கனா கண்டேனடி சகியே -23

கனா கண்டேனடி சகியே -23

“சோனாலி ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்… உள்ளே போய் வேலைய பாரு…!!” என கத்த  அடிக்க எடுத்த பூஜாடியை போட்டு விட்டு ரித்விக்கை முறைத்து கொண்டே உள்ளே சென்றாள்….

” ரித்விக் என்ன இது அவகிட்ட போய் சரிக்கு சமமா சண்டை போட்டு இருக்கீங்க…உள்ள வாங்க…!!”என அழைத்து கொண்டு போக…

“சரியான ரவுடி அவள் ஏன் இங்க இருக்கா…??? என கோவம் ஆறாமல் கேட்க…

“காம் டவுன் ரித்விக் அவ இங்க தான் எனக்கு துணையா இருக்கா… அவளுக்கு உன்னை தெரியாதே…தனியா இருக்கோம்ல ரொம்ப ப்ரொடக்டிவ்   அவ்ளோ தான்… நீ தப்பா எடுத்துக்காம இப்போ இந்தியால என்ன பண்ற…?? என்ன விஷயமா என்னை பார்க்க வந்தேன்னு சொல்றியா…???” என காரராக கேட்க…

” என்ன கனல் இப்படி கேட்டா நான் உனக்காக தான் வந்தேன்…யாரும் இல்லாம நீ ஏன் இப்படி கஷ்டபடனும் சொல்லு ஊருக்கு தான் வர மாட்ட சொல்லிட்ட… அதான்  உனக்கும் அவினிக்கும் துணையாக நான் இருக்கலாம்னு…”என்றவன் மேலே தொடரும் முன் 

“போதும் நிறுத்துங்க ரித்விக் நான் ஏற்கனவே நம்ம வெட்டிங் கால் ஆப் பண்ணிட்டேன்… நீங்க என் மனசுல இல்லன்னு சொல்லிட்டேன்… அதுக்கு அப்புறமும் அந்த மாதிரி எண்ணத்தோட என்ன தேடி வராதீங்க ப்ளீஸ் …!!” என  முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட…

 முகம் கறுத்து தொங்கி விட்டது ரித்விக்கு…

“ஓகே கனல் இப்போ நீ எதோ டென்ஷன் இருக்க…அப்புறம் வரேன்..!!” என எழுந்தவன்… ” உனக்காக நான் காத்துட்டு இருப்பேன்… அதை மட்டும் மறந்துடாத கனல்…!!” என உருக்கமாக சொல்லிவிட்டு செல்ல…

“ஒரு நிமிடம் ரித்விக்…!!”என்றவள் அவன் கொண்டு வந்த பூங்கொத்தை  அவனிடமே கொடுத்து விட்டு “என் மனசு இப்பவும் எப்பவும் துரியன் ஒருத்தருக்கு மட்டும் தான்… தேவையில்லாம எனக்காக காத்துட்டு இருக்காதீங்க அது சுத்த வேஸ்ட் உங்க லைஃப நீங்க பாருங்க…!!” என தீர்க்கமாக சொல்லி விட…

கசந்த புன்னகை யோடு திரும்பி சென்ற ரித்விக்கின் முகம் வெளியே வந்ததும் விகரமான அவதாரம் எடுத்தது… கையில் இருந்த மலர் செண்டை கசக்கி எரிந்தவான்…

 போனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்து…” யா பிளாக் மாம்பா தான் பேசுறேன்… மிஷன் மிஷன் பேய்ல்டு… எவ்வளவு சீக்கிரம் துரியனை உங்க கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வாங்க… அப்போதான் நம்ம பிளான் சக்சஸ் ஆகும் மிஸ் சுலேனா…!!!”என பாம்பின் பளபளப்பு அவன் கண்ணில்…

 அவன் சென்ற சிறிது நேரத்திலேயே…

 கர்ணனும் வைஷ்ணவியும் உள்ளே வர…

 சகோதரிகள் இருவரும் பரஸ்பரம் பேசி கொண்டனர்…

“என்ன வைஷு… நீயும் ஊருக்கு போகலையா… இங்க என்ன பண்ற…??? எங்க தங்கி இருக்க…??? எப்படி இருக்க…???

