கனா கண்டேனடி சகியே -7

கனா கண்டேனடி சகியே -7

பீச்சில் விளையாடி கொண்டு இருந்த அவினி … அருகில் சிறுவர்கள் பட்டம் விடுவதை வேடிக்கை பார்த்து கொண்டே… கனலினியின் பார்வை விட்டு விலகி சென்று விட….

வழி தவறி கடற்கரையை  விட்டு வெளியே வந்து விட்டது குழந்தை…. அங்கு பிரதான சாலையில் தன் அன்னையை போல் உடை அணிந்த சென்ற பெண்ணை பிடிக்க நினைத்து சாலையை கடக்க போகவும்… க்ரீன் சிக்னல் விழவும் சரியாக இருக்க…. வேகமாக வந்த கார்… அவினிக்கு வெகு அருகில் வந்து போட்ட சடன் பிரேக்கில் அவனியின் மூஞ்சில் காரின் சூடான இன்ஜின் காற்று அடித்து சென்றது….

காரை விட்டு புயலென    இறங்கி வந்த துரியன்…. அங்கு பயந்து நடுங்கி கொண்டு இருந்த அவினியை பார்த்து விட்டு சுத்தி அவள் பெற்றோர் வருகிறார்களா என பார்த்தவன்… யாரும் வராமல் இருக்கவே…

மிரண்ட குழந்தையை தூக்கி கொள்ள… அதற்குள் என்ன அவசரமோ பின்னால் நின்ற கார்கள் அனைத்தும் விடாமல் ஹார்ன் அடித்து இரைச்சல் ஏற்படுத்த….  அதில் பிள்ளை மேலும் மிரண்டு அழதது… வெகுண்ட துரியன் திரும்பி பார்த்த பார்வையில் வண்டிகள் அனைத்தும் இன்ஜினை அணைத்து விட்டன…

வெறும் பார்வைக்கா இந்த பயம்….??? நிச்சயம் இல்லை..அது அவன் பேண்ட் பாக்கெட்டில் தெரியும் படியாக வைத்திருந்த துப்பாக்கியால் வந்த பயம்….

அழுத பிள்ளையை அப்படியே விட்டு போக மனமில்லாமல் அவனோட அழைத்து வந்து விட்டான்…. இதில் சிறப்பு என்னவென்றால் துரியனுக்கு  அவள் மகள் என்று தெரியாது…..

குழந்தைக்கும் தன் தந்தை என்று தெரியாது ஆனால் அவன் கைகளில் பாதுகாப்பை உணர்ந்தவள்… அவனோடு ஒன்றி போனாள்…

 பொதுவாக தாய்தான் தந்தையை அறிமுகப்படுத்த வேண்டும் ஆனால் இங்கே தாய்க்கே தந்தையின் முகமே தெரியாத பொழுது எப்படி காட்ட முடியும் அப்படி இருக்க….  தாய்க்கு முன்னால் தந்தையை கண்டு பிடித்து விட்டாளே அவினி…இதற்கு பெயர் தான் விதியின் விளையாட்டு என்பார்களோ…..

குழந்தையோடு ஒன்றிய நண்பனை பார்க்க… நிம்மதியாக இருந்தாலும்…. இந்த குழந்தையின் பெற்றோர் இவளை காணாமல் எத்தனை துன்புறுவர் என்பது யாரும் இல்லாமல் அனாதரவாக வளர்ந்த கர்ணனுக்கு புரிந்ததால்… நண்பனின் நோக்கம் என்ன என வினவ… அவன் சொன்ன பதிலில் குழப்பம் உற்றவன்….

“எங்க போய் இந்த குழந்தையோட அம்மாவ தேடுவடா…. பேசாம போலீஸ் கிட்ட ஒப்படைச்சிடுவோம்டா துரியன்….!!”என கர்ணன் சொல்ல…

தன் திண்மையான உடலில் வாகாக ஒட்டி உட்கார்ந்து விளையாடும் முயல் குட்டியை கீழே கூட விட மனமில்லாமல்…. மடியிலே வைத்து கொள்ள…..

பதில் சொல்லாத நண்பனை இயலாமையுடன் பார்த்தவன்….

