கனா கண்டேனடி சகியே -8

கனா கண்டேனடி சகியே -8

வண்ண வண்ண ஒளி துகள்கள் அந்த இருண்ட அறை எங்கும் வளைந்து வலம் வர….

விலையுர்ந்த மது பாட்டில்கள் கலைநயம் மிக்கவானல் வரிசையாக அடுக்கி வைக்க பட்டு இருக்க….. அங்கு போட பட்டிற்கும் மிதியடி முதல்… அனைத்திலும் பகட்டு… பணம் வாரி இறைக்க பட்டது தெரிய கூடிய உயரக மதுபான விடுதி….

தன் முன்னால் கொழுந்து விட்டு எரியும் மதுவை எடுத்து கல்பாக அடித்தான் துரியன்….அப்பொழுதும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை 

ஏன் எனில்  சற்று நேரம் முன்பு அவன் செவிக்கு எட்டிய செய்தி அத்தனை இனிப்பானதாக இல்லை….  ‘அவன் ஐந்து வருட கனவு.. அட அது கனவே இல்லையாமே….??”அன்று இரவு நடந்தது அத்தனையும் நிஜம் என்கிறது அவன் கையில் இருக்கும் கனலினி கொடுத்த கம்ப்ளைன்ட் லெட்டர்…..

“எங்கு எப்படி தவறு நடந்தது என ஆராய்ந்தவனுக்கு கிடைத்த விடை இதுதான்…. அதாவது… அன்று நடந்ததை… மேலோட்டமாக பார்த்தால்   பிசினஸ் இன்வெஸ்டர்ஸ் பார்ட்டி  ஆகும்…. ஆனால் அங்கு உண்மையில் நடத்த பட்டது  அண்டர்கிரவுண்ட் தாதாக்கள்,கடத்தல்காரர்களுக்கு ஆன  பார்ட்டி என்பது அவர்களை தவிர யாருக்கும் தெரியாது…..

அப்படி பட்ட பார்ட்டியில் கலந்து கொண்ட துரியன் மட்டும் என்ன…..???  நல்லவனாகவா இருப்பான்….???… ஆம் இந்த குறுகிய கால கட்டத்தில் அவன் இமய வளர்ச்சிக்கு காரணம்…. தடயமே இல்லாமல் கடத்தல் பண்ணுவதில் கில்லாடி… அவனுக்கு என தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்து இருக்கிறான்…. இது அவனை சுற்றியுள்ள யாருக்குமே ஏன் கர்ணனுக்கு கூட தெரியாத விடயம்….

 சில பல கசப்பான காரணங்களுக்காக உறவுகளை ஒதுக்குவது  ஒரு காரணம் என்றால்…. தன் நிழல் உலக விம்பம் கூட அவர்கள் மீது பட்டுவிடக் கூடாது என்று ஒதுங்கிக் கொண்டது மற்றொரு காரணம்….

எந்த நொடியில் எவன் கொல்லுவான் என தெரியாது… திசைகள் நான்கும்  அவனுக்கு எதிராய் இருக்க….

தைரியமாய் அவன் கனடாவில் நடக்கும் கடத்தல் மாநாட்டில் பங்கு கொண்டது…. சில பெரிய டான்களே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது…. ஏனென்றால் துரியனை கனடாவில் வைத்து கொல்ல மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட ஸ்னைப்பர்களை ஏற்பாடு செய்திருந்தனர்…..

நொடிக்கு நொடிக்கு தொடரும் காலனை… அஞ்சாமல் அசாராமல் எதிர் கொண்டவன்…அவனுக்கு வைத்த அத்தனை கண்ணிவெடிகளையும்     பொறியாக வைத்தவர்களுக்கே  திருப்பி அடித்தான்….

 துரியனை நிதானத்தில் வீழ்த்துவது என்பது மதம் கொண்ட யானையிடம் மாட்டுவதற்கு சமம் என்பதால்… அவன் குடித்த மதுவில் போதை மருந்தை கலந்து கொடுத்து அவனை  எளிதாக வீழ்த்தும் திட்டம் தீட்ட…எல்லாம் சரியாக தான் சென்றது ஆனால்….??? 

