கனா கண்டேனடி சகியே -12
கரை காணாத கடல்… கிழக்கில் உதிக்கும் சூர்யனின் ஆட்சி… நீரில் இருந்து எழும் அக்னி பந்தாக தோன்றும் அதிகாலை வேளை…
கனலினிக்கு கண் இமைகளை பிரிப்பதே சிரமமாகிவிட… உடல் முழுக்கும் நோவு கண்டது… எதனால் அறிந்த ஒன்று தானே…
தன் மீது மொத்த உடல் பாரமும் அழுந்த ஆடை இல்லாது கிடந்த துரியனை கண்டு அவள் நெஞ்சம் விம்மி தணிந்தது…
“யாரிவன் எதற்காக என் வாழ்க்கையில் வந்தான்…??? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் என் பெண்மையை களவாடினான்… உண்மை தெரிந்த வேளையில் அது பற்றிய பிரகஞ்ஞை… சிறிது கூட இல்லாமல் என்னை மாற்றனிடம் விட்டு கொடுத்தவன் இப்போது என்ன உரிமையில் என்னை தீண்டினான்…??? என பல கேள்விகள் மங்கையின் மனதை அலைக்கழித்தது…
கனலினியின் சிறு அசைவிலே எழுந்த துரியன்… “குட் மார்னிங் ஸ்வீட் ஹார்ட்… என்ன சீக்கிரமா எழுந்துட்ட போல…!!”என கேட்டு கொண்டே அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தான் ஆசை கணவன் போல்
அவனை வெறுப்பால் தீண்டும் பார்வைக்கு ஒரு முத்தம் பரிசாக வைத்தவன்… எழுந்து மேல் அங்கியை அணிந்து கொண்டு குளியல் அறை சென்று காலை கடன்களை முடித்து கொண்டு வரும் வரை கனலினி அப்படியே அமர்ந்து இருக்க…
“எழுந்துரிச்சு போய் குளி ஸ்வீட் ஹார்ட்… இல்லனா நானே குளிக்க வைக்கட்டுமா…!!!” என்றவன் அத்தோடு நில்லாமல்…
“நோ விடு விடு… கீழ இறக்கி விடு துரியன்…!!!”என கனலினி மறுக்க மறுக்க கனலை தூக்கி கொண்டு போய் பாத்டபில் “பொத்” என்று போட்டவன்…
“இங்க பாரு காமினி டார்லிங் உனக்கு இருபது நிமிஷம் தான் டைம் குளிச்சு முடிச்சுட்டு நீயா வந்துடு… இல்லை…???” என அவளை கூர் பார்வையால் அளவிட்டவன் “எனக்கு எதையும் சொல்லிட்டு செய்ற பழக்கமே இல்லை…புரிஞ்சிதா பேபி…!!” என மீண்டும் முத்தம் வைத்து விட்டு போக..
“ஏன்…?? எதற்காக…?? எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது…??”என சிந்தித்து சிந்தித்து ஓய்ந்து போனாள்…துரியன் கொடுத்த கெடுவுக்குள் குளித்து முடித்து தயாராகி லிவிங் ஏரியாவிற்கு சென்றவள் அங்கு கண்ட காட்சியில் பிரம்மித்து நின்றாள்…
ஐயோ இந்த ஏடாகூடம் பிடிச்சவன் இப்ப என்ன பண்ணி வச்சான் தெரியலயே பார்ப்போம் வாங்க…
அங்கே சமையல் அறையில் ஏப்ரான் கட்டி கொண்டு மகளோடு விளையாடிய படி சமைத்து கொண்டு இருந்த துரியனை தான் பார்த்து திகைத்தாள்…
“என்ன மாதிரியான மனிதன் இவன்…???” என துரியனை புரிந்து கொள்ள முடியாமல் தந்தை மகள் இருவரையும் பார்த்து கொண்டு நிற்க…( அவன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது)
எதார்த்தமாக கனலினியை பார்த்தவன்… கண்ணடித்து பறக்கும் முத்தம் ஒன்று வைக்க… நேற்று இரவு அவளை ஆக்கிரமித்த முரட்டு இதழ்கள் நியாபகம் வர… சிலிர்த்து தான் போனாள்…
” டோட்டோ டொயிங் பிரேக்பாஸ்ட் ரெடி குட்டிமா உங்க அம்மாவை கூப்பிட்டு டேஸ்ட் பார்க்க சொல்லுங்க…!!”என மகளை தூண்டி விட…
“மம்மி வாங்க டாடியும் நானும் சமைச்சோம்… சீக்கிரம் வந்து எப்படி இருக்கு சொல்லுங்க…???” என கனலினியை கையை பிடித்து அழைத்து போய் டைனிங் டேபிளில் அமர வைத்து…
துரியன் பரிமாற… ஏற்கனவே துரியனின் அத்துமீறலில் சினந்தவள்… “இன்னும் எத்தனை நாளைக்கு என்னை இந்த மாதிரி அடைச்சு வைக்க போறீங்க துரியன்…???”என சீறினாள்..
