பாம போய்ட்டா அப்புறம் நம்மள தப்பா நினைச்சுடுவாங்க..
வளவன் அண்ணாகிட்ட சொன்ன கண்டிப்பா ராவணன் கிட்ட சண்டைக்கு போவாரு அதனால அண்ணிக்கும் அண்ணாக்குமே சண்டை வரலாம்.. பவள பாட்டி வேற சொந்தகாரங்களை பார்த்துட்டு வரேன் நேத்தே போய்ட்டாங்க.. இப்போ என்ன பண்றது தெரியலையே.. என கையை பிசைந்து கொண்டு இருந்தவளிடம் வந்தான் மனோ..
“என்ன மகி இங்க நின்னுட்டு என்ன பண்ணிட்டு இருக்க..?”
ஹா.! மனோ! இவன் கிட்ட உதவி கேட்டு பார்க்கலாமா? அவன் அண்ணன் கிட்ட இருந்து காப்பாத்த கேட்டா உதவி பண்ணுவானா?.. நிச்சயமா பண்ண மாட்டான். வேற மாதிரி தான் உதவி கேட்கனும் என நினைத்தவள் அவனிடம்..
“மனோ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா..?”
“சொல்லு மகி! உனக்கு இல்லாததா??!!..”
உதவி கேட்டு மகிழ் அமைதியாக நிற்க..
“பேசு மகி !உனக்கு என்ன ஹெல்ப் வேணும்?”
“அது! அது! ஒன்னும் இல்லை!” என பின்னால் நின்ற ராவணனை பார்த்து எதுவும் கூற முடியாமல் பயந்து மகிழ் உள்ளே ஓடிவிட, சென்றவளை புரியாது திரும்பி பார்க்க, அங்கே ராவணன் நின்று இருப்பதை அப்போது தான் பார்த்தான்..
வா அண்ணா, எப்படி இருக்கீங்க..! அண்ணி எங்க குழந்தைய மட்டும் கூட்டிட்டு வந்து இருக்காங்க..
அவ வருவா, வராம எங்க போயிடுவா.
என உள்ளே சென்றவளை பார்த்த வண்ணம் கூற..
ஆமா நீ எப்போ இங்க வந்த? எங்க இருக்க..
அது ஒரு ப்ராஜெக்ட் விஷயமா திருநெல்வேலில இருக்கேன் அண்ணா..
ஓ!! அப்படியா, சரி வா வீட்டுக்கு போகலாம்..
அண்ணா..
என்னடா..!
நிஜமாவா..
ஆமா ஏன்டா..!
அப்போ பெரியப்பாவ பாக்க வரியா அண்ணா..
ம்ம்ம்..!
அப்போது வந்த சாம்பவி..
சாம்பு! அண்ணா, அப்பாவ பாக்க போறாராம்..
என்ன மனோ சொல்ற..
ண்ணே நெசமா அய்யன பாக்க போறியா..
ம்ம்ம் ஆமா..!
அப்போ அம்மா..
ஹ்ம்ம் அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டு வரேன். அவர்கிட்ட மனசு விட்டு பேசி ரொம்ப நாள் ஆச்சு..!
அபிய பார்த்துக்கோ சாம்பவி என்றவன்..
மனோ என்கூட கிளம்பி வா
என அவனையும் கூடவே அழைத்து செல்வதை கைகளை பிசைந்தவாறு நின்றவள் ‘உன்னால் முடிந்தால் முயற்சி செய்’ என கண்களால் சவால் விட்டவனை பார்த்தவளுக்கு இதயத்தில் திகில் பிடித்தது.
அவள் தப்பிக்க இருந்த ஒரே வழி மனோ மட்டுமே அல்லவா? அவனையும் அழைத்து சென்று விட்டான் அந்த வஞ்சகன்.
இப்போது இருந்த ஒரே வழியும் அவளுக்கு மூடப்பட்டுவிட்டது. இல்லை இல்லை அவன் மூடி விட்டான். தானாகவே ஒரு முடிவெடுக்கும் நிலையில் அவள் இருக்கிறாள்.. இனி என்ன?
இராவணனும் மனோவும் காரில் சென்று இறங்கியது ஊரின் மத்தியில் இருக்கும் பிரமாண்ட மாளிகை. அதுனுள் செல்ல செல்ல அனைவரும் அதிசயம் பார்ப்பது போல் அவனை பார்த்து வைத்தனர்..
வாங்க சின்னய்யா, வாங்க மனோ தம்பி..
பெரிய ஐய்யா இங்க தோட்டத்து வீட்டுல இருக்காங்க சின்னய்யா..
பணியாள் சொல்ல மனம் கனத்தது ராவணனுக்கு.
