கனா கண்டேனடி சகியே -27

கனா கண்டேனடி சகியே -27

இரவு முழுவதும் அமைராவின் டெடி பொம்மையாக இருந்த ஸ்டீபன் விடியும் வேளையில் அவள் அறியமால் கிளம்பி சென்று விட்டான்…

இந்த இரவோடு துரியன் வாழ்க்கை முடிந்து போகும் யாரும் சொன்னார்களோ தெரியவில்லை…

 கணநேரம் கூட கனலினியை கண்கள் மூட விடமால் ஆட்கொண்டவனும்… கண் மூட வில்லை… “எரிகிறது எங்களுக்கு ஓய்வு கொடேன்..”என கெஞ்சிய கண்களை டீலில் விட்டு… கனலினியை பார்த்து இருந்தவன்…

அவள் நித்திரையில் ஆழ்ந்து விட்டதை உணர்ந்து மெல்ல அவளை விலகி படுக்கையில் படுக்க வைத்து போர்வை போர்த்தியவன் …

அவள் வயற்றில் கையை வைத்து…

“உங்க அம்மா வாழ்க்கையில முறை இல்லாம வந்து இருக்கலாம்… ஆனா அவள் தான் என் வாழ்க்கைக்கு அர்த்தமானவள்… எனக்குள் நிறைந்த காதலை வெளி கொண்டு வந்தது அவள் தான்… உங்க அம்மாக்கு நடிக்க தெரியாது… எல்லாரையும் நம்பிடுவா… என்கிட்ட இருந்து மறைச்சிடலாம் நினைச்சுட்டா பைத்தியகாரி… ம்ஹும் என்மேல பேரன்பு கொண்ட பைத்தியக்காரி… எனக்கா தெரியாது நீங்க அவளுக்குள்ள வந்து எத்தனை நாள் ஆகுதுன்னு…உங்க அப்பா சாவை விலைக்கு வாங்க போறேன்… திரும்பி வருவேனா தெரியாது… உங்க அப்போவோடான வாழ்க்கை பாதை அத்தனை எளிதல்ல…விஷ முட் செடிகள் நிறைந்தது… அதை தாண்டி வரும் சக்தி உங்க அம்மா காதலுக்கு இருக்காணு பார்க்கலாம்…இனி அவ தான் போராடனும்… அவளுக்கு துணையா நீ தான் இருக்க போற பார்த்துக்கோ…!!” என கனலினி வயிற்றில் முத்தம் வைத்து நிமிர்ந்தவான் எப்போதும் போல் அவள் நெற்றில் முத்தம் வைத்து விலகினான்… குளித்து தயாராகி வந்தவன்… அடுத்தாக மகளை தேடி செல்ல…

கட்டிலில் மலர்ந்த மலராக உறங்கும் மகளை கண்ணார பார்த்து ரசித்தவன்… குனிந்து 

“குட்டிமா எதுக்கும் பயப்படாம இருக்கணும் சரியா… அப்பா எப்பவும் உங்க கூடவே இருப்பேன்…!!” என துரியனின் குரலுக்கு…

தூக்கத்திலே “சரி டாடி… ஐ லவ் யூ…!!”என பதில் அளித்த மகளை அள்ள துடித்த கரங்களை கஷ்டப்பட்டு அடக்கியவன்… குனிந்து அவள் முதுகை தட்டி கொடுத்து உறக்கத்தை தழுவ உதவினான்… பின் சென்னியில் முத்தமிட்டு விலகியவன்…

ஒரு முடிவோடு வெளியே வர அவனை தொடர்ந்து வந்த ஸ்டீபனை தடுத்தவன்…

“நோ ஸ்டீபன் நீ இவங்களை பார்த்துக்கோ…இது எனக்கான நேரம்…நான் தனியாவே போறேன்..!!” என்றதும்…

“பாஸ்…!!” என குழம்பியவன் 

அவன் தோள்களை தட்டி…” என் கூட ரொம்ப நாள் இருந்ததுக்கு உன்கிட்ட நிறைய தடவ சொல்லணும் நினைச்சு சொல்லாம விட்டது இது… தேங்க்ஸ் ஸ்டீபன் எல்லாத்துக்கும்…!!”