“டேய் நண்பா நான் சொல்றது கேக்குதா இல்லையா..??? இவள் ரொம்ப குட்டி பொண்ணுடா.. நாம தான் அப்பா அம்மா இல்லாம அனாதையா வளர்ந்தோம்…. இப்போ இவளுக்கும் அந்த நிலைமை வரணுமா பேசாம… போலீஸ் கிட்ட சொல்லி இவளோட அப்பா அம்மா கிட்ட சேர்க்குற வேலைய பாரு….!!” என பல்லவி பாட

அதில் எரிச்சல் அடைந்தவன்…. “சைக் சும்மா நைநைனு…. இப்போ என்னடா உனக்கு….போலீஸ்லாம் ஒப்படைக்கலாம் முடியாது… இது என் குட்டி…. அதாவது எனக்கு கிடைச்ச குட்டி… வேணுனா…. போலீஸ் கிட்ட நீயே சொல்லிக்கோ… குட்டி அம்மா வரைவரை என்கூடவே தான் இருப்பா…!!”என உறுதியாக கூறி விட்டு காரை எடுக்க…

முடிவை கூறி விட்டவனுக்கு ஏனோ மனதில் குட்டியை தேடி யாரும் வர கூடாது என்கிற எண்ணமே பிரதானமாக இருந்தது…. இது தான் தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடுமோ….??

அவினியை தூக்கி கொண்டு அவனுக்கு என தனியே இருக்கும் சொர்ணா புரிக்கு அழைத்து வந்தான்….

“குட்டிக்கு பசிக்குதாமா.. நாம சமைக்கலாமா…!!”என வீட்டிற்கு வந்தும் குழந்தையை கீழே இறக்கி விடாமல் சுமந்து கொண்டே அவளுக்கு தேவையான உணவை தயார் செய்யும் நண்பனை …” டேய் நண்பா என்னடா இது…!!”

“ஏன் கண்ணு தெரியலையா…?? குட்டி ஆ காமிங்க…!!”என குழைந்தைக்கு பதமாக ஊட்டும் நண்பனை வியந்து பார்த்தான் 

இதுவரை அங்கு யாரையும் அழைத்து வந்தது இல்லை…. ஏன் அவன் குடும்பத்தாரை கூட அனுமதித்தது இல்லை… அப்படி இருக்க..இந்த குழந்தையை அழைத்து வந்ததோடு இல்லாமல் அவன் செயல் அனைத்துமே வியக்க வைப்பதாக தானே இருக்கிறது…

“சும்மா எங்க வாய பராக்கு பார்க்காம அந்த பாத்திரம் எல்லாம் எடுத்து போட்டு கழுவுடா… குட்டி நாம வேற இடம் போலாம் இங்க  டிஸ்டபன்ஸ் ஜாஸ்தியா இருக்கு….!!” என்று விட்டு குழந்தையை  தூக்கி கொண்டு லிவிங் ரூமிற்கு செல்ல…

“எதே நான் டிஸ்டர்பன்ஸா … என்னடா நடக்குது இங்க….அடேய்…  வாடா உன்னையே கழுவுறேன்…!!என கர்ணன்… துரியனை துரத்த… குழந்தையை வைத்து கொண்டே ஓடி பிடித்து விளையாடினர் வளர்ந்த குழந்தைகள்….

இங்கு இவர்கள் இப்படி விளையாடி கொண்டு இருக்க… அங்கே கனலினியோ…. அவனியை காணாமல் வாழ்வே இருண்டு போன தூக்கத்தில்… ரோடு ரோடாக குழந்தையை தேடி கொண்டு இருக்கிறாள்….

ஒருவழியாக… அவர்கள் விளையாட்டை முடிவுக்கு கொண்டு வந்தது… அந்த போன் கால்…. யார்..?? என்று பார்க்க…

திரையில் தியாவின் புகைப்படம் மின்னி ஒளிர…. கற்பூர புத்தி கொண்ட அவினி….. அந்த புகைப்படத்தை… காட்டி ஏஞ்சல் ஆன்ட்டி… என எடுக்க…

தியா போனை எடுத்ததும்… “ஏஞ்சல் ஆன்ட்டி… அம்மா காணோம்…!!” என அழ ஆரம்பிக்க… துரியன் வாங்கி கர்ணனிடம் கொடுத்து பேச சொல்ல…

அவன் விவரம் கூறி விசாரிக்க…. தியா ” போனில் முழுதாக சொல்ல முடியாது கர்ணன்… நீங்க அண்ணாவையும் பாப்பாவையும் கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வாங்க…!!”என வைத்து விட்டு பாட்டியிடம்… சென்று விவரத்தை சொல்ல…

“ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்காடா கண்ணு… இப்படியாவது உங்க அண்ணன் நம்ம வீட்டுக்கு வந்தா சரி தான்…!!”

