காதல் செய்யாதே -5
சிங்கம்பட்டிக்கு மகிழினி வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது..
பெரும் சுழலில் சிக்கி மீண்டவளுக்கு இயற்கை அன்னையும், வெள்ளந்தி மனிதர்களும் பெரும் ஆறுதலாக இருந்தனர்..
தன்னை சொந்த பேத்தியாக பார்க்கும் பவள பாட்டி, வந்த சிறிது காலத்திலே தன்னை உடன்பிறந்த சகோதரியாக பார்க்கும் வளவன், தன் வீட்டு பெண்ணாக ஆதரவு அளிக்கும் வடிவும்மா… அவர் வாங்கி தந்த வங்கி வேலை அவளுக்கு பிடித்து போய் விட, உற்ற தோழியாக சாம்பவியும் இருக்க வாழ்க்கை தெளிந்த நீரோடையாக செல்வதாக நம்பினாள்..(நீங்களும் நம்புங்க நம்பிக்கை அதானே எல்லாம்..)
காலையில் எழுந்து பவளம் பாட்டி வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளுடன் நேரம் செலவிட்டு விட்டு, காலை உணவை பக்கத்து வீட்டில் இருக்கும் சிவசங்கரிடம் சமையல் கத்துக்கிறேன் பேர்வழி பண்ணிக்கொண்டு அவள் அடிக்கும் கொடுமையை, அந்த சமையல் அறைக்கு வாய் இருந்தால் கதறி அழும்.(ஹையோ..நமக்கு வாய்க்குற ஹீரோயின் எல்லாம் டாடிஸ் லிட்டில் பிரின்ஸ் ஆஹ் இருக்கே..)
மனைவியை இழந்த சிவசங்கரனுக்கும் பெண் பிள்ளைகள் இல்லாத வீட்டில் பெண் பிள்ளையாய் மகிழினி வந்த பின் அவளுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் போனது. இவர்கள் இருவரும் ஒரு வழியாக சமைத்து கொண்டு வந்து வைத்து விட்டு காத்து கொண்டு இருந்தனர்..
“யாருக்கா..?? எல்லாம் அவங்க சமைச்சத சாப்பிடற பலி ஆட்டுக்கு தான்.. அதே தான் நம்ம வளவன் தான் அந்த பலி ஆடு..!!”
குளித்து முடித்து தயாராகி வந்தவன் முன் இருந்த பதார்த்தங்களை பார்த்தவன், இருவரையும் நிமிர்ந்து ஒரு நிமிடம் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் போட்டு சாப்பிடுவதை பார்த்தவர்கள் திகைத்தனர்.. (இருந்தாலும் உனக்கு மன தைரியம் ஜாஸ்திடா..)
“ஸ்ஸ்ஸ்.. அப்பாஜி என்ன இது ஒன்னுமே சொல்லாம சாப்பிடறாரு..?”
“அதுதான் எனக்கும் தெரியல..!!”
“ஒருவேளை நாம சமைச்சது நிஜமாவே நல்லா இருக்க வாய்ப்பு இருக்கோ.?”(வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பே இல்லை..)
பின்ன அங்க மேசை மேல வெள்ளையா போஸ்டர் ஓட்டும் பசமாதிரி அங்க அங்க தீஞ்சி போன மாதிரி இருக்கே அது பேரு “சாதம்” சொல்லிக்கிறாங்க, மஞ்சளும் சிகப்புமா அதுல எதோ மிதந்து இருக்கே அது பேரு தான் குழம்பாம் நம்பிடுங்க, சப்பா… அங்க அந்தா கடைசியா கருப்பா இருக்குல அது பேரு பொரியல்ன்னு அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேன் இதையெல்லாம் அவங்க சமைச்சாங்களாம், (கொலைகார பாவிகளா இதல்லாம் சாப்பிட்டா கும்பிபாகம் தான்டா..)
இவர்கள் சமைத்ததை இல்ல, செஞ்ச சூனியத்தை அமைதியாக சாப்பிட்டவன், அவர்களை பார்த்த பார்வையில் “ஹம் எப்படி, நீங்க என்ன செஞ்சாலும் சிக்கமாட்டோம்ல..!” என்ற ரேஞ்சில் கிளம்பி சென்றுவிட்டான்..
அவன் சென்றதும் அவர்கள் செய்ததை எடுத்து ஒரு வாய் சுவைத்தனர் அவ்ளோதான்..