பதில் ஏதும் சொல்லாமல் அவினியிடம் குனிந்து “குட்டி டாடிக்கு அங்க இருக்குற பௌவ்லை எடுத்துட்டு வாங்க…!!!” என அனுப்பி வைத்தவன் கனலினியிடம் கண்டன பார்வை செலுத்த அதில் அவள் உதடுகள் தானே ஒட்டி கொண்டன… “குட்டி இருக்கும் போது இனி உன் குரல் உயர கூடாது… நம்ம சண்டை எல்லாம் நம்ம பெட் ரூம்ல வச்சிக்கலாம்…!!”” என கண்டித்தவன் அவள் அதிர்ந்த தோற்றத்தை கண்டு… “அது வார்த்தை சண்டை ஆனாலும் சரி முத்த சண்டை ஆனாலும் சரி எனக்கு ஓகே தான்…!!”என உல்லாச குரலில் சொல்லிவிட்டு அவளுக்கு பரிமாற…
“யூ… என கத்த போனவள்… அவன் எச்சரிக்கை நினைவு கூர்ந்தவள் … “சரி அமைதியாவே கேக்குறேன்… இன்னும் எத்தனை நாளுக்கு என்னை இப்படியே உங்க கூட வச்சி இருக்க முடியும்னு நினைக்குறிங்க… என்னை தேடி எப்படியும் விஹான் வருவான்… அப்போ என்ன பண்ணுவீங்க…!!” என அடிக்குறலில் சீறினாள்…
“வரமாட்டாங்க… இந்த தீவுக்கு ஏன் மாய தீவு வந்துச்சு தெரியுமா… இந்த மாதிரி பாறைக்கு நடுவுல… இப்படி ஒரு தீவு இருக்குனு… எந்த கொம்பனாளையும் கண்டு பிடிக்க முடியாது… ஏன் இந்த தீவை எந்த சாட்டிலைட் வச்சு தேடினாலும் கிடைக்காது… அப்புறம் உன்னை இப்போதைக்கு மட்டுமல்ல எப்போதைக்கும் அனுப்புற எண்ணம் இல்லை… ஏன்னா நீ இந்த துரியனுக்கு சொந்தமானவள்… அதை எவ்வளவு சீக்கிரம் உன் மனசுல பதிய வைச்சுக்குறியோ அவ்வளவும் உனக்கு நல்லது…!!!”எனக் கண்டிப்புடன் சொன்னவன்… மகள் வருவதை பார்த்தவனின் முகம் தன்னால் இலக…
“தேங்க்ஸ் குட்டிமா… உங்க அம்மாக்கு நாம செஞ்சது பிடிக்கல போலைடா… பாரு சாப்பிட கூட தயங்குறாங்க…டாடி எவ்ளோ கஷ்ட பட்டு சமைச்சேன்…!!!” என மகளிடம் இரக்கம் சம்பாதிக்க
“மம்மி டாடி பாவம்ல எவ்ளோ ஆசையா உங்களுக்கு பிடிச்சதை சமைச்சாரு தெரியுமா… ஒழுங்கா சாப்பிடுங்க…!!!” என தகப்பனுக்கு பரிந்து தாயிடம் பேச
மகள் முன் எதையும் காட்டிக் கொள்ள விரும்பாதவள் ஸ்பூனால் எடுத்து அதன் நுனியில் கொரித்து பார்த்தவள் கண்கள் விரிந்து உணவின் சுவையை சொன்னவள் விரல் அசைத்து சூப்பர் என சொல்ல…
“ஹே… டாடி ஹைபை…!!!” என போட்டு கொண்டனர்…அதை பார்த்து கனலினிக்கு சின்ன புகைச்சல் கூட உண்டானது…
அப்பொழுது மட்டுமல்ல தந்தையும் மகளும் சேர்ந்து… அடுத்து அடுத்து வந்த நாட்களில் ஓவியம் வரைதல், மீன் பிடித்தல், துப்பாக்கி சுடுதல், அலைசருக்கு விளையாடுதல் என தந்தை மகள் கூட்டணி வெற்றி பெறுவதை பார்த்து கலங்கி தான் போனாள் கனலினி…
“எங்கே இங்கிருந்து வெளியே சென்ற பிறகு அவினி தந்தை அன்பை நினைத்து ஏங்கி போவளோ…???”என தான் திண்டாடினாள்..
