கனா கண்டேனடி சகியே -14
இனி தப்பிக்கும் மார்க்கம் இல்லை என்பதை அறிந்து கொண்டவள்… மரணத்தை எதிர் கொள்ள தயாரான சமயம்…
அவள் படகின் மேல் இடி முழுங்கும் சத்ததுடன் ஹெலிகாப்டர் வரவும் சரியாக இருக்க…
“யார்…???” என்று பார்க்காமலே நிம்மதி அடைந்தாள்… மரித்த அவள் நம்பிக்கைக்கு புத்துயிர் அளிக்க துரியனை அன்றி வேறு யாரால் முடியும்…
“ஸ்டீபன்… இன்னும் கொஞ்சம் கீழ இறங்கி அவங்க பக்கத்துல போங்க …!!!” கட்டளை இட
“சாரி சார் இதுக்கு மேல கீழ இறக்குனா… அந்த சுழற்சி நம்ம ஹெலிகாப்டரையும் சேர்த்தே உள்ள இழுத்துக்கும்… இல்லனா அழுத்தம் தாங்காம வெடித்து சிதறவும் வாய்ப்பு இருக்கு சார்…!!!’என மறுக்க…
“சரி அப்போ ஹெலிகாப்டர் ஒரு பக்கமா கொண்டு வாங்க…நான் அவங்கள ஏணில ஏத்தினதுமே விலக தயாராகிடுங்க..!!” என கட்டளையை பிறப்பித்துக் கொண்டே தொங்கும் ஏணியை படகை தொடும் படி எடுத்து போட்டவன் நொடியும் தாமதிக்கல … கீழே இறங்கி கனல் மற்றும் மகளையும் ஏணியில் ஏற்ற
“அவினி மை கேர்ள் நீ தைரியமான குட்டிடா… டாடி சொல்றேன் உனக்கு ஒன்னும் ஆகாது சரியா… கீழ பார்க்காம மேல மட்டும் பார்த்து போயிட்டே இருப்பிங்களாம் அம்மா அப்பாவும் உன் பின்னாடியே வருவோம்… கோ… பேபி…!!!”என தகப்பனாக மகளுக்கு திடம் அளித்து அனுப்பி வைக்க…
மேலே வந்த அவினியை சீட்டில் அமர வைத்து சீட் பெல்ட் போட்டு பாதுகாப்பாக ஸ்டீபன் அமர வைக்க…
எஞ்சி இருந்தது கனலினியும் துரியனும் மட்டுமே… மதில் மேல் பூனையாக மாட்டிக்கொண்டனர்… திடீரென்று ஏற்பட்ட அழுத்தம் தாங்காமல் ஹெலிகாப்டர் குலுங்க ஆராமிக்க…
“பாஸ்… சீக்கிரம்…ஹெலிகாப்டரையும் சுழல் உள்ள இழுக்குது…!!”என ஸ்டீபன் கத்த…
அதை கேட்கும் நிலையில் இருவரும் இல்லை… ஏனெனில் பெரும் இரைச்சலோடு ஹெலிகாப்டர் அந்த சுழற்சிக்கு மைய பகுதியில் வந்து சுழல ஆரம்பித்து இருந்தது…
பிடிமானம் வழுவி கனலினி விழ அவளின் ஆடையை பிடித்து துரியன் காக்க முயன்றான் தான் ஆனால் விதியோ அவனுக்கு வாய்ப்பை அளிக்காமல்… “நோஓஓஓஓ… கனல் நீ என்னை விட்டு போக கூடாது…போக நான் விட மாட்டேன் என் கையை எட்டிபிடிடி…!!” என அவன் உயிரை பணயம் வைத்து கீழே குனிந்து அவளை பிடிக்கும் முன் கனலினியின் ஆடை கிழிந்து அந்த சுழலில் விழுந்து இருந்தாள்…
அவன் கண்முன் கனலினி விழுவதை பார்த்தவன் அடுத்த நொடியே எதை பற்றியும் சிந்திக்காமல்…கனலினியோடு துரியனும் அந்த சுழலுக்குள் பாய்ந்து இருந்தான்…
மரணத்திலும் தன்னவளை விலகாமல் தன் காதலை உலகிற்கு புரிய வைத்து விட்டான்…
ஆனால் கனலினி அதை புரிந்து கொள்ளும் வாய்ப்பை பெருவாளா பார்ப்போம்…
( எதே பார்ப்போமா… அவங்கள சேர்த்து வைக்கல நீ இருக்க மாட்ட அதானே…)
துரியனும் கனலினியும் குதித்த பின்னர்… ஹெலிகாப்டரை விரைவாக சுழலை விட்டு வெளியே சாமர்த்தியமாக எடுத்தான் ஸ்டீபன்…
