கனா கண்டேனடி சகியே -24
மலரின் இதழ் விரியும் அளவு கூட ஓசை எழுப்பாமல் உள்ளே வந்த கருப்பு துணி அணிந்த கொலைகாரர்கள்…
கட்டிலில் தனியாக நித்திரை கொண்டு இருந்த கனலினி அருகே சூழ்ந்து நின்றவர்கள்… நீண்ட வாளை எடுத்து கனலை இரண்டு துண்டாக்கும் நோக்கத்தில் வெட்ட போக…
கத்திகும் கனலினி கழுத்துக்கும் இரண்டு இன்ச் இடைவேளையில் தடுக்க பட்டு இருந்தது…
இமைக்கும் நேரத்துக்குள் நிஞ்ஜா கத்தியை குறுக்கே விட்டு காப்பாற்றி இருந்தாள் சோனாலி…
“யார்…??” என திகைத்து பார்த்தவர்கள்…
“பெண்ணா…!” என அலட்சியமாக நினைத்துவர்கள்… அவர்களில் இருவரை அவளை சமாளிக்க சொல்லி விட்டு மற்ற இருவரும் கனலினிகொல்ல முயல…
காற்றை கிழித்து கொண்டு சீறி பாய்ந்தாள் சோனாலி நொடியில் இருவரையும் வீழ்த்தி விட்டு
கனலினி மேல் சிறு துரும்பும் படாமல் சண்டை இட்டு கொண்டு இருக்க… அசூசையாக திரும்பி படுத்தாள்…
கனலினி தூக்கம் கலையாது பார்த்து கொண்ட சோனாலி சண்டையை தொடர… வெட்ட வெட்ட முளைக்கும் களை போல் அவள் வீழ்த்த வீழ்த்த புதிதாக வந்த வண்ணமே இருக்க…
அவளும் சளைக்காமல் சண்டை போட்டு கொண்டு இருக்கும் போது பூஜாடி தவறி கீழே விழுந்து விட… அதில் துயில் கலைந்த கனல்…
“யாரு… யாருனு கேக்குறேன்ல…!!” என எழும்பி விளக்கை போட்டு திரும்பியவள் அதிர்ந்து நின்றாள்…
அவள் கண்ட காட்சியானது அவள் அறைக்குள் சோனாலி இரண்டு கைகளிலும் வாளை வைத்து கொண்டு முகமூடி அணிந்த மூவருடன் சண்டை இடுவதையும்… கீழே சிலர் விழுந்து கிடைப்பதையும் பார்த்து திடுகிட்டு நின்றாள்…
கனலினி உறைந்து நிற்பதை பயன்படுத்தி கொண்ட ஒருவன் அவளை கொல்ல வர…” மேடம் முவ்…!” என கத்தி கொண்டே கையில் இருந்த சிறு சிறு நிஞ்ஜா பிளேடுகளை வீசி எறிய அது சரியாக அவனின் நடு மண்டையை பதம் பார்த்தது…
“மேடம் இங்க நிக்காதீங்க சீக்கிரம் வெளியே போங்க…!!” என கத்தி சண்டை போட்டு கொண்டே உரைக்க…
கனலினி “என்ன நடக்குது..” என புரியமால் குழம்பி நிற்க…
“போங்க மேடம் இங்க நிக்காதீங்க அவினியை தூக்கிட்டு போங்க செக்யூரிட்டி நம்ம ஆள் தான்…நிக்காம போய்டுங்க…!!” என சொல்லி கொண்டு இருந்தவள் தோள் பட்டையில் கத்தியை சொருகி இருந்தனர்…
“ஐயோ சோனா…!!” என கனலினி பதற
கத்தியை பிடிங்கி எறிந்தவள்… கனலியிடம் வந்து அவளை பிடித்து வெளியே தள்ளி விடவும்… மற்றொரு கத்தி சோனாலி முதுகில் வெட்டவும் சரியாக இருந்தது…