“வொவே..!! அப்பாஜி என்ன கன்றாவி இது இதையா அண்ணா சாப்பிட்டு போனாரு.. ஆனாலும் நேத்திவிட இன்னைக்கு பரவல தான்ல..!!” என்றவளை..(வெட்டவா குத்தவா மக்களே..)
“ஹாஹா ஆமா, ம் அதான பார்த்தான் யார் பையன் அவன் என் புள்ளையாச்சே நான் இடுக்கில பாஞ்ச அவன் தடுக்குல புகுந்து போறான் இவனை எப்படி மா வழிக்கு கொண்டு வரது…?” என சொல்லிக்கொண்டு இருக்கும் போது உள்ளே வந்தாள் சாம்பவி ..
“என்னாச்சு மாமா ஏன் மச்சான் இப்படி துண்டை காணோம் துணிய காணோம்ன்னு ஓடி போறாரு..??? (சூனியத்துல சாப்பாடு இல்ல.. சாப்பாடுல சூனியம் வச்சிட்டாங்க )என்றபடி உள்ளே வந்தவள் மேசை மீது இருந்த உணவை பார்த்தவள் அதை எடுத்து ஆராய்ந்தவள்..
“ப்ப்பா என்ன எழவு இது வொவே..??”
“ஹிஹி எங்க சமையல் தான் அண்ணி..!””
“என்ன மாமா இது, இதையா மச்சான் சாப்பிட்டு போனாரு.ஐயோ பாவம் மச்சான் இத சாப்பிட்டு போய் எப்படி வேலை பாப்பாரு.. ஏன் மாமா இப்படி செய்திங்க..??”
“எல்லாம் உங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைக்க தான் அண்ணி..!!” என்றாள் மகிழ்.
“அதுக்கு ஏன் இப்படி பண்றிங்க.. மச்சானை இப்படி கஷ்டப்படுத்தினா மட்டும் என்ன கட்டிக்குமா..??”
“என் தலையெழுத்து எப்படி இருக்கோ.. அப்படியே போகட்டும் இதுக்குமேல இப்படி பண்ணாதீங்க மாமா..!!” என கண்ணீருடன் முடித்தவளை என்ன சமாதானம் செய்வதென்று தெரியாமல் முழித்தனர்..
பிறகு ஒருவாறு சுதாரித்து கொண்ட சாம்பவி…
“நான் ஒருத்தி சொல்ல வந்ததையே மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன் பாருங்க..??!!”
“மாமா இன்னைக்கு அம்மா ஒரு பஞ்சாயத்து கூட்டி இருக்கு உங்ககிட்ட சொல்லி கூட்டிட்டு வர சொல்லுச்சு…!” என்றவள்..
மேசை இருந்த உணவு பொருட்களை எடுத்து கொண்டே..
“நான் இதெல்லாம் பின்னாடி கொண்டு போய் நாய்க்கு இல்ல வேணாம் குழி தோண்டி புதைச்சிட்டு.. (தட் நாய் மைண்ட் வாய்ஸ் “நன்றி தெய்வமே..”)வேற சாப்பாடு செஞ்சி வச்சிட்டு போறேன் மாமா நீங்க அதுக்குள்ள காட்டுக்கு போய் வெள்ளமையை பாத்துட்டு நேரா பஞ்சாயத்துக்கு வந்துருங்க…!!”
“இந்தா புள்ள நீ இன்னும் வேலைக்கு கெளம்பலையா..??”
“கெளம்பனும் அண்ணி..!!”
“சீக்கிரம் அந்த பாத்திரத்தை எடுத்துட்டு வந்து கொடு, அப்படியே அந்த காய் எல்லாம் நறுக்கி கொடுத்துட்டு நீ போய் கிளம்பி வா சாப்பாடு சட்டுனு பண்ணிடறேன்..!!”என்றவள்…
“ஆட்டு குட்டி “போல் தொடர்ந்து சென்றவளுக்கு, சாம்பவியை முதல் முதலாக சந்தித்தது நியாபகம் வந்தது.
அப்போது ஊருக்கு வந்த புதிது மகிழினி தன்னை நினைத்து தனக்குள்ளாகவே மருகி கொண்டு இருந்த வேளை
பவள பாட்டியும் ஊரோடு வந்து சேர்ந்தபடியால், தன் வீட்டை துப்புரவு செய்வது, வயிற்று பாட்டிற்கு சிறு சிறு வேலைகள் செய்வது என அவளை தொந்தரவு செய்யாது தன் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தார்..
