இரவு உணவை முடித்துக்கொண்டு அவரவர் தத்தம் அறைக்குள் சென்று முடங்க… இங்கு வீரர் பலி கொடுக்கும் பலியினம் போலவே அறைக்கு அழைத்து வந்தான் ரஞ்சனை…
காசப்புக் காரன் கையில் சிக்கிய ஆடு போலவே முரண்டு பிடித்த வண்ணம் வந்தான் ரஞ்சனும்; அப்போ ஆடு குர்பானி குடுத்துட வேண்டியது தான்…
வீர் அறைக்குள் நுழைந்ததும் ரஞ்சன் மலிவு விலை காயலாங்கடைகுள் நுழைந்தது போன்று உணர்ந்தான்… அத்தனை உலோகங்களால் ஆன உடற்பயிற்சி உபகரணங்களை வாழ்க்கையில் பார்த்ததே இருக்க மாட்டான் ரஞ்சன்… (எதுக்கு எட்டி உதைச்சு பார்டா எல்லாம் ஒட்ட வச்சாதா இருக்க போகுது)
“என்ன பொடியா அப்படி பார்க்கிற? இது தான் நீ தங்கப் போற என் வசந்த மாளிகை, எப்படி இருக்கு? இப்படி கிராமத்துல உள்ள பேச்சலர்ஸ் ரூம் நீ பார்த்திருக்க மாட்டல….??” என ஏகப் பெருமை அந்த கரடிக்கு…
“க்கும் மகா மட்டமான தான் இருக்கு…!!” என மெல்லிய குரலில் முனகிக்கொண்டான் ரஞ்சன்…
“என்ன சொன்ன…??” வீர்
“மார்வெல்ஸ் ஆ இருக்கு சொன்னேன் ப்ரோ…!!” ரஞ்சன்
“சரி சரி, சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு போய் படு, எனக்கு கொஞ்சம் கசகசன்னு இருக்கு, நான் போய் குளிச்சிட்டு வரேன்…!!” என குளியல் அறைக்குள் சென்று மறைந்தான் வீர்…
வீர் வருவதற்குள் இங்கிருந்து வெளியே சென்று விட நினைத்தவன் கதவைத் திறக்க முயன்றான்; ஆனால் அந்த காலத்து துருப் பிடிச்ச தேக்கு மரக் கதவின் தாழ்ப்பாளோ, “திறந்தேனா என்று பார்” என அழிச்சாட்டியம் செய்தது…
சரி, கதவு தான் திறக்கவில்லை, பால்கனி வழியாக தப்பித்துச் செல்லலாம் என்று வழி பார்க்க, அங்கோ புதைக்குழி… கதவோ முட்டுச்சந்து என மாட்டிகொண்டு விழி பிதுங்கி நின்ற சமையம் ரஞ்சன்; பின்னால் சந்தனச் சோப்பின் நறுமணம் கம கமவென வீச, எதற்கோ பயந்து திரும்பி ரஞ்சன் பார்க்க முட்டி நின்றது வீரின் இரும்பு நெஞ்சில் தான்…
நெற்றியைத் தேய்த்துக் கொண்டே பின்னால் நகர்ந்த ரஞ்சன் அலறினான். வீரின் ஆண அழகன் கோலத்தைக் கண்டு தான்… கலைந்த பரட்டைத் தலையுடன், குளித்த ஈரத்துடன் வந்து நின்றவனின் வெற்று உடலைக் கண்டு கரைந்து போனான் ரஞ்சன்… ஆஆ எனப் பழைய காலத்து நடிகை பாணியில் கீச் இட்டான்…
“ஐய பாஸே, என்ன கருமம் இது? இப்படி ஒரு ஆம்பள முன்னால அவுத்து போட்டு நிக்கிறீங்க… நான் அந்த மாதிரி ஆள் இல்லை… கடவுளே கடவுளே….!” அவன் இரு கைகளால் கண்களைப் பொத்த… அவன் கைகளை அழுத்தமாகப் பிரித்துத் தன்னைக்காணச் செய்தான் வீர்…
தங்கத் தேன் நிற மேனியான் மினுமினுக்க, ஆங்கில எழுத்து வாரியாக உடல் விரிந்து சுருங்கி அதில் தான் எத்தனை ஏப்ஸ் (abs)! அதற்கு அடியில் கொஞ்சமே கொஞ்சூண்டு அவன் மானத்தைக் காத்து நின்றது அந்த பாக்ஸர்… அதைக்கண்ட பின்னே ரஞ்சன், “இந்த பிட்டுத் துணி மட்டும் என்னத்துக்குப் போட்டுக்கிட்டு, வாசி மாதிரி…!!” என மெல்லத் தான் முனகினான்…