கண்கள் சொருக சோனாலி ரத்த வெள்ளத்தில் விழுந்ததை பார்த்த பின்பு தான் நிலைமை உரைக்க… பக்கத்து அறையில் உறங்கி கொண்டு இருந்த மகளை தூக்கி கொண்டு வெளியே ஓட போனவளை துரத்திக் வந்த கொலையாளிகள் கனலை நெருங்கும் முன்… அவர்கள் வழியை மறைத்து நின்றாள்… சோனாலி…
அவளை இரக்கமாக பார்த்து கொண்டே கதவை திறந்து கனலினி வெளியே போக… வெளியே இருந்தும் இருவர் அவளுக்கு எதிராக கத்தி வீச வர…
ஓங்கிய கை இறங்கும் முன் அவர்கள் தலையைக் கொய்து இருந்தான் துரியன்…”டாடிஇஇஇஇ…!!’என அவினி கத்தியதும் தான் கனலினிக்கு உயிர் வந்தது” துரியன் வந்து விட்டாரா… என் துரியன் எங்களை காப்பாற்ற வந்து விட்டாரா… இனி பயம் அது தேவை இல்லாத ஒன்று…!!” என திடம் கொண்டாள் மங்கை…
நொடிக்கும் குறைவான கணத்தில்… கையில் இருந்த துப்பாக்கியால் எதிர் பட்ட அனைவரையும் சுட்டு தள்ளி கொண்டே வந்தவன்… கனலினி அருகில் ஒரு கையால் அவளையும் மகளையும் பறவையின் சிறகில் அடை காப்பாத்து போல் பொதிந்து கொண்டவன்…
தொடர்ந்து உள்ளே நுழைந்து சோனாலியோடு சண்டை போட்டவர்களையும் சுட்டு வீழ்த்தியதும் உள்ளே வந்த ஸ்டீபன் இடம்…
“வந்த இடத்துக்கே பார்சல் அனுப்பிடு… நம்ம சைனோட…!!”என்றவன்…
கனலினியையும் மகளையும் அழைத்து கொண்டு போய் கதிரையில் அமர வைத்து பயத்தில் வெட வெடத்த மகளை…” குட்டிமா எதுக்குடா பயம் அதான் டாடி வந்துட்டேன்ல… டாடி உங்களுக்கு ஷூட் பண்ண சொல்லி கொடுத்து இருக்கேன்ல… அப்புறம் ஏன் நீங்க பயபடனும்… அதான் உங்கிட்ட அப்பா ஒரு துப்பாக்கி கொடுத்து இருக்கேன்ல…!!”என்றவனை கனலினி முறைக்க… அதை துளியும் கண்டு கொள்ளாமல்…
“ஆமா டாடி… நான் பயத்துல மறந்துட்டேன்… இனி பயப்படவே மாட்டேன்…!!”என்ற மகளை மடியில் தூக்கி கொண்டவன் உச்சி முகர்ந்தான்…
“அவன் வரா விட்டால்…?? என்ன….?? அவன் வரா விட்டாலும் இவர்களை பாதுகாக்க தான் பால் போடுபவன் முதல் செக்யூரிட்டி வரை அத்தனை ஏற்பாடு செய்து இருக்கிறானே… இருந்தும் சோனாலி இல்லை என்றால்… என்ன ஆகி இருக்கும்…??”என நினைத்தவன் அவளை மெச்சுதலாக பார்க்க…
அவன் முன்னால் வந்து மண்டியிட்ட சோனாலி…
“பாஸ்… இது மேடத்து மேல நடந்த ரெண்டுவது தாக்குதல்… முதல் தாக்குதல் அவங்களுக்கு தெரியாம காப்பாத்திட்டேன்… இந்த முறை நிறைய பேர் பாஸ் இருந்தும் என் வேலைய கடமையை நிறைவேற்றி விட்டேன்…!!” என கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுக்கு பிறந்தவள் பேச…
“போதும் எழுந்துரு உங்காயத்துக்கு மருந்து போட்டுக்கோ போ…!!” என்றான் துரியன்… அவனாக சொல்லாமல் அவள் எழுந்திருக்க மாட்டாள் என்று அறிந்தவன்…
