கனா கண்டேனடி சகியே -13

கனா கண்டேனடி சகியே -13

என்னதான் மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்து இருந்தாலும்… கணவனோடு அல்லது காதலனோடு  வாழ வேண்டும் என நினைப்பவள் கனலினி…

அவள் விடயத்தில் எல்லாம் தலகீழாக இருக்க… சரி கிடைத்த வாழ்க்கையாவது நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும்… என துரியனோடு வாழ்வதற்கேனும் அவனுக்கு தன் மீது கொஞ்சமேனும்… காதலோ…!!! மதிப்போ…!!! இருக்கும் என எதிர் பார்த்தவள் ஏமாந்து தான் போனாள்…

“காதலியும் அல்லது மனைவியும் அல்லாத என்னை அவன் இஷ்டம் போல் ஆட்டிவிக்க நான் என்ன பொம்மையா… வெறும் படுக்கையை பகிர மட்டும் நான் தேவையா… முடியாது…!!! எந்த தன்மானம் உள்ள பொண்ணும் இதுக்கு சம்மதிக்க மாட்டாள்… அப்படி இருக்க நான் மட்டும் எப்படி… ச்ச…இங்க இருந்து தப்பிக்கணும்…???””என கொதித்து போனவள் மாயதீவை விட்டு போயே தீரணும் என முடிவோடு தகுந்த நேரம் வரும் வரை காத்திருக்கலானாள்…

கனலினி எதிர் பார்த்ததை விட சீக்கிரமே தப்பிக்கும் மார்க்கம் கிடைத்தது…

என்றும் போல் வழக்கமாக துரியனும் அவினியும் கடல் சறுக்கு விளையாட்டை விளையாடி கொண்டு இருக்க…

தன் கோவத்தை மேலெழும்பி அத்தனையும் வாரி சுருட்டிடும்  நீல கடல் அலையாகவேனும் பிறந்து இருக்க கூடாத…??? என மருகினால் மாது…

அலையை வெறித்தவண்ணம் இருந்தவள் கடல் அலைக்கு ஏற்ப ஆடி அசைந்து அவள் கவனத்தை ஈர்த்தது அந்த சின்ன படகு…

எதோ சிந்தனையில் பார்த்தவளின் மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டு… கண்கள் பளிச்சிட தந்தை மகளை பார்க்க… அவர்களோ கடல் அலையில் ஆர்வமாக விளையாடி கொண்டு இருக்க… அவர்கள் கவனத்தை ஈர்க்காத  வகையில் அந்த படகு அருகே சென்று பார்த்தாள்… இருவர் தாராளமாக அமர்ந்து செல்லும் விசை படகு…

எதையும் யோசிக்காமல் தண்ணீரில் இறங்கியவள் அந்த படகை இழுத்து கொண்டு போய் பாறைகள் இடையே மறைத்து வைத்தாள்… துரினுக்கும் தெரியாத வகையில்…

பின் சென்றது போலவே திரும்ப வந்தவள் கண்களில் அந்த பளிச்சிடல் நிறந்தரமாக குடி கொண்டதை அவளே அறியாள்…

மகளோடு விளையாடி கொண்டு இருந்த துரியன் கரை சேர்ந்து…” வா காமினி லெட்ஸ் பிளே…!!!” என்றும் இல்லாமல் கனலினியையும் அவர்களோடு அழைக்க… உடனே எந்த தயக்கமும் இல்லாமல் அவர்களோடு இணைந்து கொண்டு அலைசறுக்கு விளையாட…

வெள்ளை காகிதமாய் வானம்… கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி நீலத்தில் அலை கடல் இதில் வயதை மறந்து மகளோடு இணைந்து விளையாடும் அன்யோன்ய தம்பதிகளாக துரியன் கனலினி விளையாட…

அவ் அழகிய தருணம் புகைப்படம் எடுக்க பட்டது அதுவும் அவர்களுக்கே தெரியாமல்… “யாருக்கு தெரிய கூடாது என துரியன் இவர்களை மறைத்து வைத்து இருந்தானோ…??? அவர் கைகளில் துரியனின் குடும்ப புகைப்படம்…

