கனா கண்டேனடி சகியே -17

கனா கண்டேனடி சகியே -17

யார்…??? எதிரில் இருப்பவன் யார்…???

கண்ணில் இந்த ரத்த வெறியோடு அரக்க தோற்றம் கொண்டு எதிரில் இருப்பவனை ஈவு இரக்கம் இன்றி கைகளால் கூறு போட்ட இந்த கொடூரன் நிச்சயம் என் துரியனா இல்லை இருக்காது வேறு எதோ பெயர்…ஹான் ட்ராக்கோ என்கிறார்களே 

“என் துரியனுக்கு நிந்தித்தவர்களையும்   நன்மை செய்யும்  மட்டும் தானே தெரியும்… உதாரணத்துக்கு அவர்கள் பாட்டி சித்தப்பா அவர்கள் இழைத்த கொடுமைக்கு பின்னும் அவர்களுக்கு அனைத்துமாக இவன் தானே இருந்து கொண்டு வருகிறான்… அ..அப்போ… எதிரில் இருப்பது…?? என விக்கித்து போய் நின்றாள் கனலினி….

போனை எடுத்த பேசிய துரியன்  “ஒரு சின்ன மூட்டை பூச்சி உள்ள புகுந்துடுச்சி அதை எடுத்து போட்டு வரேன் டான்…!!” என்றவன்…

வேகமாக தன் ஆடைகளை கலைத்து குளியல் அறை சென்று குளித்து விட்டு வரும் வரையிலும் கனலினி நின்ற இடத்திலே சமைந்து நின்றாள்…

கிளம்ப தயாராகி வந்த துரியன்… கனலினி அருகே செல்ல…

“நோ..அ.. அங்கேயே நில்லுங்க..!!” என வார்த்தையால் தடுத்து நிறுத்தியவளை கேள்வியாக பார்த்தவன் …

மேலும் நெருங்க முயல… கனலினி பயந்து பின் வாங்குவதை புருவம் சுருக்கி லேசர் விழிகளால் அவளை ஆராய…

 சிறிது நேரத்துக்கு முன்பு அவன் கண்ட காதல் மறைந்து அச்சம் குடிகொண்ட விழிகளை பார்த்தவன்… அவள் தன்னை கண்டு அஞ்சி நடுங்குவதை பார்த்தவன் பெரிதாக எல்லாம் அலட்டி கொள்ளாமல்…

” போயிட்டு வரேன் ஸ்வீட்டி அப்புறம் நேத்து மாதிரி எந்த தப்பும் பண்ண மாட்டனு நினைக்குறேன்… பண்ண என்ன நடக்கும்னு உனக்கே நல்லா புரியும்… சோ டேக் கேர் ஸ்வீட்டி…!!!’என பறக்கும் முத்தம் குடுத்து விட்டு பறந்து சென்றான் ஹெலிகாப்டரில் ( என்னை மாதிரி அப்பாவி ரைட்டர் கிடைச்சா…பல்லுக்குச்சி வாங்க கூட பறந்து தான் போவானுங்க…)

அவன் செல்வதை கண்ணீர் நிறைந்த கண்களோடு பார்த்தவள் மடிந்து அமர்ந்து எவ்வளவு நேரம் கதறினாளோ… அவினி வந்து என்னச்சுமா…??கேட்டதும் வாரி அணைத்தவள் கண்ணை துடைத்து கொண்டு போலி புன்னகை புரிய முயன்றாள்…

*********

தன் முன்னால் போட பட்டு இருந்த பார்சலை திறந்து பார்த்த பிளாக் மாம்பா… சற்று திடுக்கிட்டு தான் போனான்…

அதில் அவன் அனுப்பிய நம்பிக்கைக்கு உரிய உளவாளியின் உயிரற்ற பிண்டம் அதில்” ட்ராக்கோ” என கத்தியால் எழுத பட்டு இருக்க…

“ஆஆஆஆ…. ட்ராக்கோ… உன்னை சும்மா விடமாட்டேன்… என்னை காரணத்தாலும் உன் முடிவு என் கையில் தான்… என சூளுரைத்தவன்…

கையில் இருந்த தொலைபேசியில் யாருக்கோ அழைத்தவன்…

“அவன் நம்மள கண்டு பிடிச்சிட்டான்… என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது… எனக்கு அவள் வேணும்…!!”என கத்தியவன்…

மறுபக்கத்தில் இருந்தவன் சொன்ன பதிலால்… “ஹாஹா… செம குட் நியூஸ்…!!’ என போனை வைத்தவன்…

“ஹாஹா துரியன் நோ நோ மாஸ்டர் ட்ராக்கோ… நீ  இப்போ தப்பிக்க வாய்ப்பே இல்லை… இனி என்ன பண்ண போறேன்னு பார்க்குறேன்…!!” என குரூர சிரிப்பு அவன் முகத்தில்…

*****

டான் லியோவை சந்தித்து விட்டு வந்த துரியன் முகம் எஃக்கு போல்   இறுகி இருந்தது…

 அறுபது வயதாகும் அவரை வீழ்த்துவது என்பது துரியனுக்கு பெரிய விடயமே இல்லை…

ஆனால் துரியனுக்கு அவர் செய்த உதவிகளை எண்ணி…” துரியன் நன்றி கெட்டவன் என்றாகி விட கூடாது.. ” என்பதற்காகவே அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு வந்திருக்கிறான்…

அவனுள் குமுறும் கனலை அணைக்க அவன் கனலினியால் மட்டும் தான் முடியும்…

“படார்…” என கதவுகளை திறந்து கொண்டு உள்ளே வந்த துரியன்…

அவன் அறையில் தனியாக உருவாக்க பட்டு இருந்த பாரை திறந்து அழகான கண்ணாடி குடுவையில் ஊற்றியவன்… சிப் பண்ணி கொண்டே கனலினியை நாடி சென்றான்…