“அப்படித் தாண்டா நான் தூங்குவேன். இது கூட நீ கூச்சப்படுவியேன்னு உனக்காகத் தாண்டா போட்டு இருக்கேன். வேணாம்னா சொல்லு, கழட்டி எறிஞ்சிடுறேன்…!!” என வீர் பாக்சரில் கை வைக்க…
“ஐயோ வேண்டாம், வேணாம்! இதாவது இருக்கட்டும்…!!” என பயத்தில் பதறி கெஞ்சினான் ரஞ்சன். அவன் பயம் அவனுக்கு…
“ஏன்டா நீ அப்படியே நிக்கிற? போய் துணியைக் கழட்டிப் போட்டு வா, ஒண்ணா கட்டிப்பிடிச்சிட்டுத் தூங்கலாம்…!!” என ரஞ்சனுக்குப் பயம் காட்ட…
“வேணாம், எனக்குத் துணியோடத் தூங்குறதுதான் பழக்கம்…!!” என பின்வாங்க…
“என்னடா கூச்சம் உனக்கு? நாம ரெண்டு பேருமே ஆம்பளைங்கதானே, அப்புறம் என்ன…?? நீ சொன்னா கேட்க மாட்ட, வா நானே கழட்டி விடுறேன்…??” என வீர் ரஞ்சனை நோக்கி எட்டு வைக்க…
“ஐயோ நோஓ! நான் தான் வேணாம் சொல்றேனே…!!” என ரஞ்சன் முகத்தைக் கடுமையாக வைத்து மறுக்க…
“சரிடா சரி, விடு. இதுக்கு எதுக்கு இவ்ளோக் கோவப்படுற? ஆனாலும் உனக்கு இவ்ளோ ஆகாதுடா, சரி வா தூங்கலாம்” என அழைத்து விட்டு, கட்டிலில் போய் இவன் மல்லாந்து படுக்க… ரஞ்சன் அவன் அருகினில் இருந்த தலையணை, போர்வையை எடுத்துத் தரையில் விரித்துத் தனியே படுக்கத் தயாராக…
“டேய், நான் தான் என் கூடப் படுக்கச் சொல்லிட்டு இருக்கேன்ல? என் பேச்சைக் கேக்கலன்னா உன் பேண்ட் உருவி ஓட விட்ருவேன், பார்த்துக்க…!!” என வீர் மிரட்ட…
“என்ன தான் பாஸ் உங்க பிரச்சனை, தூங்க விடாம மனுஷனை நொய் நொய்ன்னுட்டு….!” என கடுப்புடன் ஏறி கட்டிலின் ஓரத்தில் படுத்து விட்டான் ரஞ்சன்… எதுக்கு நாயைச் சூ சொல்வானேன், பிறகு நாய் ஊசி போடுவானேன்…
கிட்டத்தட்ட ரஞ்சன் கடினமாகப் பட்டு நித்ராதேவியை அணைத்த சமையம் …
“பொடியா… ஆ தூங்கிட்டியா….?” என ரஞ்சனின் கோரபுல் முடி அடர்ந்த காதில் கரகரப்பான குரலில் கேட்க…
“அம்மே பேய்இஇஇஇஇ….!” என அதிர்ச்சியில் அடிப்பிடி போட்டு எழுந்து அமர்ந்தான் ரஞ்சன்…
“நான் தான் பயப்படாத தூங்கிட்டியான்னு செக் பண்ணி பார்த்தேன்…!!” என வரிசையாகப் பல் தெரியச் சிரித்து வைத்தவனைத் தலையணையே கொண்டு கொன்று விடலாமா என ஆத்திரம் வந்தது ரஞ்சனுக்கு…
“ஏன்யா ஏன்…?? ஏன் மனுஷனை எப்போ பார்த்தாலும் படுத்தி வைக்கிற, நிம்மதியா தூங்க விடு…??” என்று விட்டு மீண்டும் உறங்கப் போக…
அடுத்து பதினைந்தாவது நிமிடத்தில் மீண்டும் சுண்டெலியாகச் சுரண்டினான் அவள்…
“அட டேய் உனக்கு என்ன தாண்டா வேணும்…??” என எழுந்து அமர்ந்து விட்டான் ரஞ்சன்… அவனுக்குப் பொறுமை அவ்வளவு தான்…
“ஹிஹி எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குதே, உனக்கு மட்டும் எப்படிப் படுத்த உடனே வருது…??” அந்த நேரத்தில் அவளது ஆராய்தலை கண்டு கொதித்து போனான் ரஞ்சன்…
“இப்போ அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற…!!” மரியாதையே மடிந்து போய்விட்டது ரஞ்சனுக்கு…
‘இல்லை, இந்நாள் தூக்கம் வரவில்லை என்றால் படம் பார்ப்பேன். இப்போ நீ என் கூட இருக்கியா? அதான் ரெண்டு பேரும் சேர்ந்து படம் பார்க்கலாமா…!!”