“ஹாஹா… யானைக்கும் அடி சறுக்குமாம்… துரியன் உன் பிடி இனி என் கையில…!!!” என கையில் இருந்த புகைப்படத்தில் கனலினியை வட்டம் போட்டு  வஞ்சத்தால் பளபளத்தது கண்கள்… பேய் நகங்கள் பொருந்திய கைகளால் அந்த சாட்டிலைட் போன் எடுத்து சில வேலைகளை முடித்து விட்டு…

“ஹாஹா… ஓடு துரியன் சீக்கிரம் ஓடு இல்லை நீ தாமதிக்குற ஒவ்வொரு நிமிடமும் உன் குடும்பம் ஒன்னு ஒன்னா அழியும்…ஹாஹா…!!!” என இரையை விழுத்திய கொக்கரிப்பு கொட்டியது…

*********

இங்கே விளையாடி விட்டு திரும்பிய துரியனுக்கு கிடைத்த தகவலில் திகைத்து தான் போனான்… காரணம் அவன் இது அவன் எதிர்பாரத ஒன்று அல்ல ஆனால் இத்தனை விரைவாக எப்படி…??? “என்று தான்.. யோசித்தான்  நிச்சயம் இங்கும் கறுப்பாடு உள்ளது… என கண்டு கொண்டவன்…

“ஸ்டீபான்… கம் … “அழைக்க…

“எஸ் சார்…!!!”என பவ்யமாக வந்து நின்றான்… உலகின் தலை சிறந்த தற்காப்பு கலைகளை… சிறுவயது முதல் பயிற்றுவிக்கப்பட்டு… உலகின் தலை சிறந்த” விங் ” சொசைட்டியை சேர்ந்தவன் 

“ஸ்டீவ் கெட் ஹிம்… !!”  மொழிந்து விட்டு தன் ஹெலிகாப்டரை தயார் நிலையில் வைக்க சொன்னவன்… மின்னல் வேகத்தில் தங்கள் அறையை அடைந்து கனலினியோடு இருந்த மகளை அணைத்து கொண்டவன்… ” நான் போறேன் கனல்… போனா வர எத்தனை நாள் ஆகும் தெரியலை… பத்திரம்..!!!” என இருவருக்கும் முத்தமிட்டு விலகியவன்… கிட்ட தட்ட அங்கிருந்து ஓடினான்… என்று தான் சொல்ல வேண்டும்…

“டப டப “என சத்தத்துடன்… வானில் பறக்கும் ஹெலிகாப்டரில் துரியன் அவள் கண்களில் இருந்து மறைந்து செல்வதை திருப்பிதியாக பார்த்தவள்…

அதற்கு மேல் சிறிதும் தாமதிக்காமல் மகளை அழைத்து கொண்டு… அங்கு இருக்கும் கள்ள ஆட்டை தேடும் பணியில் தீவரமாக இருந்த பாதுகாப்பு படையின் கண்ணில் எளிதாக மண்ணை தூவி விட்டு படகை இழுத்து தள்ளும் வேளையில்… கனலினிக்கு காலில் அடிப்பட்டு ரத்தம் கசிந்த போதிலும்…

“இங்கு இருந்து தப்பிப்பது…”மட்டுமே குறியாக இருந்தவள்… பல்லை கடித்து பொறுத்து கொண்டு… கடலில் படகை வெற்றிகரமாக மிதக்க விட்டு மகளை ஏற்றி விட்டு தானும் ஏறியவள்…

அதிவேகமாக… அந்த விசை படகை ஓட்டியவள்… மாய தீவு கண்ணில் இருந்து மறையும் வரை திக் திக் நிமிடங்களாக கழித்தவள்… அமைதி கொண்டாள்…

“மம்மி எங்க போறோம் டாடி நம்மள வீட்ல தான பத்திரமா இருக்க சொன்னார்…!!”என அவினி கேட்க…