ஆனால் மது போதையில் மயங்கி கிடக்க வேண்டிய துரியன் அங்கு இல்லை…. என்றுதும்….

 “அவ்வளவு போதைல இந்த ஹோட்டலை விட்டு அவன் எங்கேயும் போயிருக்க முடியாது ஒரு இடம் விடாம ஒரு ரூம் விடாமல் எல்லா இடத்திலும் தேடுங்க…கிடைச்சா அந்த இடத்திலேயே  கொன்னுடுங்க…. அப்படி அவனை இன்னைக்கு நைட் குள்ள கொன்னு அவன் தலையோட வரவங்களுக்கு கோல்டன் டிராகனோட அடுத்த வாரிசாகும் வாய்ப்பு…. இட்ஸ் அ லைப் டைம்  பிரீமியம் ஆப்புர்ச்சுனிட்டி ….!!””என துரியன் உயிருக்கு விலை அறிவிக்க பட்டது..…..

 “இந்த வாய்ப்பு கிடைக்காத என ஏங்கி இருந்த பல நாடுகளை சேர்ந்த…. கடத்தல்காரர்களுக்கு ஜாக்பாட்…. அதனாலே நடுநிசி ஓநாய்கள் போன்று விடிய விடிய விலங்கை வேட்டையாடும் கத்தியு மற்றும் துப்பாக்கிகளுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது….

 குடித்ததும் தலை ஜிவ்வென்று பறக்க ஆரம்பிக்க….தான் குடித்தது வெறும் மது மட்டுமல்ல….  என்பதைப் புரிந்து கொண்டவன்….  போதை அவனை முழுமையாக ஆக்கிரமிக்கும் முன்….. இவர்களிடம் தப்பிவிடும் மார்க்கத்தை தேடியவனுக்கு கிடைத்த துரும்பை பற்றி கொண்டு கரை சேர துடித்தான்….

துரியன் கொடுத்த பணத்திற்காக அவனை இழுத்து கொண்டு வந்து கனலினியின் அறையில் போட்டு விட்டு போய்விட்டான்… ரூம் பாய்….காலனை தாமதப்படுத்தி இருந்தான்  அவ்வளவே 

ஆடையை கழட்டி கட்டிலுக்கு அடியில் எறிந்தவன்…அடுத்து எப்படி இவர்களிடமிருந்து தப்ப என சிந்திக்க முடியாமல் பெரும் சூழலில் சிக்கிக் கொண்டவன்… பார்வை மங்க தொடங்கி தலை கனத்தது   போதை அதன் வேலையை காட்டியது… அந்தக் கட்டிலிலே விழுந்து கிடக்க வேண்டிய நிலை…..உடல் அவன் கட்டளையை ஏற்க மறுத்தது…

ஒரு பக்கம் மோப்ப நாய்களாக ஸ்னைப்பர்களின் தேடுதல்… இன்னொரு பக்கம் பேராசையின் பிடியில் கடத்தல்காரர்களின் தேடுதல்…. என இரு பக்கமும் காலன் துரியனை நெருங்கி விட்ட சமயம்…

அவனை ரட்சிக்கும்  தேவதையாக கனலினி வந்தாள்.. துரியனை பொருத்தவரை இன்றும் அன்றும் என்றும்  கனலினி அவனின் உயிரையும் உணர்வையும் காக்க தேவதைதான் …

அறைக்குள் அதிரடியாக புகந்தவர்களிடம் இருந்து தப்பிக்கவே… கனலினியை துரியன் நாடியாது…. தேடி வந்தவர்கள் எதோ ஜோடிகள் என அவர்களின் நிலையை கண்டு திரும்பி சென்று விட்டனர்….

ஆனால்…. அந்த முழு நிலா ஒளியில் ஆற்றங்கரையின்   குளிர் காற்று  திறந்த ஜன்னல் வழியே வீச….மஞ்சத்தில் மலர்ந்த பௌர்ணமி மலரும்…. துரியன் கொண்ட போதையும்…… அவன் உணர்வுகளை தூண்டி தீ மூட்டி விட….

