கனா கண்டேனடி சகியே -22

கனா கண்டேனடி சகியே -22

கர்ணனின் கார் சாலையில் சீறி பாய்ந்தது…

இருவருக்கு இடையில் பேரமைதி… கர்ணனுக்கு இப்பொழுது அவள் இறங்க வேண்டும் என சொல்லி விட கூடாது… இப்படியே அவளை சுமந்து கொண்டு உலகை உலா வர அவா..(பெட்ரோல் பிரீயா தருவங்களா பாஸ் )

எல்லா பயணத்திற்கும் முடிவு உண்டே 

“கனலினிய பார்க்க வந்தேன் …நான் கனலோட சிஸ்டர்…!!” என கம்மிய குரலில் வைஷ்ணவி உரைக்க…

கார் குலுங்கி நின்றது…

“என்ன…??? “என கர்ணன் வைஷ்ணவியை உருத்து விழிக்க…

“எனக்கு நீங்க யாருனு முன்னாடியே தெரியும்… விஹான் கல்யாணத்துல உங்களை நான் பார்த்து இருக்கேன்…மிஸ்டர் கர்ணன்…!!!”என அதே குரலில் கூற…

“ஆனா எனக்கு உன்னை  பார்த்த மாதிரி நியாபகம் இல்லையே…!!” என கர்ணன் தலையை தட்டி யோசித்தாலும் அவன் நினைவு அடுக்கில் வரவே இல்லை…

“ம்க்கும் சார் தான் காதலியோட கடை கண் பார்வைக்கு தவம் கிடந்திங்களே அப்புறம் எப்படி எங்க முகம் எல்லாம் உங்களுக்கு தெரியும்…???” என வெடுக்கென்று கேட்டவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள…

“அவ்ளோ ஓப்பனாவா தெரிஞ்சிது…!!!”என கேட்டவனுக்கு வைஷ்ணவியின் கோவம் வியக்க வைப்பதாகவும் ரசிக்க வைப்பதாகவும் இருந்தது…தோளை குலுக்கி விட்டு வண்டியை செலுத்தினான்…

அவனுக்கு எங்கே தெரியும் விஹான் திருமணத்தின் போது… “பாவம் கர்ணன்… அவனோட  கல்யாணம் நடந்து இருக்க வேண்டியது… அவன் நேரம் இப்படி அவனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு கல்யாணத்துலே வந்து வேலை செஞ்சிட்டு இருக்கான்… ம்ஹும்… அவன் குடுத்து வச்சது அவ்ளோதான்…!!” என பலர் கர்ணனை இரக்கம் கொண்டு பார்க்க…

அதில் கவர பட்ட வைஷ்ணவி கர்ணனை உற்று கவனிக்க தொடங்கினாள்… அவனிடம் இவர்கள் சொன்னது போன்ற ஏமாற்றம், வலி எதுவும் இருப்பது போன்று தெரியாமல் போக குழம்பி போனவள்…”மறைக்கிறானா…?? ” என திருமணம் முடியும் வரை கர்ணன் பின்னேயே சுற்றி திரிந்தாள்…

தியாவிற்கும் விஹானுக்கும் திருமணம் நடைபெரும் சமயம்… ஒரு துளியேனும் கர்ணன் முகத்தில் மாற்றம் தெரிகிறதா…?? என அவன் கண்களையே பார்த்து இருந்தவளை ஏமாற்றும் வகையில் சிறு மாறுதலும் இல்லாமல் புன்னகையுடன் அட்சதை தூவியவன்… அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கி விட…

“என்ன நினைச்சுட்டு இருக்கான் இவன்… பெரிய தியாகியா… கொஞ்சம் கூட பீலிங்ஸ் இல்லாம சிரிச்சிட்டு சுத்துறான்… விட கூடாது நேர்லயே போய் கேட்ருவோம்…!!!” என கர்ணனால் எரிச்சல் அடைந்தவள் அவனை உண்டு இல்லை என பார்க்க போக…

