கனா கண்டேனடி சகியே -9
சுட்டெரிக்கும் சூரியனிடம் இருந்து அரணாக குளிர் காற்றும் வீசிட….
அந்த மாளிகை முழுவதும் பல வண்ண மலர்கள், துணிகள் கொண்டு ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட இருக்க…
வெண்ணிற படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை அருகே…
தியாவின் குடும்பத்தார் மற்றம் குடும்ப நண்பர்கள் ஒரு புறம் இருக்க… மறுபுறம் கனடாவில் இருந்து வர வைக்கப்பட்டிருந்த… விஹான் மற்றும் கனலினியின் குடும்பத்தாரும் இருந்தனர்….
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…. வைரம் வாரி இறைத்து இருந்தான் துரியன்… அடர் சிகப்பு வண்ணத்தில் தங்கத்தில் பார்டர் இட்ட லெஹங்காவில்…. தேவ கன்னிகையாக தியா மிளிர்ந்தாள்… .
அங்கே மேடையில் இந்திய பாரம்பரிய பட்டு உடையை தரித்து தேவலோக வரனாக மிடுக்குடன் கூடிய கம்பீரத்துடன் அமர்ந்து இருந்தான் விஹான்…
எனில் அங்கு நடக்க இருப்பது…..???
ஆம் காத்திருந்த காதல் கை கூடியதை எண்ணி அகம் மகிழ்ந்த அவர்களின் பந்ததை உரிமையுடன் ஊராருக்கு அறிவிக்க ஏற்பாடு செய்ய பட்ட விழா… நிச்சயதார்த்த விழா….
மேடை எறிய மனதிற்கினியாளை…. வல கரம் நீட்டி அழைத்து கொண்டவன்…. ஆன்றோர் குறித்த நேரத்தில்… தியாவிற்கு… மோதிரம் அணிவித்து…. அவர்கள் காதலுக்கு உரிமை அளித்து ஐயம் திரிபுற நீயே என் சரி பாதி என்னும் அங்கீகாரத்தை மோதிர விரல் மூலம் அவள் இதயத்தில் பதித்தான்… விஹான்…. இருவரையும் மலர் தூவி வாழ்த்த…
கனவு கை சேர்ந்ததை எண்ணி கண்களில் நீர் கோர்க்க…. அந்த தருணத்தை… கிரகித்தவள் மனம் எல்லை அற்ற ஆனந்தம் அனைத்தையும் ஒரே நேரத்தில் தந்தது போல் பேச்சற்று நின்றவளை…. ஆரத்தழுவி சென்னியில் முத்தம் வைத்தான் விஹான் காத்திருந்த காதலர்களின் நெகிழ்ச்சியான தருணம் அது…. மும்பையின் சிறந்த புகைப்படக் கலைஞர்களால் புகைப்படம் ஆக்கப்பட்டது….
விஹான் – தியா இருவரின் நிச்சயவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டதை அடுத்து…. மேடை எறிய…. விஹானின் குடும்பத்தார்…. மைக்கை கையில் எடுத்த விஹானின் தந்தை
“ஹாய் நண்பர்களே…. இன்னைக்கு என்னோட சின்ன மகன் மற்றும் மருமகள் நிச்சயம் வெகு சிறப்பாக நடந்து முடிந்ததை நெனச்சு எனக்கும் என் குடும்பத்துக்கும் பரம சந்தோஷம்… இந்த விழாவிற்கான ஏற்பாட்டை செய்த என் சம்பந்தி வீட்டாருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ….!!!” என்றவர் தொடர்ந்து
“இந்த சந்தோஷமான தருணத்தை மேலும் இரட்டிப்பு மடங்கு ஆக்க…. உங்க எல்லார்க்கும் இன்னொரு சந்தோஷமான செய்தி…. அது என்னனா…????” என இடைவெளி விட்டவர்….
மேடை இறங்கி கீழே சென்றவர்… கனலினியையும்…. அவர் பெரிய மகன் ரித்விக் இருவரின் கையை பிடித்து அழைத்து வந்து மேடையில் நிறுத்தியவர்…
“இன்னைக்கு இதே மேடையிலே… என் பெரிய மகன் ரித்விக்கும்… எங்கள் குடும்ப நண்பரின் மகளான கனலினிக்கும் இன்னைக்கே எங்கேஜ்மென்ட்… என்ன ஆச்சரியமா இருக்கா…???
