கனா கண்டேனடி சகியே -6 

கனா கண்டேனடி சகியே -6 

“தேங்க் காட் கனல்… அவங்க என்ன சொல்ல வராங்கனு புரியாம ரொம்பவே குழம்பி போய்ட்டேன்… இப்போ தான் நிம்மதியா இருக்கு….தேங்க்ஸ் கனல் எல்லாம் உன்னால தான்…!!” என அவளை நன்றியால் குளிப்பாட்ட 

“நான் எதுவும் பண்ணல விஹான்…. அவங்களுக்கு இஷ்டம் இல்லனா வந்து இருக்க வேண்டியதே இல்லை… அது மட்டும் இல்லை உன்னை பிடிக்கலனு எங்கையுமே சொல்லவும் இல்லை…. உண்மையிலே அவங்களுக்கு உன்னை பிடிச்சதால தான் அவங்க அண்ணா கிட்ட பேச சொல்லி இருக்காங்க… என்னோட கெஸ் சரியா இருந்தா இதுக்குள்ள  உன்னை பத்தி அவங்க அண்ணாக்கு எல்லாமே தெரிஞ்சி இருக்கலாம்… இல்லனா எப்படி அவங்க இவ்ளோ தூரம் சொல்ல முடியும்…?? டோண்ட் ஒர்ரி அங்கிள் ஆன்ட்டி வந்து பேசின உடனே சார்க்கு இந்தியா ஸ்டைல்ல டும் டும் டும் தான் ….!!”என கனலி கேலியாக சொல்ல….

“ஹே விஹான் அங்கிள் டும் டும்னா என்ன…??”அவனி கேட்க…

“பேபி அப்படினா விஹான் அங்கிள் கல்யாணம் பண்ண போறாங்கடா அதுவும் உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து ஏஞ்சல் ஆன்ட்டி கூட…!!”என்றதும்…

“ஹே… ஜாலி விஹான் அங்கிள் கல்யாணத்துல எனக்கும்… அழகான ட்ரெஸ்… அப்புறம் நிறைய கேக்ஸ் அண்ட் சாக்லேட்ஸ் வேணும்…!!” என ஆர்ப்பரிக்க….

“ஓ கண்டிப்பா என் குட்டி இளவரசியே…உங்கள் ஆணை படியே…!!”என அவளுடன் விளையாடியவன்…காரை பீச் விட சொல்ல…

“ஏ விஹான்…வேணாம் ரூம்க்கே போகலாம்..!!”என கனலினி மறுக்கா…

“எவ்ளோ நேரம் தான் ரூம்லே அடைந்து கிடக்க.. போற… பாரு உன்னால அவனியும் அப்படியே இருக்க… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம் கனல் பாவம் அவினிக்காக…!!” என மறுப்பு சொல்லமுடியாத காரணம் சொல்ல…

“இப்போ நாம  பீச் போய் விளையாடலாமா…அவனி குட்டி…??”என கேட்க…

“ஹை பீச்… பீச்….போலாம் போலாம் அங்கிள் அங்க மணல் கோட்டை கட்டி விளையாடலாம்…!!” என… குழந்தை ஆர்வமாக சொல்ல… அனைவரும் சென்றனர்…அங்கு நடக்க போகும் விபரீதம் தெரியாமல்….

கனல் பீச் மணலில் அமர்ந்து இருக்க… அவனி அவளுக்கு முன்னால்…ஆழமில்லாத இடத்தில் கடல் நீரில் விளையாடி கொண்டு இருக்க…விஹான் இருவருக்கும் சாப்பிட வாங்க சென்று இருக்க…

ஆர்ப்பரிக்கும் கடலின் அலையாக… கனலினியின் எண்ணங்களும் அவள் உள்ளே ஆர்ப்பரித்தது… பழைய நினைவுகளால்…

“அவினி தந்தை யார்…???  வருவாரா அப்படியே வந்தாலும் அவரை ஏற்று கொள்ள தான் அவளால் முடியுமா…?? அவனி தந்தைக்கு இப்படி ஒரு மகள் இருப்பது முதலில் தெரியுமா…??? அவரை மறந்து விட்டு ரித்விக்கை திருமண செய்ய முடியுமா….??? அவனி ரித்விக்கை ஏற்று கொள்ளவாளா…..??? “என விடை தெரியாத பல கேள்விகளுக்கு பதிலைத் தேடி ஓய்ந்து போனவளை விஹானின் குரல் மீட்க….