“எப்பா கர்ணா என்னபா இது… தாலி கட்ட வேண்டிய நீ இங்க சாப்பாட்டு வாளி பிடிச்சிட்டு இருக்க… உன் கூட  நடந்திருக்க வேண்டிய கல்யாணம்…ம்ஹும்  இப்படி ஆகி போச்சு… எனக்கே மனசு தாங்களபா… நீ எப்படி தான் தாங்குறியோ…???” என ஒரு பெருசு போட்டு வாங்க நினைக்க…

“என்ன பெருசு சாப்பாட்டுல பீஸ் வேணுனா கேட்டு வாங்கி சாப்பிடு… அதை விட்டுட்டு அடுத்தவன் இரக்கத்துல ஆதாயம் தேடாத… அந்த பொண்ணு என்ன என்னை உருகி உருகி லவ் பண்ணிட்டா ஏமாத்திட்டு போச்சு… இந்த காலத்துல உசுருக்கு உசுரா லவ் பண்றவனைய விட்டுட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கித்துங்க… அப்படி இருக்கும் காதலிச்சவனை தான கல்யாணம் பண்ணிருக்கு… அந்தப் பிள்ளை மனசுல வேற ஒருத்தன் இருக்கும்போது நான் கல்யாணம் பண்ணா அதுக்கு பேரே வேற… என்ன எனக்காகவே காதலிக்க ஒருத்தி வராமலா போயிடுவள்…  அப்படி வர பொண்ண என் நெஞ்சில வச்சி காலம் பூரா சுமப்பேன்…!!!” ( ரொம்ப பெரிய மனசு போலையே) என கூறிவிட்டு சென்ற கர்ணனை மெய் மறந்து பார்த்தாள் வைஷ்ணவி…

” நான் உன்னை காதலிக்கிறேன் நீ என்னை  காதலித்தே தீர வேண்டும் இல்லையென்றால்   ஆசிட் அடிப்பேன் என மிரட்டும் மூடர்களுக்கு இடையில்… அவளுக்கு பிடிச்சவன் கூட வாழறதுல என்ன தப்பு… எனக்காக ஒருத்தி வரும் வரை  நான் காத்துட்டு இருப்பேன்…!!” என எதார்த்தமாக கூறி விட்டு செல்லும் கர்ணன் மீது காதல் மலர்ந்து விட்டது…

ஆம் முதல் நாள் வந்த ஈர்ப்பு அவன் செயல்களை கண்டவளுக்கு கர்ணன் சொன்ன வார்த்தைகளை கேட்டவளுக்கு அவன் மீது காதலாக உருமாறியது…அதனாலேயே அவள் பெற்றோர் அவளை கனடா அழைத்த போது மேல் தொழிலை இந்தியாவில் தொடர போவதாக பிடிவாதமாக கூறிவிட்டு இங்கயே இருக்கிறாள்…

வைஷ்ணவிக்கு கனலினியின் இருப்பிடம் தெரியும் ஆனால்… கர்ணனோடு நெருங்கி பழகவே இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டாள்… ஆனால் அவளே எதிர்பாரதது இந்த முத்தம்… உதட்டை வருட அதில் இன்னும் கர்ணனின் வாசம்…ஒரு முத்ததால் உயிர் வரை தீண்டி இருந்தான் கர்ணன்…

*******

அவசரம் அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தாள் கனலினி…

“ஏன் அவினிமா உங்க அம்மா எந்த நாட்டை பிடிக்க… இப்படி சுடு தண்ணி கொட்டுன கணக்கா திரியுறாங்க…!!” என அவினிக்கு உணவை ஊட்டி கொண்டே சோனாலி கேட்க…

அவர்கள் அருகே வந்த கனலினி அரக்க பறக்க உணவை எடுத்து வைத்து துரித கதியில் அள்ளி தின்ன…