அவள் தோளை தொட வெடுக்கென்று  தட்டி விட்டாள்…

மீண்டும் அவள் மீது கை வைக்க அவள் மீண்டும் தள்ளி விட இம்முறை அவன் கையில் இருந்து மது குடுவை கீழே விழுந்து உடைந்தது…

ஏற்கனவே கோவ தீயில்   கனன்று கொண்டு இருந்தவன் இம்முறை கனலினியின் செயல் அதற்கு மேலும் தூபம் போட…

அவள் தோள்களை அழுந்த பற்றி தூக்கியவன்… அவள் மறுப்பை மதிக்காது கட்டில் அருகே சென்று மெத்தையில் தூக்கி எறிந்தவன் தானும் அவளோடு குதிக்க…

“வேணாம் துரியன் கிட்ட வராதீங்க…!!”” ப்ளீஸ் என்ன தொடாதீங்க..!!” தொட்டா உங்களை கொன்றுவேன்…!!”என அவள் கெஞ்சல், மிரட்டல் எதுவுமே அவன் செவிகளை தீண்டியதாக தெரியவில்லை….

வன்மையாக அவள் இதழ் கொய்தவன்… கரம் அவள் அடங்கா திமிரை வன் கரத்தால் பிடிக்க…

“ஸ் ஆஆ…எனக்கு பிடிக்கல துரியன் ப்ளீஸ்… இதுக்கு நீங்க என்னை கொன்னுடுங்க…!!” என கதறி  அழ…

கனலினியின் கோவமும் கெஞ்சாலும் தீண்டாத அவன் செவிகளை அவள் அழுகை தீண்டியது… கை விலுக்கென்று இழுத்து கொண்டவன்… அவள் மீது இருந்து நாகராமலே…

“ஏன்…???” கடினமான குரலில்…

“நீங்க ஒரு கொலைகாரன்… கொள்ளைக்காரன்… குற்றவாளி… மனசாட்சி இல்லாத மிருகம்…!!!” என அடுக்கி கொண்டே போனவளின் குரல் வலையை நெருக்கி பிடித்தவன்…

“என்னடி சொன்ன நான் மிருகமா… ஆமா நான் மிருகம் தான்… நான் ஒன்னும் சும்மா இருக்குறவன போய் கொல்லல… நான் அவனை கொல்லலனா அவன் என்னை கொன்னு இருப்பான்…உனக்கு சொன்னா புரியாது… இது கொடூர மிருகங்கள் வாழுற காடு இங்க நீ உயிர் வாழ அடுத்தவனை கொன்னு தான் ஆகணும்…

“அப்படி பட்ட காட்டுல நீங்க ஏன்  வாழனும் துரியன் … அப்படி என்ன உங்களுக்கு பணத்து மேல வெறி…  என கனலினி சாட

“ஆமாண்டி வெறி தான் எனக்கு பணத்து மேல வெறித்தான்… அது இப்போ உருவான வெறி இல்லை… சின்ன வயசுல… கேவலம் ஒரு ஆயிரம் ரூபாக்கு எங்க அப்பாவை குத்தி கொன்னு போட்டாங்களே… அப்போ உருவாச்சு… எங்க அம்மா செத்த அப்போ தூக்கி போட காசு இல்லனா அனாதை பிணம்னு நடு ரோட்டில விட்டுட்டு போனாங்களே… அப்போ கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்ச வெறி… உனக்கு பசினா என்னனு தெரியுமாடி… இல்லை மழைக்கு கூட ஒதுங்க இடம் இல்லாம குளிர் ஜுரத்தோட நின்னு இருக்கியா…!!” என சுவற்றில் ஓங்கி குத்தியதில்  சுவற்றில் சொட்டை விழுந்தது…

சின்ன வயதில் அவன் அனுபவித்த வலிகள் அவனை தவறான பாதைக்கு கூட்டி சென்றதை அவன் வார்த்தைகளில் அவதானித்தவள் நெஞ்சமும் வேதனையில் சுணங்கியது…

“அப்போதான் கஷ்டம் இப்போ நல்லா தான இருக்கீங்க ப்ளீஸ் விட்ருங்களேன் துரியன்… உங்களுக்காக… உங்களையே நம்பி இருக்குற எனக்கும் நம்ம பொண்ணுக்காகவும்… விட்டுடுங்களேன் துரியன்… எனக்கு நீங்க வேணும்… உங்க கூட சந்தோசமா வாழனும்…ப்ளீஸ்…!!”என கனலினியின் காதல் மனது அவனை வெறுக்க முடியாமல் அவனிடமே அவனை யாசித்தாள்…

“முடியாது…!!!” உடனே மறுத்தான்…

“ஏன்…??” இயலாமையில் கனலினி அவன் கன்னங்களை பிடித்து கேட்க…

“இதுக்கான பதில்  உன்னை இன்னும் காய படுத்தும் தெரியும்… உனக்கு வேற வழி இல்லை… என்கூட இருந்தா இதை எல்லாம் தாங்கி தான் ஆகணும்… ஏன்னா…!!! நான் வந்தது ஒரு வழி பாதை… இது என்னனு தெரியும் முன்னவே நான் பல எதிரிகளை சம்பாதிச்சுட்டேன்… நானே நினைச்சாலும் போக முடியாது…!!! எனக்கு இருக்குறது ரெண்டே வழி தான் ஒன்னு போராடி வாழனும்… இன்னொன்று நான் செத்துப்.. ம்ம்…!!!” என்றவன் இதழை இதழ் பொருத்தி தடுத்தவள்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top