“ஹான் என்ன விஹான்….??”  

“ஹே கனல் என்ன யோசனை…..??”

“ஒன்னுமில்லடா சும்மா…!!” என சொன்னாலும்…அவள் கண்கள் அவள் மனதை காட்டி கொடுக்க….

“ஹே ஹாட்டீ…கவலை படாத சரியா… எனக்கு என்னவோ இந்த இந்தியா பயணம் முடிஞ்சி போகும் போது எல்லாமே மாறிடும்னு…என் மனசு சொல்லுது….!!”என்றதும்…

“நீ எப்போல இருந்து ஜோசியம் சொல்ல ஆராமிச்சாடா… பேஷ் பேஷ்…. நீ இங்கயே தியாவ கட்டிக்கிட்டு செட்டில் ஆகிடு… அங்க நானே பிஸ்னஸ் எல்லாம் பார்த்துக்குறேன்….!!” என கேலி பண்ண…

“அது சரி…. நீ என்ன விட பெரிய பிளான்ல தான் இருக்க போலயே…சரி ஹாட்டீ ரொம்ப நேரம் ஆகிடுச்சு… வா ரூம் போய் ரெஸ்ட் எடுத்துட்டு  ஈவினிங் சுத்தி பாக்க நல்லா இருக்கும்…!!”என அழைக்க 

 சரி என்று விட்டு அவனியை அழைக்க தேட… குழந்தை அங்கே இல்லை… என்றதும் பதறியவர்கள்….

பீச் முழுக்க சல்லடை போட்டு தேடியும் குழந்தை கிடைக்காமல் போக… நிலை குலைந்து போனாள் கனலினி…

“விஹான்…ப்ளீஸ்… விஹான் எதாவது பண்ணு எனக்கு என் பொண்ணு… எதாவது பண்ணுடா…..???என கதறியவளை சமாதானம் செய்து…. போலீஸ்ல் கம்பளைண்ட் கொடுத்துனர் ஆனாலும் சும்மா இருக்க முடியுமா….

எந்த நாட்டிலும் பிள்ளைகள் காணாமல் போனாலும் அவர்களுக்கு நடக்கும் கொடுமை பற்றி செய்தி வழியாகவும்… செவி வழியாகவும் அறிந்தது தானே.. அதிலும் அவினி பெண் குழந்தை என்பதால் கூடுதல் வேதனை… இருவரின் இதயமும் நொடியும் விடாமல் வேண்டி கொண்டே இருந்தது….

இப்படி இவர்கள் வேதனையில் முழுக்கி இருக்க… இவர்களின் குட்டி இளவரசியோ ஜாம்பமாக… அவள் தந்தையின் மடியில் அமர்ந்து  அவனோடு கிள்ளை மொழியில் மிழற்றி கொண்டு வர….

 கணநேரம் கூட இளகாது இரும்பை போல் இருப்பவன் முகத்தில் இப்போது புதிதாக குடி புகந்த புன்னகையை ஆச்சர்யமாக… பார்த்தபடி உடன் வந்தான் கர்ணன்….

“என்னடா…?” என துரியன் கேட்க….

“இல்லைடா நண்பா… நீ சிரிக்குற…??” என ஆச்சர்யம் விலகாமல் கூற….

“ஏன் நான் சிரிக்க கூடாதா…??இல்லை துரியன் சிரிச்சா இப்படி பார்க்கணும் சட்டம் இருக்கா…??”குதர்க்கமாக கேட்க…

“அது இல்லைடா உனக்கு சிரிக்க கூட தெரியுமானு பார்த்தேன்…..???

