காதல் செய்யாதே – 6
வீட்டிலே அடைந்து கிடக்கும் மகிழினியை தன்னுடன் வயலுக்கு அழைத்துச் சென்று அவர் செய்யும் தொழிலைப் பற்றி அவளுக்கு எடுத்து கூறினார்.
அவர் விவசாயத்தின் பெருமையைப் பற்றி கூறக் கூற அவர் முகத்தில் மிளிரும் கர்வத்தைக் கண்டு மகிழினிக்கு புன்னகை அரும்பியது.
“மத்த தொழில்ல போட்ட லாபத்தை எடுக்கலாம் தாயி ஆனா விவசாயத்துல மட்டும் அப்படி கிடையாது…போட்ட முதல் எடுக்குறதே பெருசு..??”
“ஏன் அங்கிள் அப்படி..??” என்றவளை முறைக்க..
“சாரி சாரி அப்பாஜி..!!”
“விவசாயம் பொறுத்தவரைக்கும் எதுவுமே நேரடி கொள்முதல் இல்லமா.. பொருளை குறிப்பிட்ட காலத்துக்குள்ள விற்பனை பண்ணிடனும். அப்படி இல்லனா அத பதப்படுத்தி வைக்கணும் அந்தளவுக்கு எல்லா விவசாயிங்க கிட்டயும் வசதி இருக்காது.. அரசும் அதுக்கு சில ஏற்பாடுகள் பண்ணி இருக்கு ஆனா அது எல்லா விவசாயிகளுக்கும் பத்தாது.. அதனால வந்த வரைக்கும் போதும்னு வித்துடுவாங்க.. அதுக்கு தான் விளஞ்ச பயிரையும் வயசு பொண்ணையும் வீட்ல நிரம்ப நாள் வைக்க கூடாதுனு சொல்லுவாங்க. இதுல இடையில தரகர்கள், அது இதுனு இடையில் வந்து குறைவான விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை அப்புறம் வியாபாரிகள் கிட்ட போய் நுகர்வோர் கிட்ட போகும் போது அதிகப்படியான விலைக்கு போகுது..
“அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு அப்பாஜி….”
“என் புத்தி எட்டுன வரைக்கும் முறையான சந்தை படுத்தல் தான் நான் நினைக்கிறேன்..!!”
“சரி அது என்னமா அப்பாஜி.. வடநாட்டு புள்ள மாதிரி.. ஒன்னு உங்க அண்ணன மாதிரி ஐய்யா கூப்பிடு இல்ல அப்பா கூப்பிடு..!!”
“சின்ன வயசுல இருந்தே அப்பாவ அப்படித்தான கூப்பிடுவேன்..!” என்றபடி அவர்கள் நினைவில் கண் கலங்கியவளை..
தலையில் கைவைத்து ஆதுரமாக தடவியவர் அவள் கவனத்தை மாற்றும் பொருட்டு பனை மரத்தில் எடுக்கும் பதனி பற்றி சொல்ல அவளும் ஆர்வமாக கேட்க..
அப்போது அந்த வழியாக வந்த சாம்பவி இவளை பார்த்து வெஞ்சினம் கொண்டாள்.. இன்று காலையில் தான் வளவன் மகிழினியை வேலைக்காக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க கடை வீதிக்கு பைக்கில் கூட்டிட்டு சென்றதை பார்த்தவள் இப்போது சிவசங்கரனுடன் பார்க்கவும் அவளுள் இருந்த வன்மம் தலை தூக்க மகிழினியை தொடர்ந்து சென்றாள்.
மகிழினிக்கு எல்லாவற்றையும் சுற்றி காட்டி விட்டு நிழலில் அமரும் படி சொல்லி விட்டு அவர் கதிர் அறுப்பதை மேற்பார்வையிட சென்று விட அவள் மட்டும் தனித்து விடப்பட்டாள்..
வயல் வரப்பில் நடந்து பழகி கொண்டதால் சுத்தி இருக்கும் விளைநிலங்களை பார்வை இட்டவாறு கிணறு அருகே சென்றவள் எட்டி பார்த்து கொண்டு இருந்தவள் பின்னால் இருந்து ஓங்கி ஒலித்தது சாம்பவியின் குரல்..