” எஸ் பாஸ்…!!” என எழுந்து நிற்க முயன்றவள் தடுமாறி விழ போக ஸ்டீபன் அவளை தாங்கி கொண்டான்…
“எப்படி என் வேலையை நான் கரெக்டா செஞ்சுட்டுனா… இப்பவாது என் திறமையை தெரிஞ்சுகிட்டீங்களா…!!”என அந்தக் களைப்பிலும் நிமிர்வாக ஸ்டீனை பார்த்து கேட்க…
“ஸ்டுபிட்… என்ன வேலை செஞ்சு வச்சிருக்க உனக்கு தான் கண் கொடுத்து இருக்குல… கண்ண வச்சு ஹேண்டில் பண்ணி இருந்தா இந்த சிச்சுவேஷனை சுலபமா முடிந்திருக்கும் … ஆனா நீ கத்தி எடுத்து கம்பு சுத்துனதால பாரு உனக்கும் அடிபட்டு இருக்கு… காப்பாற்ற வேண்டிய மேடம் கையில காயம் ஏற்பட்டு இருக்கு… நீ எப்பவுமே அறிவில்லாதவ தான் நிரூபித்து விட்டாய் முட்டாள்…!!”என திட்டிக் கொண்டே அவள் காயங்களுக்கு மறந்து போட்டு விட்டான் ஸ்டீபன்…
அவன் சொன்ன பின்பே தன் கைகளை பார்த்தாள் கனல்… அங்கு கத்தியால் கீறல் ஏற்பட்டு இருந்தது…
துரியன் எழுந்துசென்று அவளுக்காக மருந்தை எடுத்துவந்து போட ஆரம்பித்தான்…
ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்ட சோனாலி … கனலினி அருகே வந்து நிற்க…
இறுகிய முகத்துடன் கருப்பு நிஞ்ஜா உடை அணிந்து கட்டுக்கோப்புடன் நின்ற சோனாலியிடம் … பழைய அந்த வெகுளித்தனம் கொண்ட சோனாலியை தேடி தோற்றவள்…
” உன்னோட உண்மையான பெயர் என்ன சோ….??? “எனக்கூற வந்தவள் பாதியில் நிறுத்திக் கொள்ள…
“அமைரா மேடம்…!”என குனிந்து கொண்டே சொல்ல
” என்கிட்டயே பொய் சொல்லி இருக்க… என்ன கொல்ல வந்தத மறைச்சு இருக்க…இன்னும் என்னென்ன விஷயத்தையும் என்கிட்ட இருந்து மறைத்து இருக்கீங்க…?? “என அவளை பார்த்து கோவமாக கேட்க…
“அச்சச்சோ இல்லை மேடம் அது பாஸ்…!!”என இழுக்க…
” அவகிட்ட ஏன் கத்துற நான்தான் அனுப்பினேன்… என்ன கேளு எதுவா இருந்தாலும் சொல்றேன்…!!” என கனலினி கைக்கு மருந்து வைத்து கொண்டே சொல்ல…
ஸ்டீபன் நாகரீகம் கருதி வெளியே செல்ல
அந்த இங்கிதம் கொஞ்சம் கூட இல்லாத அமைரா கல்லாக நிற்க…
தலையை தூக்கி துரியன் அவளை பார்த்த பார்வையில் பச்சை குழந்தை கூட அர்த்தம் கண்டு கொள்ளும் ஆனால் அவன் முன்னால் இருந்ததோ சுத்த மட சம்புராணி ஆயிற்றே…
“சோ நீ இப்போ வெளிய போக மாட்ட அப்படி தான…??”
‘எஸ் பாஸ் மேடத்துக்கு நான் தானே பாதுகாப்பு அப்போ நான் அவங்க கூடவே தான இருக்கணும்…!!” என கடமை கண்ணாயிரம் ஆக சொல்ல…
“இவளை…!!”என துரியன் கடுப்பாகிப் போய் துப்பாக்கியை எடுக்க…
பதறிய கனலினி மறு கையால் துரியனின் கையை பிடித்து தடுத்தாள்…