வேதனை தாங்காமல் அவன் கையில் கிடைத்த பனிமலரிடம்… இரவு முழுவதும் தீயை தணிக்க போராடினான்…. அடக்க அடக்க.. அடங்காமல் அலை பாய்ந்தது ஆணின் ஆசை வேர்கள்….அவன் ஒன்னும் பெண்களே அறியாதவன் கிடையாது.. ஆனால் இவளிடம் என்ன இருக்கிறது என யோசிக்க விடாமல் ஆக்ரமித்தது தாபங்கள்….

விடியும் வேலையிலும் தொடர்ந்தது தேடுதல் வேட்டை…. அதிரடியாக மீண்டும் அறைகளில் புகுந்து தேடுவதை அறிந்து கொண்டவன்…… போதை தெளிய தொடங்கியதை உணரவும்…. தள்ளாடியபடி ஆடைகளை எடுத்து கொண்டு ஜன்னல் வழியாக தப்பிக்க முயலும் போது….

வாடை காற்று அவனை தீண்டிய வேளையில் அவன் மனதில் சின்ன ஆவல்…யார் அவள்..???  என முகத்தை ஒரு முறையாவது பார்க்க நினைக்க…. இவர்கள் இருவரும் பார்க்க கூடாது என்பது விதியின் திட்டம் போலும்… கனலினியின் அறையை உடைக்கும் சத்தம் கேட்டவன்… அவளை பார்க்காமல் குதித்து இருந்தான்….

அன்று ஆற்றில் குதித்தவனை…. நோக்கி…. தோட்டாக்கள் மழையாகப் பொழிந்தது…. அவன் குதித்த இடத்தில் நீர்க்குள்ளே குருதி கொப்பளித்தது…..

எதிரிகள் அனைவரும் துரியன் மடிந்து விட்டான் என கொக்கரிப்பு கொண்ட தருணம்…

 வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து  மேலே வர எதிர்நீச்சல் போட்டு பழகியவன் இப்பொழுது முங்கு நீச்சல் போட்டு…காலனையே வென்றான்….

ஆம் அன்று அவன் முதுகில் பாய்ந்து தோட்டவுடன் இரண்டு மணிநேரம் நீந்தி கரை சேர்ந்தவன் தான்…. அவனை அவனது ஆட்கள் மீட்டெடுத்து காப்பாற்றிய இருந்தனர்… நினைவு திரும்பியதுமே துரியன் செய்த முதல் வேலை… அன்று இரவில் வந்த பெண்ணை தேடியதுதான்…. ஆனால் அப்படி யாரும் வரவில்லை என ஹோட்டல் நிர்வாகம் உறுதியாக  மறுத்ததுதன் காரணம் இப்போது புரிந்தது….

துரியன் தங்கி இருந்த அறைக்கு யாரும் வரவில்லை….. துரியன்தான் கனலினியின் தங்கி அறைக்கு சென்று இருந்தான்…அது மட்டும் அல்ல… அன்று அந்த ரூம் பாய் இடம் பணம் கொடுத்து துரியனை அவன் தங்கியிருந்த அறைக்குள் விடும்படி கேட்டுக் கொண்டான்… ஆனால்… அங்கு இருந்த கடத்தல்காரர்கள் துரியனை தீவரமாக தேடியதை கண்டு கொண்டவன் வேறு வழி இல்லாமல் கனலினி அறையில் விட்டு சென்று இருந்தான்…

அன்று அனைவரின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு தப்பித்தவன் தான்… இன்று வரை கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறான்…. துரியன்…

 ஒரு வழியாக துரியனின் ஐந்து வருட தவிப்புக்கு காரணமான பதிலை கண்டு கொண்டவன் சும்மா இருப்பானா…???? கனலினியின் அடிவேர் வரை அனைத்தையும் தோண்டி எடுத்து…

அவனி அவனின் மகள் தான் என்பதை நூறு சதவிகிதம்  உறுதி படுத்தி கொண்டவனின் அதிரடிகளை பூவை போன்ற பெண்ணவள் எங்கனம் தாங்க போகிறாள்….

 நிஜமாய் ஒரு கனவு அதை அவன் மறுக்கவும் கூடுமோ…???

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top