கனா கண்டேனடி சகியே -30

கனா கண்டேனடி சகியே -30

“பொறுமை இந்தாங்க தண்ணி குடிங்க…!!”என்ற குரலில்  என்னை கண்டு கொண்ட கனலினி…

“நீங்க…???” என  இழுக்க…

“சந்தேகமே வேணாம் நான்…  யது நந்தினியே தான்…!!”

“ஹா… என்ன நீங்க போய் டைனோசர்  மேய்க்குறிங்க…??” என அதிர்ச்சியாக கேட்க…

“பின்ன உங்கள் வச்சி கதை எழுதினா இது தான் என்  நிலைமை… ஒரு கேரக்டருக்கு  இன்டர்நேஷனல் டான்னு சொன்னா அவன் என்னடானா… துப்பாக்கி வச்சி ஆளுங்கள போட்டு தள்ளுறதும்… கப்பலை வெடிக்க வைக்கறதும்… அதைவிட பொசுக்கு பொசுக்குன்னு ஹெலிகாப்டரில் போவதும் வருவதும் … பெட்ரோல் விக்குற விலையில நான் என்னத்துக்கு ஆகுறது அதான் சைடு பிஸ்னஸா டைனோசர்  மேய்க்க வந்துட்டேன்…!!”

” சரி சரி என் பிரச்சினை அது நான் பாத்துக்குறேன்… இப்போ நீ தேடி வந்தவன் அந்தா தெரியுது பார் கல்லு அங்க தான் உக்காந்துட்டு இருக்கான் போய் பாரு… முடிஞ்சா அவன்கிட்ட செலவை குறைச்சுக்க சொல்லு… இருக்குற ஹீரோலே இவன்  தான் ரொம்ப காஸ்ட்லி… ஆள் நல்ல வாட்ட சாட்டமா இருக்கும்போதே சுதாரித்து இருக்கணும் இப்ப புலம்பி என்ன பண்ண நீ போமா…!!”என்று விட்டு யது நந்தினி பட்ஜெட்டில் விழுந்து துண்டை சரி செய்ய டைனோசர் மேய்க்க போய் விட…

அவள் கூறி சென்ற திசையை நோக்கி நடக்க ஆரம்பித்த கனல்…

அங்கு ஒரு கல்லின் மேல் பெரிய துப்பாக்கியை நிலத்தில் குத்தி  அதை கைகளால் பிடித்த படி அமர்ந்திருக்க…

  உடலை விட்டு நீங்கிய உயிர்  திரும்பி வந்தது போல்… நிம்மதி கொண்ட கனல்… “துரியன்… துரியன்…!!” என கத்தி கொண்டே அவன் அருகில் சென்றாள்…

 அவனுக்காக பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் சமாளித்து வந்த  கனலினியிடம் “என் அன்பே ஆருயிரேனு…”உருக்கினால் அது துரியன் இல்லையே…

” வருவதற்கு  உனக்கு இவ்ளோ நேரமா… ஏதோ நான் கொஞ்சம் ஸ்ட்ராங்கான பாடினாலே தாக்கு புடிச்சுட்டேன்…  பட்ஜெட்டை காலி பண்ண காண்டுல என்ன ரைட்டர் போட்டு தள்ளி இருக்கும்… ஆனாலும் நீ ரொம்ப டக்கு போ…!!’    என நக்கல் செய்தவனை விளங்காது முழித்து நின்றவளிடம் 

“பின்ன இன்னும் எத்தனை கதைல தான் நாங்களே (ஹீரோஸ்) உங்களைக் காப்பாத்துறது, சண்டை போடுறது… கொஞ்சம் எனக்காக நீ சண்டை போட்டா எப்படி இருக்கும் நினைச்சேன் நீ செஞ்சிட்ட…!!”

“சும்மா சொல்ல கூடாது நல்ல துப்பு துலக்கின… நானே உன்கிட்ட இதல்லாம் சொன்னா வர கிக்க விட நீ எனக்காக தேடி அலைஞ்சத நினைச்சா… கிக்கோ கிக்கு…!!”என்றவன் வாய் கேலி பேசினாலும்… கண்கள் காட்டும் வலி அறியமுடியாதவளா அவள்…

அவன் கேலியை கண்டு கொள்ளாமல் “எங்க அடி பட்டு இருக்கு…!!” என அவனை ஆராய்ந்தவள்… துரியன் முதுகு பகுதியில் தோட்டா துளைத்து குருதி வருவதை பார்த்தவள்… 

