கனா கண்டேனடி சகியே -15
ஆசை மகள் துரியனின் கண்மணி என்றால் கனல் அவனின் உயிர் அல்லவா…!!?? அலை சறுக்கு விளையாடி கொண்டு இருந்தாலும் கனலினி மீது கண் வைத்து கொண்டு தான் இருந்தான்… “எதுவரை போகிறாள் என விட்டு பிடிக்க நினைத்தவன்…அமைதியாக நோட்டம் விட… மனைவின் கண்களில் தெரிந்த பளிச்சிடல் துரியனை கனலினியிடம் வம்பு பண்ண பேரவா தூண்டியது…
அதற்காக அவன் மறுநாளை தேர்ந்தெடுத்து வைத்து இருக்க… விதியோ… “நீ நினைத்தால் போதுமா…” என அன்றே ஆட்டத்தை தொடங்கி வைத்ததன் விளைவே அந்த சாட்டிலைட் போன் கால்… அவர் வருவதாக கூறியதை அடுத்து… தெரிந்து கொண்டான்… தகவல் கசிந்து விட்டது என்று… அதனால் எல்லாம் அலட்டிக் கொள்ளும் ரகம் துரியன் கிடையாது… சொல்ல போனால் “ஓ தெரிஞ்சி போச்சா அதுக்கு என்ன இப்போ…??” என அலட்சியம் மட்டுமே…
இருந்தாலும் அந்த ‘அவர்” வகீக்கும் பதவி ஆனது சாதாரணமானது இல்லையே… அதுவும் உலகை வச படுத்தும் கோல்டன் ட்ராகனின் காட் பாதர் … இப்பொழுது தலைவராக தேர்ந்தெடுத்து பட்ட துரியனுக்கே இத்தனை அச்சுறுத்தல் இருக்கும் என்றால்… எத்தனை துரோகங்கள் கண்டு பல வலிகள் தாங்கி சில பலிகள் கொடுத்து… அந்த இடத்தை தக்க வைத்திருப்பவர் ” டான் லியோ” … அதற்கு மரியாதை செலுத்தும் நிமித்தமாகவே துரியன் கிளம்பி செல்ல நேர்ந்தது…
கிளம்பி வந்து விட்டானே ஒழிய மனம் முழுவதும் மனைவி மகள் மீது தான்… மனைவியா…???
ஆம் மனைவி தான் என் மகளை வயிற்றில் சுமந்து பல அவமானங்களுக்கு நடுவே பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்களே… அது போதாதா அவன் மனைவி என்கிற தகுதி பெற…!!!
அவர்களை பிரிய மனமில்லாமல் ஸ்டீபனை அழைத்து கனலினியையும் அவினியையும் தனி விமானத்தில் அழைத்து வர சொல்ல…
அவனோ அரண்மனை முழுவதும் தேடி விட்டு.. “பாஸ் பெரிய மேடமும் சின்ன மேடமும் கப்பல்ல எஸ்கேப்…என்றது தான் தாமதம்… “இவள…???” என பல்லை கடித்தவன்
மீட்டிங் ஆவது மையிராவது என காட் பாதரை அந்தரத்திலே விட்டுவிட்டு திரும்பியவன்… கண் முன்னே கண்ட காட்சி ஆனது… துரியனுக்கு பயம் என்றால் என்ன என்பதை முதல் முறை உணர வைத்தது…
அதுவும் அவன் மனைவியும் மகளும் மரண குழி அருகே செல்வதை பார்த்தவன் உள்ளம் உயிர் வலி தந்தது என்றால் மிகை அல்ல அவர்கள் இல்லாத வாழ்க்கை நினைக்க கூட மறுத்தது…
எதையும் சுலபமாக விட்டு கொடுத்தால் அது துரியன் இல்லையே… இதோ காலானோடு போராடி மீட்டு வந்து விட்டான்… சத்யவானுக்காக சாவித்திரி தான் போராட வேண்டுமா… ஏன் துரியன் அவன் கனலிக்காக போராட கூடாதா…???
தன் ஆறுயிர் காதலி அருகே இருக்கிறாள்… உயிரோடு இருக்கிறாள் என்கிற நிம்மதியில் அவன் கொண்ட மருந்தை அதன் வேலை செய்ய விட்டான்… ஆம் மனைவியின் கையில் முகத்தை புதைத்து கொண்டு உறங்கி விட்டான்…
சுள் என்று முகத்தில் அடித்த சூரியனால்… கண்களை மெல்ல பிரித்தவள்… சுற்றி இருப்பதை கிரகித்துக் கொள்ளவே நேரம் பிடித்தது…
நேற்று நடந்தது எல்லாம் கெட்ட கனவாக கனலினி முன்னால் விரிய.. அந்த பதைபதைக்கும் நிமிடங்களை நினைத்து இதயம் எகிற குதித்தது…
கையில் அசைக்க முடியமால் போக என்ன…??? என்று பார்க்க… துரியன்…
அவனை கண்ட பின்பே அவள் உயிர் அவளிடம் வந்தது போன்ற உணர்வு…
தன் கையை இறுக பற்றி உறங்கும் தன்னவனை பார்வையால் தீண்டினாள்…
அலை அலையாக கேசம்… அதில் ஆங்காங்கே கோரைப்புற்கள் போன்று வெள்ளை முடி ஆனால் அதுவும் அவனுக்கு அழகாக தான் இருந்தது… திட்டமான புருவம் நேரான நாசி கருப்பு மீசை மறைத்து கருத்த உதடு தன்னை மறந்து துரியனால் ஆட்கொள்ள பட்டாள்…
“தன் உயிரை பற்றி கூட யோசிக்காமல் குதித்து இருக்கிறான் என்றால்… என் மீது எத்தனை அன்பு இருந்து இருக்க வேண்டும்…???!!”