“என்ன திமிர் இருந்தா நான் அவ்ளோ சொல்லியும் என் மச்சான் கூட ஒட்டி உரசிட்டு வண்டில போனது மட்டும் இல்லாம, இப்ப என் மாமனையும் கைக்குள்ள போட்டுக்கிட்டு தோப்பு தொறவு எத்தனை கிடைக்குனு பாத்துட்டு வளைச்சி போட பாக்குறியடி என் சீமை சிறுக்கி.!!!” என்றதும் பூஞ்சை மனம் கொண்ட மகிழினி கண்களில் கண்ணீர் பெருக காதுகளை பொத்தி கொண்டு..
“இல்ல… இல்ல.. ப்ளீஸ் தப்பா பேசாதீங்க நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல ப்ளீஸ் தயவு செஞ்சு தப்பா பேசாதீங்க..!!”
“அவரு எனக்கு அப்பா மாதிரி வளவன் எனக்கு அண்ணா மாதிரி..!” என்றவளை
“ஓஓ !! மாதிரியா மாதிரி இத ஊர்ல எவளாவது கேனச்சி இருப்பா அவ கிட்ட சொல்லு அவ நம்புவா..!!”
“ஐயோ ப்ளீஸ் நம்புங்க தயவுசெஞ்சி..?” என இறைஞ்சினாள்..
“இருடி என்ன மீறி இந்த ஊருக்குள்ள எப்படி மன மரியாதையோட திரியுறனு பாக்குறேன்..?” என சவால் விட்டவள் அங்கிருந்து கிளம்பி போக..
அவளிடம் தன்னை நிரூபித்து விடும் பொருட்டு. “கொஞ்சம் நில்லுங்க நான் சொல்றத நம்புங்க..?” என்ற படி அவள் கையை எட்டி பிடிக்க..
அவள் கையை கோவமாக உதறி தள்ளிவிட..
அவள் உதறிய வேகத்தில் கிணத்தில் விழுந்தாள் மகிழினி..
கிணற்றில் அவள் விழும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க.. மகிழ் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தவள் நீருக்கு அடியில் செல்வதை தான்..
அவள் நீரில் அமிழும் வரை பார்த்தவள் அவளுக்கு உதவாது திரும்பி சென்று விட.. “பசப்புகாரி எப்படி நடிக்குற பாரு சும்மா தூசிமாதிரி தட்டி விட்டதுக்கு கிணத்துல விழுவாலமா.. நடிப்பு நடிப்பு உடம்பு முழுக்க விஷம் அவளே விழுந்துட்டு நான் தள்ளிவிட்டேன் சொல்ல நாடகமாடுறா.. என்னமா நடிக்குறா நீச்சல் தெரியாமலா கிணத்துல விழுவா..என்னமா நடிக்குறாளுக..?” என்ற படி சென்றவளை சிவசங்கரன் குரல் தடுத்து நிறுத்தியது..
“ஐயோ தாயீ மகிழ் கண்ணு தண்ணீல விழுந்துட்டியே யாராவது வாங்க வந்து காப்பாத்துங்க..??”
“எய்யா மாரா, முத்து, மணிய எப்பா யாராவது வாங்கய்யா..!!”
“இந்த புள்ளைக்கு நீச்சல் தெரியாதே ஐயோ புள்ள தண்ணிக்கு அடில போகுதே.!!” .என்றதும் அங்கு விரைந்தாள் சாம்பவி ..
“என்ன என்னாச்சு மாமா..?”
“ஐயோ அம்மாடி சாம்பவி , மகிழ் பிள்ளை தண்ணீல விழுந்துடுச்சி மா. ஐயோ அப்பா அப்பானு சுத்தி வந்த பிள்ளைய கொல்ல நானே இங்க கூட்டியாந்தேனே யாராச்சும் காப்பாத்துங்க..?” என்றவர்.. ஒரு முடிவு எடுத்தவராக..
தண்ணீயில் குதிக்க போக..
“ஐயோ மாமா என்ன பண்ணுதீங்க ஏற்கனவே நோவு கண்ட உடம்பு..?”
“அதெல்லாம் பார்க்குற நேரம் இல்லாம புள்ளைய காப்பாத்தனும்..!”என்றவர் மீண்டும் குதிக்க போக..
அவருக்கு முன் பாய்ந்து சென்றாள் சாம்பவி கிணற்றுக்குள்..
நீரில் நீந்தி சென்றவள் எங்கு தேடியும் மகிழ் கிடைக்காததில் அச்சம் அடைந்தவள்.. முழுதாக நீருக்கு அடியில் சென்று ஒருவாறு மயங்கி கிடந்த மகிழை முடியை பிடித்து இழுத்து வரவும் பண்ணை ஆட்கள் வரவும் சரியாக இருக்க..