கண்கள் நீர் கோர்க்க அவனை மார்போடு அணைத்து கொண்டவளிடம் அத்தனை நேரம் இருந்த விளையாட்டு தன்மையை விடுத்து விட்டு “நீ கேட்டது போல எல்லாத்தையும் விட்டுடலாம்னு நினைக்குறேன்… அதனால இங்கயே டான் ட்ராக்கோ செத்து போய்ட்டான்…!!”என்றவன் அவள் கைகளில் சரிந்தான்…

கோல்டன் டிராகன் லீடர் டான் ட்ராக்கோ இறந்த செய்தியை அடுத்து… அவர்களுக்குள் கடும் போட்டிகள் நிலவி வருவதை தொடர்ந்து டான் லியோவே அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அடுத்த தலைவர் வரும்வரை அவரே முடி சூடா ஜாம்பவான்…

சில நாட்களுக்கு பிறகு…

மாய தீவில்…

கட்டுக்கள் போடப்பட்டிருந்த தொழிலதிபர்  துரியன்… கடலில் அவினி,  கனலினி, வைஷ்ணவி, கர்ணன், அமைரா விளையாடுவதை   பார்த்து ரசித்த கொண்டு இருக்க…

  துரியனின் தொழில் எதிரிகள் திடீர் என்று தாக்கும் சத்தம் கேட்டு பயந்தவர்கள்… உள்ளே போக எத்தனிக்க…

துரியன் வீல்சேர் மண்ணில் புதைந்து கொள்ள… அதை தள்ள முடியாமல் கனலினி  போராட… அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடக்க… அவர்களை காப்பாற்றும் நோக்கில் அமைரா குறுக்கே பாய்ந்ததன் விளைவு அவ்விடத்திலே சுருண்டு விழுந்தாள்…

 கண நேரத்தில் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஸ்னைப்பரை சுட்டு வீழ்த்திய ஸ்டீபன்…

அமைரா அருகில் வந்தவன் அவள் உயிரற்ற உடலைக் கண்டு கதறி அழுதான்…

“ஹே முட்டாள் முட்டாள் அப்படி என்னடி அவசரம் உனக்கு…??”ஸ்டீபன் 

” ஸ்டீபன் இது என்னனா… நான் சொல்றது கேளு…!!” என வந்த துரியன்..

“சாரி பாஸ் என்னால முடியல கடமையா காதலா… இதுக்கு முன்னாடி என்னை யாராவது கேட்டா கடமைணு சொல்லி இருப்பேன்… ஆனா எப்போ இவள் என் வாழ்க்கைகுள்ள வந்தாளோ அப்பாவே… இவ மட்டும் தான்  என்னை மன்னிச்சிடுங்க சார்… எனக்கு இவ  காதல் சொல்லும் போது எல்லாம் இவளை புரிஞ்சிக்காமல் உதசீனம் படுத்தினேன்… இப்போ என் காதலை நான் உணர்ந்து அவள் கிட்ட சொல்லும் முன்னாடி என்னை விட்டு போய்ட்டான் அவசரக்காரி… இனி அவள் இல்லாம எனக்கு எதுவுமே வேணாம் சார் நான் இந்த வேலைய விட்டு போயிடுறேன்…!!” என்றவன் அமைராவை தூக்கிக்கொண்டு நடக்க 

“டேய் போறதுதான் போறோம் அப்படியே நான் சொல்றதையும் கேட்டுட்டு போ…  அவளுக்கு புல்லட் ப்ரோப் கொடுத்து ரொம்ப நாள் ஆகுதுடா…!!” என துரியன் கூறிவிட்டு அடுத்து என்ன நடக்கும் என யுங்கித்தவன் மகளையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்…

 துரியன் கூறியதைக் கேட்டவன் “என்ன…?” என அதிர்ந்து கையில் இருக்கும் அமைராவை உற்று பார்க்க…மூடிய இமைக்குள் கரு விழிகள் இரண்டும் நர்த்தனம் ஆடியது…

“ச்ச இன்னும் கொஞ்சம் நேரம் கதற விடலாம்ணு பார்த்த பாஸ் இப்படி போட்டு கொடுத்துட்டாரே…!!” என கண்ணை திறந்த அமைராவை…

கோவ தீயாய் முறைத்தான் ஸ்டீபன்…

“சும்மா முறைக்காதிங்க… இவ்ளோ ஆசைய மனசுக்குள்ள வச்சிக்கிட்டு   என்ன சுத்தல்ல விட்டீங்கள இப்படித்தான நானும் கதறினேன்…  அதுக்கு கொஞ்சமவது நான் பழி வாங்கனும்ல அதுக்கு தான்…அப்புறம் நீங்க தான் டெடியா வந்திங்கனும் கண்டு பிடிச்சிட்டேன்… டெடி பையா…!!”என்றவளை…