“எனக்கு சிரிக்க தெரியாதுனு நான் எப்போ சொன்னேன்….??

“கடவுள் படைத்த படைப்பிலே சிரிக்க தெரிஞ்ச ஒரே இனம் மனுஷன் தானாம்… அப்போ நான் மனுஷன் இல்லைனு சொல்ல வரியா….??மீண்டும் குதர்க்கமாகவே  கேட்க 

“டேய் எப்பா தெரியாமல் கேட்டுட்டேன் டா விட்ருடா சாமி…. நீ சிரி சிரிக்காம போ…சைக் உனக்கு இது தேவையா தேவையா…??”என கர்ணன் தான் தலையில் அடித்து கொண்டு அமைதியாக வரும்படி ஆகியது….

கடுப்பில் வரும் நண்பனை ஓர கண்ணால் பார்த்து கொண்டே வந்தவன்… அவினி ஏதோ கேட்க.. அதற்கு இவன் பதில் சொல்ல… அழகாக… பச்சரிசி பல் சின்னதாக தெரிய சிரிக்கவும்…

“டேய் கர்ணா இங்க பாருடா குட்டி அழகா சிரிக்கிறா…!!” என அவனிடம் காட்ட….

“ஏன்டா… அதுவும் மனுஷா குட்டி தான அப்போ அதுவும் சிரிக்க தான் செய்யும் அதை போய் பெருசா பேசுற போவியா!!”…. என்றதும்… கர்ணன் தலையில் தட்டி…

“நாயே… அதுவும் இதுவும் ஒன்னா…மனுஷனா பிறந்தா மட்டும் சிரிச்சிட முடியுமா என்ன…. மனுஷங்களிலே சிரிக்க தெரியாத ஜடங்களும் இங்க இருக்கு….. ஆனா பாரு இந்த குட்டி எவ்வளவு அழகா தேவதை மாதிரி சிரிக்குறா…!!” என ஆசையாக குழந்தையின் முகவாயை தடவி விட…

“தப்பு தாண்ட தப்பு தான் உன் கூட போய் வந்தேன் பாரு என் புத்திய…” என கர்ணன் முடிக்கும் முன்…

“சாரி நண்பா ரெண்டு பேருமே ஷூ தான் போட்டு இருக்கோம்… உன் நேரம் பாரு ஏஞ்சல் கூட சாண்டல் தான் போட்டு இருக்கா…சு.. சு.. வாட் அ பிட்டி..…!!”என போலி கவலை கொள்ள….

“நீ ஏண்டா சொல்ல மாட்டா உன் கூட.. முஹூம் வேணாம் இதுக்கும் நீ எதாவது சொல்லுவ…அதனால நானே வீட்டுக்கு போய் நல்ல புது செருப்பா எடுத்து அடிச்சுகுறேன்…!!”என்றதும்…

“ஹாஹாஹா..” துரியன் வாய் விட்டு சிரிக்க என்ன எதற்கு என்று தெரியாமலே அவினியும் அவனோடு சிரித்தாள்…

‘போதும்… போதும்… சிரிச்சது… இப்போ இந்த குழந்தைய என்ன பண்ண போறனு சொல்றியா…?? என அவனியை காட்ட…

அவளோ துரியன் கையில் இருக்கும் அவன் பிளாட்டினம் பிரேஸ்லெட்டுடன் விளையாடி கொண்டு இருக்க… அதன் அழகில் தொலைந்தவன் குனிந்து நெற்றியில் உச்சி முடியை ஒதுக்கி முத்தம் வைத்து நிமிர்ந்தவன்….. அவளை பார்த்து கொண்டே….

“குட்டி ஓட அம்மாவ வர வைக்க வேண்டியது தான்…!!” என ஆழ்ந்த குரலில் கூற…

அதில் அவனி நிமிர்ந்து துரியனை பார்க்க… அவனும் அவள் கண்களை தான் பார்த்து கொண்டு இருந்தான்….

கனவுகள் கை சேருமா…??

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top