துரிதமாக இருவரையும் மீட்டு மகிழுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்..
அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு பொதுபிரிவில் மாற்றினர்.
மருத்துவமனையில் மகிழுடன் சாம்பவி தான் இருந்தாள்.
அதற்கு இரு காரணம் உண்டு ஒன்னு தன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை என்பதலும், மற்றொன்று அவள் தான் தள்ளிவிட்டாள் என்பதை மற்றவர்களிடம் அவள் கூறாமல் தடுப்பதற்காகவும்.. (அடி கிராதகி.. என்ன கேடி தனம்..)
அப்போது மகிழை பார்க்க பவள பாட்டியை கூட்டி வந்த சிவசங்கரன்.. சாம்பவி கைகளை பிடித்து கொண்டு நன்றி தெரிவிக்க மேலும் குற்ற உணர்ச்சி அதிகரித்தது..
அவளருகே வந்த பவள பாட்டியும் மேலும் அவளுக்கு சங்கடம் அதிகரிக்கும் வகையில் நன்றி தெரிவிக்க..
ஆத்தா சாம்பவி ரொம்ப நன்றித்தா.. “ஆயி அப்பன சமீபத்துல தொலைச்சிட்டு தவிக்குற புள்ளைய காப்பாத்தி கொடுத்துட்ட ஆத்தா..!” என்றவர் தொடர்ந்து அவளுக்கு நேர்ந்ததை சொன்னவர் மறந்தும் ராவணன் பெயரை சொல்லவில்லை..
சொல்லி இருந்தால் பின்னால் நடக்க போகும் அசம்பவிதங்கள் தடுக்கப்பட்டு இருக்குமோ என்னவோ..
பாட்டி சொன்னதை கேட்ட சாம்பவிக்கு தன் மீதே கோவம் வந்தது அவர்களிடம் உண்மையை சொல்ல போக.. மகிழ் கண் முழித்தால்..
“அம்மாடி எழுந்துட்டியா மா, எங்க உன்ன கூட்டிட்டு போய் நானே கொன்னுட்டேனோன்னு தவிச்சுட்டேன் தாயீ.!!”.என்றவர் வாயில் கைவைத்து தலையை மறுப்பாக அசைத்தவள்..
“சரி எப்படிமா கிணத்துக்குள்ள விழுந்த என்க..?”
சாம்பவி எப்படியும் தன்னை காட்டி கொடுக்க போகிறாள்.. அதற்கு முன் தானே சொல்லி விட வேண்டியது தான் என நினைத்தவள், வாயை திறக்கும் முன்..
“கிணத்துக்…குள்ள எட்டி பாத்துட்டு இருக்கும் போது வ…ழுக்கி விழுந்துட்டேன் அப்.. ஆ..பாஜி..!” என மூச்சு திணறி ஒருவாறு சொல்லி முடித்தவளை..
“ஐயோ பிள்ளைக்கு மூச்சு திணறுதே மருத்தவரை போய் கூட்டிட்டு வா சாம்பவி..!” என்க..
“இருமா நான் போய் கூட்டியாறேன் என பவள பாட்டி சென்று விட,மருத்துவர் வந்து தண்ணீர் உள்ள போனதால கொஞ்சம் சிரம படுறாங்க அவங்களே சீக்கிரம் சரியாயாகிடுவாங்க மாத்திரை எழுதி தரேன் குடுங்க இப்போ அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்..!” என்றதும்
அவளை சிவசங்கரன் தன் வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்துக்கொண்டார்.. சாம்பவியும் அவள் முழுவதும் குணம் அடையும் வரை பார்த்து கொண்டவள்.. வீட்டுக்கு வந்த பிறகும் அவள் ஏன் தன்னை காட்டி குடுக்கவில்லை என குழம்பியவள் அவளிடமே கேட்டு விட்டாள்..
“நீங்க என்ன நான் சாகனும்னா தள்ளி விட்டீங்க அண்ணி என்க..!”
“எ..என்ன.. சொன்னா..?”
“அது நீங்க வேணும்னே தள்ளி விடலை..!”
“ப்ச் அது இல்ல அதுக்கு அப்புறம் என்ன சொல்லி என்ன கூப்பிட்ட..?”
“அது அ.. அண்ணின்னு என்றவளை..!”