“அக்கா ரிலாக்ஸ் கொஞ்சம் மூச்சு விடு இப்படி கேப் விடாம  கேட்டா எதுக்கு பதில் சொல்ல… ஃப்ர்ஸ்ட் கேள்விக்கு என்னோட பதில் நான் இந்தியாவில படம் பண்ண போறேன்… இங்க தான் வெளில என் இந்திய ஃப்ரண்ட்ஸ் கூட தங்கி இருக்கேன்… அண்ட் கொஞ்ச நேரம் முன்னாடி வரை நல்லா இருந்தேன்…!!” என கடைசி வாக்கியத்தை கர்ணனை முறைத்து கொண்டே சொல்ல

“என்ன வைஷு நீ இங்க தான் உன்னோட தொழிலை தொடர  போறனா என்கூட வே வந்து தங்கி இருக்கலாம்ல…!!” என ஆதங்கமாக  கேட்டுக் கொண்டிருக்கும் போதே…

“அதான சரியா கேட்டீங்க மேடமே ஏன் தங்கச்சி மேடமே… அதான் இம்மாம் பெரிய வீட்டை எங்க கர்ணன் அண்ணன் கட்டி வச்சி இருக்குல இதுல நீங்க இருந்தா என்ன…???”என வந்தவர்களுக்கு ஜூஸ் கொண்டு வந்த சோனாலி கேட்க…

“அடடா உங்க கர்ணன் அங்கிள் கட்டுன தாஜ்மஹாலா… இது தெரியமா நான் கூட ஒரு சின்ன லக் சரி அப்பார்ட்மெண்ட்டை லீஸ் க்கு எடுத்துட்டேனே…!!”என கிண்டல் ராகம் படிக்க 

“வைஷு…!!”என கனல் அதட்ட..

“சாரி கர்ணன் அவ ரொம்ப சுட்டி…!!” என சமாதானம் சொல்ல

“அதனால என்னமா நம்ம பாப்பா தான…!!” வைஷ்ணவியை ஓர பார்வை பார்த்து கொண்டே கூற 

அவனின் கள்ள பார்வை கண்டவள் உதட்டை நாவால் தீண்ட… அந்த செழித்த இதழை கண்டவன் திண்டாடி தான் போனான்…

“கனல் நீ உன்னோட பார்மசி தொழிற்சாலைக்கு இடம் தேடிட்டு இருந்தல்ல… உன் அதிர்ஷ்டம்… ஒரு கம்பெனி லாஸ்ல போறதால குறைஞ்ச விலைக்கு நமக்கு தரேன் சொல்லி இருக்கான் நீ ஒரு வாட்டி நேர்ல பார்த்து ஓகே சொல்லிட்டானா நாம வாங்கிடலாம்…!!”என அவர்களை அழைத்து சென்று சுற்றி காட்ட…

தொழிற்சாலையை பார்த்து விட்டு முழு திருப்பதி கொண்ட கனல் கர்ணனை பேசி முடித்து விட சொல்ல…

அலுவலக அறைக்குள் நுழைந்த கர்ணன்…

“என்ன புருஷன் பொண்டாட்டியோ… அவக்கூட வாழ மாட்டானம் ஆனா அவளுக்கு தேவையான எல்லாத்தையும் பார்த்து பார்த்து என் மூலமா பண்ணுவானம்…!!” என எதிரே இருந்த துரியனை பொறிந்து கொண்டே முன்னால் வைக்க பட்டு இருந்த டாக்குமெண்ட்ஸ் எடுத்து ஒருமுறை சரி பார்த்தவன்… திட்டி கொண்டே திரும்ப…

” என்ன திட்டுறது இருக்கட்டும் மொதல்ல உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு தொடந்து பாருடா… குனிஞ்ச தல நிமிராம போன உன் தாஜ்மஹால்க்கு ஒரு மும்தாஜ் கூட கிடைக்க மாட்டா கடைசி வர மொட்ட பையன் தான்…!!”என கேலி பண்ண…

“என்ன சொல்றான்…??” என புரியமல் யோசித்து கொண்டே வெளியே வந்த கர்ணன் கனலியிடம் டாக்குமெண்ட் குடுக்க வாங்கி கொண்டவள் வீட்டுக்கு கிளம்ப 

“அக்கா நீ வீட்டுக்கு போ நான் கர்ணன் அங்… “என சொல்ல வந்தவள் கனலினியின் கனல் பார்வையில் …”சார் கூட போயிக்குறேன்…!!”என்றவள் கர்ணன் வண்டியில் ஜம்பமாக அமர்ந்து கொள்ள…