“இதை நானும் என் பையனோட பிரதர் இன் லா மிஸ்டர் துரியன் சேர்ந்து ஏற்பாடு பண்ண “ஸ்வீட் சர்ப்ரைஸ்…” எப்படி…???? என கேட்க…
” இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை…!!” என்று துரியனின் குடும்பம் அதிர்ந்து நின்ற தோரணையில் தெரிந்தது என்றால்….
“இந்த ஏற்பாடு பண்ணதே துரியன் தானாம் ..!!! ” என குழம்பி போய் நின்றவர்கள் ஒரு சேர அவனை பார்க்க அவனோ…
“என்ன நடந்தா எனக்கு என்ன…??? எவன் செத்தா எனக்கு என்ன…??” என்ற ரீதியில் அவனியை தன் மடியில் வைத்து கொண்டு அவளோடு விளையாடி கொண்டு இருந்தான்…
அவர்களோடு சேர்ந்து கனலினி குழம்பினாலும்… “எப்படியோ துரியனிடம் இருந்த தப்பித்தது போன்று உணர்வு தோன்ற…” நிம்மதியோடு சிரித்த முகமாகவே நின்றாள்…
“அத்த என்ன அத்த இது அந்த பொண்ணுக்கு வேற ஒருத்தன் கூட நிச்சயம் ஆக போகுதாம்… துரியன் என்னடானா எனக்கென்னவோ இருக்கான்… என்ன அத்த நடக்குது இங்க…???” என நடப்பது புரியாமல் ஜீவா பட படக்க…
“எனக்கும் அது தான் மா புரியல… பொறு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்….???” என ஆர்வமாக மேடையை பார்த்தபடி இருக்க
கனலினி ரித்விக் மேடை ஏறியதை தொடர்ந்து… இந்திய முறைபடி மாலைகளை மாற்றிக் கொண்ட பின்… இருவருக்கும் மோதிரங்கள் கொடுக்கப்பட… முதலில் கனலினி மோதிரம் அணிவிக்க… அதை தொடர்ந்து மோதிரம் போட்டு விட்ட ரித்விக் கனலினி கையை பற்றி முத்த மிட… அனைவரும் கரகோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர் …
ரித்விக்கின் திடீர் முத்தத்தில்… கனலினி விதிர்த்து போனாலும்… மற்றவர்கள் முன் அதை காட்டாமல் சாதுரியமாக மறைத்து கொண்டவள்… முகத்தை சிரித்தபடி வைத்து கொண்டு நின்றாள்…
ரித்விக் கனலினி நிச்சயத்தை துரியன்… கடைசி நேரத்தில் கூட நிறுத்துவான் என அவன் குடும்பத்தினர் அனைவரும் எதிர் பார்த்து இருக்க…( நாங்களும் தான்…)
அவர்கள் எண்ணம் தவிடு பொடி ஆகும் வகையில்… இருவரின் நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்தது… அவர்களையும் புகைப்படம் எடுக்க விஹான் குடும்பத்தார்.. அழைக்க… தொங்கிய முகத்துடன் சென்றனர்…
இதற்கிடையில் துரியனை தேட அவனோ அவனியை வெளியே இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான்…( என்ன மேக்டா நீ..)
புகைப்படம் எடுக்க அவினியை அழைத்து வர கனலினி செல்ல…அங்கு கர்ணன் மற்றும் துரியனின் சம்பாஷணைகளை கேட்டவள் அதிர்ந்து போய் நின்றாள்….
அப்படி என்னா… பேசி இருப்பானுங்க…?? அதுவா இருக்குமோ…??? இல்லை இதுவா இருக்குமோ…??? அட எதுன்னு அவன் உங்க கிட்டே கேட்டு தெரிஞ்சுக்குவோம் வாங்க….
தோட்டத்தில் உள்ள மலர்களை காட்டி மகளிடம் பேசி கொண்டு நின்ற துரியனிடம் வந்த கர்ணன்…
“என்னடா நண்பா இது…??? என பொறுக்க முடியாமல் கேட்க…
“என்னதா…??? பகல்லயே கண்ணு தெரியலையாடா… பூ செடிடா…!!! குட்டி இது என்னன்னு கூட உன் மாமாவுக்கு தெரியலையாம்டா.. நீயே சொல்லு இது என்ன பூ…??? என மகளிடம் கேட்க…
“ரோஸ் டாடி….!!”என சொல்லிவிட்டு கிண்கிணியாக சிரிக்க ..
“டேய்ய்…”என பல்லை கடித்த கர்ணன்….