நீ உள்ள போ மனோ, அப்பாவ பார்த்துட்டு வந்து சித்தி சித்தப்பாவ பாக்குறேன்
அந்த தோட்டத்து வீட்டின் கதவை தட்ட,
என்ன மார்த்தாண்டம் நான் தான் என்ன தொந்தரவு பண்ணாதன்னு சொல்லி இருக்கேன்ல. அப்புறம் ஏன் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ற..
என சலித்தவாறே கதவை திறந்த ராஜதுரை ஸ்தம்பித்து நின்றார்..
அவர் கண்கள் அவரையும் மீறி இரு துளி கண்ணீர் எட்டி பார்த்தது..
ஆம்! யாரை இனி பார்க்கவே மாட்டோமா என நினைத்து நினைத்து வருந்தினாரோ அவர் மகன் ராவணன் ஐ.பி.எஸ் ஆக அவர் கண்முன் வந்து இருக்கிறான் என்பதை நம்ப முடியாமல் சிலையென நின்றிருந்தார்..
எதே ராஜதுரை ராவணன், சாம்பவி அப்பான்னா அப்போ வடிவு இவர் மனைவியா??!!.. அப்போ சொந்த பொண்டாட்டிய தான் இவர் விழுந்து விழுந்து சைட் அடிச்சாரா??!! அடச்சே!!..
எந்த மகன் உருப்பட மாட்டான் என ஊர் மக்கள் தூற்றினார்களோ அந்த மகன் இப்போது நல்ல பதவியில் இருக்கிறான் என கேள்வி பட்டவர் அவனை பார்க்க துடித்தும் போய் பார்க்க முடியாத அவல நிலையில் அல்லவா இருந்தார்.. இதோ மகனே தேடி வந்து விட்டான்! இதுவரை அவர் மட்டுமே சுமந்த வலிகளுக்கு தோள் கொடுக்க தனயன் வந்து விட்டான் அல்லவா?!! நெக்குருகி நின்றார்..
“வா ராவணா..வா! வா!” ஆதூரமாய் தகப்பன் அழைக்க.. உள்ளே வந்தவன் அந்த வீடு முழுவதையும் பார்வையால் சுழல விட்டவன்.
அவ்வளவு பெரிய வீடு இருந்தும் இப்படி எந்த வசதியும் இல்லாத வீட்டில் குடும்பம் இருந்தும் அனாதையாக இருக்கணுமென்று இவருக்கு என்ன தலை எழுத்து? என அவருக்காக வருந்தியவன்..
அங்கிருந்த ஒரு மூங்கில் நாற்காலியில் அமர்ந்து அவருடன் மனம் விட்டுப் பேசினான்..
“எங்கய்யா போன? எப்படி இருக்க? இப்போவாவது உன் அப்பன் மேல உள்ள கோபம் போச்சா சாமி.. நீயும் உன் அம்மா மாதிரி என்னைத் தவிக்க விட்டு போயிட்டியே ஐயா.”
உடைந்து அழுதவரை ஒருவாறு தேற்றினான்..
“நடந்த எதையும் மாத்த முடியாது! ஆனால், இனி நடக்குற எல்லாத்தையும் நமக்கு சாதகமா மாத்தலாம்” என்றவன் கைகளை ஆசையாய் பற்றிக் கொண்டார் ராஜதுரை..
“விடுங்க! எல்லாம் கண்டிப்பா மாறும், நான் மாத்துவேன்.. அந்த நம்பிக்கையில்தான் மீண்டும் இந்த ஊருக்குள்ள வந்து இருக்கேன்..” என்றான் திமிராக மீசையை நீவி விட்ட படி.
“அப்புறம் உங்க மருமகளை நாளைக்கு கூட்டிட்டு வரேன்..!”
“என்னப்பா சொல்ற? அப்போ..!”
“ம்ம்ம்.. முடிவு பண்ணிட்டேன்..!”
“எதுக்கும் ஒரு தடவை யோசிச்சி பண்ணுப்பா என்ன மாதிரி நீயும் தவிக்கக் கூடாதுன்னு சொல்றேன்..”
“அப்படி எதுவும் நடக்காம பார்த்துக்குறேன்.. என்னை நம்புங்க!” என நம்பிக்கை கொடுத்து அவரிடம் விடைபெற்று கொண்டு சென்றான் இராவணன்..
அந்த நள்ளிரவில் கைக்கு கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டு இருந்தாள் மகிழினி.. எப்படியாவது இந்த அரக்கனிடமிருந்து தப்பணும்! ஒன்றே மதி!
போன முறை போன்று தப்பித்து ராவணனை வெற்றி கொள்வாளா? வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறீங்க மக்களே..