“அப்புறம் எப்பவுமே விறைப்பா இருக்காதாடா …அப்போ அப்போ கொஞ்சம் சிரி… உன்னை நம்பி வந்தவங்களை காப்பாத்துற அளவு உன்கிட்ட திறமை இருக்குனு நான் நம்புறேன் நீயும் அதை நம்பு… கனவு எப்பவும் நிறந்திரம் கிடையாது புரிஞ்சிக்கோ…!!”என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் கிளம்பி சென்றுவிட்டான் 

இரவின் மிச்சங்களை கலைக்கவே தன் இளஞ்சூடான கதிர்களை கொண்டு நாயகியை எழுப்ப…முயல ஆதவனுக்கு துணையாக பறவைகளின் ரிங்காரத்திலும் கனலினியின் துயில் கலைய…

கண்ணை திறந்து பார்த்தவள் முதலில் தேடியது அருகில் இல்லாத துரியனை தான்…

“துரியன்… துரியன்…எங்க போனார்…??” என அவனை தேடி துழாவிய படி வர…

அவளிடம் ஸ்டீபன் வந்து ஒரு பார்சலை கொடுத்து “துரியன் கொடுக்க சொன்னதாக” கூற…

குழப்பத்துடன் பிரித்து பார்த்த கனல் இடிந்த மன நிலைக்கு தள்ள பட்டாள்…

சிறிது நேரத்திற்குள் அங்கு வந்த கர்ணனும் வைஷ்ணவியும் பார்த்தது… தலையில் கை வைத்து ஆழ்ந்த துக்கத்தில் இருந்த கனலினியை தான்…

என்னமா ஆச்சு ஏன் எங்கள உடனே வர சொன்ன… கர்ணன் கேட்க…

அவன் கையில் துரியன் தந்த உறையை கொடுக்க… அதை படித்தவனும் குழம்பி தான் போனான்…

 ஏனெனில் அதில் துரியனின் சொத்துக்கள் அனைத்துமே கனலினியின் பெயரில் மாற்ற பட்டு இருந்தது… மாய தீவு உட்பட… அத்தோடு அவளுக்கு சில கடமைகளையும் விட்டு சென்று இருக்கிறான்… அவனுக்கு பிறகு அவன் குடும்பத்தை பார்த்து கொள்ளும் படி கனலினியிடம் ஒப்படைத்த கையோடு மட்டும் இல்லாமல்… யார் யாருக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்பது வரை தெளிவாக விளக்கிக் இருந்தான் அந்த கடிதத்தில்…

“என்னமா நடக்குது எனக்கு ஒன்னுமே புரியல…!” என கர்ணன் குழம்ப 

“போன் பண்ணா எடுக்கல…சுவிட்ச் ஆப்…எப்பயும் கூட்டிட்டு போற ஸ்டீபன் கூட கூட்டிட்டு போக வில்லை…அவரோட ட்ராக்கிங் டிவைஸ் வேலை செய்யல… தனியா ஹெலிகாப்டர்ல போனத பைலட் சொல்றாரு…எங்க போனார்னே தெரியல நேத்து என்கிட்ட என்னன்னமோ வேற சொன்னார் நான் தான் சரியா புரிஞ்சிக்கல… புரிஞ்சி இருந்தா போக விட்டிருக்க மாட்டேன்… என் மனசு பதறது… அவருக்கு என்னமோ ஆயிருக்கும் தோணுது… ப்ளீஸ் அவர தேடி கொடுங்க..!!” என கண்ணீர் மல்க கெஞ்ச 