“இல்லனா விட்ருவ போலத்தான்.”
“எவடா இவனை மூணாவது ஹீரோவா போட்டது? அவள் மட்டும் கையில கிடைச்சா… அர்த்த ராத்திரில ரா கோடாங்கி மாதிரி உசுர எடுக்குறான் ஹல்க் பேய்…!!” என உள்ளுக்குள்ளே நொந்து கொண்டே, “சரி சினிமா படம் தானே, பார்த்து வைப்போம், இல்லாட்டி இந்த லூசு நம்மள விடாது…!!” என நினைத்து, வந்த தூக்கத்தை தலையை உருட்டி உளுக்கி ஓட வைக்க…
அங்கு அவர் போட்ட படத்தில் ரஞ்சனின் உடல், பொருள், ஆவி எல்லாமே ஓடிப் பார்த்தது. அப்படி என்ன போட்டு இருப்பான் நீங்க நினைக்கிறீங்க? ஹா ஹா! அதே, அதே பயபுள்ள, சிகப்பு, நீல, மஞ்சள், பச்சைன்னு கலர் கலரா பிட்டு படம் போட்டு வைக்க…
“ஐயோ கடவுளே, என்ன கருமம் பாஸ்! இது நள்ளிரவிலே என்ன கருமத்தை பார்க்க வைக்கிற? அமுத்தி தொலைடா, கண்ணு அவியுது…!!” என ரஞ்சன் இரு கண்களையும் பொத்தி கொள்ள…
அவன் கைகள் இரண்டையும் பிடித்துப் பிரித்து படத்தைப்பார்த்தபடி செய்ய வைத்தவன்… “டேய் என்னடா ஆம்புள பிள்ளை, நீ இதுக்கே இவ்வளவு கூச்சப்பட்டால் முதலிரவில் என்ன பண்ணுவ… கண்ணைத் திறந்து பார்டா, காணக் கிடைக்காத காஜி சீன் பார் எப்பா என்னடா பாருடா….!” என ஜொள்ளு வடித்தபடி ரசித்துக் கூறியவனை…
“உனக்குக் கூச்சம் அதிகமா இருக்குடா… உன் கூச்சத்தைப் போக்க ஆயிரம் வழி வச்சிருக்கேன், அதுல ஒன்னுதான் இது… பாரு என்னமா பண்றான்… புரியலனா கூச்சப்படாம கேளுடா, சொல்லித் தரேன்…!” என ஆய கலைக்கு ஆசானாகிப் போன பொல்லாதவன்…
“பாஸே எனக்குப் பிடிக்கல, ஆளை விடுங்க நான் போறேன்…!!” என்று தெறித்து ஓடப் பார்த்தவனை இழுத்து அணைத்துப்பிடித்துக் கொண்டவன்…
“சரி இவளைப் பிடிக்கலனா வேற யாரைப் பிடிக்கும்? ஷாஷா கிரே பார்க்கிறியா இல்லை டோரி பிளாக் பார்க்கிறியா? ஃபயர் அள்ளும்! அதுவும் இல்லனா மியா மல்கோவா (டிஸ்கி டிஸ்கி… கூகிள் சர்ச் பண்ணி கண்ணு அவிஞ்சா சங்கம் பொறுப்பல்ல) சும்மா தாறுமாறு தக்காளி சோறுதான், அதுவும் அவள் *** பண்ணுவா பாரு….!” என ரஞ்சன் பொத்திய காதையும் விடாமல் பிடித்து, படத்தில் பிடித்தது, நடித்தது, கடித்தது என முதல் படம் போட்டு தியரியோடு சேர்ந்து கிளாஸ் எடுக்க…
“ஐயோ நான் அதைச் சொல்லல… எனக்கு இந்த *** படம் பார்க்கவே பிடிக்கல, என்னை விட்டுருயா…?” என ரஞ்சன் கதறிக் கதறக் கேட்டான். இல்லை… மூன்று மணி நேரத்தில் முப்பது ஆயிரம் வீடியோக்களைப் பார்த்து சாதனை புரிந்துவிட்டான் வீர்… (இதை முறியடிக்க யாரும் கிளம்பவில்லை; கனெக்ஷன் கட் ஆனா சங்கம் பொறுப்பல்ல (சிங்கிள் மீனிங் ஒன்லி)).