 மறுக்க வழியில்லாமல் கர்ணன் அவளை அழைத்துக் கொண்டு போக…  எங்கு செல்ல வேண்டும் என்பதை சொன்னவள்… பயணம் முழுவதும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து வர…

“என்ன அமைதியா வரா… கோச்சிக்கிட்டாளா…  ஆள பாத்தா ஜீரால நினைச்சா ஜாமுன் மாதிரி  இருக்கா… வாய் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தி… ஏதே கொஞ்சமா…!!என அவன் மனசாட்சியே இடித்துரைக்க 

 இடம் வந்ததும் இறங்கி கொண்ட வைஷ்ணவி… மறுபக்கம் வந்து கர்ணனின் கார் கண்ணாடியை இறக்க சொன்னவள்…

“இங்க பாரு பெருசு என்ன பாப்பா பீப்பான்னு கூப்பிட்ட கொன்னுடுவேன்… எனக்கு மறைச்சு வச்சி பேச தெரியாது நான் உன்னை லவ் பண்றேன்… நீ என்ன லவ் பண்றியாலாம் இல்லை பண்ற… பண்ணி தான் ஆகணும்…பாரு உனக்கு ரெண்டு ம்ஹும் ஒரு நாள் தான் டைம் அதுக்குள்ள வந்து என்கிட்ட ஐ லவ் யூ சொல்லிடு இல்லை…??”

“இல்லனா என்னடி பண்ணுவ….???” 

“சிம்பிள் நீ என்கூட மேட்டர் முடிச்சிட்டு இப்போ கல்யாணம் பண்ண மாட்டிங்குறானு எல்லார்கிட்டயும் சொல்லுவேன்…!!” என மிரட்ட…

“அடிப்பாவி…!!” என வாயில் கைவைத்து அமர்ந்து இருந்த கர்ணன்…  “என்ன அடிப்பாவி எனக்கு முத்தம் கொடுத்தல அப்போ நீ தான் வச்சி மேய்க்கனும்… யாருமே எனக்கு இதுவரை முத்தம் கொடுத்தது இல்லை… அதனால கேட்டுக்கோ ஒரு நாள் ஜஸ்ட் இருவத்தி நாலு மணி நேரம்…!!” அருகில் குனிந்த் அவன் இதழில் பட்டும் படாமல் ஒரு முத்தம் வைத்தவள் சிட்டாக பறந்தாள்…

“ப்பா… சரவெடி பட்டாசு… நிறுத்தவே மாட்டாள் போல… எப்படி தான் இவளை கல்யாணத்துக்கு அப்புறம் சமாளிக்க போறேனோ…???” என சிரித்து கொண்டவன்… அவள் தீண்டி சென்ற இதழை நாவால் வருடி அவள் சுவை உணர்ந்தவன் மயங்கினான்…

******

மேக கூட்டங்கள் இருண்ட வானின் இளவரசியான நிலாவை தேடி அலைந்த அர்த்த ஜாம வேளை…

ஆழ்ந்த நித்திரையில் அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகள் துயில் கொள்ள…

தலை முதல் கால் வரை கருப்பு துணியால் சுற்ற பட்ட  நான்கு மனிதர்கள்…

கனலினியின் வீட்டுக்குள் பால்கணி வழியாகவும் கதவை திறந்து கொண்டும் ஓசை எழுப்பாமல் பதுங்கி உள்ளே வந்தனர்… வந்தவர்கள் கையில் கூரிய ஆயுதங்களுடன்… கனலினிஅறையை திறந்து கொண்டு வந்தனர்…

கட்டிலில் தனியாக ஆழ்ந்து நித்திரையில்  இருக்கும் கனலினியை கத்தியால் வெட்ட போன சமயம்…

அவர்கள் முன்னால் இன்னொரு நிஞ்சா கத்தி தடுத்தது…கத்தி வந்த திசையை பார்த்தவர்கள் திகைத்தனர்…

எங்க வந்தது யாருனு சரியா சொல்லுங்க பார்ப்போம்…

கனலினியை கொல்ல வந்தது யார்… பிளாக் மாம்பா ரித்விக்கால் கனலினிக்கு ஏற்பட போகும் துன்பங்கள் என்ன…???

சும்மா எங்கள கேள்வி கேக்காதனு கெளம்பத்திங்க… அப்புறம் எப்படி நீங்க இந்த கதையா படிச்சீங்களா தெரிஞ்சிக்கிறது அதுக்கு தான் 😜😜😜…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top