“அக்கா அழாத…!!”வைஷாணவி 

“எஸ் மேடம்… பாஸ் சாதாரணமான ஆள் இல்லை… அவருக்கு ஒன்னும் ஆகி இருக்காது… இது மாதிரி அடிக்கடி அவங்க கேங்க்களுக்கு இடையே சண்டை நடக்கும் … அப்போல்லாம் இப்படி தான் காணாம போவார்… அப்புறம் குத்துயிரும் குலை உயிருமாக எங்களுக்கு தகவல் அனுப்புவார் நாங்க காப்பாத்தி கூட்டிட்டு வந்துடுவோம்…!!”என்றதும்…

கனலினி இன்னும் பதட்டம் அதிகமாகி ஓஓ என அழ தொடங்கிவிட…

ஸ்டீபன் அமைராவை திட்ட தொடுங்கும் முன்… “ஏன்மா அவளே பயந்து போய் இருக்கா இப்போ போய்…இதல்லாம் சொல்லனுமா…!!” என கர்ணன் கடிய…

“சாரி அண்ணா… சாரி மேடம்…!!”என கனலினி கையை பிடித்து கொள்ள… அவளும் ஆதரவாக பிடித்து கொண்டாள்…

“ஸ்டீபன் துரியன் ஏன் கூட்டிட்டு போகலைணு சொன்னானா…??” என கேட்க…

“நோ சார்..அது நான் மட்டும் தனியா போக வேண்டிய இடம் மட்டும் தான்… அதன் பிறகு துரியன் சொன்னதை வரி மாறாமல் சொன்னதும்…

கர்ணனுக்கும் கிலி பிடிக்க தொடங்கியது…

 நிலைமை கைமீறி செல்லும் முன்பாக துரியனை கண்டு பிடிக்க முடிவு செய்து அதற்கு மேல் காத்திருக்காமல் ஸ்டீபனும் கர்ணனும் துரியனை தேடி கிளம்ப…

“கர்ணன் நில்லுங்க… நானும் கூட வரேன்…!!” என வைஷ்ணவி கூற..

“எதுக்கு நீ..?? கனலினி கூட இரு நாங்க பார்த்துக்குறோம்…!!” கர்ணன்…

“இல்லை கர்ணன் … இரண்டு பேர் சேர்ந்து தேடுறத விட நிறைய பேர் சேர்ந்து அவங்க அவங்க வழியில தேடுனா மாமா கிடைக்க வாய்ப்பு இருக்குல… எனக்கு தெரிஞ்ச சில ஃப்ரண்ட்ஸ் டெக்னாலஜில கில்லாடி… அவங்க மூலமா தேடி பார்க்கலாம்…!!’ என வைஷ்ணவி சொல்ல…

 சில வினாடி யோசித்து விட்டு… “கனல் அவினியை கூட்டிட்டு நீயும் எங்களோடவே வா… எல்லாரும் ஒன்னாவே துரியனை தேடலாம்…!!”என கர்ணன் தன் முடிவை கூற…

அனைவருமே அதை அமோதித்து கிளம்பி சென்றனர்…

 ஸ்டீபன் அமைரா கனலினி ஒரு குழுவாகவும்…கர்ணன் வைஷ்ணவி ஒரு குழுவாகவும் பிரிந்து தேடியதில் பல அதிர்ச்சி தகவலை அறிந்து கொண்ட கனலினி பெரிதும் கலங்கி போனாள்…

துரியன் கூறி சென்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிய பேரிடி விழுந்தது போல் துடித்தாள்…

பின்பு ஒரு முடிவு எடுத்தவளாக…”அது தற்கொலைக்கு சமம்…” என யார் தடுத்தும் கேட்காமல் கோல்டன் டிராகன் காட் பாதரான” டான் லியோவை “தேடி சென்றாள் கனல்…

விதியை மதியால் வெல்வார்களா…

கனவு மெய் பட வேண்டும்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top