“மேடமே இப்போ என்ன குடி முழுகுற வேலையா இருக்கு… எதுக்கு இப்படி சாப்பிடற…???? சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் நல்லா சாப்பிட்டு போனா தான் ஒழுங்கா வேலை பார்க்க முடியும்… உக்காரு…!!” என சொல்லி  உணவை பார்த்து பரிமாறி கொண்டு இருக்கும் போதே காலிங் பெல் அடிக்க… கனலினி எழ போக…

“அட நீ உக்காரு மேடமே… நான் பாத்துக்குறேன்… ஒருவாய் சாப்பாடு நிம்மதியா சாப்பிட விடுதுங்களா…எந்த கரடிக்கு மூக்கு வேர்க்குதுனு தெரிலையே…??”என சலித்து கொண்டே கதவை திறக்க…

எதிர்ல நின்றவனை குழப்பமாக பார்த்தாள் சோனாலி…

(அப்படி யாரா பார்த்து இந்த பிள்ளை  நிக்குது ஒரு வேளை இந்த கர்ணன் வைஷுவோட ரோம் சீன பார்த்து பிள்ளைக்கு பயந்து போய் நிக்குதா வாங்க பார்ப்போம்…)

 வாசலில் அழைப்பு மணியை அழுத்திவிட்டு கையில் பூங்கொத்து ஓடு நின்றவன் ரித்விக்…

“இது யார்ரா பூச்சாண்டி…??”என சோனாலி பார்க்க

“கனல்..  கனல்… எங்க கனல்…தள்ளு…!!”என சோனாலியை தள்ளி விட்டு உள்ளே செல்ல பார்க்க…

” யோவ் யோவ் நில்லு நீ பாட்டுக்கு திறந்த   வீட்டுக்குள் நுழைந்த நாய் மாதிரி உன் பாட்டுக்கு உள்ள போற…!!!”என அவன் முன்னால் மறித்து கொண்டு நின்றாள் சோனாலி…

“ஹே இடியட்  டூ யூ நொ ஹூ ஐ அம்…???” என கோவம் கண்டு கத்த 

” இந்த பாரு தஸ் புஸ்ஸு  எல்லாம் எனக்கு தெரியாது… நீ பூ டெலிவரி பண்ண வந்தவன் தான அதை என்கிட்டேயே கொடு… மேடமே பிஸியா இருக்காங்க…!!” என ரித்விக்கை உள்ளே விடாது வெளியே துரத்த முனைய….

“ஹே யூ **** கேர்ள் டோன்ட் இரிடேட் மீ… நீ யார் என்ன தடுக்குறதுக்கு…??” என சோனாலியை தள்ளி விட்டு உள்ளே பாய்ந்தான்…

“கனல்… கனல்…!!!” உள்ளே கத்தி கொண்டு வந்த ரித்விக்கை ஆச்சர்யமாக எழுந்து வந்தாள் கனலினி…

“எம்மா மேடமே  என் மேல தப்பில்ல நான் சொல்லி கிட்டு இருக்கும் போதே இந்த ஆளு உள்ள நுழைஞ்சுட்டாரு…யோவ் போயா வெளிய…!!”என சோனாலி பின்னாடியே விரட்டி கொண்டு வர…

“சீ திஸ் புல்ஷிட் கனல் திஸ் ***** பெல்லொவ் எப்படி நடத்துதாரன்னு எனக்கு வர கோவத்துக்கு இவளை என் கையாலே கொன்னுடுவேன்…!!” என ரித்விக் அடிக்க பாய…

“யோவ் நீ அடிக்குற வர என் கை என்ன *** புடிங்கிட்டு இருக்குமா… வேலை செஞ்சு காப்பு காச்ச கை அடிச்சேன் வை தவடா திரும்பிக்கும்…!!” என இவளும் சரிக்கு சரி மல்லு கட்ட… கலவரமானது இடம்…

 இருவரையும் கனலினி விலக்க எவ்வளவோ முயன்றும்… இரண்டும் அடித்து கொண்டு மாய்வதில் குறியாக இருக்க…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top