மகள் இப்படி கேள்வி கேட்பாள் என எதிர் பார்க்காத கனல் முழித்து விட்டு… “அது வந்து ஹனிமா… ஹான் விஹான் அங்கிள் இருக்காங்க இல்லை… அவங்க வீட்டுக்கு கூட புதுசா வந்து இருக்காங்களே ஏஞ்சல் ஆன்ட்டி அவங்களுக்கு நம்மள பார்க்கணும் போல இருக்காம்டா… அதனால டாடி வருவதுகுள்ள நாம அவங்கள பார்த்துட்டு வந்துடுவோம் சரியா…!!!” என சமாளித்தவள் படகை ஓட்டுவதில் கவனம் ஆவது போல் மகளை நம்ப வைத்த பின்பே நிம்மதி அடைந்தாள்…

“இதே வேகத்துல போன சீக்கிரம் கரையை அடைந்து விடலாம்…!!!” என  அவள் எண்ணி கொண்டு இருக்க…

ஆனால் விதியோ…” விட்டதானே.. ” என்ற முடிவோடு… அதன் வேலையை காட்டியது… ஆம்

நடு கடலிலே கனலினியின் படகு நின்று விட்டது… சுற்றி உதவிக்கு வருவதற்கு கூட வாய்ப்பில்லாமல்… அவளை சுற்றி  கடல் மட்டுமே சூழ்ந்திருந்தது…

மயான அமைதி… அதுவரை துணையாக இருந்த ஆதவன் கூட மறைய தொடங்கி விட்டான்…சூழ இருந்த இருள் ஒரு திகிலை தந்தது என்றால்… ஆழ் கடலின் ஓசையோ பீதியை கூட்டியாது… அதில் அஞ்சி அம்மா மகள் ஒருவரை ஒருவர் அணைத்து கொள்ள…

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ…

தீடிர் என்று கடலில் இருந்து பெரும் இரைச்சல் ஏற்பட்டு… கடலில் மிதக்கும் அனைத்தையும் கடலே உள் வாங்கி கொண்டு இருப்பதை கவனித்தவள்  உயிர் உறைந்து போனது….

 ஏனெனில் அங்கு தோன்றியது கடல் நீர்சுழற்சி ஆகும்… எத்தனை பெரிய பாடகாக இருந்தாலும் நொடியில் இழுத்து தின்று விடும்… அப்படி இருக்க கனலினி வந்த சிறு படகு எம்மாத்திரம்…

கனலினி வந்த படகும் நீர் சுழற்சி நோக்கி தானாக நகர ஆரம்பிக்க…

“மம்மிஇஇஇஇ…” அவினி பயந்து மேலும் கனலினியை நெருக்க…

“ஒன்னும் ஆகாது ஒன்னுமே ஆகாது…!!” என தன் கைகளையே துடுப்பாக பயன் படுத்தி கரை சேர முயன்றாள் பைத்தியகாரி போல்…

ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு என்பது போல்… தப்பிக்கும் எண்ணத்தில் எதையும் சிந்திக்காமல் செயல் பட்டதை நினைத்து காலம் கடந்து வருந்தியவள்… மகளை உடன் அழைத்து வந்து இருக்க கூடாது என்ற எண்ணம் தோன்றிய நொடியே அவளை அணைத்து கொண்டு…

“ஐ அம் சாரிடா… அம்மாவை மன்னிச்சுட…!!”என கட்டி கொண்டவள் மன்னிப்பை யாசித்தாள்…” மகளை மட்டுமாவது காப்பாற்ற முடியுமா..?? ” என முழுவீச்சில் வழி தேட…

அதற்கும் வழி இல்லாமல்… நீர் சுழற்சியின் வெகு அருகில் வேகமாக படகு போவதை பார்த்தவள்… அவினியை தன்னை நோக்கி அணைத்து பிடித்து கொண்டவள்…”ஹனிமா கண்ணை திறக்காதீங்க… அம்மா இருக்கேன் சரியா…!!” என பொத்தி கொண்டவள்…நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து “கடவுளே..” என அவள் கண்களையை இறுக மூடி கொண்டாள்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top