அவள் மட்டும் வீட்டில் இருக்கும் நேரம் அப்போது தான், பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்தாள் வயதான ஒருவர் மயங்கி கிடந்தார்..
உடனே அக்கம் பக்கம் இருப்பவர்களை அழைத்து விடயத்தை கூறிவிட்டு, மருத்துவரை அழைத்து வந்தனர். அவர் பரிசோதித்து விட்டு மைல்டு அட்டாக் எனவும் மேற்கொண்டு கவனமாக பார்த்து கொள்ளும்படியும் கூறிவிட்டு சென்றார்..
செய்தி கேட்டு வந்த வளவனுக்கு தந்தையை காப்பாற்றிய மகிழுக்கு நன்றி கூறிவிட்டு, தந்தையை கவனிக்க சென்று விட்டான்.
வெளியூருக்கு சென்று வந்த சாம்பவிக்கு செய்தி கூறப்பட அவளும் நாச்சியும் அவரை காண ஓடி வந்தனர்..
வீட்டில் பெண்கள் இல்லாததால் வந்தவர்களை மகிழ் கவனிக்க வேண்டியதாகி போனது.. (ம்ம்ம் பயப்படாதீங்க அவ வெறும் தண்ணி மட்டும் தான் குடுத்த அந்த மட்டும் வந்தவங்க தப்பிச்சாங்க )இதை கண்ட சாம்பவிக்கு கோவம் ஏறியது.. கெழவிங்க அவ மாமன் கிட்ட பேசுனாலே நாய விட்டு தொரத்த வைப்பா.. மகிழ் வேற கண்ணுக்கு அழகா அமைதியா இருப்பது வேற அவளுக்கு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது (அமைதியாவா அப்போ யோசிக்க வேண்டியது தான்)
மயங்கி விழுந்தவரை காண வந்தவர்களுக்கு தண்ணீர் எடுக்க சமயல்கட்டுக்கு சென்றவளை பின் தொடர்ந்து சென்றவள் அவள் முடியை கொத்தாக பற்றியவள்..
“ஆருடி நீ..??”
“ஆஆஆஆ..பக்கத்து வீடுங்க…!”என கைகளை எடுக்க போராட..
“அங்க ஒரு கிழவி மட்டும் தான கிடக்கா..?”
“ஹா. வலிக்குது, அவங்க வீட்டுக்கு தான் வந்து இருக்கேன்….!”
“ஓ அந்த வெளியூர் ஆட்டகாரி நீதானா!!”.. (சொல்லிட்டாங்க உள்ளூர் ஆட்டக்காரி..)
“இந்த பாரு சொந்தகாரங்க வீட்டுக்கு வந்தோமா நல்லா விருந்து சாப்பிட்டோமா போனோமா இருக்கனும்..!! அத விட்டுட்டு அக்கம் பக்கத்துல நல்ல வாட்ட சாட்டமா ஆளு இருக்குனு வளச்சு போட பார்த்த தோலை உரிச்சு தொங்க போற்றுவேன்.!!”என மிரட்டியவளை விளங்காது பார்க்க..
“என்ன பேந்த பேந்த முழிக்குறவா.. அந்த கண்ணு என்ற மாமனா பாத்துச்சு ஈயத்தை காச்சி உத்திபுடுவேன் பாத்துக்க..!! என்ன புரிஞ்சிதா”
“புரிஞ்சது” என தலையை ஆட்டியவளை, ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு சென்றவள்…
அதன்பின் மகிழ் தன்னை இன்னும் கூட்டுக்குள் அடைத்து கொள்ள, வளவன் விட்டால் தானே அவளை பற்றி பவள பாட்டி மூலம் அறிந்து கொண்டவன், அவளுக்கு ஒரு சகோதரனாய் மாறி போனான் என்றாள். சிவசங்கரன் இந்த வயதில் அவள் அடைந்த துன்பத்தை கேட்டு மனம் வருந்தி போனார். அவளை அவர் மகளாகவே எண்ணினார்..
முதலில் தயங்கினாலும் மெல்ல மெல்ல அவர்கள் காட்டிய அன்பில் அவர்களை ஏற்று கொண்டாள்..
இப்படியான ஒரு நாளில் மகிழினியை அழைத்து கொண்டு தன் வயலுக்கு சென்றார் சிவசங்கரன். அங்கு அவளது உயிருக்கு இருக்கும் ஆபத்தை தெரியாமல்..