“சரி பாட்டி நான் விஹானுக்கு கால் பண்ணி சொல்லிட்டு வரேன் பாவம் குழந்தைய காணாம ரொம்ப தவிச்சு போய் இருப்பாங்க….!!”என்றவள்.. தாமதிக்காமல்… விஹானை அழைத்து விவரத்தை கூறி அவனையும் கனலையும் வீட்டுக்கு வர வைக்க….

நடு கடலில் தோன்றும் பெருநீர்சுழியில் சிக்கி கரை சேர்ந்தது போல் மகளை காண ஓடிவந்தாள்… கனலினி….

அவள் கண்களுக்கு மகளை தவிர வேறு எதுவுமே தெரியாதது போல்…..பாய்ந்து சென்று அணைத்து கொண்டாள்…

“ஹனி பேபி உங்களுக்கு ஒன்னும் ஆகல தானேடா…அம்மா பயந்தே போய்ட்டேன்…!!”என மகளை முழுவதும் ஆராய….

“அதலாம் என் பேரன் அவன் குழந்தைக்கு ஒன்னும் ஆக விட மாட்டான்மா… குழந்தைய காணோம் ரொம்ப பதறி போய் இருப்ப… வந்து உட்கார்ந்து இதை குடி…ரிலாக்ஸ் ஆகும்…!!” என்றுவிட்டு அவளுக்கு பானம் கொடுத்து விட்டு போக…

அதை வாங்கி கொண்ட கனலினிக்கு பதட்டத்தில் சரியாக கேட்காமல் போனாலும்… 

ஆனால் அவை சேர வேண்டிய செவிகளுக்கு சரியாக போய் சேர்ந்து விட… ஒரு நிமிடம் அதிர்ந்து கனலினியையும் குழந்தையையும் பார்த்தவன் கண்கள் சுருங்க யோசித்தான்….

குழந்தை கிடைத்தாலும் பதட்டம் குறையாமல் இருந்த கனலினியிடம்…. பேச்சு கொடுத்து சகஜம் ஆக்க… சத்தியவதி முயலுவது கனலினிக்கு புரிந்தது… அவளும் அவருக்கு பதிலை இயல்பாக கொடுத்து வந்தாள்…

 ஆனால் சத்தியவதி கேட்ட கேள்வி அனைத்தும் துரியன் தெரிந்த கொள்ள நினைத்தவை என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்….

“குழந்தை கண்ண பார்த்தா உன்னோடது மாதிரியே இல்லமா… ஒரு வேளை அவங்க அப்பாவை போல இருக்குமோ…??  என்ற கேள்விக்கு….

“இருக்கலாம் பாட்டிமா….!!” என திணறிய படி பதில் சொன்னவள்.. அதற்கு மேல் அங்கு உட்கார முடியாமல் திண்டாடினாள்…காரணம் அவள் எதிரில் கூரிய பார்வையால் துளைத்து எடுக்கும் துரியனை கண்டு அவளுக்கு தடுமாற்றம் ஏற்பட.. அவர்களுக்கு விடை கொடுத்து விட்டு சென்றாள்… என்பதை விட ஓடி ஒளிந்தாள் என தான் சொல்ல வேண்டும்….

பேரனை மீண்டும் குடும்பத்தில் இணைக்கு விரும்பும் பாட்டியின் கனவு பலிக்குமா….??? ஐந்து வருட கனவுக்கான மர்மத்தை அறிந்து கொள்வானா….??? காத்திருந்த காதல் கை கூட காத்திருக்கும் காதலர்களின் கனவு கை சேருமா…???

கனவே கலையாதே…!!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top