“கட்டிகொண்டவள்.. என்ன மன்னிச்சுடு தாயி..! எனக்கு மாப்பு கேக்குற அருகதை இருக்கா தெரியல ஆனா என்ன மன்னிச்சுடு.. எனக்கு என் மாமன்னா உசுரு அத சின்ன வயசுல இருந்தே மனசுல பொத்தி வச்சி இருக்கேன் எதுக்காகவும் யாருக்காகவும் விட்டு குடுக்க கூடாதுனு ஒரு வெறி எனக்குள்ள அந்த வெறில தான் புத்தி பேதலிச்சு போய் என்னென்னமோ ஆச்சு..!” என்ன மன்னிச்சுடு..என்றவள்
என்ன நாத்தனாரே இப்படி இளைச்சுபுட்டிங்க, இரு என் நாத்திக்கு ஐயர மீன் கொழம்பு வச்சி என துள்ளி குதித்து சென்றாள்..(இது அந்தர் பல்டி டா சாமி..)
“ஹாஹா அடிச்சா மொட்டை வச்சா குடுமி மாதிரி கோவம் வந்தா தள்ளி விடுறாங்க பாசம் வந்தா மீன் குழம்ப.. நடத்துமா நடத்து..
“மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தானே ம்ஹும் மச்சான் எனக்கு தானே..!” என பாடிய படி வெளியே வந்தவளுக்கு கண்கள் பொறி பறந்தது..
வேலை இடையில் மகிழை காண வந்த வளவன் அவர்கள் பேசுவதை கேட்டு விட வெளியே வந்தவளை எந்த அறிவிப்பும் இல்லாமல் விட்டான் அறை..(போலீஸ் ஆடி சும்மா அதிருமில்ல )
“இதுவரைக்கும் நீ பண்ணதெல்லாம் பத்தாதுன்னு இப்போ அந்த பிள்ளையை கொல்ல பார்த்து இருக்க இல்லடி..?”
“அது இல்ல மச்சான்..நான் வேணும்னே பண்ணல..!”
“ஏய் நிறுத்துடி நீ வேணும்ன்னு பண்ணியோ வேணான்னு பண்ணியோ.. எப்போ என் மேல இருக்குற ஆசைல கொள்ள துணிஞ்சிட்டியோ உனக்கு இந்த வீட்டுக்குள்ள மட்டுமில்ல என் வாழ்க்கையிலயும் இடமில்லை..!” என அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டான்..
ஆனால் அவள் செய்ததை மூவரும் யாரிடமும் சொல்லவில்லை. அதன் பின் அவள், வளவன் சென்ற பின் வந்து மகிழினியுடன் இருந்துவிட்டு அவன் வரும்முன் சென்று விடுவாள்.
மகிழ் வேலை விஷயமாக வடிவு அத்தை வீட்டுக்கு சென்ற போது.
“மச்சான்” எனத் துள்ளிக் குதித்து வந்தவளைப் பொருட்படுத்தாது தன் அத்தையிடம் மட்டும் பேசிவிட்டுச் சென்றவனை ஏக்கமாகப் பார்த்தவள் தோளில் கைவைத்து ஆறுதல்படுத்தினாள் மகிழ். இருந்தும் கலங்கியபடி சென்றவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
வளவன்-சாம்பவி திருமணத்தைப் பற்றி சிவசங்கரிடம் பேச, அவர் வளவனிடம் வினவ அவன், “சாம்பாவியை திருமணம் செய்ய மாட்டேன்” என அழுத்தமாக கூறிவிட…
அவனை வழிக்குக் கொண்டு வர சிவசங்கரனும் மகிழும் எடுத்த முயற்சிகள் ஏராளம். அவர்கள் போடும் பந்துகளை எல்லாம் “போர், சிக்ஸ்” என அவன் அடித்துத் தள்ளிவிட்டுச் செல்கிறான். சில சமயம் நோ பாலாகவும் மாற்றி விடுகிறான், இன்று பண்ணதை போன்று.
சாம்பாவிக்கு சமையலில் உதவி செய்துவிட்டு சென்று தானும் தயாராகி வரவும் சிவசங்கரன் வரவும் சரியாக இருக்க, இருவருக்கும் பரிமாறிவிட்டு சென்றுவிட்டாள்.
மகிழை வங்கியில் விட்டுவிட்டு அவரும் பஞ்சாயத்துக்குக் கிளம்பிச் சென்று விட்டார்.
வாங்க வாங்க நாமும் போவோம், நானும் இதுவரை பஞ்சாயத்தைப் பார்க்கல.