“டாடிஇஇஇஇ …மம்மிஇஇஇஇ…” என அவினியின் அழு குரலை தவிர வேறு எந்த சப்தமும் இல்லாது நிசப்தமே குடிகொண்டது
“அங்கிள் டாடி மம்மி வரல வாங்க அவங்கள கூட்டிட்டு வரலாம்… எனக்கு டாடி மம்மி ரெண்டு பேருமே வேணும்…!!”என அவினி அழுது அடம் பண்ண…
“பொறுங்க மேடம்… பாஸ் அதாவது உங்க அப்பா மிஸ்டர் துரியன்… இளம் வயது அர்ஜுனா அவார்ட் வாங்குன குற்றாலீசுவரன் ரமேஷ் சீடன்… அவர் சின்ன வயசுலே நீச்சலில் சாதனை புரிந்தவர்… நிச்சயம் உங்க அப்பா குருவை மிஞ்சுனா சிஷ்யனா தான் இருப்பார்…!!”என ஸ்டீபன் சொல்லி கொண்டே
அதி நவீன தொலை நோக்கி கருவியை எடுத்து கடலை பார்க்க…
அவன் கணிப்பு சரியே…!!” என்பது போல…
சுழற்சியில் விழுந்த துரியன் கனலினியை கட்டி பிடித்து கொண்டவன்… சுழலோடு சூழலாக சுழன்று… அழுத்தம் கம்மியாக இருக்கும் பகுதி வந்ததும் எதிர் நீச்சல் போட்டு… மயங்கிய கனலினியை முதுகில் சுமந்து கொண்டு…இருவருக்காகவும் உயிர் வாழும் போராட்டம் அந்த காலனோடு நடத்தி வெளியே வந்திருந்தான்…
அதை கவனித்து அவ்விடம் நோக்கி விரைந்த ஸ்டீபன் உயிர் காக்கும் கருவிகளை அவர்களிடம் எறிய…
அதை பிடித்து கொண்ட துரியன் கண்கள் சொருகுவதை உணர்ந்தவன்… தலை உலுக்கி தான் மயங்கி விழும் முன் கனலினியை பாதுகாப்பாக பத்திரம் பண்ணியவன்….மூர்ச்சையாகி கடலில் விழுந்தான்…துரியன்…
அவன் உயிரும் அவனை விட்டு விலக கூடுமோ…???
அதுக்குள்ளே யா இன்னும் எவ்ளோ இருக்கு…!!எனக்கு கிடைச்ச ஒரே ஒரு சைக்கோ ஹீரோ அவனை அப்படிலாம் பொசுக்குனு போக விட்ருவேனா…!!
ஏற்கனவே ஸ்டீபன் கொடுத்த தகவலில் அங்கு விரைந்த துரியனின் நம்பிக்கைக்கு உரிய பாதுகாவலர்கள்… விரைந்து இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர்…
அங்கு மாய தீவு மாளிகையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க பட்டது… அதில் முதலில் கண் விழித்தது துரியன் தான்…
எவ்வளவு தடுத்தும் மறுத்து விட்டு அவனுக்கு பொறுத்த பட்ட ஊசி மருந்துகளை பீயித்து எறிந்து விட்டு கனலினி சென்று பார்க்க…
அவளோ கடலை விட்டு எறிய பட்ட மீனாக உயிருக்கு போராடி கொண்டு இருந்தாள்… அவள் அருகே சென்றவன்…
ரத்தம் கசியும் அவன் கரங்கள் கொண்டு கனலினியின் மரத்துப்போன கைகளை பிடித்து கொண்டவன்… கண்களில் என்ன இருந்தது… கண்ணீரா…???
“உலகத்தை விரல் இடுக்கில் வைத்து ஆட்டி படைக்கும் கோல்டன் டிராகனின் தலைவன் துரியனிடம் இருந்தா கண்ணீர்…???” என அனைவரும் வியந்து பார்க்க
“இல்லை நிச்சயம் இல்லை… இது கனலினிக்காக மட்டும் துடிக்கும் அவளின் ஆருயிர் காதலன் துரியனின் கண்ணீர்…!!”என ஸ்டீபனால் புரிந்து கொள்ள முடிந்தது…
கட்டையாக நீண்டு இருந்த கனலினியின் கையில் கண்ணீரோடு முத்தமிட்டான்…அன்பு காதலன் துரியன்…
என் நிஜம் உன்னை
நிந்திக்க கூடும்…
உன்னை விலகி
செல்ல வைத்தேன்…
ஆனால் உன் விலகலே
மரணத்தை விட
அதிக வலியை தந்ததேனடி சகியே…!!!”