“அதை நான் கேக்கும் போதே சொன்னால் என்னவாம்… இப்படி ஆகி இருக்காது தானே… சரியான அழுத்த கார மனுஷன்… ம்ம்ம் என்ன செய்ய கொஞ்சம் கிறுக்கா இருந்தாலும் என்னோடதா போய்ட்டாரே…..!!” என சலித்து கொண்டே அவனை ரசித்தாள்
காதலா இது எப்போ…???
“எஸ்.. காதல் தான்… முதல் பார்வையிலே உள்ளம் புகுந்தான்…!!!
உண்மை தெரியாத போதும் அவன் முதல் சபரிசம் சொன்னது இவனே உன் கனவு நாயகன்…!! உரிமை அறிந்த பின் அவன் அலட்சியம் என்னில் தன்மானத்தை சீண்டியது… எனக்கும் என் பெண்மைக்கும் மதிப்பில்லாத இடத்தில் அது காதலானாகவே இருந்தாலும் அவனிடத்தில் என் மனதை திறந்து காட்ட விரும்பவில்லை… ஆனால் இன்று அவர் வார்த்தைகள் கூறாத அன்பை அவர் செயல் கூறி விட்டதே…!!!”என எதோ புதையல் கிடைத்த சந்தோஷத்தில் பெண்ணவள் உள்ளம் துள்ளியது…
கனலினி அசைவிலே வெடுகென்று கண்ணை திறந்த துரியன்…” என்ன என்னாச்சு எதாவது வேணுமா டாக்டர கூப்பிடணுமா… ??? “என பதட்டமாகினான்…
“இல்லை..” என தலையாட்டிவள் அருகே அமர்ந்தவனுக்கு வித்தியாசமாக ஏதோ அவள் முகத்தில் தென்பட… அது என்னவென்று பார்க்க கனலினி வெகு அருகில் நெருங்கி பார்த்தவனுக்கு…
“எனக்கா…??? இவள் கண்ணில் நிரம்பி வழியும் காதல் எனக்கே எனக்கா…?? “என ஆச்சர்யமாக நினைத்தவன்…
“இப்போ உடம்பு பரவலையா…!!!” என கேட்டவனுக்கு தலை அசைப்பை பதிலாக தந்தவளிடம்…
” நியாயமா நீ பண்ண வேலைக்கு உன்னை கன்னத்தை தான் முதல்ல பதம் பார்த்து இருக்கணும்… நீ மட்டும் போனது இல்லாம என் குழந்தையையும் கூட்டிட்டு போய் கொல்ல பார்த்ததுக்கு… உன்னை என்ன பண்ணாலும் தகும்…!!” என கோவமாக உறுமியாவனை பார்த்து அஞ்சிய கனலியின் கை தாமாக மேலெழுந்து கன்னங்களை பொத்தி கொண்டது
“ஆனா நான் அப்படி பண்ணாம இருக்க ஒரு காரணம் சொல்லு விட்டுடுறேன்..!!” என்றவனை
படபடக்கும் கண்களோடு பார்த்தவள்…
“மன்னிச்சுடுங்க இனி இப்படி செய்ய… நீங்க சொல்ற மாதிரியே கேக்குறேன்…நம்புங்க ப்ளீஸ்…!!” என துரியன் கைகளை பிடித்து கெஞ்ச…
அவள் தன் கையோடு கோர்த்து இருப்பதை பார்த்தவனுள் இருந்த கோவம் அப்படினா… (அது போயிந்தி இட்ஸ் கான்… ) காதல் பெருக்கு எடுக்க… அவளை பார்வையால் அளந்து கொண்டே… அவள் முகம் அருகில் தன் முகத்தை கொணடு போனவன்… நூலிழை அளவில் நிப்பாட்டி…
“நீ இப்போ ஓகே வா..துரியன்
“ம்ம்ம்…!” கனலினி
“பட் நான் ஓகேவா இல்லைடி…!!”என்றவன் அவள் கையை எடுத்து அவன் துடிக்கும் இதயம் அருகே வைத்தவன் கண்களை பார்த்தவள்… அது கேட்கும் பொருள் புரிந்து…
பெண்ணுள் லட்ச பூக்கள் பூத்தது… வெட்கம் கொண்ட பார்வையால் அவனுக்கு பதில் கிடைத்தாலும் அவள் வாய் மொழி வேண்டும் ஆசை… விடமாட்டான் என தெரிந்த பின்னே “நான் என்ன பண்ணனும்ம்ம்ம்ம்.. ம்முஹ….!!” என கன்னங்கள் செம்மையுற கேட்டவள் இதழை வேட்கையோடு கவ்வினான்…
இதழேடு இதழ் யுத்தம்… அவள் தந்த வலிக்கு அவளே நிவாரணி… இதழ் வழி அவள் மொத்த உயிரை குடிக்கும் எண்ணம் போலும்… அத்தனை ஆழமான நீண்ட முத்தம்… மூச்சு வாங்க விலகியவன்… அவள் கேள்வி நிறைந்த பார்வையின் பொருளை உணர்ந்தவன்… அந்த கண்களுக்கு முத்தமிட்டு சமாதானம் சொல்லியவன்
“உன்கிட்ட நிறைய சொல்லணும் தோணுது… அதை கேக்க உனக்கு பொறுமை இருக்கலாம்… ஆனா அதை சொல்ற காத்திருக்கும் பொறுமை என்கிட்ட சுத்தமா இல்லைடி… !!”என்றவன் அதிரடியாக …
மலரவளை இழுத்து கொண்டு கட்டிலில் புரண்டான்…