“முட்ட…ஹ்ம்ம்ம்ம். ம்ஹும்…!!”கடிய வாய் திறந்த ஸ்டீபனின் தடித்த உதடுகளை சிறை பிடித்து இருந்தாள் அமைரா…

“ம்ம்ம் ம்ம்ம்ம்.. முஹும்…ம்ப்ச்..!” அமைராவின் செயல் அவனின் கோபத்தை கிளறி இருந்தாலும் அவள் ஈர முத்தம்  அவனுள் குளிர் பணியாக தீண்டி அவன் கோபத்தை  மட்டுப்படுத்தியது…

நீண்ட நெடிய முத்தம் இருவரையும் நிலைகுலையச் செய்தது… கால்கள் வலுவிழக்க… அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் இருவருக்கும் உணர்ச்சி பெருக்கு எடுக்க அமைராவை தூக்கி சென்றான் ஆசை காதலன் ஸ்டீபன்…

ஸ்டீபனும் அமைராவும்  முத்தமிடுவதை பார்த்த கர்ணன் அங்கிருந்து விலக எத்தனிக்க…  வைஷுவோ அவனோடு வராமல்… அவர்களின் முத்த காட்சியை ஆர்வமாக பார்க்க…

“அடியே  அங்க என்னடி பார்த்துட்டு நிக்குற வா போகலாம்…!!”

“அட இரு பெருசு செம சீன் போகுது பார்த்துட்டு வரேன்…!!” என ஆர்வமாக  கூற…

தலையில் அடித்து கொண்ட கர்ணன்…

“அடியே கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம…அவங்க முத்தம் கொடுக்கிறது போய்… அப்படி பார்க்குறா… வா லூசு…!!”என தர தர வென்று வைஷ்ணவி  இழுத்து கொண்டு வந்தவன்…

கையை தட்டி விட்டவள்… “யோவ் பெருசு… நீ தான் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு முத்தம் கூட தர மாட்டேன் சொல்லிட்ட… அதுக்குணு ஒரு முத்தகாட்சியை பார்க்க கூட விட மாட்டனா என்ன அர்த்தம்…எங்க ஊர்ல இதல்லாம் சகஜம் தெரியுமா…நீயும் உன் பழைய பஞ்சாங்கமும் போயா…சரியான பெருசு…!!”என முகம் சுளித்தவளை… தன் புறம் திருப்பி

“அப்போ கல்யாணத்துக்கு முன்னாடியே என்ன பண்ணாலும் ஓகேங்குற…!!”என அவளை பாறைகளுக்கு இடையே சிறைப் பிடித்துக் கொண்டே காரணம் கேட்க…

“நான் எப்போ அப்படி சொன்னேன் முத்தம் மட்டும்ம்ம்ம்ம்ஹும்… ஹும்… ம்ம்ம் ஹு.. ஷ்…நோஓம்ம்ம்.. ஸ் ஹா….!!” பெண்ணின் உதடுகளை அவன் முரட்டு அதரங்களால் சிறை செய்தவன் … கைகள் இரண்டு பெண்ணில் தொடாத பாகமே இல்லை…

உள்ளே வந்த துரியனை கனலினி  எப்பொழுதும் போல் பால்கனி கூட்டி செல்ல அங்கே 

 கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறையும் வேளை… கீழ்வானம் கருக்கத் தொடங்க…

 ஆரஞ்சு வண்ண அக்னி பந்து… நீல கடல் உள்ளே மறையும் அற்புதமான காட்சியை… துரியன் வீல் சேரில் அமர்ந்திருக்க … அவன் மடியில் அவினி இருக்க… அவன் தோள்களில் கை போட்டு கொண்டு இட பக்கம் நிறை மாத நிலவாக நின்ற மனைவியை இழுத்து வீல் சேரில் சாய்த்து கொண்டவன்… அவ் அழகிய பொன்அந்தி மாலை நேரத்தை ரசித்தான்… ரசனையாக… இனிமையாக…காதலாக…

நிஜமாய் ஒரு கனவு…

அதில் நீ நான் நாம்…

வானவில்லை வளைத்து…

மேகத்தில் மாளிகை கட்டி…

 நம் உயிர் காதல் கொண்டு…

பல காவியங்கள் படைத்திட…

கனா கண்டேனடி சகியே..!!!

நன்றி…!!!

வணக்கம்…!!! 

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top