பொழுது எப்போடா விடியும் எனத் தவித்துத் தவித்து அடங்கிப் போனவன், காலையில் எழுந்து பார்க்கும் போது வீர் மார்பில் தலை வைத்துப் படுத்திருப்பதை உணர்ந்தான் ரஞ்சன்… நேற்று இரவு ஞாபகம் வர, படத்தைக் காணச் சகிக்காமல் வீரின் கட்டுப்பாட்டில் விலகுவும் முடியாமல் அவன் நெஞ்சில் முகத்தை மறைத்து உறங்கிப் போனது ஞாபகம் வர, அடித்து பிடித்து எழுந்து சென்றான். அதன் பின் ஆள் வீர் கண்ணில் அவன் படவே இல்லை…
வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்குச் சென்றதை அறிந்து, எங்கிருந்து தான் வந்தானோ, நேராக முகிலினியின் அறை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று, கதவைத் தாழ்போட்டுவிட்டுத் திரும்பிய…
அவனை வித்தியாசம் பார்த்துப் போயிருந்த முகிலினி, தன் தலையில் இருந்த விக்கைக் கழட்டி அவள் முகத்தில் வீசியவள்…
“ச்சே மனுஷனாடி அவன்… ஆளைப் பார்த்து கோர்த்து விட்டு இருக்க… முரடா இருந்தா கூட பரவலா அவன் காஜிலே பிறந்து காஜிலே வளர்ந்த கடைஞ்ச எடுத்த சரியான காஜி மூட்டை… எப்படி காஞ்சி போய் இருக்கான் தெரியுமா…?? அம்மாடி கொஞ்சம் விட்டு இருந்தா நேத்தே என் கதை முடிச்சு இருப்பான்… மனுஷனா அவன் கருமம் கருமம் என்ன கன்றாவி டா பார்த்து வைக்கிறான்… இனி அவன் ரூம்க்கு நான் போகவே மாட்டேன்… ஆள விடுங்கடா சாமி உதவி பண்ணப் போனா… ஆளையே முழுங்கிடுவான் போல… எமகராதகன்….!!” என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றபடி கத்தும் தோழியை…
“எதே மறுக்கா சொல்லு…??”
அவள் தோழி ரஞ்சனாவை….!
“இன்னொருக்கா சொல்லு…??”
ஆண் வேடத்தில் வந்த முகிலின் தோழி ரஞ்சனாவைப் பார்த்து சிரித்து வைத்தால் முகில்…
“சிரிக்காதடி நாயே… எனக்கு பயந்துட்டு வருது… நான் அவனுக்கு ஸ்கெட்ச் போட்டு டி என் ஏ எடுக்கலாம்னு போனா, அவன் என் கிட்னியை உருவி விட்டுடுவான் போல இருக்கு…!!” என அவள் நேற்று இரவின் ஆதங்கம் தாங்காமல் புலம்ப…
“ஹாஹா சரி விடுடி ரஞ்சு, பார்த்துக்கலாம் எங்க போயிட்டோ போறான்…!!” என தோழி நெருங்கி ஆறுதல் கூறவும், அவள் அறை கதவைத் திறந்து கொண்டு குறிஞ்சி உள்ளே வரவும் சரியாக இருந்தது… இருவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர்; காரணம், தாழ்ப்பாள் போட்டு வைத்த லட்சணம்…
குறிஞ்சி உள்ளே வந்து இருவரையும் முறைத்தபடி, கீழே கிடந்த செயற்கை முடியைக் கையில் எடுத்த பின்பே…
ரஞ்சு, குறிஞ்சி முன்பு தான் பெண்ணாக நிற்பதே பின்னரே ஞாபகம் வர… “ஐயாயோ பார்த்துட்டா பார்த்துட்டா…!!!” என பெண்கள் இருவரும் பதறினர்…
உண்மை அறிந்து கொண்ட குறிஞ்சி எடுக்கப் போகும் முடிவு என்ன…??