கனலினியை பொறுத்த வரை இந்த மாய தீவில் இருந்து தப்பிக்க சின்ன துருப்பு கிடைத்தாலும் போதும் என இருந்தாள்…
காரணம்… துரியன் இதுவரை அவன் செய்த தப்பிற்கு மன்னிப்பு கேட்கவும் இல்லை… இங்கே கடத்தி கொண்டு வந்து வைத்ததோடு மட்டும் இல்லாமல் தினமும் பகல் பொழுதை மகளோடு கழிப்பவன்… இடையில் தனி ஹெலிகாப்டர் மூலம் அவன் வேலையை முடித்து கொண்டு இரவு திரும்புபவன்…
கனலினி என்ன மறுத்தாலும் அவள் மறுப்புகளை கிஞ்சிததுக்கும் மதிக்காமல் அவள் திணறத் திணற தூக்கி கட்டிலில் போட்டு,அவளை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டு தான் நாகர்வான்…
“ஸ்ஸ்… ஹா… ம்ம்ம்ம்… துரி…யன்… ஷ்…ஹ்ம்… இப்படி எத்தனை நாளைக்குஹு ம்ம்ம்..என்ன பலவந்தம் பண்ண போறீங்க…!!!” என தன்னில் புதைய துடிப்பவனை தடுத்து கொண்டே கேட்க
“நீயா எப்போ நான் தொட்டதும் அடங்கி போறியோ அதுவரை…!!” என அவனும் விடாமல் அவளிடம் அத்து மீற..
“அதுக்கு ஒன்னு நீங்க என் காதலானா இருக்கணும் இல்லை கணவரா இருக்கணும்… இது ரெண்டுல நீங்க எனக்கு யாரு சொல்லுங்க…???”என பிடிவாதமாக பலநாள் அவள் மனதை அழுத்திய கேள்வியை அவனிடம் கேட்டு விட்டு பதிலுக்காக அவன் முகத்தை எதிர் நோக்க…
அதுவரை இருந்த துரியன் முகம் பாறை என இறுகி போய்… அவளை விட்டு விலகி எழுந்தவன்… அவளுக்கு எந்த பதிலையும் தராமல்…கிளம்பி சென்று விட்டான்…
அவன் செயலில் விக்கித்துப் போனாவள்… எதையோ எதிர் பார்த்து ஏமாந்து போக… அந்த வலியை தாங்க முடியாமல்… இரவு முழுவதும் அழுது கரைந்தவள்…
ஒரு முடிவு எடுத்தவளாக சரியான நேரம் வர காத்திருக்க நினைத்தாள்… மறுநாளே அவள் எதிர்பார்த்த நேரமும் அமைந்து விட… துரிதமாக அந்த தீவை விட்டு தப்பிக்க முயனறாள்… ஆனால் அவள் எடுத்த முடிவே அவள் உயிரை பறிக்கப் போவதை அவள் அறிந்து இருக்க… மாட்டாள்…
கனவுகள் தொடரும்….