“அது ரோஸ் செடியா இல்லையானா உன்னை கேக்கல… உள்ள என்ன நடந்துட்டு இருக்கு… நீ பாட்டுக்கு குழந்தையை இங்க கூட்டிட்டு வந்து விளையாடிட்டிருக்க…. என்ன தாண்டா நினைச்சிட்டிருக்க உன் மனசுல…
“ஓ ஏன் தெரியாம… உள்ள என் குழந்தையோட அம்மாக்கு நிச்சயதார்த்தம் நடக்குது… அதுல நான் நினைக்கிறதுக்கு என்ன இருக்கு…???என அசிரத்தையாக சொல்லியவன் தோளை குலுக்கி விட…
கடுப்பான கர்ணன்…
” நீயெல்லாம் என்ன மனுஷன்டா… அந்த பொண்ணுக்கு தெரியாம அவள் வாழ்க்கையை நாசமாக்கி ஒரு குழந்தைய குடுத்துட்டு… இப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி உன் குழந்தையை மட்டும் தூக்கி வச்சிட்டு இருக்க… கொஞ்சம் கூட யோசிச்சு பார்த்த மாட்டியா… என்னைக்காவது இந்த உண்மை அந்த பொண்ணுக்கு தெரியவந்தால் அந்த பொண்ணோட நிலைமையைப் பற்றிக் கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா… அப்படி ஏதாவது நடந்து அந்த பொண்ணு வாழ்க்கை போச்சுன்னா…. நீ தான் நீ மட்டும் தான் டா அதுக்கு காரணமா இருக்குப்பா…!!! என ஆற்றாமையால் கேட்டு வைக்க
“சப்பா… தள்ளி போடா காது கிட்ட வந்து பக்கம் பக்கமாக டயலாக் பேசுற… …!!”காதை குடைந்த கொண்ட துரியன் திரும்பி பார்க்க…
“ஏன்டா பேச மாட்ட அந்த பொண்ணுக்கு உண்மை தெரியட்டும் அப்புறம்…!!” என கர்ணன் மேலே பேச போக…
அவனை கை நீட்டி தடுத்த துரியன்… ” இப்போ என்ன அவளுக்கு நான் அவளை கெடுத்தேன் தெரியுனும் அவ்ளோ தான…??? ” என்றவன்… கர்ணன் பின்னால் பார்த்து…
“ஆமா அது நான் தான் அவினிவோட அப்பா …!!”என உரக்க கத்தியவன்…
கர்ணனிடம் குனிந்து ” இப்போ அவளுக்கும் தெரிஞ்சி போச்சு என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ போடா …!!”என கூலாக சொல்லி விட்டு போக…
குழம்பிய படி திரும்பிய கர்ணன்… அங்கு அதிர்ந்து தோற்றத்தில் கண்ணீர் உகுந்த படி நின்ற கனலினியை பார்த்து திடுகிட்டவன்… ” என்ன பேசுவது என்று தெரியாமல்…??? ” சமைந்து நிற்க…
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டவள்… துரியன் அருகில் சென்று… பெயரில் உள்ள கனலை கண்களில் தேக்கி வைத்து… துரியனை பொசுக்கினாள்…
ஆனால் அவனோ இன்னது…!!! என பிரித்தறிய முடியாத பார்வையை கொண்டு கனலினியை பார்க்க…. அதில் ஆத்திரம் கொண்டவள் வெடுக்கென்று அவினியை அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டவள்….
திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்… கர்ணன் அருகில் வந்ததும் தயங்கி நின்றவள்… “நடந்தது வெறும் கெட்ட கனவு மட்டும் தான்… நிழல்ல நடந்ததுக்கு நிஜத்தில் யாரும் உரிமை கொண்டாட தேவை இல்லை…!!” என உறுமி விட்டு திரும்பிப் பார்க்காமல் குழந்தையை தூக்கிச் சென்றாள்….
கனலினி அறிந்த கொண்ட உண்மை அவள் நிம்மதியை சீர் கொலைத்தன் விளைவு…. விரைவாக… குழந்தையை அழைத்துக்கொண்டு ஹோட்டல் ரூம் சென்றவள்…. மனம் நிலைகொள்ளாமல் தவிக்க…
அவசரமாக பெட்டியை அடுக்கியவள்… குழந்தையை அழைத்து கொண்டு ஏற்போர்ட் சென்று விட்டாள்…
ஆம் அவள் சென்று விட்டாள்… நிஜம் தந்த வலியில் கனவு கசந்து விட சென்று விட்டாள்…


